1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Healthy snacks receipes in tamil language.....

Discussion in 'Posts in Regional Languages' started by g3sudha, Nov 9, 2014.

  1. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    [h=1]7 இன் 1 மினி ஊத்தப்பம்[/h]


    என்னென்ன தேவை?

    தோசை மாவு - 2 கப்,
    பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, கொத்த மல்லித்தழை - தலா 1/4 கப்,
    துருவிய கேரட் - 1/4 கப்,
    வேக வைத்த பட்டாணி - 1/4 கப்,
    இட்லி பொடி - 2 டேபிள்ஸ்பூன்,
    வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
    துருவிய பனீர் - 2 டேபிள்ஸ்பூன்,
    முளைகட்டிய பாசிப் பயறு - 1 டேபிள்ஸ்பூன்,
    எண்ணெய் அல்லது நெய் - 1/4 கப்.


    எப்படிச் செய்வது?

    வெங்காய ஊத்தப்பம் தோசைக்கல்லில் மாவை ஊற்றி, வெங்காயத்தைப் பரவலாக தூவவும். மேலே எண்ணெய் ஊற்றி மூடி வைத்து மிதமான தீயில் வேகவைத்து எடுக்கவும். தக்காளி ஊத்தப்பம் தோசைக்கல்லில் மாவை ஊற்றி, அதன் மேல் கால் டீஸ்பூன் வெங்காய மும் இரண்டு டீஸ்பூன் தக்காளியும் போட்டு மூடி வைத்து, மீண்டும் திருப்பிப் போட்டு சுட்டு எடுக்கவும். கேரட் ஸ்பைஸி ஊத்தப்பம் தோசைக்கல்லில் மாவை ஊற்றி, அதன் மேல் பரவலாக சிறிது இட்லி பொடி தூவி, அதன் மேல் கேரட் துருவலை தூவி மூடிவைத்து எண்ணெய் ஊற்றி சுட்டு எடுக்கவும்.

    பட்டாணி / பயறு ஊத்தப்பம்

    தோசைக்கல்லில் மாவை ஊற்றி, மாவின் மேல் வேகவைத்த பட்டாணி, பயறு, சிறிது வெங்காயம் சேர்த்து எண்ணெய் ஊற்றி மூடிவைத்து சுட்டு எடுக்கவும்.

    பனீர் பட்டர் ஊத்தப்பம் தோசைக்கல்லில் மாவை ஊற்றி, மாவின் மேல் துருவிய பனீரும் வெண்ணெயும் சிறிது கொத்தமல்லித்தழையும் போட்டு சுட்டு எடுக்கவும்.

    க்ரீன் ஊத்தப்பம் தோசைக்கல்லில் மாவை ஊற்றி, மாவின் மேல் கொத்தமல்லித்தழை, பாசிப் பயறு சேர்த்து எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும். மிக்ஸட் ஊத்தப்பம் தோசைக்கல்லில் மாவை ஊற்றி, மீதமுள்ள அனைத்தையும் ஒன்றாகக் கலந்து மாவின் மேல் போட்டு எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும். மூடி வைத்து சுடுவதால் ஊத்தப்பம் சீராக வேகும்... மிருதுவாகவும் இருக்கும்
     
    Loading...

  2. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    [h=1]சைனீஸ் தோசை[/h]

    என்னென்ன தேவை?



    தோசை மாவு - 1 கப்,
    எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
    நெய் - சிறிது,
    நீளமாக வெட்டிய கோஸ், கேரட், வெங்காயம், பச்சை மிளகாய் - மொத்தமாக 1 கப்,
    வேகவைத்த சைனீஸ் நூடுல்ஸ் - 1 டேபிள்ஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு,
    மிளகுத் தூள் - சிறிது,
    சோயா சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்,
    எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
    சர்க்கரை - 1 சிட்டிகை.
    எப்படிச் செய்வது?

    கடாயில் எண்ணெய் ஊற்றி, லேசாகக் காய்ந்ததும் சர்க்கரையைப் போடவும். உடனே நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளை சேர்த்து அதிக தீயில் வதக்கவும். நூடுல்ஸ் சேர்த்து, சோயா சாஸ், மிளகுத் தூள், உப்பு சேர்த்துக் கிளறவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, மாவினால் மெல்லிய தோசையாக வார்க்கவும். நெய்யை சிறிது தோசையில் தடவி செய்து வைத்திருக்கும் ஸ்டஃபிங்கை நடுவில் வைத்து மடிக்கவும். இதை ஊத்தப்பமாகவும் செய்யலாம்.
     
  3. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    [h=1]சிவப்பு அரிசி புட்டு கடலைக் கறி[/h]

    சிவப்பு அரிசி புட்டு

    என்னென்ன தேவை?


    சிவப்பு அரிசி புட்டு மாவு - 1/2 கிலோ,
    தேங்காய்த் துருவல் - 1 கப்,
    உப்பு - தேவைக்கு.

    எப்படிச் செய்வது?


    புட்டு மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு கொஞ்சம் உப்பு போட்டு, தண்ணீர் விட்டு பதமாக புட்டு செய்வதற்கு ஏற்ப மாவைப் பிசைய வேண்டும். புட்டுக்குழாயில் தேங்காய்த் துருவலைப் போட்டு அதன் மேல் மாவு போட்டு நிரப்பி வேக வைக்கவும். ஆவி வந்த வுடன் எடுத்து குத்தவும்.
    கடலைக் கறி

    என்னென்ன தேவை?

    கொண்டைக் கடலை - 1/4 கிலோ,
    வெங்காயம் - 3,
    மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு - தேவையான அளவு,
    சோம்பு, பட்டை, கிராம்பு, உப்பு, கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய் - தேவைக்கு.

    எப்படிச் செய்வது?

    கொண்டைக் கடலையை ஊற வைத்து குக்கரில் வேக வைக்கவும். வெங்காயத்தை நறுக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு சோம்பு, பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். அதில் வெங்காயத்தைப் போட்டுக் கிளறவும். வெந்த கடலையைச் சேர்த்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு தண்ணீர் விட்டு நன்றாகக் கொதித்ததும் இறக்கி வைக்கவும்.
     
  4. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    [h=1]கோவக்காய் பொரியல்[/h]
    என்னென்ன தேவை?

    கோவக்காய் - அரை கிலோ
    மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
    உப்பு - தேவைக்கேற்ப

    அரைக்க:

    தேங்காய் - ஒரு சில்லு
    வரமிளகாய் - 2
    சின்ன வெங்காயம் - 4

    தாளிக்க:

    எண்ணெய்,கடுகு,உளுந்தம் பருப்பு,கறிவேப்பிலை - தேவையான அளவு
    எப்படி செய்வது?

    அரைக்கக் கொடுத்துள்ளவற்றை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளிக்கவும்.
    அத்துடன் நீளமாக நறுக்கிய கோவக்காயைச் சேர்த்து வதக்கவும். கோவக்காய் அரை வேக்காடு வெந்ததும், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் வேகவிடவும். தேங்காய் மற்றும் வெங்காயத்தின் பச்சை வாசனை அடங்கியதும், அடுப்பிலிருந்து இறக்கவும். சுவையான கோவக்காய் பொரியல் தயார்.
     
  5. g3sudha

    g3sudha IL Hall of Fame

    Messages:
    7,985
    Likes Received:
    8,293
    Trophy Points:
    445
    Gender:
    Female
    [h=1]அஸ்பகரஸ் பட்டாணி புலாவ்[/h]

    என்னென்ன தேவை?

    பாசுமதி அரிசி - 2 கப்,
    அஸ்பகரஸ் (ஒருவகையான தண்டு. பெரிய காய்கறிக் கடைகளில் கிடைக்கும்) - 1 கப்,
    பச்சை பட்டாணி - 1 கப்,
    வெங்காயம் - 1,
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்,
    சீரகம் - அரை டீஸ்பூன்,
    எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
    தண்ணீர் - 2 கப், தேங்காய்ப் பால் - 1 கப்,
    பிரியாணி இலை - 1,
    உப்பு - தேவைக்கேற்ப,
    கொத்த மல்லி - சிறிது.
    எப்படிச் செய்வது?

    அரிசியைக் கழுவி, 15 நிமிடங்களுக்கு ஊற வைத்து, தண்ணீரை வடித்து வைக்கவும். எண்ணெயை சூடாக்கி, சீரகம் தாளிக்கவும். வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாகும் வரை வதக்கவும். இஞ்சி, பூண்டு விழுது சேர்த்துப் பச்சை வாடை போக வதக்கவும். அதில் அரிசி, பிரியாணி இலை, தேங்காய்ப் பால், தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து வேக விடவும். இன்னொரு கடாயில் எண்ணெய் விட்டு பட்டாணி, நறுக்கிய அஸ்பகரஸ் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். அரிசி வெந்ததும், பட்டாணி, அஸ்பகரஸ் கலவையை அதில் சேர்த்து உடையாமல் மெதுவாகக் கிளறவும். கொத்தமல்லி கொண்டு அலங்கரித்து, காரமான ஏதேனும் ஒரு கிரேவியுடன் பரிமாறவும்.
     
  6. deepthiraj

    deepthiraj Platinum IL'ite

    Messages:
    1,261
    Likes Received:
    3,545
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Nice Recipes Mam....Thanks for sharing.... :))
     

Share This Page