1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : யாரோட பிரச்னையை உடனடியா தீர்க்கணும்ன்னு பகவானுக்குத் தெரியும்…

Discussion in 'Posts in Regional Languages' started by krishnaamma, Jun 18, 2016.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : யாரோட பிரச்னையை உடனடியா தீர்க்கணும்ன்னு பகவானுக்குத் தெரியும்…...

    மஹா பெரியவாவைத் தரிசிக்க ஒருவர் மடத்திற்கு
    வந்திருந்தார்.

    வந்தவர் வரிசையில் நின்னார்.

    தன்னோட முறை
    வந்ததும் பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணினார்.
    எல்லாம் கடனேன்னு செய்யற மாதிரி தான்
    இருந்தது. பெரியவா அவரைப் பார்த்து,

    “என்ன சுவாமியையெல்லாம் திட்டறதுல்ல இருந்து
    ஒரு வழியா ஓய்ஞ்சிட்ட போலருக்கு.
    திட்டியும் பிரயோஜனமும் இல்லைன்னு தோணிடுத்து.
    அதனால தினமும் பண்ணிண்டு இருந்த பூஜையைக்
    கூட நிறுத்திட்டே இல்லையா?”
    அப்படின்னு கேட்டார்.

    வந்தவருக்கு அதிர்ச்சி ‘நாம எதுவுமே சொல்லல,
    ஆனா, எல்லாத்தையும் பக்கத்துல இருந்து பார்த்தவர்
    மாதிரி பரமாச்சார்யா சொல்றாரே!ன்னு ஆச்சரியம்.
    “பெரியவா! குடும்பம் நடத்துறதே ரொம்ப கஷ்டமான
    ஜீவனமாயிடுத்து. சரியா வேலையும் கிடைக்கிறதில்லை.
    பகவானை வேண்டிண்டு ஒரு பிரயோஜனமும்
    இல்லைன்னு புரிஞ்சுடுத்து. மத்தவளுக்கெல்லாம்
    கேட்குறதுக்கு முன்னாலேயே கொடுக்குற சாமி எனக்கு
    மட்டும் ஏன் இப்படி பண்றார்? அதான் எல்லாத்தையும்
    நிறுத்திட்டேன்!” கண் ஓரத்துல நீர் தளும்ப தழுதழுப்பா
    சொன்னார்

    அவர்.

    பரிவோட அவரைப் பார்த்தார் மகான்,
    “ஒரு விஷயம் கேட்கிறேன். கரெக்டா யோசிச்சு சொல்லு.
    ஒரு ஆஸ்பத்திக்கு தினமும் எத்தனையோ நோயாளிகள்
    வருவா. சிலர் தலைவலின்னு வருவா, சிலருக்கு காய்ச்சல்
    வந்திருக்கும். இவாள்லாம் அங்கே இருக்கறச்சே பாம்பு
    கடிச்சுடுத்துன்னு ஒருத்தரைத் தூக்கிண்டு வருவா,
    இந்த மாதிரியான சந்தர்ப்பத்துல டாக்டர்கள் என்ன
    பண்ணுவா?
    யாருக்கு உடனடியா சிகிச்சை பண்ணனுமோ,
    யாருக்கு சட்டுனு சிகிச்சை பண்ணலைன்னா அப்புறம்
    அது பிரயோஜனப்படாதோ, யாருக்கு மரண அவஸ்தை
    தீரணுமோ அவாளைப் பார்க்கப் போயிடுவா.

    அதுக்காக சாதாரண காய்ச்சல், தலைவலி வந்தவாளை
    டாக்டர்கள் அலட்சியப் படுத்தபடுத்தறாங்கறது அர்த்தம்
    இல்லை.
    அவாளுக்கு கொஞ்சம் தாமதமா சிகிச்சை
    தந்துக்கலாம். பெரிய அவஸ்தை எதுவும் வந்துடாது.
    சாதாரண நோயாளிக்கு சிகிச்சை பண்ற டாக்டர்களுக்கே,
    யாருக்கு எப்போ உதவணும்கிறது தெரியறதுன்னா,

    பகவானுக்கு யாரோட பிரச்னையை உடனடியா
    தீர்க்கணும்ன்னு தெரியாதா?

    உனக்கு சுவாமியோட கடாட்சம் கிடைக்க கொஞ்சம்
    தாமதமாறதுன்னா, உன்னை விட அதிகமா அவஸ்தைப்
    பட்டுண்டு இருக்கற யாருக்கோ உதவுவதற்காக சுவாமி
    ஓடியிருக்கார்னு அர்த்தம். அந்த வேலை முடிஞ்சதும்
    அவசியம் உனக்கும் அனுக்கிரகம் பண்ணுவார்.

    அதுக்குள்ளே அவசரப்பட்டு தெய்வத்தை நிந்திக்கிறதும்,
    பூஜை, புனஸ்காரங்களை நிறுத்திட்டு நாஸ்திகம்
    பேசுறதும் தப்பில்லையா?” பெரியவா சொல்லச்
    சொல்ல, அந்த நபர் கண்ணில் இருந்து தாரை தாரையாக
    நீர் வடிஞ்சது.

    அதுவே அவரோட தவறான எண்ணத்தை அலம்பித்
    தள்ளி அவரோட மனசை சுத்தப்படுத்தியிருக்கும்கறது
    நிச்சயம்.
    மனஅழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகானை
    பரிபூரணமான நம்பிக்கையோட மறுபடியும் நமஸ்காரம்
    செஞ்சுண்டு புறப்பட்டார் வந்தவர்.

    அவருக்கு மட்டுமில்லாமல் நம் அனைவருக்குமே
    பாடம் நடத்தியுள்ளார் நம் பெரியவா!

    தர்மோ ரக்ஷதி ரக்ஷித:

    சர்வேஸ்வரா ,கருணாமூர்த்தயே
    சரணம்.!
    ஹரஹரசங்கர ஜெயஜெயசங்கர ! ஹரஹரசங்கர
    ஜெயஜெயசங்கர ! ஹரஹரசங்கர ஜெயஜெயசங்கர !
    ஹரஹரசங்கர ஜெயஜெயசங்கர !
     
    sindmani, tljsk, harinikanthi and 2 others like this.
    Loading...

  2. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    ஆமாமாம். அவர் வைத்தியருக்கெல்லாம் வைத்தியரில்லையா. வைத்தியநாதன் ஆயிற்றே ! ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் அவ்வளவு சீக்கிரம் பார்ப்பாரா ? முதல்ல வீட்டு வைத்தியம், நாட்டு வைத்யம், கட்டுப்படவில்லையானால், தெருவிலே இருக்கற டாக்டர், வெளியூர்ல இருக்கற ஆஸ்பத்திரி, இது எதுக்கும் கேட்கவில்லை என்றால் தானே ஸ்பெஷலிஸ்ட் ? !!!

    மஹா பெரியவா கருணை மிக்கவர் மட்டுமில்லை. சிறந்த நகைச்சுவை உணர்வு மிக்கவர். சிரிக்க வைத்து, சிந்திக்க வைக்கும் மஹான். அவர் தரிசனம் நானும் பெற்றேன் என்பதே இந்த ஜென்மத்தைக் கடையேற்றவல்லது.
     
    vaidehi71 likes this.
  3. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    நன்றி பவித்ரா :)
     
  4. iyerviji

    iyerviji Finest Post Winner

    Messages:
    34,587
    Likes Received:
    28,749
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Thank you for sharing Krishnamma, true God knows what is best for us
     
  5. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,365
    Likes Received:
    10,561
    Trophy Points:
    438
    Gender:
    Female

    Very nice Viji.Of late we receive many such messages about Mahaperiyava thro Whatsapp.

    Jayasala 42
     
  6. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    yes Mami :)
     
  7. tljsk

    tljsk Gold IL'ite

    Messages:
    152
    Likes Received:
    111
    Trophy Points:
    110
    Gender:
    Male
    Thank you for sharing @krishnaamma
     
  8. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    இன்றைக்கு எல்லாவற்றையும் படித்தது பின்னூட்டம் போடறீங்களே......சூப்பர் :)..............அப்படியே என் எல்லா கதைகளையும் படித்து உங்கள் கருத்துகளையும் போடுங்களேன் :)
     

Share This Page