1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Atheism

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Aug 8, 2017.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ஆத்திகம் எப்படி புறம் தள்ள முடியாததோ அதேமாதிரி தத்வார்த்த நாத்தீகமும் ஒதுக்கப் பட முடியாத ஒன்று.காரணம் 'இன்மை-'எனப்படும் 'இல்லை' யில் தான் உள்ளவை யாவும் அடங்கியுள்ளன.

    இதற்கு உதாரணமாகக் கட்டிடத்தைச் சொல்லலாம்.நான்கு பக்க சுவர், தரை, மேற்கூரை எல்லாமே மனிதன் கட்டியது தான்.ஆனால் இதில் பயன்படும் இடம் உள்ளே இருக்கும் காலி இடம்-வெற்றிடம்.இத்தனை சிறிய உலகம் எவ்வளவு பெரிய வெற்றிடத்தில்(space ) ல் உள்ளது!நினைத்தாலே வியப்பாக உள்ளது.உள்ளதைவிட இல்லாததே நிரம்பி இருக்கிறது.இல்லாமையில் தான் இருப்பே அடங்கி உள்ளது.

    காலி இடத்தில் கட்டிடம் எதற்கு? மீண்டும் ஒரு காலி இடம் உண்டாக்கி அதனுள் வசிப்பதற்கு.
    காலி இடமான இல்லாமையில் தான் நம் இருப்பு அடங்குகிறது.நம் எல்லையே 'இல்லை'க்குள் அடங்கி நம் comfort zone ஆகி விடுகிறது.எனவே ' 'இன்மை' என்பதும் ஒரு இறைத் தன்மை என்பதை உண்மையான ஆன்மீக அறிவு உடையவர் நன்றாக உணர முடியும்.

    கம்பனின் 'நாத்தீகர்' பற்றிய பார்வை ஆச்சரியமானது.'

    'ஒன்றே என்னின் ஒன்றேயாம்;

    பலவென் ருரைக்கின் பலவேயாம்;

    அன்றே என்னின் அன்றே யாம்;
    ஆம் என்றுரைக்கின் ஆமேயாம்;

    இன்றே என்னின் இன்றேயாம் ;

    உளதென்று நோக்கில் உளதேயாம்

    வெகு வெகு நுட்பமான பார்வை.

    'இல்லை'யில் 'இல்லை' என்ற form ல் கடவுள் இருப்பதாகக் கம்பர் எண்ணுகிறார் எனத் தோன்றுகிறது.


    இதே கருத்தை வலியுறுத்தி இருக்கும் நம்மாழ்வார் பாசுரம்


    உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்
    உளன் அலன் எனில் அவன் அருவமிவ்வுருவுகள்
    உளனென இலனென இவைகுணமுடைமையில்
    உளன் இரு தகைமையொடு ஒழிவிலன் பரந்தே

    jayasala42
     
    Loading...

  2. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    உளன் எனில் உளன்
    இலன் என்பார்க்கும் உளன்

    புஷ்பவல்லி
     
    Thyagarajan and PavithraS like this.

Share This Page