1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

லக்ஷத்தில் ஒருவன் ! by Krishnaamma :)

Discussion in 'Stories in Regional Languages' started by krishnaamma, Oct 18, 2015.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    இது தான் என் முதல் கதை !

    அந்த வீடு அலங்காரத்துடன் தயாராய் இருந்தது. இன்னும் ஒரு வாரத்தில் கல்யாணம். ஆமாம் கண்ணன் தம்பதிகளின் ஒரே பெண் ஸ்ருதி க்கு கல்யாணம். அயல்நாட்டிலிருந்து மாப்பிள்ளை வரவேண்டியது தான் பாக்கி, மீதி எல்லாம் தயராய் இருந்தது. மாப்பிள்ளை தன்னுடன் வேலை செய்யும் இரண்டு நண்பர்களுடன் புறப்பட்டு விட்டார் என்று தகவல் வந்து விட்டது, நாளை காலை அவர்கள் இங்கிருப்பர்கள்.

    எனவே, கண்ணன் மீண்டும் ஒருமுறை மாப்பிள்ளை வீட்டார், அவர்களின் சுற்றம் மற்றும் நண்பர்கள் தங்குவதற்கு செய்த ஏற்பாட்டை பார்த்து, திருப்தி அடைந்தார்.

    மகளிடம் சென்று புன்னகைத்தவாறே, "என்னம்மா , உன்னவர் கிளம்பி விட்டார் போல இருக்கே?" என்றார்.

    அவளும் கொஞ்சம் வெட்கத்துடன் புன்னகைத்து , " ஆமாம் அப்பா, இப்போ தான் whatsup இல் message அனுப்பினார், கிளம்பிட்டார்களாம் , flight இல் போன் அணைக்கும் முன் மீண்டும் மெசேஜ் செய்வதாக சொன்னார்" என்றாள்.

    அன்புடன் பெண்ணின் தலையை தடவிக்கொடுத்துவிட்டு அறைலிருந்து வெளியே வரவும் அவரின் போன் ஒலிக்கவும் சரியாக இருந்தது. எடுத்து பேசியவர் நெஞ்சை பிடித்துக்கொண்டு சரிந்து விழுந்து விட்டார், சத்தம் கேட்டு அறை லிருந்து ஸ்ருதி யும் உள்ளிருந்து அவரின் மனைவி ராதாவும் ஓடிவந்தார்கள். போன் அப்போதும் கட் ஆகாமல் இருந்ததால், எடுத்து பேசினாள் ஸ்ருதி.

    பேசியது மாப்பிள்ளை மாதவனின் அப்பா.... அவர் சொன்ன தகவல்.....ஸ்ருதிக்கும் மனது வலித்தது. ஒருவாறு சமாளித்துக்கொண்டு, விஷயத்தை காதில் வாங்கினாள். பிறகு அப்பாவை பார்த்தாள். அதற்குள் வேலை செய்து கொண்டிருந்த வேலை ஆட்கள் ஓடி வந்து அவரை அருகே இருந்த சோபாவில் கிடத்தினார்கள். முகத்தில் தண்ணீர் தெளித்தாள் ராதா.

    "என்ன ஆச்சுங்க? என்ன ஆச்சு?...ஸ்ருதி யார் போன் இல்?...என்ன விஷயம்? " என்று மாறி மாறி கேட்டாள்.

    கண்ணனால் பேச முடியவில்லி, நா தழு தழுத்தது................"நாம் மோசம் போனோம் ராதா" என்று கேவினார்.

    ஸ்ருதி யாலும் ஒன்றும் சொல்ல முடியவில்லை..............கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வந்த வண்ணம் இருந்தது.

    தொடரும்.................
     
    Caide likes this.
    Loading...

  2. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: லக்ஷத்தில் ஒருவன் !

    பிறகு ஒருவழியாக சுதாதரித்து, கண்ணனே சொன்னார். " சம்பந்தி தான் போன் செய்தார், மாப்பிள்ளை ஏர்போர்ட் அருகில் வரும்போது அங்கு நடந்த துப்பாக்கி சூட்டில் தவறுதலாய் ஒரு குண்டு அவர் மேல் பாய்ந்து விட்டதாம்............நண்பர்கள் மற்றும் போலிஸ் அவரை மருத்துவ மனைக்கு கொண்டு சென்று இருக்கிறர்களாம்......மாப்பிள்ளை இன் நண்பர் phone செய்தாராம் " என்றார்.

    அவ்வளவுதான், அங்கு சூழ்நிலையே மாறி விட்டது, ராதா வாய்விட்டு கதறி அழ ஆரம்பித்து விட்டாள்.
    " ஐயோ ! இது என்ன சோதனை? கடவுளே, என ஒரே பெண்ணுக்கு இப்படி ஆகணுமா? " என்று புலம்பினாள்.
    ஆள் ஆளுக்கு இது போலவே நிகழ்ந்த, தங்களுக்கு தெரிந்த நிகழ்ச்சிகளை பற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள். உறவுகள் இவர்களுக்கு ஆறுதல் சொல்ல முனைந்தார்கள்.

    "பெருமாளுக்கு முடிந்து வை, ஒண்ணும் ஆகாது "................

    "கல்யாணத்தை தள்ளி வெச்சுக்கலாம் கவலைப்படாதே ! ".................

    " நீங்க ரொம்ப பிரும்மாண்டமாய் ஏற்பாடு செய்திருக்கீங்க, அது தான் திருஷ்டி, அவர் நலம் தான் என்று அடுத்த போன் வந்துடும் பாரேன்"...............

    இப்படி பலவகை ஆறுதல்கள் வந்தாலும், கண்ணன் தம்பதிகளின் மனம் ஏற்க மறுத்தது....................ஜோசியர் சொன்னதையே சுற்றி சுற்றி வந்தது.

    "ஸ்ருதி இன் கல்யாணத்தில் ஒரு பெரிய தடங்கல் வரும் , கவலைப்படவேண்டாம் அது தெய்வாதீனமாய் நீங்கும்" என்று சொல்லி இருந்தார் அவர்.....ஆனால் அது மாப்பிள்ளை இன் உயிருக்கே ஆபத்து என்று நனைக்கவில்லை இவர்கள்.

    ஸ்ருதி நிலைமையோ படு மோசம்..............கண்களில் வழிந்த கண்ணீரை அவளால் கட்டுப்படுத்த முடியவே இல்லை, நிச்சயதார்த்தத்தில் பார்த்த மாதவனின் அழகிய முகமும் அவனின் அருகாமையும் பேச்சுகளும் நினைவில் சுழன்று சுழன்று வந்து கொண்டே இருந்தது. அன்று பேசும்போது "நான் லக்ஷத்தில் ஒருவன், உனக்கு கிடைத்திருக்கேன் " என்றாரே, அதனால் தான் எங்கோ படவேண்டிய குண்டு இவர் மேல் பாய்ந்ததா? என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள் .

    தொடரும்................
     
    Caide likes this.
  3. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: லக்ஷத்தில் ஒருவன் !

    எல்லோரைவிடவும் முதலில் சுதாதரித்தது ராதா தான், " நாம் உடனே சம்பந்தி வீட்டுக்கு போகணும், அவர்கள் அல்லது அவங்க சொந்தங்கள், இதை அபசகுனமாய் நினைத்து , நம்ப ஸ்ருதியை அதிருஷ்டமில்லாதவள் என்று கல்யாணத்தை நிறுத்திடப்போறாங்க" என்றாள்.


    துணுக்குற்ற கண்ணனும் ஸ்ருதி யும் உடனே கிளம்பினார்கள் சம்பந்தி வீட்டுக்கு.


    "நீ ஏன் மா? ' என்றார் கண்ணன்......
    ஆனால் அழுது கொண்டே தன் கையை பற்றிய ஸ்ருதியை ஒன்றும் சொல்ல முடியாமல் அழைத்துக்கொண்டு கிளம்பினார்கள் சம்பந்தி வீட்டுக்கு. அங்கு போனால், இவர்கள் வீட்டுக்கு சற்றும் குறையாத அலங்காரங்களுடன் இருந்தது வீடு...ஆனால் வீட்டில் தான் மயான அமைதி...........தயங்கியவாறே உள்ளே நுழைந்தனர் தம்பதிகள்.


    இவர்களைப் பார்த்ததும் சம்பந்தி மாமி ஓடோடி வந்தாள், " பாருங்க எப்படி ஆகிவிட்டது, யார் கண் பட்டதோ" என்று அழ ஆரம்பித்தாள். ராதாவுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் கண்ணீர் பெருக்கியபடி அவரின் கைகளை படித்தவண்ணம் நின்றாள்.


    அதற்குள் ரொம்ப சோகமாய் இருந்த சம்பந்தி மாமாவும் வந்து இருவரையும் உள்ளே அழைத்தார், பிறகு கேட்டார் " ஸ்ருதி வரலையா? "


    கண்ணன் பதில் சொன்னார்" வந்திருக்கா...காரில் அழுது கொண்டே உட்கார்ந்து இருக்கா" என்று .


    " அடாடா....கூப்பிடுங்கள் அவளை, அவளுக்குத்தான் இப்போ நாம் ரொம்ப ஆறுதல் சொல்லணும், பாவம் சின்னப்பெண்" என்று சொல்லி தானே காருக்கு அருகில் சென்றார். அதற்காகவே காத்திருந்தது போல உள்ளிருந்து ஸ்ருதி பாய்ந்து வெளியே வந்தாள் ..............'அப்பா'....என்று கேவிய படி மாமனார் காலில் விழுந்து வணங்கினாள்.

    தொடரும்................
     
    Caide likes this.
  4. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: லக்ஷத்தில் ஒருவன் !

    " என் துரதிருஷறம் தான் அவருக்கு இப்படி .........." என்று தொடர்ந்து சொல்லும் முன் ....." என்ன ஸ்ருதி இது அசட்டுத்தனம்"?.....சீசி...........சீ ..... அப்படீல்லாம் மனதில் கூட நினைக்காதே அம்மா.....எழுந்திரு, உள்ளே போகலாம் " என்று அவளை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு உள்ளே நுழையவும் போன் ஒலிக்கவும் சரியாக இருந்தது.

    பாய்ந்து எடுத்தார்..............ஆனால் விஷயம் கேட்டு "அய்யய்யோ" என்றார்................"பிறகு எப்படி" என்றார்..............போன் ஐ வைத்து விட்டார்......யாருக்கும் அவரிடம் விவரம் கேட்கவே அச்சமாக இருந்தது, அவரே சுதாதரித்துக்கொண்டு சொல்லட்டும் என்று நினைத்து , அவரவர்கள் மனதில் பெருமாளுக்கு பல வேண்டுதல்களை வேண்டிக்கொண்டார்கள்.

    இரண்டு நிமிடங்கள் இரண்டு யுகங்களாக கடந்தது, பிறகு அவர் சொன்னார், "மாதவனின் நண்பன்தான் போன் இல், குண்டு பாய்ந்தது இருதயத்துக்கு சற்று மேலேயாம், டாக்டர்கள் ஆபரேஷன் தியேட்டருக்கு கொண்டு சென்றுள்ளார்களாம் " என்று .

    இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போய்விட்டது அவர்கள் அனைவருக்கும், இருதயத்துக்கு மேலே என்றால்???????????நினைக்கவே நெஞ்சம் நடுங்கியது.......யோசிக்கும் திறன் அறவே போய்விட்டது..............அப்படியே செதுக்கிய சிற்பம் போல அமர்ந்து விட்டனர் அனைவரும்.............எவ்வளவு நேரம் கடந்ததோ தெரியாது........அவர்கள் எல்லோரையும் உயிர்பித்தது telephone னின் மணி ஓசை .

    அது அடித்ததும் எடுக்கவே பயமாய் இருந்து சம்பந்தி மாமாவுக்கு, நாலு முறை அடித்ததும் தான் எடுத்தார், பேசியவர் சொல்ல வொண்ணா ஆனந்தத்தில் . ................"அப்படியா அப்படியா............ரொம்ப சந்தோஷம்..............எல்லாம் தெய்வாதீனம் தான்........நல்லபடி அவனை பார்த்துக்கோப்பா, உனக்கு ரொம்ப புண்ணியம் உண்டு, பெருமாள் உன்னை நன்னா வைப்பார்......சரிப்பா மறுபடி கூப்பிடு..............."என்றல்லாம் சொன்னார்.

    அவரின் வார்த்தைகளால் இங்குள்ளவர்களுக்கும் சந்தோஷம் தொற்றிக்கொண்டது, அப்படி என்ன தெய்வாதீனம்......ஜோசியர் சொன்ன வார்த்தைகளையே இந்த சம்பந்தி மாமாவும் சொல்கிறாரே என்று யோசித்தனர் கண்ணன் தம்பதிகள். ஸ்ருதிக்கும் ஆவல் அதிகமானது, சம்பந்தி மாமியும் மாமா சொல்லப்போவதை கேட்க தயார் ஆனாள்.

    மாமா ரொம்ப சந்தோஷமாய் போனை வைத்து விட்டு, கேளுடி, எல்லோரும் கேளுங்கோ, மாதவனுக்கு treate ment செய்யும் டாக்டர் வெளியே வந்து, " இது ரொம்ப அபூர்வமான கேஸ், குண்டு heartkku மேலே பாய்ந்தது என்னவோ வாஸ்தவம்.....ஆனால் மாதவனுக்கு ஹார்ட் அங்கு இல்லை.............அவருக்கு ஹார்ட் வலது புறம் மாறி இருக்கு............இது போல லக்ஷத்தில் ஒருவருக்குத்தான் இருக்கும்...........ஸோ டோன்ட் வொர்ரி நாங்கள் operate செய்து குண்டை எடுத்துக்கொண்டிருக்கோம், நீங்கள் வீட்டுக்கு தகவல் சொல்லலாம், கவலை வேண்டாம்..... இதை சொல்லத்தான் வந்தேன்" என்றாராம்.

    எல்லோரும் வானத்தைநோக்கி வணங்கினர், ஸ்ருதிக்கு அப்போது தான் புரிந்தது அன்று மாதவன் ஏன் தான் லக்ஷத்தில் ஒருவன் என்று சொன்னான் என்று.
    பி . கு. : மீண்டும் ஒலித்த போனிலும் நல்ல செய்தி தான் வந்தது, ஆபரேஷன் செய்து வெற்றிகரமாய் குண்டை எடுத்துவிட்டார்கள் என்றும், ஒரு 2 நாள் வைத்திருந்து விட்டு, 'ஸ்டேச்சர் ' இல் வைத்து பாது காப்பாக இந்தியா அனுப்பிவைப்பதாக டாக்டர்கள் சொல்லியதாக மாதவனின் நண்பன் சொன்னான்................போன உயிர் எல்லோருக்கும் திரும்பியது .

    க்ரிஷ்ணாம்மா :)
     
    Caide likes this.
  5. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Re: லக்ஷத்தில் ஒருவன் !

    Super ma..... i liked the story very much....
     
  6. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Re: லக்ஷத்தில் ஒருவன் !

    Oru kalyanam panrathuna chumma va.... Athulaiyum ippadi oru kundu vizhunthal thanga mudiyuma... appppa...

    Niraivil subam.....
     
  7. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: லக்ஷத்தில் ஒருவன் !

    நன்றி ப்ரியா :)........'சுட சுட' படிச்சாச்சா? :)
     
    1 person likes this.
  8. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: லக்ஷத்தில் ஒருவன் !


    ஆமாம் ப்ரியா.............ரொம்ப ஜாக்கிரதையாக செய்யணும் எல்லாம், யார் கண் படுமோ என்று பயப்படனும் .......டெண்ஷன் தான் :)
     
    1 person likes this.
  9. Sun18

    Sun18 Gold IL'ite

    Messages:
    516
    Likes Received:
    648
    Trophy Points:
    188
    Gender:
    Male
    இது தான் தங்களின் முதல் கதையா அம்மா. மிகவும் திரில்லிங்கா இருந்துது மா.

    ஒரு படத்தில் வருகின்ற மாதிரி முடிவில் சுபம் சுபம்..(தமிழில் எழுதும் சுகமே தனி தான் மா. நான் தமிழில் பின்னூட்டம் இடுவதை சொல்கிறேன் மா).
     
  10. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    வாஸ்த்தவம் தான், தாய் மொழி இல் பேசும்போதோ அல்லது எழுதும்போதோ நம் கருத்துகளை சரியாக, நிறைவாக திருப்தியாக சொல்லிவிட்டது போல உணர்வோம் சுந்தர் :) ........மிச்ச கதைகளும் படியுங்கோ; அப்புறம் குழந்தைகளுக்கான, அந்த காலத்தில் நாம் ( உங்கள் வயது தெரியலை , அதனால் நாம் என்று சொல்லிவிட்டேன் :) ) ! தாத்தா பாட்டி இடம் கேட்ட கதைகளும் போடுகிறேன்............Enjou reading that also !


    அன்புடன்,
    கிருஷ்ணாம்மா :)
     
    1 person likes this.

Share This Page