1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Amma, Neeyumaa?

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Jul 4, 2019.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    அம்மா ,நீயுமா?
    -----------------------

    பச்சிளம்வயதில்தாயைஇழந்தாய்.பாட்டியின்அரவணைப்பிலும்,
    ஏன் ,ஆதிக்கத்திலும்வளர்ந்தாய் .ஆறுவயதில் 15 வயதுமூத்தவரானதாய்மாமனின்கரம்பிடித்தாய்.ஆணவப்
    பாட்டியின் மாமியார்க்கொடுமை,கூட்டுககுடும்பச்சூழல்,அடுப்புப்புகை,தினம் 2 மணிநேரம்ஆட்டுக்கல்அருகாமை.ஆறுபெண்களுக்குத்தாய்.

    அம்மா, உன்பொறுமைக்குஈடில்லை,இணையில்லை.மூன்றாம்வகுப்புத்தாண்டாதஉன்அறிவுத்திறமைஅபாரம்.கணக்குஎன்றால்உனக்குஉயிர்.உன்னுடையயுக்திக்கணக்
    கெல்லாம்நம்வீட்டுமாட்டுக்கொட்டகையில் x ,y ஆகவும்,எண்களாகவும்உருப்பெறும்அழகைக்கண்டுஅதிசயிக்காதநாளில்லை.நீஇயற்றியபாட்டைஅரங்கேற்றாதகோலாட்டஜோத்திரைஇல்லை.

    எல்லாபெண்களுக்கும்இயன்றவரையில்தகுதிக்கேற்றமாப்பிள்ளைபார்த்துப்பொன்வைக்கும்இடத்தில்பூவைத்தாலும், பார்த்துப்பார்த்துப்பாங்காகசெய்வாயே ,அம்மா .ஒவ்வொருபெண்ணும் 4,5 பிரசவங்களுக்குப்பிறந்தகம் வரும்போது ,பத்தியசமையல்செய்துபோட்டு,இளம்குழந்தையைக்குளிப்பாட்டி,சாம்பிராணிபோட்டு, உரைமருந்துபுகட்டி!அப்பப்பா!பொறுமையின்சிகரமம்மாநீ!

    அப்பாவின்வயது 85.உன்வயது 70.திண்ணையில்படுத்திருந்தஅப்பாதிடீரென்றுகை , கால்செயலிழந்துவிட்டார் .இரண்டுஆண்டுகள்ஓடிவிட்டன. இடிபோன்றமற்றொருசெய்தி.உனதுஅருமந்தமாப்பிள்ளைகளுள்ஒருவர்எதோசிக்கலில்மாட்டிக்கொண்டு,வேலைஇழக்க, கோமுஅக்காவும்நான்குகுழந்தைகளும்பிறந்தவீட்டில்தஞ்சம்.ஒருபாடாகக்குழந்தைகளைஉள்ளூர்ப்பள்ளியில்சேர்த்தாயிற்று.

    ஒருநாள் 'கைவலி 'என்றுபடுத்தநீயும்பாரிசவாயுநோயினால்முழுமையாகபாதிக்கப்
    பட்டாய்.கோமுவுக்குநீதஞ்சம்அளித்தாய்.இப்போதுகோமுஅக்காதான்உனக்குஎல்லாம்.காலை 5 மணிமுதல்இரவு 10 மணிவரைஅக்காவுக்குஓயாதவேலை.ஏழுபேருக்குசமைத்து,குழந்தைகளுக்கு, டிபன்பாக்ஸ்கட்டி,அப்பா,அம்மாவைக்குளிப்பாட்டி, அவர்களுக்குஉணவுஅளித்து,முக்கியமாகஅவர்களதுஇயற்கைஉபாதைகளுக்கானஎல்லாவசதிகளையும்செய்தாள் .வேலைக்காரர்களைநியமிக்கும்பணவசதி இல்லை.தன்அவல நிலையைஎண்ணிஎண்ணி நொந்துநூலானாள்.

    ஆனால், அம்மா, நீஎன்னசெய்தாய் ?வருவோர்போவோரிடம்எல்லாம்கோமுஅக்காவைப்பற்றிபுகார்சொன்னாய்.மூன்றுமாதத்துக்குஒருமுறைஏதாவதுஒருபெண்பெற்றோரைக்காணவருவாள்.அம்மாவிடம்உட்கார்ந்துசாவகாசமாகவாய்வார்த்தைபேசஅவர்களால்முடியும்.அவர்கள்அனைவரிட
    மும் 'கோமுசரியாகக்கவனிக்கவில்லை.முகம்கொடுத்துப்பேசுவதில்லை 'என்றுஏகப்பட்டபுகார். வந்தவர் எல்லோரும்போகிறபோக்கில்கோமுஅக்காவைஏசிவிட்டு இலவச உபதேசங்களைடன்கணக்கில்
    உதிர்த்துவிட்டுப்போவார்கள்.

    தன்குழந்தைகளின்கெஞ்சல்களையும், பசியையும்கூடபொருட்படுத்
    தாமல், தஞ்சம்அடைந்தஇடத்துக்குமுழுவிசுவாசமாகஇருக்கவேண்டு
    மென்ற ஒரேநோக்கத்துடன் தன்னை அர்ப்பணித்தாள் கோமுஅக்கா.

    தினமும் மல, மூத்திரம்
    சுத்தம்செய்து,உடம்பைத்துடைப்பது என்பது எவ்வளவுஅருவருப்பானசெயல் என்றுஉங்களுக்குத்தெரியாதா ? அவளும்நீங்கள்பெற்ற பெண்தானே ?ஒருவருக்குவறியநிலைஏற்படும்போதுவெந்தபுண்ணில்வேல்
    பாய்ச்சலாமா ? இன்னும்எவ்வளவோகேட்க வேண்டுமென்று மனதுதுடித்தாலும்பெற்றதாயைக்கேட்கத் துணிவில்லை. பயமா, தயக்கமா -தெரியவில்லை.அக்கா
    வும்கேட்கவிடவில்லை.

    அம்மாதானே, உரிமையில்திட்டுகிறாள்என்பதேகோமுஅக்காவின்பதில் .நானும்ஓரிருநாட்கள்அங்கேவந்ததுண்டு. அக்காவுக்குஉதவிசெய்யமுற்பட்டபோதெல்லாம் 'எல்லாம், அவள்பார்த்துப்பாள் .நீஇருப்பதேஇரண்டுநாள். என்னிடம்சாவகாசமாகப்பேசி
    விட்டுப்போ.' இதுஅம்மாவின்வேண்டுகோள். நாள்தோறும்பணிவிடைசெய்பவரை விடஎன்றோஒருநாள்அரட்டைஅடிப்பவர்முக்கியமாகி விட்டார்களா, அம்மா?

    எல்லோர்முன்னிலையிலும் நீ ஏளனவார்த்தைகளைஅள்ளிவீசிய போதுதுடித்துப்போவாள், அக்கா.கொல்லைப்புறம்தோய்க்கும் கல்லில் உட்கார்ந்து மருகுவாள்.உடனேஅம்மாகுரல்கொடுப்பாள்.அம்மாவின்இயற்கைஉபாதையைத்தீர்க்கும் பணிஅழைக்கும்.இதுதான்தனக்குவிதிக்கப்பட்டதுஎன்பதுபோல,ஒருநாள் அல்ல,இரண்டுநாள்அல்ல,12 வருடம்ஓடாய்த்தேய்ந்தாள் .

    அம்மா, அப்பாஇறைவனடிசேர்ந்தனர். கோமுஅக்காவும்கடைசிவரைஉழைத்துவிட்டுப்போய்ச்
    சேர்ந்தாள் .

    தகுந்ததருணத்தில்கோரப் படாத நீதிமறுக்கப்பட்ட நீதிதான்.எனினும் இன்றுதான்உன்னைக்கேட்கும்துணிவுவந்தது.இன்றுஉன்நினைவுநாள்.உன்னுடையஅறிவுக்கூர்மை, சலியாதஉழைப்புமட்டுமல்ல. அக்காவைநீபடுத்தியபாடும் மனதில்ஆழமாகப்பதிந்துவிட்டது.

    iந்தஉலகில்தவறுசெய்யும்தாய்மார்கள்அநேகர்இருக்கின்றனர்.அதிகப்பாசத்தினாலோ, அதிககண்டிப்பினாலோ, முன்னேற்றவெறியாலோ செய்யப்படும் தவறுகள்அவை. ஆனாலும், அம்மா, நீ புத்திக்கூர்மையும்

    ,விவேகமும்ஒருங்கிணைந்தவள்அல்லவா ?நீசெய்யும்செயல்ஒவ்வொன்றும்அப்பழுக்குஇல்லாதவைஎன்றுபாராட்டுபெற்றவள்நீ.


    'அண்டிவந்தால்இளக்காரம் ' என்றுநீயுமாநினைத்தாய் ?எண்ணிஎண்ணிபார்க்கிறேன்.
    தாய்மையின்மறு பக்கம்இதுதானா ?

    உடல்நிலைதளர்ச்சிஅடையும்போதுசுயநலம்மேலோங்கித்
    தாய்ப்பாசத்தின் ஊற்றுக்கண்முழுவதும்
    அடைபட்டுவிடுமா ?

    தாய்மையும் வெறுப்புவசப்பட்டுத்தடுமாறி
    சறுக்கிவிழுந்துவிடுமா?-அதுவும்ஒருதலைப்பட்சமாக ?

    காய்ச்சல்அனலாகக்காய்ந்தபோது,ஒருநாள்அக்காதாமதமாக
    எழுந்தபோது 'எல்லாம்பாசாங்கு. உடம்புக்குஎன்னகேடு?கட்டினபுருஷன்கஞ்சிஊற்றாவிட்டாலும்இங்குமூணுவேளையும்கொட்டிக்கொள்வதில்

    குறைச்சலில்லை 'என்றுசூடுசொற்களைஅள்ளிவீசினாயேஅம்மா ?

    ஏன்அம்மா, நீமாறினாய் ?சின்னவயதில்தாயைஇழந்த நீ தாய்மையைப்பற்றிஎப்படியெல்லாம் எங்களுக்குஅறிவுறுத்தி இருக்கிறாய் ?ஆதிசங்கரரின் 'மாத்ருபஞ்சகம் ' பற்றிஅணுஅணுவாகவிளக்கம்
    தருவாயேஅம்மா ?

    ஒருஸ்லோகம்.

    ஆஸ்தாம்தாவதியம் 'என்றுஆரம்பிக்கும்.

    சங்கரர்கூறுகிறார்

    "தடுக்கமுடியாதபிரசவவேதனை,ருசியற்றநாக்கு,இளைத்தஉடல்,ஒருவருடகாலமலமூத்திரம்
    நிறைந்தஅருகாமை-இந்தகஷ்டங்களைஎல்லாம்தாங்கிகொள்ளும்தாய்க்குநமஸ்கரிப்பதைத்தவிரவேறுஎன்னகைம்மாறுசெய்யமுடியும் ?'

    ஆதிசங்கரர்கூறியதுஓர்ஆண்டு.கோமுஅக்காஉனக்குசெய்தசிசுருஷை 12 வருஷம்.தொண்டுசெய்யும்
    மகளும் தாய்க்குச்சமம்என்பதுநீஅறியாததுஅல்ல.

    அம்மா, எவ்வளவுஉயர்ந்தநிலையிலி
    ருந்த நீ ஏன்அடிமட்டத்துக்குத்தள்ளப்பட்டாய் ?

    தான்பெற்ற பெண்படும்வேதனைதான்எதிர்மறை எண்ணங்களாய்உருப் பெற்றதா?

    பாசமும்நேசமும்கூடநீசத்தன
    மாய் வெளிப்படுவதுண்டா ?

    சுயதேவைகளுக்குகூடபிறரை
    நம்பவேண்டியதனால்
    ஏற்பட்ட
    சுயபச்சாதாபம்
    வெறுப்பாய்மாறியதா ?

    தாய்மையும்முற்றிலும்மாறுபட்டஇருபக்கங்கள்அடங்கிய
    நாணயம்
    போன்றதுதானா ?

    அம்மா, அக்காநம்வீட்டுக்குவருவதற்கு
    முன்
    நீ
    ஒருமுறை
    என்னிடம்கூறியதுநன்றாகநினைவில்உள்ளது.

    " பார்வைமங்கமங்க, நாவில்ருசிகுறையகுறைய,
    சருமம்சுருங்கசுருங்க,

    அஹங்காரம்மறையணும்அரவணைப்புமலரணும்

    இறுமாப்புமறையணும்

    இங்கிதம்வளரணும்

    எடுத்தெறிதலும்ஏசுதலும்

    மறைந்துஏற்புநிறையணும்

    கோபமெல்லாம்போய்

    கனிவுகொழிக்கணும் "

    என்றுஅடுக்குமொழியில்எல்லாமுதியவர்களுக்கும்பொதுவானஅறிவுரைவழங்கினாயே,அம்மா, அதுஉனக்குப்பொருத்தமற்றது
    என்றுநீநினைத்தாயா ?


    அம்மா, உன்கடைசிநாள்எனக்குநன்றாகநினைவுஇருக்கிறது.நீகோமுஅக்காவைக்கூப்பிட்டுஅருகில்அழைத்து,அவள்கன்னங்களைவருடிக்கொடுத்தாய்;எதோசொல்ல
    நினைத்தாய்;வார்த்தைகள்வெளிவரவில்லை;உனதுஇருசொட்டுக்கண்ணீர்அக்காவின்
    புடவையில்விழுந்தது.

    இந்தகண்ணீர்தான்உனது
    பன்னிரண்டுஆண்டுதிட்டு, வசவுகளுக்கெல்லாம்பிராயச்சித்தமா? உனதுகடைசியாத்திரைக்குஇந்தகண்ணீரையாத்ரா தானம்செய்தாயா ?

    அந்தஇரண்டுசொட்டுகண்ணீருக்குஎவ்வளவோஅர்த்தங்கள்!

    நீ, உயிரோடுஇருந்திருந்தால்அம்மா,உன்வாக்குவன்மையால்இந்த
    கண்ணீரையே காவியம்

    ஆக்கிஇருப்பாய்!

    எந்தஅளவுக்குமனதைசமாதானம்செய்துகொண்டாலும் ,மனிதஇயல்புஎன்றுஒதுக்கித்
    தள்ளினாலும்என்னால்இந்தஅம்மாவைமுழுமையாகஏற்றுக்
    கொள்ளமுடியவில்லையேஅம்மா.

    என்செய்வேன்அம்மா !

    வெள்ளைத்தாளில்ஒருகரும்புள்ளியா ?

    அம்மா, நீயுமா !!

    This I could express only years after Amma's demise and two years after my sister's death.On an annual ceremony of my mother all the sisters were talking about the incidents and misfortunes of my sister. I gave vent to my feelings by writing this article which got published in a popular Tamil magazine.
    Initially I felt guilty of finding fault. But I thought it should be a lesson to all senior citizens.
    However wise, intelligent and skilful we are, a time may come that we become wholly dependent on some one, though not financially but for other biological needs.
    My mother is a role model to me in many aspects. But I could not support this behaviour of hers. The expression came out in the form of an article. Better late than never.


    Jayasala 42
     
    Loading...

  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,727
    Likes Received:
    12,547
    Trophy Points:
    615
    Gender:
    Male
    As your heart is out for your mom and elder sister, my Heart while reading the post is heaving and certain passages reminds me my mother in bed two months before her reaching the lotus feet of Lord on boxer's day.
    With moist eyes
    Regards.
     
  3. kaluputti

    kaluputti Platinum IL'ite

    Messages:
    1,156
    Likes Received:
    580
    Trophy Points:
    208
    Gender:
    Female
     

Share This Page