1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

முருகன் எனுமோர் அழகன் !

Discussion in 'Regional Poetry' started by PavithraS, Jun 6, 2015.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    ஓம் சரவண பவ ! சேவலும் மயிலும் துணை !

    முருகன் ! குமரன் ! அழகன் ! மால்
    மருகன் ! இறைவன் புதல்வன் ! அவன்
    உருவம் தினம் தினம் ஒளிரும் !
    கரமும் வேல் கொண்டு அருளும் !

    நெற்றிக் கண்ணில் உதித்தான் ! அவன்
    வெற்றிக் கென்றே பிறந்தான் ! பகை
    முற்றும் அழித்துத் தீர்ப்பான் ! தாள்
    பற்றிட பயம் நீக்கிக் காப்பான் !

    கார்த்திகைப் பெண்களின் அறுவன் ! சக்தி
    சேர்த்து அனைத்திட்டச் சிறுவன் ! பயம்
    நீர்த்திடச் செய்யும் அவன் பார்வை !
    கோர்த்தேன் அவன் புகழ் மாலை !

    பிள்ளைத் தமிழ்க் கண்ட பாலன் !
    வள்ளிக் குறத்தி மணாளன் ! சுகம்
    அள்ளிக் கொடுத்திடும் தேவன் ! நமைக்
    கொள்ளைக் கொள்ளும் முத்துக் குமரன் !

    ஆவல் தனைத் தூண்டும் அழகன் !
    தேவர் சிறை விடுத்தத் தலைவன் !
    சேவல் ,மயில் , வேலின் மூலம்
    காவல் சொல்வான் அந்தக் கந்தன் !


    Regards,

    Pavithra
     
    8 people like this.
    Loading...

  2. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,888
    Trophy Points:
    490
    Gender:
    Female
    அருமை... முருகனை பற்றி என்பதால் இந்த தமிழ் இலகுவாக உள்ளதோ?
     
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female


    எங்கள் குலதெய்வம் ! தமிழ்க்குடி தெய்வம் !
    நீங்கள் சொன்னாற்போல் எளிதாய் வருந்தெய்வம் !
     
    1 person likes this.
  4. VanithaSudhir

    VanithaSudhir Platinum IL'ite

    Messages:
    1,846
    Likes Received:
    3,977
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Velum Mayilum Sevalum Thunai !!!

    Arumai Pavithra..
     
  5. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Thank you , Vanitha !
     
  6. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    rani muththu calendaril azhaku murukanai paarththu valandhavanga naanga,
    tamizh kadavul yenbadhil innum aanandham - arumai murugan kavithai PS.
     
  7. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    GG Sir ,

    Enkitta innikkum 1994 Murugan Padam potta Sathya calander attai baththiramai irukku...

    Murugan endru sonnaale andha uruvam thaan en kangalil viriyum... Avvalavu deiveegam ...

    I am glad that you read religious poems as well .. Thank you for the appreciation..

    Regards,

    Pavithra
     
    1 person likes this.
  8. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    தமிழ் கடவுள் கவிதை அழகு
     
    1 person likes this.
  9. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,365
    Likes Received:
    10,561
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Murugan enraale azhaguthaan. Thangal kavithaiyum miga azhagu.Eliya sorkal. Thiththikkum thamizh.karuththo azhagu murugan.
    ketka vendumaa inimaikku?
    Jayasala 42
     
  10. sangeethakripa

    sangeethakripa Gold IL'ite

    Messages:
    843
    Likes Received:
    533
    Trophy Points:
    188
    Gender:
    Female
    Superinga pavithra ...

    Muruganai pol ungal kavithayum azhgu arumai
     

Share This Page