1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

How to do meditation/Penance - in Thirumanthiram|(By Thirumoolar)

Discussion in 'Posts in Regional Languages' started by Littlerose, Jan 6, 2014.

  1. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    "அதுஇது என்னும் அவாவினை நீக்கித்
    துதியது செய்து சுழியுற நோக்கில்
    விதியது தன்னையும் வென்றிட லாகும்
    மதிமல ராள்சொன்ன மண்டல மூன்றே" பாடல் - 1186 (Thirumanthiram)


    உலகத்தவர் கதை கதையை விதம் விதமாய் என்னவெல்லாமோ கூறுவார்!? இவை அனைத்தையும் தூரத் தள்ளி விடுங்கள்!


    இறைவனை துதி செய்யுங்கள். குருவை நாடி இறைவன் நம் உடலில் கண்ணில்மணியில் ஒளியாக இருக்கிறன் என்பதை ஓர்ந்து தெளிந்து தவம் செய்யுங்கள்.


    அப்போது கண்மணி சுழற்சி கூடும். இதுவே தவப்பயன்.


    நோக்கு, பார், உணர்! அங்கேயே நில். ஒளி பெருகி முச்சுடரும் ஒன்றாகி விதியை வென்றிடலாம். முக்கர்மங்களையும் (பிராரத்துவம், சஞ்சிதம், ஆகாமியம்) மும்மலங்களையும் இல்லாமல் ஆக்கி இன்புறலாம்.


    சந்திரனில் இருக்கும் தாய் சொன்ன மூன்று ஜோதிகளையும் அடைவதே பெரும் பேறாகும்.


    மண்டலம் மூன்று என்றது மூன்று ஜோதியே! சூர்யா மண்டலம் - வலது கண். சந்திர மண்டலம் - இடது கண். அக்னி மண்டலம் - உள் ஆத்ம ஸ்தானம்.


    மதிமலராள் - மதி என்றால் சந்திரன். மலராள் - கண் மலரில் உள்ளவள்.


    சந்திரனில் உள்ள சக்தி தாய்! இதையே அவ்வையாரும் "மூன்று மண்டலத்தில் முட்டிய தூணை ..." என விநாயகர் அகவலில் பாடியுள்ளார். உணர்க!
     
  2. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    "தவம் வேண்டா மச்சக சன்மார்க்கத்தோர்க்கு" பாடல் - 1632


    வேறு எந்த சாதனையும் வேண்டாம் சன்மார்க்கத்தவர்க்கு என திருமூலர் கூறுகிறார். ஏன்?


    தவத்தில் சிறந்தது ஞான தவம் திருவடி ஞானம். அதைத்தானே சன்மார்க்க நெறி நிற்போர் செய்கின்றனர்.


    "மச்சக சன்மார்க்கத்தோர்" மச்சம் என்றால் மீன். மீன் போன்றது நமது கண். மீன் கண்களால் பார்த்து தான் குஞ்சு பொரிக்கும். நமது கண்மணி ஒளியால் பார்த்து தான் உள்ளொளி பெருக்கணும். ஞானம் பிறக்கும். மச்சத்தை அகத்தே பார்ப்பதே தவமாகும்.


    அதுவே மச்சக சன்மார்க்கத்தவர் என்பது. உலகில் மிக மிக உயர்ந்த இந்த மச்சக தவம் செய்வோர் வேறு எதுவும் செய்ய வேண்டியது இல்லை. சும்மா இருந்தால் போதும். "சும்மா இரு"!
     
  3. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    "எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்
    கண்ணார் அமுதினைக் கண்டறி வாரில்லை
    உண்ணாடிக் குள்ளே ஒளியுற நோக்கினால்
    கண்ணாடி போலக் கலந்துநின் றானே" பாடல் - 603


    கண்ணில் ஒளியாய் அமுதாய் இருக்கும் மெய்பொருளை அறிந்து உணர்ந்து (குறு மூலமாக) தவம் செய்தால் முக்தி பெறலாம்.


    கண்மணி ஒளியில் மனதை நிறுத்தி உணர்வை பெருக்கி அதனால் ஒளி பெருகி கண்மணி ஊசிமுனை துவாரத்தின் உள் நாடிக்குள் ஊடுருவி சென்று அக்கினி கலையை அடையலாம்.


    கண்மணி ஒளியோடு ஒளியை பெருக்கியே உள்புக முடியும். புறப்பார்வையை விட்டு உள்ளே ஒளியோடு புக நோக்க ஆத்மஸ்தானத்திலெ நம் ஆத்ம ஜோதியை காணலாம்.


    கண்ணாடி போல எல்லாவற்றையும் காட்டுவதை இருக்கும் ஆத்ம ஜோதி. உள் நாடி இருக்க, உயிர் நாடி கண்ணடி போல காணும். கண்ணை நாடு. கண்ணிலே தான் கடவுள் ஆடிக்கொண்டிருக்கிறான்.


    கண்ணில் ஆடிக்கொண்டிருக்கும் ஜோதியை பார். அதுவே ஆதி! நம் கண்ணே கண்ணாடி. கண்ணை நாடி கருத்தை அதனுள் ஒளியில் வை. அந்த ஒளியை அறிந்து உணர சற்குருவை நாடு. காண்பாய் நீ உன்னையே . நீயே ஆத்மா.
     
  4. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    "நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
    வாட்டம் இல்லை மனைக்கும் அழிவில்லை " பாடல் - 604

    நடுமூக்கு - இது பரிபாஷை. தண்ணீர் ஊற்றும் பாத்திரம் உண்டல்லவா? அதில் நீர் வரும் பகுதியை மூக்கு என்று தானே சொல்வோம்? நமக்கு கண்ணீர் வரும் கண். அதுவே நமக்கு மூக்கு. அதன் நடுபகுதியே ஊசிமுனை துவாரம் உள்ளதாகும். அதனுள் தான் ஊசிமுனை அளவு ஜோதி உள்ளது. அதாவது, இரு கண் நடுவிலே ஊசிமுனை துவாரத்திலே நம் நாட்டம், நினைவு நிலைத்திருக்க வேண்டும்.

    கண் மணி நடுவில் நாட்டம் வைக்க குறு அருள் இருந்தால் தானே முடியும். குரு தீட்சை பெற்றால் தானே முடியும். உணர்வு பெற்று கண்மணி ஒளியை பெருக்குவதே நாட்டத்தை வைப்பதால் ஏற்படும் பலன். ஒழி பெருக நமக்கு துன்பம் இல்லை. நம் மனையாகிய இந்த உடலுக்கும் அழிவில்லை.

    வினைகள் அகன்று சிரஞ்சீவிகளாக வாழலாம். தவறாக பொருள் கொண்டு மூக்கை பார்த்து மூச்சை அடக்கி மோசம் போனவர்கள் பலர்.
     
  5. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    "சுழற்றிக் கொடுக்கவே சுத்திக் கழியுங்
    கழற்றி மலத்தைக் கமலத்தைப் பூரித்து
    உழற்றிக் கொடுக்கும் உபாயம்" பாடல் - 726

    மிக மிக முக்கியமான பாடலில் ஒன்று.

    மெய்பொருள் - நம் கண்மணி - கருவிழியினுள்ளே அந்தரத்திலே நம் உடலை தொடாமல் இருக்கிறது. லேசாக சுற்றிக்கொண்டு இருக்கிறது.



    கண் கருவிழி உள்ளே கண்மணி ஊசிமுனை துவாரம் மத்தியில் கொண்டு உள்ளே ஊசிமுனையளவு ஒளியால் துலங்குகிறது.


    நாம் குரு உபதேசம் பெற்று தீட்சை பெற்று உணர்வை மணியில் நிறுத்த, உணர்வு பெருகி கண்மணி சற்று வேகமாக சுழல ஆரம்பிக்கும்.


    இதுவே நாம் செய்யும் தவத்தின் பொது நடப்பது. தவம் கூட கூட மணியும் வேகமாக சுழலும். அப்போது அதன் துவாரத்தை மறைத்து கொண்டிருக்கும் வட்டத்திரை - மெல்லிய சவ்வு - நம் மும்மலத்திரை கழன்று ஓடிவிடும்.


    எப்படி?


    மணியின் வேகம் கூடும் பொது உள் உள்ள ஊசிமுனையளவு நெருப்பு கொஞ்சம் கொஞ்சம்மாக பெரிதாகும். பெரு நெருப்பாகும். அந்த உஷ்ணம் தாளாமல் திரை - வினைதிரை உருகி கழன்று விடும். மறைந்துவிடும். இதுவே நமக்கு கிடைக்கும் பலன்.


    திருவடியாகிய நம் கண்மணி ஒளியை பெருக்குவதில் தான் இருக்கிறது. இந்த லீலா வினோதம்.


    இதுவே வினையற்று என்னை எனக்கு உணர்த்தும் உபாயமாகும்.
     
  6. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    "இம் முட்டை இரண்டையுங் கட்டிட்டு ஊன்றி இருக்க உடம்பழியாதே" பாடல் - 728


    முட்டை - கண். முட்டை போல் இருப்பதால் முட்டையிலே கரு இருப்பதைப் போல் கண்மணியே கருவிலே உருவான முதல் உறுப்பு. அதில் ஒளி இருக்கிறது. அதுவே கரு.


    இரு கண்ணான இரு முட்டையையும் புறத்தே பார்வை போகாமல் கட்டி அகத்தே செலுத்துவதாகும்.


    இரு கண்களையும் சூரிய சந்திர ஜோதிகளை இணைப்பதே கட்டுவதாகும்.


    இவ்வாறு இரு கண் ஒளியிலும் நினைவை நிறுத்தி உணர்ந்து உள்கொண்டு சேர்ந்தால் சிரஞ்சீவியாகலாம். இவ்வுடம்பு அழியாது.
     
  7. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    "மூலத் துவாரத்தை மொக்கர மிட்டிரு
    மேலைத் துவாரத்தின் மேல்மனம் வைத்திரு
    வேலொத்த கண்ணை வெளியில் விழித்திரு
    காலத்தை வெல்லுங் கருத்திது தானே" பாடல் - 583


    மூலத் துவாரத் - கண் மணி

    கண் மணி ஒளியில் உணர்விலேயே நிற்க வேண்டும்.

    மேலைத் துவாரத்தின் - ஆத்ம ஸ்தானத்திலிருந்து மேல் உச்சி வரை செல்லும் வழி ஆரம்பத்தில் மனத்தை வைத்திரு.

    வேல் போல் இரு கண் பார்வை ஒன்றாக்கி உள் ஆத்ம ஸ்தானத்தை நோக்க.

    இமைகள் திறந்து விழிகள் இரண்டும் உள் வெளியில் நிலைத்திருக்குமானால் கண் மணி ஒளி பெருகி உள் சென்று ஆத்ம ஸ்தானத்தை அடைந்து மேலேறி உச்சியை அடையும். அடைந்தவர் காலத்தை வெல்வார்.
     
  8. Littlerose

    Littlerose Silver IL'ite

    Messages:
    563
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    கடைவாச லைக்கட்டிக் காலை எழுப்பி
    இடைவாசல் நோக்கி இனிதுள் இருத்தி
    மடைவாயிற் கொக்குபோல் வந்திந் திருப்பார்க்
    குடையாமல் ஊழி இருக்கலு மாமே" பாடல் - 591


    கடைவாசல் - அது கண். அதை கட்டி என்றால் புறப்பார்வை இன்றி வெளியே பார்க்காமல் என்பதாகும்.


    காலை எழுப்பி - திருவடி ஒளியை எழுப்பி என்பதாகும்.


    இடைவாசல் நோக்கி - கண்மணி ஊசிமுனை துவாரத்தில் உள் போகையில் ஆத்மஸ்தானம் வரை உள்ள பகுதி இடைப்பட்ட பகுதி வழியாக உள் நோக்கி !



    இனிதுள் இருத்தி - இரு கண் உள் வழியாக ஒளியை பெருக்கி புகச் செய்து!


    மடைவாயிற் கொக்குபோல் வந்திந் திருப்பார்க் - மீனை எதிர்பார்த்திருக்கும் கொக்கு போல் நாம் ஆத்ம ஸ்தானத்தில் சூரிய சந்திர கலைகள் வந்து சேரும் வரை பொறுமை வேண்டும்.



    இருந்தால் முத்தீயும் ஒன்றாகி முக்தி கிடைக்கும். ஜீவன் முக்தராவர். கடம் உடையாமல் மண்நூழி காலமட்டும் வாழ்வார்.
     

Share This Page