1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மேகம் கருத்திருச்சு தவள சத்தம் கேட்டிடு&

Discussion in 'Regional Poetry' started by natpudan, Mar 4, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    மேகம் கருத்திருச்சு தவள சத்தம் கேட்டிடுமா

    காலனி வாயிலில்,
    தண்ணி வண்டிக்கு,
    தவிக்கும் வேளையில்,
    மரத்தின் நிழலில் இருவர்.

    ஹூம் மரத்த வச்சவன்,
    தண்ணி ஊத்துவான்.

    அட என்ன சார் நீங்க,
    அவர் தான் தண்ணிப் பிரச்சினைனால,
    வீட்ட காலி பண்ணிட்டு போயிட்டாரே.

    தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில்,
    ஜகத்தினை அழித்திடுவோம்.
    தனி ஒருவனுக்கு தண்ணி இல்லையெனில்,
    வீட்டையும் ஏரியாவையும் காலி பண்ணிடுவோம்.

    வீட்டைக் காலி பண்ணுவதை விட்டு,
    மனம் வளர்ப்போம்,
    மேலும் மரம் வளர்ப்போம்,
    மழை வரவழைப்போம்.
    சிந்திப்போம் செயல்படுத்துவோம்.
     
    Last edited: Mar 4, 2010
    Loading...

  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Re: மேகம் கருத்திருச்சு தவள சத்தம் கேட்டிட&#30

    நல்ல கருத்துகளை நாளும் வழங்கி வரும் நட்புக்கு,

    மேகம் கருத்திருக்க,
    வானம் இடியிடிக்க,
    வண்ண மயில் நடனமாட,
    மின்னலின் கீற்றொன்று இங்கு il - க்கு வந்தது .
    நல்ல கவிதை தந்தது..

    மழை கண்ட பயிர்கள் செழித்தன..
    உன் கவி மழை கண்ட நாங்களும், செழித்தோம், பெரும் பொழுதை il - லிலே கழித்தோம்.
     
  3. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Re: மேகம் கருத்திருச்சு தவள சத்தம் கேட்டிட&#30

    superb nats,

    மழை பத்தி ஒரு கவிதை படித்தது நினைவுக்கு வந்தது

    தகிக்கும் வெயில்லில்
    மழை வருமா என
    ஒவ்வொரு நாளும் ஏக்கம்

    மழை வரும் நாளில்
    அதன் முகத்தில் அறைந்து
    பால்கனி கதவை
    மூடும் மனசு.....
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Re: மேகம் கருத்திருச்சு தவள சத்தம் கேட்டிட&#30

    நல்ல பின்னூட்டங்களை என்றும் வாரி வழங்கும்
    வேணி இருக்க, மென்மேலும் படைக்க என்ன தடை?
    எண்ணத்தில் தடை இல்லாமல் என்ன மழை பொழிய
    என்றும் வேண்டுகிறேன் நட்புடன்.
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Re: மேகம் கருத்திருச்சு தவள சத்தம் கேட்டிட&#30

    சந்தியா,

    உலக இயல்பை உணர்த்தும் அருமையான கவிதை.

    நன்றி.
     

Share This Page