1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

'வாழ்க்கை இன் ரகசியம்' by Krishnaamma :)

Discussion in 'Stories in Regional Languages' started by krishnaamma, Oct 14, 2015.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    இது ஒரு ஊடகத்தின் செய்தியால் வந்த தாக்கம் தான் நண்பர்களே ! :)

    காலை இல் கணவன் அருண் மற்றும் மகன் வருண் ஆபீஸ் மற்றும் பள்ளிக்கு சென்றதும் வந்து 'ஹாய்' யாக சோபாவில் அமர்ந்தாள் உமா மகேஸ்வரி. சிலமாதங்கள் முன்பு வரை கூடவே இருந்த மாமியார் மாமனார் இப்போது இல்லாதிருப்பது கொஞ்சம் நிம்மதி போல உணர்ந்தாள். ஆனால் அருண் தான் எதையோ பறி கொடுத்தாற் போல இருக்கான், இந்த வருணும் எப்பவும் பாட்டி எப்பவருவா, தாத்தா எப்ப வருவா என்று கேட்டுக்கொண்டே இருக்கான்.

    அன்று அவர்களை ஹோமில் சென்று பார்த்துவிட்டு வந்ததும், " அம்மா, அவங்க ஏன் இங்கே இருக்காங்க, நம்ப வீட்டில் இல்லை ?....அவங்க பாத்ரூம் நல்லாவே இல்லம்மா" ..............என்றெல்லாம் சொன்னான்...........

    " இங்கே பக்கத்தில் தானே இருக்காங்க, எப்போவேண்டுமானாலும் நாம் வந்து பார்க்கலாம், பேசாமல் வா வருண் " என்று தான் போட்ட மிரட்டலால் தான் பேசாமல் வந்தான்............இதெல்லாம் கொஞ்ச நாட்கள் தான், பிறகு இருவரும் சகஜமாகி விடுவார்கள் என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.

    இப்படி யோசித்துக்கொண்டே டிவி பார்கையில் போன் மணி ஒலித்தது. மறுமுனை யில் ஒரு ஆண் குரல்,

    " ஹலோ, இது மிஸ்டர். அருண் வீடு தானே? "

    "ஆமாம், நீங்க யாரு, நான் அருண் மனைவி தான் பேசறேன்" .....

    " ஓ... குட் மோர்னிங் மேடம், நான் சங்கர், உங்கள் மகன் வருண் பள்ளியிலிருந்து பேசுகிறேன்".............

    உடனே உமா கொஞ்சம் பதட்டத்துடன், " என்ன சார் , வருணுக்கு என்ன? " ....என்றாள்

    " அடடா........வருணுக்கு ஒன்றும் இல்லை , நாங்கள் ஆபீஸ் லிருந்து பேசுகிறோம் மேடம்" என்றான்.......

    பிறகு தொடர்ந்து, " எங்கள் பள்ளி 40 வது வருடத்தை கொண்டாட இருப்பது உங்களுக்கு தெரிந்து இருக்கும், அதற்காக ஒரு வருட புத்தகம் வெளி இடலாம் என்று எண்ணுகிறோம். அதன் ஒரு பகுதியாக, இந்த பள்ளி யில் படித்த முன்னாள் மாணவன் அல்லது மாணவியின் குழந்தைகள் இப்போது இங்கு படிப்பவர்களாக இருக்கும் பக்ஷத்தில், அவர்களிடம் பேசி, அவர்களின் போடோவுடன் புத்தகத்தில் போடலாம் என்று முடிவு எடுத்திருக்கிறர்கள்; அது தொடர்பாக பேசுகிறேன்" என்று முச்சு விடாமல் சொல்லி முடித்தான்.

    " ஒ...அப்ப சரி" என்றாள் உமா .

    உடனே அவன், இவர்களின் வீட்டு விலாசம், அருண் மற்றும் இவளின் பெயர், வருண் படிக்கும் வகுப்பு...என்று பலதும் சொல்லி உறுதிப்படுத்திக்கொண்டான். இவர்களின் பேச்சு புத்தகத்தில் போட தகுதியானால், பிறகு போட்டோ வாங்கிக்கொள்வதாக சொன்னான். மேலும், இவர்களின் பேச்சை தான் ரெகார்ட் செய்து கொள்வதாகவும், ஒரு 10 நிமிடங்கள் தனக்காக ஒதுக்கும் படியும் கேட்டுக்கொண்டான். உமாவும் எல்லாவற்றிக்கும் சரி என்று சொன்னாள்.

    thodarum.............
     
    Caide likes this.
    Loading...

  2. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    கேள்விகளை ஆரம்பித்தான், "முதலில், நீங்கள் ஏன் எங்கள் பள்ளி யை தேர்ந்து எடுத்திர்கள்? "...

    " உங்கள் பள்ளியில் நல்ல கல்வியைத் தவிர , நல் ஒழுக்கங்களும், பெரியவர்களை மதித்து நடக்கும் முறையும், மனிதாபிமானமும் கற்றுத்தருகிரீர்கள். நாட்டுப்பற்று மிக்கவர்களாகவும் ஆக்குகிறீர்கள் .......... ஏன், என் கணவரையே எடுத்துக்கொள்ளுங்கள், நல்ல பழக்க வழக்கங்கள் நிறைந்தவர், எவ்வளவு கொட்டிக்கொடுத்தாலும் என் படிப்பு என் தாய் நாட்டுக்குத்தான் உதவணும் என்று பிடிவாதமாய் இங்கேயே இருப்பவர். ... அவசியம் என்று அவர் ஆபீஸ் யில் நினைத்தால், வெளிநாடு போய் வருவாரே அல்லாது அங்கு செட்டில் ஆக விரும்ப மாட்டார்".. ...............என்றாள்.

    மறுமுனையில் "அவ்வளவு தானா ?" ...என்றதும்,

    " அது என் கணவர் படித்த பள்ளி என்பதாலும் தான் "...." என் மகனும் இதுபோலவே இருக்கணும் என்று நாங்கள் நினைக்கிறோம்" என்றாள் .

    " புரியவில்லையே மேடம்".... அதாவது, எங்கள் வருண் எங்களை விட்டு பிரிந்து வெளிநாட்டில் வாழ்க்கை நடத்துவது எங்களுக்கு பிடிக்காது, அவன் எப்போதும் எங்களுடனே, எங்கள் கண் முன்னே இருப்பது தான் எங்களுக்கு சந்தோஷம்.......குழந்தைகளை பெற்று கஷ்டப்பட்டு வளர்ப்பது, , அவர்கள் பெரியவர்கள் ஆனதும் கஷ்டப்படாமல் சுகமாய் இருக்கத்தானே?............அதை நாம் கண்குளிர கண்டால் தானே நாம் செய்ததற்கு ஒரு அர்த்தம் இருக்கும்....சொல்லுங்கள்"...என்றாள்......எப்படியும் பேசி அசத்தி, வருட புத்தகத்தில் தங்கள் போட்டோ வரும்படி செய்யணும் என்கிற வேகம் இருந்தது அவள் பேச்சில்.

    " ரொம்ப சரி...நீங்கள் இப்படி நினைக்கிறீர்கள் ஆனால் வருண்?....உங்கள் மகனிடம் எப்போதாவது இது பற்றி பேசி இருகிறீர்களா? ".........

    " அவன் கண்டிப்பாக எங்களை விட்டு பிரிந்து இருக்க சம்மதிக்கவே மாட்டான்".............என்றாள்

    " ஒருவேளை ..ஒருவேளை அவன் அப்படி போய் விட்டால்.........அவன் உங்களிடம், "நான் உங்களுக்கு தேவையான பணம் அனுப்புகிறேன், உங்களுக்கு இங்கு ஒரு குறைவும் வராது" என்று சொன்னால்.............அப்போது உங்கள் நிலை என்ன, என்ன சொல்வீர்கள் அவனிடம்? "...............

    " ஏன் இப்படி மறுபடி மறுபடி கேட்கிறீர்கள் ?............அவன் பணம் அனுப்பினால் மட்டும் நாங்க இங்கே சந்தோஷமாய் இருந்துவிட முடியுமா மிஸ்டர். சங்கர்? ...கூட இருந்தால் தானே நல்லா இருக்கும், வெறும் பணமும் சௌகர்யங்களுமா முக்கியம்? ...........மகன், மருமகள் பேரன் பேத்தி என்று எல்லோர் கூடவும் இருப்பது தானே வயதான காலத்தில் சந்தோஷம்?...அவன் சுகமாய் வாழுவதை பார்க்க கொடுத்து வைத்திருக்கணுமே?"...........என்றாள்

    " நீங்கள் என்ன சொன்னாலும் அவன் கேட்கவில்லை என்றால்?.............தான் வெளி நாட்டில் செட்டில் ஆகவேண்டும் என்கிற எண்ணத்தை மாற்றிக்கொள்ளவில்லை என்றால்? "

    நிதானம் இழந்த உமா, கொஞ்சம் குரலை உயர்த்தி "என்ன மிஸ்டர். சங்கர், ஏதோ கேள்வி பதில் என்று பார்த்தால், தேவை இல்லாமல் பேசரீங்க? .....கேட்க வந்ததை கேளுங்க அனாவசிய பேச்சு வேண்டாம்............என்றாலும் சொல்கிறேன் எங்க வருண் அப்படி செய்ய மாட்ட ன், நாங்க எங்கள் தேவைகள் சிலவற்றை அவனுக்காக குறைத்துக்கொண்டு அவனுடைய வளமான எதிர்கலத்துக்காக பாடுபடுகிறோம் என்று அவனுக்கு நன்கு தெரியும் " என்றாள் காட்டமாக..

    " கோபிக்க வேண்டாம் மேடம், உங்களின் மன நிலையை அறியவே அப்படி கேட்டேன்.............பேச்சு வளர்ந்து விட்டது, இதற்கு மட்டும் பதில் சொல்லிவிடுங்கள் போதும்....வேறு யாருடைய வற்புறுத்தலுக்காகவோ அவன் உங்களை கை விட்டு விட்டால்.....அப்போ உங்களின் மன நிலை எப்படி இருக்கும்? ".................." அத்துடன், உள்நாட்டில் அல்லது உள்ளுரில் இருக்கும் மகன்கள் எல்லோருமே தங்களின் தாய் தகப்பனை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பது உங்கள் வாதமா? "......................

    யாரோ மண்டையில் 'சம்மட்டி' யால் அடித்தது போல உணர்ந்தாள் உமா.

    thodarum...............
     
    Caide likes this.
  3. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    கொஞ்சம் முன்பு குரலை உயர்த்தியவளுக்கு இப்போது நாக்கு எழவே இல்லை ....பேச முயாமல் தொண்டையை அடைத்தது....மாமனாரும் மாமியாரும் ஒரு கணம் மனக்கண்ணில் வந்து போனார்கள்.... அப்படி தானும் ஆகிவிடுவோமே????? என்கிற எண்ணமே மனம் வலித்தது.....கொஞ்சம் கண்ணீர் எட்டிப்பார்த்தது...............

    " என்ன மேடம் , பதிலே இல்லை? "..............ஹல்லோ, லைன் யில் இருக்கீங்களா?.............மிஸஸ் . அருண்?"......

    கம்மிய குரலில் பதில் அளித்தாள்...."ம்ம்ம்....இருக்கேன்.........வந்து..............என்று கொஞ்சம் அழுகையுடன் ஆரம்பித்தவளை எதிர்புறத்திலிருந்து வந்த மென்மையான குரல் அடக்கியது..............

    " மன்னிக்கணும், மிஸஸ்.அருண், நான் பள்ளி இலிருந்து பேசலை...............வெயிட் வெயிட்............போன் ஐ கட் செய்து விடாதீர்கள்..............நான் அருண்னின் நண்பன்...............onsite க்கு சென்று போனவாரம் தான் வந்தேன், பார்த்த போது அருண் ஏதோ பறி கொடுத்தது போல இருந்தான், கேட்டால் ஒன்றும் இல்லை என்று சொல்லி விட்டான், என்றாலும் நான் எங்கள் இருவருக்கும் பொதுவான நண்பர்களிடம் விசாரித்ததில் அவன் மனமே இல்லாமல் , மன்னிக்கணும், உங்கள் வற்புறுத்தலுக்காக மட்டுமே பெற்றவர்களை ஹோம் மில் விட்ட விஷயம் தெரிந்து கொண்டேன்................அது தான் இந்த நாடகம்................

    மீண்டும் மன்னிக்கணும், நான் ஒரு பேச்சுக்கு சொன்னபோதே உங்களால் தாங்க முடியவில்லையே, அவர்களுக்கு எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்த்திர்களா ? ...அவர்களும் உங்களைப்போலவே தன் தேவைகளை குறைத்துக்கொண்டு தானே அருணை வளர்த்திருப்பார்கள்?..............அவர்களுக்கும் தன் மகன், மருமகள் பேரனுடன் தங்களின் கடைசி காலத்தை கழிக்கும் எண்ணம் இருந்து இருக்கும்?..........ப்ளீஸ், அழாதீர்கள் உமா, நான் உங்கள் குடும்ப நலனுக்காகத்தான் பேசுகிறேன்............அருணை அப்படி சோகமாய் பார்க்க முடியவில்லை என்னால்...................

    இது எங்கு கொண்டுபோய் விடுமோ அவனை..............தன் கவலைகளை உங்களுடன் பகிரமுடியாமல், நண்பர்களிடமும் பகிராமல் மனதிலேயே வைத்து வருந்துவதால் உடல் நலம் குன்றலாம்............ அல்லது இவ்வளவு நாள் இல்லாத சில கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகலாம்...............எதற்கு இப்படி எல்லோரும் வருந்தணும்?......

    மகன் வருத்தப்படுவதை எந்த பெற்றோராலும் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது...............அதுவும் தங்களால் அவன் கஷ்டப்படுவான்னானால், அவர்கள் தாங்களாகவே ஒதுங்கிவிடுவார்கள்..............ஒடுங்கி விடுவார்கள் உமா, அது தான் உங்கள் விஷயத்தில் நடந்திருக்கு, அருண் உங்களுக்கும் சொல்ல முடியாமல் பெற்றவர்களுக்கும் சொல்லமுடியாமல் படும் அவஸ்த்தையை பார்க்க சகிக்காமல் தான் அவர்கள் ஹோமில் இருக்கிறார்கள்..............என்றாலும் அவர்களும் வருத்தத்துடன் தான் இருக்கிறார்கள்............." "....உமா, இருகீங்களா? "....................


    " ம்...இருக்கேன் சங்கர்"..என்றாள்

    " இதற்கும் ஒரு சாரி, ஏன் பெயர் சங்கர் இல்லை...சும்மா சொன்னேன்....

    thodarum................
     
    Caide likes this.
  4. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    நான் யார் என்றே உங்களுக்கு தெரியவேண்டாம், எப்பவாவது என்னை நீங்கள் பார்க்க நேர்ந்தால்....உங்களுக்கு ரொம்ப 'எம்பரசிங்' ஆக இருக்கும்..............சரியா? "................." நீங்கள் கேட்பதாக இருந்தால் இன்னும் ஒன்று சொல்லணும்"....என்று இழுத்தான்..................

    " ம்...சொல்லுங்கள்".............என்றாள் கொஞ்சம் தெளிந்த மனதுடன்.

    " அருண் தன் தாத்தா பாட்டியுடன் வளர்ந்ததால் தன் மகனும் அப்படி வளரணும் என்று விரும்புகிறான், ஆனால் வருண் நிலைமையை கொஞ்சம் யோசியுங்கள்..................அவன் பாட்டி தாத்தா ஹோமில் இருப்பதை பார்த்து வளர்ந்தால்................????நாளை உங்களை ஹோமில் விடும்போது அருண் மாதிரி பதட்டம் கூட இருக்காது அவனிடம், அப்பா செய்ததைத்தானே தானும் செய்கிறோம்................ இதில் வருத்தப்பட என்ன இருக்கு என்று உங்களையே கேட்பான், அது தான் தங்கள் பழக்கம் என்று அவன் நினைத்து விடும் அபாயமும் இருக்கே?......"என்றான்

    மேலும் தொடர்ந்து சொன்னான் ..." பழைய கதை உங்களுக்கு தெரிந்திருக்கும் உமா, ஒருவன் தன் அப்பா இறந்ததும் அவருக்கு உணவு கொடுத்த அலுமினிய தட்டை தூக்கி போட போனானாம் , அதற்கு அவனுடைய மகன் சொன்னானாம், வெச்சிருப்பா நாளைக்கு உனக்கு வேண்டுமே என்று"...........நாளை அது போல த்தானே ஆகும் உங்கள் நிலைமையும் ?..............."

    " உமா, நாம் எதை விதைக்கிறோமோ அது தான் அறுவடைக்கு வரும், அவர்கள் செய்வது சொல்வது எல்லாம் சரி என்று நான் சொல்லவரலை, நீங்கள் மட்டுமே குற்றவாளி என்றும் நான் சொல்லவரவில்லை, அவர்கள் வயது போனவர்கள், அவ்வளவு சீக்கிரமாக தங்களை மாற்றிக்கொள்ள முடியாது.........நாம் இளைஞர்கள் , கொஞ்சம் வளைந்து கொடுத்தல் தான் என்ன ?.............."

    " நீங்க என்ன சொன்னாலும், இன்று அருண் இருக்கும் இருப்பு அவர்கள் உருவாக்கியது தானே, அதற்காகவும் அவர்களின் வயதுக்கும் கொஞ்சம் கிரெடிட் அவங்களுக்கும் கொடுங்களேன்.............'முதலே' அவர்களுடையது தானே?.....அதற்கான லாபத்தில் கொஞ்சம் பங்கு அவர்களுக்கும் கொடுங்களேன் "......." என்ன சரியா?" என்றான் சிரிப்புடன்.


    தொடர்ந்து .........."ஆபீஸ்சில் சில சமையம் ஒன்றுமே தெரியாத மானேஜரிடம் மாட்டிக்கொண்டு , திட்டு வாங்குவது இல்லையா.........கை கட்டி சம்பளம் வாங்குகிறோம் தான்...... ஆனால் மானேஜர் ஏதோ தன் பாக்கெட் லிருந்து தருவது போல அலட்டுவார்..........இந்த கம்பனியை விட்டு விட்டால் நாம் யாரோ அவர் யாரோ..............என்றாலும் அவர் மிரட்டலுக்கும் உருட்டலுக்கும் பயந்து, அட்ஜஸ்ட் செய்து தானே வேலை செய்கிறோம்......................அது ஏன் வீட்டில் வருவது இல்லை?..............அதுவும் இது தொடரும் பந்தம் இல்லையா?..............நீங்க புத்திசாலி.....புரிந்துகொண்டு அருணுடன் பேசி, ஆவன செய்வீர்கள் என்று நம்புகிறேன்.............." என்று முடித்தான் .

    மழை பெய்து ஓய்ந்தது போலவும் ....சூறாவளி அடித்தது போல உணர்ந்தாள் உமா...........மனம் தெளிவானது...............குரலை செருமிக்கொண்டு பேசத் துவங்கினாள்......." மிக்க நன்றி உங்களுக்கு, என் அருணுக்கு இப்படி ஒரு நண்பர் கிடைக்க அவர் கொடுத்து வைத்திருக்கணும்..............உங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இவ்வளவு பெரிய நன்மையை எங்களுக்கு செய்ததற்கு எப்படி நன்றி சொல்வது என்றே எனக்கு தெரியலை" ..............என்று விம்மினாள்...........

    பிறகு கொஞ்சம் தேறி, " இதற்கு அருண் வரணும் என்று இல்லை நண்பரே, இதோ உங்களுடன் பேசியதும் நானே போய் மாமனாரையும் மாமியாரையும் ஹோமிலிருந்து அழைத்துக்கொண்டு வந்து விடுகிறேன்..................மாலை அருணும் வருணும் வரும்போது அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கட்டும்.............நீங்கள் அவரிடம் எதுவும் சொல்லவேண்டாம்......சரியா?"...................என்று கேட்டுக்கொண்டாள்.

    பரஸ்பரம் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொண்டார்கள் ................அவன் ஆல் தி பெஸ்ட் என்றும் சொன்னான்............ஆமாம் இனி எல்லாம் சுகமே என்று நினைத்தாள் உமா.................... கார் சாவியை எடுத்துக்கொண்டு அவர்களை கூடி வர சந்தோஷமாய் கிளம்பினாள்...............கணவனின் பூரித்தமுகம் இப்போதே மனக்கணில் வந்தது.

    முன்பெல்லாம் சொல்வார்கள், கணவனின் மனதை பிடிக்க அல்லது அவனுடைய பரிபூரண அன்பைப்பெற நன்றாக சமைத்து போடணும், வயிறு தான் மனதை அணுக எளிய வழி என்று ஆனால் அதைவிட சுலபமானது எது தெரியுமா?.............அவன் யாரிடம் அன்பை அதிகமாக செலுத்துகிறானோ அவர்களிடம் வந்தவள் அதிக அன்பு செலுத்தினால் போதும்............... அவனுக்கு அவர்களைப்பற்றிய கவலை இல்லாமல் இவளிடமே
    ' சரண்டர் ' ஆகிவிடுவான்...........அது போதாதா அமைதியான, இனிமையான வாழ்க்கைக்கு? .......இப்போது உமாவுக்கு 'வாழ்க்கை இன் ரகசியம்' புரிந்து விட்டது.

    அன்புடன்,
    கிருஷ்ணாம்மா :)
     
    sindmani, Caide and afcpreethi like this.
  5. afcpreethi

    afcpreethi Silver IL'ite

    Messages:
    137
    Likes Received:
    51
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Super friendssmileyமிக அருமையான கதை ....
     
  6. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Unmai ma.... nam indru enna seigiromo athai than nam pillaigal naalai seivaargal... enga ammavukum ennakum otrumai undu intha vishayathil.....

    Nalla karuthulla kathai ma.... pramadam.....
     
  7. pinky21

    pinky21 Gold IL'ite

    Messages:
    351
    Likes Received:
    403
    Trophy Points:
    123
    Gender:
    Female
    Nice story with a great moral ma..:hatsoff, நெல்லு போட்ட நெல்லு தான் விளையும், புல்லு போட்டால் புல்லு தான் விளையும்ங்கற பழமொழிக்கு, இன்றைய சூழ்நிலைக்கு எடுத்துக்கட்டாக மிகவும் அழகா எழுதியிருக்கீங்க.. மிகவும் அருமை மா.

    Ps: on a lighter note, Is it Arun himself called his wife to make her realise her falut?...
     
  8. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female

    நன்றி ப்ரீத்தி :)
     
  9. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ரொம்ப நன்றி ப்ரியா :).வாஸ்த்தவம், குதந்தைகள் நம்மைப் பார்த்துத்தானே வளருகிறார்கள்?..............அந்த தாக்கம் இருக்கும் .............மேலும், இப்போ நிறைய பேர் அயல் நாடுகளில் இருப்பதால், தாத்தா பாட்டி மற்றும் சொந்தங்களை குழந்தைகள் நம் பேச்சின் முலம் மட்டுமே அறிகிறார்கள் எனும்போது நாம் இன்னும் ஜாக்கிரதையாக இருக்கணும் :)
     
    1 person likes this.
  10. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    நன்றி க்ருதி :) .....ஆனால் அருணே பேசினால் அவன் குரல் அவனுடைய மனைவிக்கு தெரிந்து விடாதா என்ன? :)
     
    1 person likes this.

Share This Page