1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மேதகு மென்பொருள் பொறியாளன் !!!

Discussion in 'Regional Poetry' started by niran2win, Aug 10, 2014.

  1. niran2win

    niran2win Senior IL'ite

    Messages:
    19
    Likes Received:
    24
    Trophy Points:
    18
    Gender:
    Male
    ஓடுகிறான் ஓடுகிறான் வாழ்க்கையைத் தேடி
    ஒய்ந்து போவான் ஒய்ந்து போவான் நாளெல்லாம் ஓடி
    கண்களுக்குள் வைத்திருக்கும் கனவுகள் கோடி
    இறுதியிலே தளருமடா அவனது நாடி

    விண்ணைத் தொடும் கட்டிடங்கள் விழி முன்னே
    விஞ்ஞானம் தந்த விசித்திரங்கள் அதன் உள்ளே
    கணினிப் பார்த்துப் பேசுதடா உயிர்கள்
    இவர்கள், மாரி காணா முளைத்துவிட்ட பயிர்கள் !!!

    ஒரு நொடிப் போற்றிடும்
    மறு நொடித் தூற்றிடும்
    மென்பொருள் உலகில்
    இதுவொரு வழக்கம்
    பொறியாளன் கண்களில்
    தினமொரு கலக்கம்

    சிரிப்பதை மறந்து உழைகின்றான்
    சிரம்மத்தை மறைத்து பிழைக்கின்றான்
    இரவுபகல் மறக்கின்றான்
    இன்னல்களே சுவைகின்றான்

    விடுமுறைக்கு வீடு செல்ல வாய்ப்பில்லை
    அதானாலே வீடு செல்லும் நாளெல்லாம் விடுமுறைதான்
    பெற்றவரைத் தினந்தினமும் காண்பதில்லை
    அதானாலே அழுகிறோமே பலமுறைதான்


    கணினி முன் துவங்கிடும் காலை
    பல மணி நேரம் வேலை
    சில மணி நேரம் முகநூல்
    அழகாய் தோன்றிய காதல்
    அதனுள்ளே வந்திடும் மோதல்
    நட்பெனும் தென்றலும் வீசி
    அன்னையைப் போல அலைப்பேசி
    சிலருக்கு அதனில் விளையாட்டு
    பலருக்கு அதனில் இசைப்பாட்டு
    சூரியன் உறங்கிடும் போது விழித்திடுவோம்
    அவன் தூக்கம் விலகிடும் போது
    சில சமயம் பஞ்சணையில்
    பல சமயம் சுற்றத்தார் வஞ்சனையில்
    விழுந்திடுவோம் ,
    மீண்டும் மறுநாள்
    எழுந்திடுவோம் !!!

    ******************
    --நிரஞ்சன்
    நானும் ஒரு மென்பொருள் பொறியாளன் .
     
    Loading...

  2. aasaiajiith

    aasaiajiith Silver IL'ite

    Messages:
    267
    Likes Received:
    207
    Trophy Points:
    93
    Gender:
    Male
    Nalla padhippu !!

    Menporul poriyaalanin nilai appattamaai !!

    Vaazhthukkall !!
     
    1 person likes this.

Share This Page