1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

How To Help

Discussion in 'Interesting Shares' started by jayasala42, Nov 7, 2019.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    சென்னையில் ஒரு பிஸியான சாலை. மக்கள் கூட்டமோ அலை
    மோதுகிறது.
    அங்கே
    தெருவில்
    பிளாட்
    பாரத்தில் நின்று துணி விற்றுக் கொண்டு
    இருந்த ஒரு கண்ணியமான இளைஞரை பார்த்தேன்.
    ஆங்கிலம்,
    தமிழ், ஹிந்தி என்று எல்லா மொழிகளிலும், அழகாக பேசி தனது துணிகளை உற்சாகத்துடன் விற்றுக் கொண்டிருந்தார்.
    மிகவும் நாகரீகமாக
    உடை அணிந்தும் இருந்தார்..
    சிறிது நேரம் அவரையே பார்த்துக் கொண்டிருந்த நான்,
    அவரிடம்
    மெல்ல பேச்சு கொடுத்தேன்..
    அவர் ஒரு சாப்ட்வேர் இன்ஜீனியர் என்றும்,
    ஒரு புகழ்
    பெற்ற IT கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வேலை செய்வதாகவும் கூறினார்.
    பிறகு ஏன் ? தெருவில் நின்று துணி விற்றுக் கொண்டிருக்
    கிறீர்கள் ?
    என்று கேட்டேன்.
    அவர் சொன்ன பதில் என்னை மனதை நெகிழ வைத்தது.
    இந்த தெரு வழியாக
    செல்லும் போது,
    ஒரு வயதான பெரியவரை பார்த்தேன்.
    மிகவும் களைப்பாகவும், சோர்வுற்றும்,
    நாள் பூராவும் நின்று கொண்டு இந்த துணிகளை விற்று கொண்டிருப்பதை பார்க்கவே கஷ்டமாக இருந்தது,
    அவருக்கு ஏதாவது உதவ வேண்டும் என்று நினைத்தேன்.
    பணம் கொடுத்தேன்..
    தன் மானத்தோடு வாங்கவே மறுத்து விட்டார்.
    டீ, காபி, டிபன் என ஏதாவது எனக் கேட்டேன்,
    அறவே வேண்டாம் எனவும், என்னையும் முற்றிலும் தவிர்த்தார்,
    பிறகு
    அவருடைய துணிகளை
    யாவது விற்றுக் கொடுக்கலாம் என்று முடிவெடுத்து,
    அவரை சற்றை ஓய்வெடுக்கச் சொல்லி
    விட்டு,
    நானே துணிகளை கூவிக் கூவி மக்களிடம் விற்க ஆரம்பித்தேன் என்றார்,
    அந்த இளைஞர்.
    பிறந்த பிள்ளைகளே, பெற்றவர்களை ஒதுக்கும் இந்தக் காலத்தில்,
    சற்றே ஆச்சர்யம் மேலோங்கவே அவரைப் பார்த்தேன்,
    துளி கூட தயக்கமின்றி சத்தம்
    போட்டு கூவி, துணி விக்கிரதையே பொழப்பா செய்கிறவர் போலவே,
    ஓரளவு விற்றும் விட்டார்,
    மழை வரவே,
    ஓய்விலிருந்த பெரியவரை அழைத்து மீதமுள்ள துணிகளோடு விற்ற துணிகளுக்
    கான
    பணத்தையும் கொடுத்து
    விட்டு,
    அங்கு வந்த டீ கேன் பையனிடம் இரண்டு டீ சொன்னார்,
    பெரியவரை நோக்கி டீக்கு நீங்கள் காசு கொடுங்கள் என்றார்,
    டீயை குடித்து விட்டு, நான் உங்களுக்கு செஞ்ச
    உதவிக்கு டீ சாப்பிட்டேன் அதுவே,
    என் சம்பளம், ஓகே
    பெரியவரே நான் கிளம்புகிறேன்,
    என கூறி எதையும் எதிர்பாராமல், சென்று மறைந்தான்,
    இறைவனைக்
    காண காசி, ராமேஸ்வரம், இமயமலை என ஆளாளுக்கு ஓடியே தேடியலைந்து கொண்டிருக்கும்,
    இந்த காலக் கட்டத்தில்,
    சேற்றில் தான் எத்தனை எத்தனை செந்தாமரைகள்,
    செயற்கை காகிதப்
    பூக்களையே விசித்திரம் போல,
    கண்டு ரசிக்கும் மனித மனங்கள்,
    அருகிலேயே
    இருக்கும், தாமதமாகப்
    பூக்கும்,
    இது போன்ற குறிஞ்சி
    மலர்களை,
    பூதக்
    கண்ணாடி போட்டுக் கொண்டே காண
    வேண்டி உள்ளது,
    பிரதிபலனை எதிர்பாராமல் உதவி செய்த அந்த இளைஞன் இறைவனாகவே எனக்குத் தெரிந்தான்,

    jayasala42
     
    happyperson and joylokhi like this.
    Loading...

Share This Page