1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Ias Interview

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Jul 10, 2016.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ஒரு முறை IAS நேர்முகத் தேர்வு நடந்தது.அவரிடம் கீழ்க் கண்ட கேள்விகள் கேட்கப் பட்டன.

    Q 1. இந்தியா எப்போது சுதந்திரம் அடைந்தது?
    பதில்:அதற்கான முயற்சிகள் வெகு காலமாக நடை பெற்றன.ஆனால் 1947ல் தான் வெற்றி அடைய முடிந்தது.

    Q 2. இந்த சுதந்திர போராட்டத்தில் அதிகம் பங்கு வகித்த நபர் யார்?

    Answer - அதில் நிறைய பேர் ஈடுபட்டனர். ஒருவரை மட்டும் குறிப்பிட்டுச் சொல்வது மற்றவருக்கு அநீதி இழைப்பதாகும்.

    Q 3. லஞ்சம் என்பது தான் நாட்டின் பெரிய எதிரி என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
    Answer : -இதனை ஒரு கமிட்டி
    ஆராய்ந்து வருகிறது.அதன் முடிவு தெரிந்த பிறகு தான் நான் இந்த கேள்விக்கு பதிலளிக்க முடியும்.
    நேர்முகத் தேர்வு அதிகாரிகள் திருப்தி அடைந்த மாதிரி தோன்றியது.அவர்கள் அந்த நபரை வெளியே அனுப்பும்போது எந்த காரணம் கொண்டும் இந்த கேள்விகளை யாரிடமும் சொல்லக் கூடாது என்று வாக்குறுதி வாங்கி கொண்டனர்.அதே கேள்வியை அடுத்த நபரிடமும் கேட்க வாய்ப்பு உண்டு என்று கூறினார்.

    வெளியே வந்ததும் ஜிம்மி என்ற அடுத்த நபர் கேள்வி பற்றி விசாரித்தார்.முதல் நபர், நேர்முகத் தேர்வு அதிகாரிகளிடம் தான் அளித்த வாக்குறுதி பற்றிக் கூறினார்.
    ஜிம்மிக்குத் தெரியும் எப்படிக் கேள்விகளை வரவழைப்பது என்று.
    எனவே, நீ கேள்விகளிக் கூற வேண்டாம். நீ அளித்த விடைகளை மாட்டு கூறு என்கிறார்.

    முதல் நபர் ,பதில்களைக் கூறினால் வாக்குறுதியை மீறியதாக ஆகாது என்று மூன்று பதில் களையும் கூறினார்.
    ஜிம்மி பதில்களை விரைவில் மனப் பாடம் செய்து கொண்டார்.

    இப்போது ஜிம்மி உள்ளே அழைக்கப்பட்டார்.அங்கே என்ன நேர்ந்தது?
    Q 1; நீ எப்போது பிறந்தாய்?
    Jimmy - முயற்சிகள் வெகு நாட்களாக மேற்கொள்ளப்பட்டன.1947 வரை வெற்றி கிட்டவில்லை.
    அதிகாரிகளுக்கு ஒரே குழப்பம். இப்போது அடுத்த கேள்வி.
    Q 2. உங்கள் தந்தை பெயர் என்ன/
    Jimmy :- நிறைய பேர் இதில் ஈடுபட்டுள்ளனர். நான் ஒருவரை மட்டும் கூறுவது மற்றவர்களுக்கு அநீதி செய்வதாகும்.
    இந்த பதிலைக் கேட்டு நேர்முகத் தேர்வு அதிகாரிகள் அதிர்ந்து போயினர்.
    Q 3. உங்களுக்கு என்ன பயித்தியமா பிடித்துள்ளது?
    Jimmy :- இதை நிர்ணயம் செய்ய ஒரு கமிட்டி அமைக்கப் பட்டுள்ளது.அதன் ரிப்போர்ட் படித்த பிறகு தான் உங்களுக்கு பதில் கூற இயலும்.

    ஜெய்சாலா 42
     
    sindmani and vaidehi71 like this.
    Loading...

Share This Page