1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வாழ்க உன் குலம்! வளர்க உன் தொண்டு!

Discussion in 'Posts in Regional Languages' started by meenasankaran, Oct 25, 2018.

  1. kkrish

    kkrish IL Hall of Fame

    Messages:
    5,608
    Likes Received:
    10,032
    Trophy Points:
    438
    Gender:
    Female
    மீனா

    ரொம்ப நன்றிங்க.

    உடல் எடையை குறைக்க சொல்லாமல் என் பிரச்சனைக்கு வேறு வழி காண்பித்ததற்கு உங்களுக்கு நான் என்றென்றும் கடமை பட்டிருக்கிறேன்.

    எனக்கு மனசுக்குள்ளே ஒரே பதைப்பு, "எங்கே மீனா, எடையை குறைங்கன்னு சொல்லிடுவாங்களோ. அடுத்த வாரம் தீபாவளி வருதே! லட்டு, ஜாங்கிரி, முறுக்கு, தேன்குழல் எல்லாம் சீந்துவாரின்றி "அம்போ"ன்னு இருக்குமேன்னு" கவலையா இருந்தேன்.

    என் வயத்துலே பால் வார்த்துடீங்க. உங்க வாயிலே சர்க்கரை போடனும் ... இல்ல இல்ல , லட்டு, ஜாங்கிரி தான் போடனும்

    இப்போ பிரச்சனைக்கு வருவோம். . சரி நீங்க சொன்ன மாதிரி செய்யலாம்னு தான் நினைச்சேன். மரு நிமிஷம் என் கண் முன்னாலே வேற ஒரு காட்சி தோணித்து.

    உங்களுக்கு Jungle Bookல வர கரடி ஞாபகம் வந்தது. எனக்கோ நம் சிங்கார சென்னையில் பல முறை, பல இடங்களில் இந்த ஜீவஜந்து, சுவர்களிலும், தொலைபேசி கம்பிகளிலும் இதை செய்து கொண்டிருக்கும் காட்சி தான் கண் முன் நிக்கிறது .:D

    இந்த வாயில்லா ஜந்துவின் பெயரை சொல்லி நிறைய பேர் "மச மச "என்றிக்கும் பிள்ளைகளை வைதும் கேட்டிருக்கிறேன்.:biggrin:

    அதனால் வேண்டாங்க. நான் கடைக்கு போய் ஒரு back scratcher வாங்கிக்கறேன்.;)

    நீங்களே இப்படி சொல்லிட்டா எப்படி.

    தீபாவளி வருகிறதே. கண்டிப்பாக சரவெடி போல் சிரிக்க வைக்கும் சமபவங்கள் உங்கள் ஊரில் நிச்சயமாக ஏதாவது நடக்கும்.

    இனிப்புகளுடன் உங்கள் நகைச்சுவை பதிவையும் படித்தால் , தீபாவளியை இரட்டிப்பு சநதோஷத்துடன் கொண்டாடுவோம்.

    Looking forward to more such hilarious posts.
     
    Thyagarajan likes this.
  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,748
    Likes Received:
    12,565
    Trophy Points:
    615
    Gender:
    Male
    Funtastic Himalayan humour.
    God bless all participants here.
    Happy deepavali.
    Regards.
     
  3. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,748
    Likes Received:
    12,565
    Trophy Points:
    615
    Gender:
    Male
    கலிஃபோர்னியா சங்கத்திலே தமிழ் இடி முழக்கத்துக்கு இடை இடையே தங்கள் இடி தான் மேலோங்கி இருந்திருக்கும் அன்னாளிலே.
    பலே ஸ்வரம். பலே ஜதி. அழகிய நடை. படிக்கப்படிக்க கொப்பளிக்கும் சிரிப்பு.
    நன்றி சொல்ல வார்த்தை இல்லை எனக்கு.
    தி.
     

Share This Page