1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வருவாயா? என் அன்பே!!

Discussion in 'Regional Poetry' started by Malar2301, Apr 19, 2011.

  1. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    கண்ணெதிரே தோன்றி
    கண்ணிமைக்கும் முன் மறைகிறாய்!!!

    உனக்கு அது கண்ணாமூச்சி ஆட்டம்
    எனக்கோ அது கண்களில் நீரோட்டம்!!!

    ஆட்டத்தை நீ நிறுத்தும் வரை
    நீரோட்டம் இருக்கும் அதுவரை!!!

    மாற்றத்தை என்னுள் விதைத்த நீ
    என் வாட்டத்தை போக்க வருவாயானால்
    ஊட்டத்தை என்னில் ஊற்றும் உனக்காக மட்டும்
    என் நாட்டத்தை ஒதுக்கிடுவேன் அன்பே!!

    வருவாயா? என் அன்பே!!
     
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    அன்னையின்,
    அன்னையாகத் துடிக்கும்,
    உள்ளத்தின் உள்ளார்ந்த ஏக்கத்தின், அன்பின்,
    வெளிப்பாட்டை அழகிய வரிகளில் படிப்பவரின்,
    மனதைத்தொட அருமையாக சொல்லி விட்டீர்கள் மலர்.
    வருமே அந்த அன்பு அன்பின் ஊற்றைத் தேடி விரைவில்.
     
  3. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    உண்மையை சொல்லட்டுமா நண்பரே...நான் துணையை நினைத்து தான் முதலில் எழுதினேன்!! ஆனால் உங்கள் பின்னூட்டம் படித்தவுடன்...என்ன ஆச்சர்யம்...அன்னைக்கும் குழந்தைக்கும் கூட அவை பொருந்தியது கண்டு வியந்தேன்....மிக்க நன்றி நண்பரே!!
     
  4. girijasenthil

    girijasenthil Senior IL'ite

    Messages:
    42
    Likes Received:
    13
    Trophy Points:
    23
    Gender:
    Female
    உங்கள் வர்ர்தைகளின் கோர்வை நன்கு அமைந்து இருக்கிறது ..
    அருமை.
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    நாமான என் தோட்டம் நீயாக இருக்க
    நீயான நான் இங்கு என்னவாக இருக்க???

    நீயென்றும், நானென்றும் இரு வார்த்தை
    நாமென்ற ஒரு வார்த்தை ஆன அன்றே
    என்னிலே எல்லாமே நீயானாய் எனை வென்றே :)

    என்னிலே அனைத்துமாய் நீ,
    நான் அணைக்கும் அனைத்துமாய் நீ
    இதில் உன்னிடம் எப்படி புதிதாய் வர??:)

    அழகு வரிகள் மலர்.
     
  6. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    என்னடா எப்போதும் குழந்தையையும் அன்னையையும் பற்றி எழுதுபவர் இன்று தம் துணையை நினைத்து எழுதியிருக்கிறாரோ என்று சந்தேகித்தேன்....ஆனால் நிச்சயமான பதில் தெரியவில்லை...உங்கள் பின்னூட்டம் கண்டு அறிந்தேன்...நீங்கள் சொல்வது போல உங்கள் வரிகள் அவர்களுக்கும் பொருந்தி வருகிறது
     
  7. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Malar, avar vandhuttaara illaiya..

    indha kavidhaiya kaattunga nichchayam vandhuduvaar...:)
     
  8. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    இரு பொருள் தரும் வார்த்தைகள் உண்டு அது போல உங்கள் கவிதை இருவரையும் அழகாய் சொல்லி விட்டதே. கவிதை நன்று. :thumbsup
     
  9. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    ookathirku mikka nandri Girija!!
     

Share This Page