1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஹைக்கூ கவிதைகள்.....

Discussion in 'Regional Poetry' started by Nimmsmile, Apr 17, 2018.

  1. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,888
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Beautiful ... Sharing one here

    உயிராய் சுமப்பான் உயிர்
    கொடுத்து வளர்ப்பான் அன்பே சிவமான
    நேசத்தில் தாயுமானவன்
     
  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @Nimmsmile அருவமாக உருவமாக அனைத்துமாக நிற்கும் ஆதிபராசக்தியே அன்னை

    தங்கள் ஹைக்கூ மிக உள்ளத்தை ஊடுருவும் சொல்நயம் கொண்டது
     
    PavithraS, Nimmsmile and GoogleGlass like this.
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    மேகம் நீரும் நெருப்பும் உருவாக்கும் குழந்தை
     
    GoogleGlass and kaniths like this.
  4. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    All beautiful haiku’s @Nimmsmile @periamma @GoogleGlass @jskls

    மரணத்தின் விளிம்பில் போராடும் யுத்தத்தில்
    மீட்டு இழுத்துவரும் சத்தம்
    மழலையின் முதல் அழுகை!
     
  5. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    suparae @Rajeni

    அழுகையில் ஆனந்தம் காண்பவர் மனிதரல்ல
    இரு உயிர்களின் பிறப்பில் அழுகை தருவது ஆனந்தமே
     
  6. Nimmsmile

    Nimmsmile Silver IL'ite

    Messages:
    93
    Likes Received:
    234
    Trophy Points:
    90
    Gender:
    Female
    நன்றி
     
  7. Nimmsmile

    Nimmsmile Silver IL'ite

    Messages:
    93
    Likes Received:
    234
    Trophy Points:
    90
    Gender:
    Female
    அப்பா...... கருவிலே உயிர் கொடுத்தாய்... பிறந்தவுடன் மடி கொடுத்தாய்.... வளரும் வரை தோள் கொடுத்தாய்.... இந்த நொடி வரை இதயத்தில்..... மீண்டும் ஓர் ஜென்மம் வேண்டும் தங்கள் மகளாக..............
     
  8. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    நட்பு இதயங்கள் அனைவரும் நலமா ? நான் இங்கு நலமே ! :)

    @Nimmsmile - வருக,கவிதைகள் தருக !
    படித்ததும் என்னைப் பதிவிடத் தூண்டிய வினா!
    மெம்மேலும் அருமையாய் எழுதுக உம் பேனா !
    வாழ்த்துகளுடன்-பவித்ரா

    கருவறை தாங்கிய கோயிலல்லவோ!
    கருணை பொங்கிடும் தெய்வமல்லவோ!
    கருவுருவாகி மடியேந்து நாள்முதல்,
    தெருவிலிறக்கிக் காடேகு நாள்வரை,
    நெஞ்சினில் நம்மைத் தாங்குவாளன்றோ!
    அஞ்சுதலின்றி நாமும் வாழ்ந்திடக்
    கெஞ்சிடுவாளந்தக் கடவுள் தாளையே!
    கொஞ்சியும் மிஞ்சியும் சேயிருப்பினும்,
    என்றென்றுமவர் நலம் பேணுவாளன்றோ!
    கன்றினைப் பசுவெனக் காப்பவளன்றோ!
    நன்மைகள் நாமுறத் தானுந்தேய்ந்திடும்,
    அன்புருவானவள் பெயரும் தாயன்றோ!


    அன்பு பெரியம்மா,
    நகைச்சுவை இழையும் நற்கவிதை நல்கினீர்
    அதற்கீடாகவே இவர் @GoogleGlass பதில் பதிந்திட்டார்
    படித்ததும் அடக்கிட மாட்டா சிரிப்பலை
    வடித்திட்டேன் இருவர்க்கும் நன்றி நவிலலை !
    தனக்கு வாய்த்த மக்கள் நல்லவரா,அல்லவரோ- என்றென்றும் வாஞ்சை மாறாமல்,வஞ்சனை இல்லாமல்-கருவிலும்,மடியிலும்,மார்பிலும், மனதிலும் தாங்கும் இயல்பினில் திண்ணையைப் போன்றவள் என்பதால் அண்ணை என்று குறிப்பிட்டீரோ ?! உறவின் பெயரும் மென்மை ! அவளே அன்பு அன்னை !
    தாயுமாய்த் தானுமாய்த் தன்னையே மாற்றித்தான்
    தனித்தொரு வனமெனும் உலக ஸம்ஸாரத்தில்
    நீங்களும் வாழவும் வகை செய்தாரவர்க்கிங்கே
    தனித்துவ வரிகளை ஸமர்ப்பணம் செய்திட்டப்
    பாங்கினைக் கண்டதும் பாங்கியிவள் பனித்தனள்!
    மேகக் குழவியின் டி.என்.ஏ கூறு நீரும் நெருப்பும் - ஆஹா ! ஒருவரிச் சாரல் !
    நன்று ரஜனி-ஆம் ! பிரசவம் ஓர் மரணம் தான்! பெண்ணெனும் வெறுநிலை மரணித்துத் தாயெனும் பெருநிலை பிறக்கும்! சுயவெண்ணம் மரணித்துத் தன் சேய்நலம் காணும் பக்குவம் பிறக்கும்! வாழ்வைப் புரட்டிப் போடுதல் மட்டும் மரணதர்மமன்று,புதுப் பாதை காட்டித் தருதலும் தான் ! முன்னமே தாயாகிவிட்டப் பெண்களின் மறுபிரசவ மரணாநுபவங்களும் ,அந்தத் தாய்மையைப் புனரமைத்துக் கொள்ளும் தருணங்கள் தான் போலும் !
    GG குறிப்பிட்டதுபோல், இரு உயிர்களின் பிறப்பு- தாய்,சேய் - பிரசவம்- அதன் வரவேற்பு-நெருங்கியவர் விழிநீர்த்துளிகள் தாம் ! அழுகையைக் காட்டிலும் ஆனந்தத்தை வெளிப்படுத்தும் மேல்மொழியுண்டோ ?
     
    GoogleGlass, jskls and kaniths like this.
  9. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @PavithraS வருக வருக தமிழ் கவியே வருக.தமிழின் சக்தி மிக வலியது .தங்களை வரவழைத்த தமிழுக்கு நன்றி.தாங்கள் நலம் தானே
     
    GoogleGlass and kaniths like this.
  10. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    [
    மரணத்தின் விளிம்பில் போராடும் யுத்தத்தில்
    மீட்டு இழுத்துவரும் சத்தம்
    மழலையின் முதல் அழுகை![/QUOTE]
    @Rajeni ரஜினி மிக அருமை .யுத்தத்தில் வெற்றி கண்டபின் முழங்கும் ஜெயபேரிகையே அழுகை.
     
    GoogleGlass likes this.

Share This Page