மென் பொறியாளரின் ஞானப் புலம்பல் !

Discussion in 'Jokes' started by malaswami, Dec 11, 2011.

 1. malaswami

  malaswami Platinum IL'ite

  Messages:
  1,805
  Likes Received:
  679
  Trophy Points:
  208
  Gender:
  Female
  சாப்ட்வேர் இன்ஜினியரின் தொலைந்த வாழ்க்கை
  சாப்ட்வேர் இன்ஜினியர்களின் புலம்பல்கள் பற்றி இப்ப நிறைய மின்னஞ்சல்கள் எனக்கு வருகின்றன.. இதற்கு முன் ஒரு இன்ஜினியரின் புலம்பல் இடுக்கை அதை பார்த்த நண்பர்கள் மட்டும் ஏராளம் அந்த புலம்பல அனைவரையும் கொண்டு சேர்த்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அதே போல் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் எப்படி தங்கள் வாழ்க்கையை தொலைக்கிறார்கள் என்ற கவிதையை படித்து ரசியுங்கள்... இதை நான் எழுதுலீங்கோ...

  சிறகொடிந்த பறவையின் சுதந்திரம் இல்லாத வாழ்க்கை!!!
  இதயங்கள் கனத்திருந்தாலும் இதழளவில் புன்னகைப்பதால் தானோ எங்களுக்கு மென்பொறியாளர் என்று பெயர்!!!

  அரை அடி இடைவெளியில்
  ஆறுபேர் அமர்ந்திருந்தாலும்
  அந்நியப்பட்டவர்கள் போல்
  திசைக்கொருவறாக திரும்பியிருப்போம்!!!

  விருப்பங்களுக்கேற்ற நீராகாரம்
  விருந்தோம்பல் புரிய பணியாளர்கள்!
  விடிய விடிய வேலை
  விடிந்தபொழுதில் வீடுசேர்க்க வாகனம்!

  அழையாவிருந்தாளியாய் ஆன்ஸைட் கால்கள்!
  இன்னல்ப்படுத்தும் ஈமெயில்கள்!

  இவ்வாறாக இயந்திரத்தனமாக சுழலும் எங்கள் நாட்கள்!

  உள்ளத்தில் குடியிருக்கும் உறவுகளுக்குக்கூட தொலைப்பேசியில் தான் நலம்விசாரனை!

  மணநாளுக்குக்குட மின்னஞ்சலில் வாழ்த்து பரிமாற்றிக்கொள்வர் மனைவியும் கணவனும்!

  முகவரிகுக்கூட முகம் காட்ட முடியாத எங்களுக்கு பிறந்த நாளென்ன மணநாளென்ன? எல்லாமே மரண நாட்கள் தான்.

  விடியுமுன் சென்று இருண்டபின் திரும்பும் மென்பொருள் பெற்றோருக்கு பிறந்த பிள்ளைகளுக்கு வளர்த்த வேலைக்கார பெண்மணி தான்
  ஈடுகட்டும் வாடகை தாய்!!!

  பெற்றோரின் ஸ்பரிசம் கண்டதைவிட கரடி பொம்மையின்
  கதகதகப்பில் உறங்கும்

  எம்மிளம் பிஞ்சுகளின் தனிமைக்கு இந்த லட்சங்கள் ஈடாகுமா?

  கை நிறையும் சம்பளத்தின் மறைவில் மனம் நிறையும் குறைகள் மண்டியிருக்கிறது!

  நெஞ்சத்திலுதிக்கும் ஆசைகள் மஞ்சதிலுறங்கும் போது
  மடிந்துதான் போகின்றன!!

  கண்களில் தோன்றிய கனவுகள் யாவும் கண்ணீரில் மறைந்தன!

  நித்திரைகள் நீண்டன நிறைவேறாத என் கனவுகளும் நீண்டன!

  அன்று,வசதிகள் இல்லாத போது வாழ்ந்து கொண்டிருந்தேன்!

  இன்று, வசதிகள் பெருக்கி விட்டேன், ஏனோ வாழ்க்கையை
  தொலைத்து விட்டேன்!!!
   
  Loading...

 2. kottravai

  kottravai Gold IL'ite

  Messages:
  368
  Likes Received:
  338
  Trophy Points:
  125
  Gender:
  Female
  மாலா,

  இயந்திரத்திற்கு கூட ஓய்வு அளிக்கப்படும்.... மென்பொறியாளர்களுக்கு அதுவும் கூட கிடையாது... ஒரு வேளை அவர்கள் ஓய்வாக இருந்தால் அவர்கள் வேலையில் இல்லை என்பதே பொருள். மனித உணர்வுகளே மறத்துப் போகும் அளவுக்கு பிழியபடுகிறார்கள். என்று தான் இதற்க்கு விடிவு வருமோ தெரியவில்லை...
   

Share This Page