1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மித்ர மாளிகை..!

Discussion in 'Stories in Regional Languages' started by Rajeni, Oct 8, 2014.

  1. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Thanks Nakhatra!! Glad that you like it.. Held up in some urgent work. Will post this weekend
     
  2. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Thanks Aarthi!! Weekend inum suspense vaikiren :p
     
  3. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Wonderful observations, Sachini!! You will get your answers in the coming episodes!!
     
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Rajeni ivlo gap emma.suspense thangama naanga mandai pichukanumaa.sollunga writer madam
     
    Rajeni likes this.
  5. Ragavisang

    Ragavisang Gold IL'ite

    Messages:
    350
    Likes Received:
    437
    Trophy Points:
    123
    Gender:
    Female
    ennamma Rajeni...Ippadi Vachu vachu seiyareengalae.. ithu niyama:BangHead: .. engala paartha pavama illaya:tongueclosed::tongueclosed::tongueclosed: ... super thriller .. :clap2::clap2::clap2: enna talentma ungalukku..:clapclap::clapclap::clapclap:
     
    Rajeni likes this.
  6. venimurugesh

    venimurugesh New IL'ite

    Messages:
    1
    Likes Received:
    1
    Trophy Points:
    3
    Gender:
    Female
    come soon for ud
     
    Rajeni likes this.
  7. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    29. மித்ர மாளிகை – கடிதம்!

    கௌதமும் சஞ்சையும் மருத்துவமனையை அடைய அப்போதும் வியர்வை அடங்காத நடுக்கத்துடன் ராஜியின் அறையிலேயே அமர்ந்திருந்தார் டாக்டர் அசோக்குமார். கௌதமும் சஞ்சையும் நர்ஸின் உதவியோடு அறைக்குள் நுழைய பதட்டமாய் எழுந்துவந்து கௌதமின் கைகளைப்பற்றிக்கொண்டார் டாக்டர். அவர் கைகளில் இன்னும் மிச்சமிருந்த நடுக்கம் கௌதமின் முகத்தில் குழப்பரேகைகளை ஓடவிட்டது.

    “பதட்டபடாதிங்க டாக்டர்.. என்ன நடந்துச்சு சொல்லுங்க”, என்று அவரை தோளோடு அனைத்து அமரவைத்து தானும் அருகில் அமர்ந்தான். சஞ்சை தன் கருமமே கண்ணாய் இவர்கள் பேச்சில் ஒரு காதைப்பதித்து மெல்ல அறையை விழிகளால் துழவிகொண்டிருந்தான்.

    “எனக்கு காலைல எர்லி மார்னிங் ஒரு சர்ஜரி இருந்துச்சு.. எப்பவும் ஹாஸ்பிட்டல் வந்தா ராஜிய பாக்குறது வழக்கம். ஸோ வழக்கம் போல அவ ரூம்க்கு போனேன். நான் காரிடர் திரும்பும் போதே யாரோ அந்த ரூம்குள்ள போன மாதிரி நிழலாடுச்சு. டுயூட்டி நர்ஸ் அங்க காரிடர்ல தான் டெஸ்க்ல தூங்கிட்டிருந்தா. வேற யாராயிருக்கும்னு குழம்பிப்போய் நான் வேகமா போனா அங்க ரெண்டு பேரு முகமூடி போடுகிட்டு அவகிட்ட முகத்துல தலையணைய வச்சு அமுக்க பாத்தாங்க. என்ன பாத்தவுடனே சட்டுன்னு என்ன புடிச்சு தள்ளிட்டு ஓடிட்டாங்க” என்று முடித்தார்.

    “ராஜிக்கு எதுவும் இம்பாக்ட் இல்லையே” என்றான் கௌதம்.

    “இல்ல.. பட் ஒரு அஞ்சு நிமிஷம் நான் லேட்டா வந்திருந்தா ஒன்னும் பண்ணிருக்க முடியாது” என்றார்.

    “நான் ஆல்ரெடி டி.சி.க்கு கால் பண்ணிட்டேன். அவரும் உங்கள எங்கொயர் பண்ணுவாரு. நீங்க ஹாஸ்பிட்டல்லயே இருங்க” என்றான் கௌதம்.

    “நான் அந்த சர்ஜரி அட்டென்ட் பண்ண போனும். ஆல்ரெடி இந்த ஷாக்ல அத ரெண்டு மணி நேரம் போஸ்ட்போன் பண்ணிருக்கேன். ஒரு நாலு மணி நேரம் ஆகும்”

    “ஓ.கே. யூ கேரி ஆன். நான் டி.சி.க்கு இன்ஃபார்ம் பண்ணிடறேன். ஆல்ஸோ ராஜிக்கு ப்ரடெக்ஷன்க்கு போலிஸ் கான்ஸ்டெபில்ஸ் வருவாங்க. உங்க ஸ்டாஃப் கிட்ட சொல்லிடுங்க. அவங்க வரவரைக்கும் ராஜிக்கூட இருக்க யாரையாவது அரேஞ்ச் பண்ணுங்க” என்று விட்டு எழுந்தான் கௌதம்.

    கௌதம் அறையைவிட்டு வெளியே வர சஞ்சை ஒரு நர்ஸிடம் பேசிக்கொண்டிருந்தான். அவள் இவன் கூறிய எதற்கோ வெட்கமாய் சிரித்துவிட்டு மேலும் ஏதோ சொல்லுக்கொண்டிருந்தாள். தனக்குள் சிரித்துக்கொண்டு அவர்களை தாண்டி நடந்து சென்றான் கௌதம். அவளிடம் விடைபெற்று பின் தொடர்ந்தான் சஞ்சை.

    “என்னடா எனி யூஸ்ஃபுல் இன்ஃபோ?” தன் அருகில் அமர்ந்திருந்த சஞ்சையிடம் கேட்டான் கௌதம் காரை செலுத்தியபடி.

    “நைட் டியூட்டி பாத்த நர்ஸ் அவதான். டாக்டர் சத்தம் போட்டுகிட்டே ரூம்ம விட்டு ஓடிவரும் போதுதான் இவ முழிச்சிருக்கா. அதுக்கு முன்னாடி யாராவது ஓடுனாங்களானு இவ பாக்கல. ஆப்வியஸ்லி வாட்ச்மேனும் யாரும் உள்ளபோறதையும் பாக்கல.. வர்ரதையும் பாக்கல” என்றான்

    “ஹம்ம்.. ஐ சீ” என்றான் கௌதம் யோசனையாக.

    “நீ என்னடா நினைக்கற?”

    “இந்த கேஸு மூணு தலைமுறைக்கு இழுக்குமோனு நினைக்கிறேன் பாஸ்” என்று சிரியாமல் சொன்னான்.

    “என்னடா.. அதுக்குள்ளயா டயர்டாயிட்ட?”

    “இல்ல பாஸ்.. சில அப்ஸர்வேஷன்ஸ் இருக்கு.. அதுக்கு முன்னாடி அந்த விக்ரம்ம விசாரிச்சுடலாம். அவன் எதாவது டிவிஸ்டு வைக்கப்போறான்” என்றான் யோசனையாக.

    “நெக்ஸ்ட் அது தான்” என்றுவிட்டு ஆக்ஸிலேட்டரை அழுத்தினான் கௌதம்.


    கௌதமின் வரவேற்பரையில் மித்ராவின் அருகில் அமர்ந்திருந்தான் அன்று திரையில் பார்த்த விக்ரம். கிட்டதட்ட ஆறடியை தொட்டுவிடும் உயரத்தில் மானிறத்தில் ஃப்ரேமில்லாத கண்ணாடி அணிந்துகொண்டு அழகாக இருந்தான். புகைப்படத்தில் பார்த்த விஜய்நந்தனின் சாயல். சாந்தமான முகமென்றாலும் அவ்வப்போது ஏதோ ஒரு தவிப்பு வந்துபோனது. வழக்கமான அறிமுகங்களுக்கு பிறகு கௌதமன் துவங்கினான்.

    “நடந்ததெல்லாம் மித்ரா சொல்லிருப்பாங்கன்னு நினைக்கிறேன்”

    “யெஸ்.. பட் நம்ப தான் முடியல” என்றான் பொதுவாக.

    ஒரு சிறு இடைவெளிவிட்டு அவன் முகத்தையே பார்த்தவண்ணம் கௌதம் கேட்டான், “நீங்க எதுக்காக மித்ராவோட அப்பாவ மீட் பண்ணிங்கனு தெரிஞ்சுக்கலாமா?”

    சட்டென அதிர்ந்து நிமிர்ந்த விக்ரம், மித்ராவை பார்த்தான். அவளது சலனமற்ற முகம் அனைத்தையும் அவள் முன்பே அறிந்திருக்கிறாள் என்பதை தெரிவித்தது.

    ஒரு நீளமான மூச்சை வெளியிட்டவன் அன்னார்ந்து மேலே பார்த்தவண்ணம் ஒருசில நொடிகள் அமர்ந்திருந்தான். அவனை லேசாக திரும்பிப்பார்த்துவிட்டு மீண்டும் தன் சிலைவடிவிற்கு திரும்பினாள் மித்ரா.

    பின், ஏதோ முடிவு செய்தவன் போல பேசத்துவங்கினான். “நான் நேத்தே மித்ரா இந்த கேள்விய கேப்பான்னு நினைச்சேன். இவ்வளவு விசாரிச்ச உங்களுக்கு கண்டிப்பா நான் அவர சந்திச்சது தெரிஞ்சுருக்கும்” என்றவன் தன் சட்டைக்குளிருந்து ஒரு காகித உரையை எடுத்து கௌதமனிடம் நீட்டினான்.

    அந்த உரைக்குளிருந்த காகிதத்தை எடுத்து பிரித்தான் கௌதம். அது ஒரு கடிதம்.

    “அன்பு மகன் விக்ரமிற்கு,

    இந்த கடிதம் உன்னிடம் சேரும் நேரம் நான் இறந்து பல ஆண்டுகளாகியிருக்கும். உனக்கு இப்போது பதினெட்டு வயது பூர்த்தியாகிவிட்டது. நான் சொல்லப்போவதை புரிந்துகொள்ளும் அறிவு உனக்கு இப்போதிருக்குமென்று நம்புகிறேன்.

    முதலில், என்னை மன்னித்துவிடு விக்ரம். உனக்கு ஒரு தந்தையாய் செய்யவேண்டிய எந்த கடமையையும் நான் செய்யவில்லை. உன்னை வாழ்வோடு போராட விட்டுவிட்டு நான் சுயநலமாய் என் முடிவை தேடிக்கொள்கிறேன். அதற்குமுன், உன்னிடம் நான் சொல்லவேண்டிய இரெண்டு விஷயங்கள் உண்டு.

    முதலாவது, என்மீது சுமத்தபட்ட எந்த பழியும் உண்மையல்ல. நான் கனவிலும் உன் தாய்க்கோ என் நண்பனுக்கோ துரோகம் செய்யவில்லை. இதை யார் நம்பாவிடிலும் நீ நம்பவேண்டும். நீ என்னை அயோக்கியனாக நினைத்துவிடுவாயோ என்ற எண்ணமே என்னை வதைக்கிறது. உன் அப்பா கோழையே தவிர அயோக்கியனல்ல. பின், எதற்காக பழியேற்றுகொண்டேன் என்று நீ கேட்கலாம். அதில் தான் நான் சுயநலவாதி. உன் அம்மா என்னை நம்பவில்லை என்ற வேதனையையும் அவள் என்னால் உயிரையே விட்டுவிட்டாள் என்ற குற்றவுணர்ச்சியையும் சுமந்து கொண்டு வாழ எனக்கு திடமுமில்லை போராட துணிவுமில்லை. போராடி விடுதலைபெற்று நான் வந்தாலும் பாரதி திரும்பிவரப்போவதில்லை. எனவே நான் வாழ்ந்து பயனில்லை.

    இரெண்டாவது, இதற்கெல்லாம் காரணம் யாரென்ற கேள்வி. முதலில் நான் என் நண்பனை தான் சந்தேகப்பட்டேன். ஆனால், இந்த சிறையின் தனிமையில் மரணத்தின் வாசலில் நின்று யோசிக்கும் பொழுது அப்போது இல்லாத அமைதியும் நிதானமும் என்னிடம் இப்போது இருக்கிறது. அருள் ஒரு நாளும் எனக்கு துரோகம் செய்திருக்கமாட்டான். அவன் எனக்கு செய்ததெல்லாம் நன்மைகள் தான். நான் என் கோபத்தைவிட்டுவிட்டு அவனிடம் பொறுமையாக பேசியிருக்கவேண்டும். பேசியிருந்தால் ஒரு வேளை இந்த எல்லா அசம்பாவிதங்களையும் தவிர்த்திருக்கலாம், பாரதியும் இறந்திருக்கமாட்டாள். ஆனால், என்னை நம்பாமல் அவன் அலுவலகத்தில் காமிரா பொறுத்தியது என்னை மிகவும் பாதித்தது. அவன் என்னை எதற்கும் கையாலாகதவனாய் நினைக்கிறான் என்று கொதித்தேன். இப்போது யோசித்தால் அதுவும் உண்மைதானே? அவன் நினைத்ததுபோல பணம் திருடுபோனதுதானே! ஆனால் இது அப்போது உரைக்கவில்லை. அவன் என்னை அவமானபடுத்திவிட்டான் என்ற கோபத்தில் நடந்த அத்தனையும் அவன் காரணமென்றேன். அதற்கும் காரணம் உண்டு. என்று என் கார் அந்த பெண் வீட்டின் முன் பார்த்தேன் என்றார்களோ அன்று மாலை அருள்தான் கார் வேண்டும் டிரைவரை அனுப்புகிறேன் கொடுத்தனுப்பு என்று தொலைப்பேசியில் சொன்னான். இப்போது யோசித்தால் அது அவன் தானா இல்லை அவன் குரலில் யாரேனும் ஏமாற்றினார்களா என்றும் தோன்றுகிறது. நான் தான் ஏமாளியாயிற்றே, என்னை யாரும் ஏமாற்றிவிடலாம். அது யார், அவர்களுக்கு என்ன வேண்டும் என்று எனக்கு இப்போதும் விளங்கவில்லை. ஆனால் அதை அறியும் ஆர்வமோ வேகமோ என்னிடமில்லை. எனவே விடையறியாத கேள்விகளுடன் போகிறேன். என் போன்ற கோழைகளுக்கு வாழ்க்கை கொடுக்கும் பரிசு இதுதான் போலும்.

    ஆயினும், இதை உன்னிடம் ஏன் கூறுகிறேனென்றால் உன் பாட்டி அருள் மேல் உள்ள கோபத்தில் அவன் தான் நம் இந்த நிலைக்கு காரணமென்று சொல்லி உன் உள்ளத்தில் நஞ்சை விதைத்திருந்தால் அதை நம்பாதே! அவளுக்கு பாரதியை எனக்கு அருள் திருமணம் செய்துவைத்ததில் உண்டான கோபம். அவனை வசைபாட இது ஒரு சந்தர்ப்பம். நான் நிரபராதி என்பது எவ்வளவு உண்மையோ அருள் எனக்கு துரோகம் சொய்திருக்கமாட்டான் என்பதும் அவ்வளவு உண்மையே!

    இத்தோடு இணைத்திருக்கு இன்னொரு கடிதத்தை அருளிடம் சேர்த்துவிடு.

    நீ சந்திக்க நேர்ந்த அனைத்து துன்பங்களுக்காகவும் மீண்டும் என்னை மன்னித்துவிடு. இந்த கோழையின் ஆசிகள் உனக்கு உதவுமா என தெரியவில்லை. என் இந்த கடைசி நாட்களின் அனைத்து பிராத்தனைகளும் உனக்காகவே.

    அப்பா "

    படித்து முடித்த கௌதமின் இதயம் கனத்துப்போனது. இத்தனைக்கும் காரணமான ஒருவன் இத்தனை ஆண்டுகள் கழித்தும் இன்னும் நலமாக இருக்கிறான். இன்னும் கொலைகள் செய்துகொண்டு! என்ற நினைவில் அவன் தாடை இறுகியது. கடிதத்தை மேகாவிடம் நீட்டினான்.

    மேகா வாங்கிக்கொள்ள மித்ரா அவளருகில் சென்று அமர்ந்தாள். விக்ரம் கைகளை கட்டிக்கொண்டு விட்டத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். சஞ்சை மேகாவின் பின்னால் நின்றுகொண்டு கடிதத்தில் வேகமாய் தன் விழிகளாய் ஓட்டிக்கொண்டிருந்தான். கௌதமன் இறுகிய தாடையுடன் சிலையென அமர்ந்திருந்தான். அவன் மனம் பலவற்றை அதிவேகமாய் சிந்தித்துக்கொண்டிருந்தது.

    படித்து முடித்த இரு பெண்களின் விழிகளிலும் கண்ணீர் கசிந்தது.

    அவர்கள் முடிப்பதற்காய் காத்திருந்த விக்ரம் பேச ஆரம்பித்தான். “எனக்கு பதினெட்டு வயசாகும் போது எங்கிட்ட குடுக்கனும்னு அப்பா பாட்டிக்கு அனுப்பிருப்பாருனு நினைக்கிறேன். வயசானதுனால மறதியா இல்ல அப்பா மேல உள்ள கோபமா தெரியல பாட்டி இத எங்கிட்ட குடுக்கவேயில்ல. நாலு மாசத்துக்கு முன்னாடி பாட்டி இறந்தப்போ அவளோட திங்ஸோட இது எங்கிட்ட வந்து சேந்துச்சு.

    இது அப்பா நினச்ச மாதிரி பதினெட்டு வயசுல எனக்கு கிடைச்சுருக்கலாம். கிடைச்சிருந்தா பழிவாங்கறேன்னு நான் எந்த முட்டாள்தனமும் செஞ்சுருக்கமாட்டேன்” என்று கூறியவனை புரிந்தும் புரியாமலும் பார்த்தனர் மற்றவர்.

    “யெஸ்! அப்பா சொன்ன மாதிரி பாட்டி என் மனசுல நஞ்ச விதச்சு தான் வளத்தா. ஏ.பி.ய கொல்லனும்னு தான் நினச்சேன். ஆனா, செத்துப்போறதவிட என்ன மாதிரி யாருமே இல்லாம இருக்கறதுதான் கஷ்டம்னு தோணிச்சு. அவரோட உலகமே மித்ரா தான்னு தெரிஞ்சிது. அதுனால மித்ராவ அவர்கிட்ட இருந்து பிரிக்கனும்னு அவகிட்ட பழகினேன். ஏ.பி. எங்க கல்யாணத்துக்கு தடைபோடல. இன்ஃபாக்ட் நான் அவர் நண்பனோட மகன்னு தெரிஞ்சு அவருக்கு சந்தோஷம் தான். ஆனா அவர் ஒதுங்கினாதான் மித்ராவ கல்யாணம் பண்ணிக்குவேன்னு கண்டிஷன் போட்டேன். இப்போ யோசிச்சா அந்த கண்டிஷன அவரு மித்ராவுக்காக ஒத்துகிட்டாரா இல்ல நண்பனுக்காக ஒத்துகிட்டாரானு தெரியல” என்று முடித்தான். மித்ரா என்ற சிலையின் விழிகள் மட்டும் உடைபெற்று கண்ணீர் அருவியாய் வழிந்துகொண்டிருந்தது. மேகா செய்வதறியாது அவளை தவிப்பாய் பார்த்துக்கொண்டிருந்தாள். இது மித்ராவிற்கு எத்தகைய ஏமாற்றைத்தையும் வலியையும் கொடுக்குமென அவளால் உணரமுடிந்தது.

    ஒரு நீண்ட அமைதிக்குப்பின் “உங்க அப்பா ஏ.பி.க்கு எழுதின லெட்டர்?” என்று கேட்டான் கௌதம்.

    “அந்த லெட்டர குடுக்கதான் ஏ.பி.ய அன்னைக்கு ஹோட்டல்ல சந்திச்சேன். அதுல என்ன எழுதிருந்துதுனு தெரியல. ஆனா, ஏ.பி. உடைஞ்சுபோய் அழுதாரு. அப்பா எழுதிருக்கறது உண்மைனா அவங்க ரெண்டு பேரையும் ஏமாத்தினது யாருனு கேட்டேன். ‘அத உனக்காக இல்லென்னாலும் அவன் எம்மேல கடைசி வரைக்கும் வச்சிருந்த நம்பிக்கைக்காக கண்டுபிடிக்கிறேன்’னு சொன்னாரு. ‘மித்ராவுக்கு இப்போதைக்கு இது தெரிய வேண்டாம். உம்மேல கோபப்படுவா. அது யாருனு கண்டுபிடுச்சுட்டு அவள நானே சமாதானப்படுத்துறேன்’னு சொன்னாரு. ஆனா, அதுவும் நடக்கல. அவர் இறந்துட்டாருனு தெரிஞ்சவுடனேயே நான் இதையெல்லாம் சொல்லியிருக்கனும். ஆனா, இதெல்லாம் தெரிஞ்சா மித்ரா என்னவிட்டு பொயிடுவாளோங்கற பயத்துல மறைச்சுட்டேன்” என்றான்.

    ஏனோ விக்ரமை பார்க்க பாவமாக இருந்தது கௌதமிற்கு!

    (தொடரும்)
     
  8. ramyarajan

    ramyarajan Bronze IL'ite

    Messages:
    77
    Likes Received:
    34
    Trophy Points:
    38
    Gender:
    Female
    Raj
    Rajeni 3rd person yarupa firstly irundu story read pannanulum yaravathu missayiducha
     
    Rajeni likes this.
  9. Sachini

    Sachini Bronze IL'ite

    Messages:
    90
    Likes Received:
    37
    Trophy Points:
    38
    Gender:
    Female
    Wow nice episode. But whos d person who can manipulate company accounts? Are there more than one person ? Ram can to certain extent change d accounts and he was the one who knows they are going to follow vijay apart from ap. But medicines??? Is the culprit one among the living two friends or some one who worked in the company is also an accomplice to one or both of these?
     
    Rajeni likes this.
  10. stayblessed

    stayblessed Platinum IL'ite

    Messages:
    934
    Likes Received:
    1,744
    Trophy Points:
    263
    Gender:
    Female
    Wow. Wow R yet again a superb episode. I doubt so many people. Let me wait and see whom you are going to convict. As always wonderful narration.
     
    Rajeni likes this.

Share This Page