1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மித்ர மாளிகை..!

Discussion in 'Stories in Regional Languages' started by Rajeni, Oct 8, 2014.

  1. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    28.மித்ர மாளிகை – விக்ரம்!

    விக்ரம் வந்துவிட்டதாக மித்ரா சொன்னவுடன் கௌதமும் மேகாவும் ஒருவரையொருவர் அர்த்தமாக பார்த்துக்கொண்டார்கள்.

    “அவர் இப்போ எங்க இருக்கார், மித்ரா?” என்றான் கௌதம்.

    “இன் மெரீடியன்..”

    “ஓ.கே. லெட்ஸ்.. ஸ்டார்ட்.. வீ வில் ட்ராப் யூ தேர்..” என்றவாறு எழுந்தான் கௌதம்

    “ட்ராப்? நீங்க வரலயா? அவர்கிட்ட பேச?” என்றபடி தானும் எழுந்துகொண்டாள் மித்ரா.

    “இல்ல மித்ரா.. ஹீ ஹாஸ் ஜஸ்ட் கம்.. மணி இப்போ பனிரெண்டுக்கு மேல ஆச்சு.. இப்போ நாங்க வந்தா நல்லாயிருக்காது” என்று விளக்கினான்.

    இந்த நேரத்தில் வந்து விசாரித்தால் அவன் சுதாரித்துக்கொள்வான் என்று அவன் சொல்லாமல் சொல்வது மித்ராவிற்கு புரிந்த்து. ஆமோதிப்பாய் தலையசைத்தாள்.

    இராமசந்திரனிடம் விடைபெற்று மூவரும் வெளியே வந்தனர். இவர்கள் வெளியே வந்த அதே வினாடி ஒரு உருவம் வெளியே ஜன்னலருகிலிருந்து விலகி செடிகளுக்கு பின் மறைந்து கொண்டது.

    கௌதம் காரைக்கிளப்ப மித்ராவும் மேகாவும் ஏறிச்செல்வதை செடிகளுக்கு பின் இருளிலிருந்து இரு விழிகள் வன்மத்துடன் பார்த்துக்கொண்டிருந்தன.


    ராயல் லீ மெரிடியன் ஆர்பாட்டமில்லாமல் அமர்த்தலாக தன் பழமையான கம்பீரத்துடன் நின்றது. கார் வாயிலைத்தாண்டி உள்ளே நுழைய சீருடையணிந்த காவலாளி ஓடி வந்து பின் கதவைத்திறந்தான். மற்றொருவன் ஓடி வந்து கௌதம் கார் சாவியை கொடுக்க காத்திருந்தான். மூவரும் இறங்கியபின், தான் கிளம்புவதாக சொல்லி அவனை அனுப்பிவிட்டு கௌதம் மித்ராவிடம் திரும்பினான்.

    “மித்ரா.. விக்ரம் உங்க அப்பாவ மீட் பண்ணது தெரிஞ்ச மாதிரி காட்டிக்காதிங்க.. மத்ததெல்லாம் சொல்லுங்க.. அவர் எப்டி ரியாக்ட் பண்றாருன்னு பாருங்க.. அவரே அவர் உங்க அப்பாவ மீட் பண்ணதபத்தி சொல்றாரான்னு பாருங்க..” என்றான்.

    “ஹ்ம்ம்..” என்றுவிட்டு அவள் உள்ளே செல்ல திரும்பினாள். முகம் போருக்கு கிளம்புவதுப்போல கடினப்பட்டிருந்த்து.

    “மித்ரா..” என்று அவனை நிறுத்திய கௌதம், பின், தொடர்ந்தான், “அவர் மேல சின்ன சந்தேகம் தான்.. அவர்கிட்ட நார்மலா இருங்க.. கண்டதையும் நினச்சு உங்களையும் வருத்திக்காதிங்க..” என்றான் பரிவாக.

    “அவரு மேல தப்பிருக்கா இல்லையாங்கறத தாண்டி.. அவரு எங்கிட்ட உண்மையா இல்லனு தெளிவா தெரியுது கௌதம்.. ஹீ ஹாஸ் கில்ட் மை ட்ரஸ்ட்..” என்றுவிட்டு திரும்பி நடந்தாள். இத்தனை குழப்பத்திலும் அவள் தனது அமர்த்தலான நடையில் கம்பீரமாய் சொல்வதை ஒருவித ரசனையுடன் பார்த்து நின்றான் கௌதம்.

    “எக்ஸ்கியூஸ் மீ! பாத்தது போதும்! போலாமா?” என்று அவனை முறைத்துவிட்டு காரில் ஏறினாள் மேகா.

    பலமாக சிரித்துக்கொண்டு தானும் ஏறி காரை கிளப்பினான் கௌதம்.

    “மேகா.. எதெதுக்கு பொறாமை பட்றதுனு இல்லையா.. அவ உனக்கு தங்கச்சி மாதிரி..!” என்றான் சிரிப்பினூடே.

    “என்னது.. எனக்கு தங்கச்சியா.. அப்போ கூட உனக்கு தங்கச்சினு சொல்ல மாட்டியே!”

    “நோ நோ.. கம்பெனி சட்டப்படி யாரையும் தங்கச்சியா ஏத்துக்கறதில்லனு உனக்கு தெரியாதா?”

    “அதானே! எல்லாம் என் தலையெழுத்து!”


    லைப்பேசியின் அழைப்புமணி உறங்கிக்கொண்டிருந்த கௌதமிற்கு கனவில் ஒலிப்பது போல கேட்டது. தன் அலைப்பேசி போல இருக்கிறதே என்றவன் யோசித்துக்கும் பொழுதே மித்ராவை ஹோட்டலில் இறக்கிவிட்டதும் அவள் விக்ரமோடு இருப்பது நினைவு வர ஒரு பதற்றம் அவனைத் தொற்றிக்கொண்ட்து. தன் அலைப்பேசியைத் தேடி எடுத்தான்.

    ஆனால், திரை டாக்டர் அசோக் காலிங் என்று அறிவித்தது. அதே திரையின் ஓரத்தில் மணி அதிகாலை ஐந்து என்றும் காட்டியது. இந்த நேரத்தில் டாக்டர் ஏன் அழைக்கிறார் என்று அவன் சிந்திக்கும் பொழுதே ராஜி அங்கே மருத்துவமனையில் சிகிச்சைபெறுவது நினைவு வர அவசரமாய் அழைப்பை எடுத்தான்.

    “ஹலோ.. சொல்லுங்க டாக்டர்!”

    “ஆமா.. கௌதமன் தான் பேசறேன்.. சொல்லுங்க! ஆர் யூ ஆல்ரைட்?” அருகில் உறங்கிக்கொண்டிருந்த மேகா கண்விழித்து குழப்பதுடன் அவன் பேசுவதை பார்த்திருந்தாள்.

    “வாட்?! டாக்டர் ரிலாக்ஸ்.. கொஞ்சம் பொறுமையா என்ன நடந்துதுனு சொல்லுங்க.. பதட்டபடாதிங்க..” கௌதம் டாக்டரை சமாதான படுத்தினாலும் அவனை ஒரு பதற்றம் தொற்றிக்கொண்டது தெரிந்தது. மேகா இப்போது எழுந்து அமர்ந்து கௌதமின் முகத்தைபயே பார்த்துக்கொண்டிருந்தாள்.

    “ஓ.கே... ஓ.கே... நீங்க பதட்டப்படாதிங்க.. அங்கயே இருங்க நான் இப்போவே வரேன்!” என்றுவிட்டு அழைப்பை துண்டித்தான்.

    “என்ன ஆச்சு?” என்றாள் மேகா

    “அன் அடெம்ப்ட் ஆன் ராஜி அகெயின்.. டாக்டர் தான் கால் பண்ணாரு..”

    “வாட்? இஸ் ஷீ சேஃப்?” என்றாள் பதட்டமாக.

    “யெஸ்.. லக்கிலி ஏதோ எர்லி மார்னிங் சர்ஜரிக்காக ஹாஸ்பிட்டல் போன டாக்டர் ராஜிய பாக்க பொயிருக்காரு.. ஸோ அவர அட்டாக் பண்ணிட்டு பொயிருக்காங்க.. ஹீ இஸ் வெரி நெர்வஸ்!” என்றான்.

    “என்னது.. பொயிருக்காங்களா?” என்றாள் மேகா அதிர்ந்து.

    “யெஸ்.. ரெண்டு பேரு.. ஓ.கே.. நோ டைம் டூ வேஸ்ட்.. நான் கிளம்பறேன்..”

    “நானும் வரவா?”

    “வேண்டாம்.. சஞ்ஜைக்கு ஃபோன் பண்ணி ஹாஸ்பிட்டலுக்கு வரசொல்லு..” என்றுவிட்டு குளியலறைக்குள் சென்றான்.

    (தொடரும்)
     
  2. ramyarajan

    ramyarajan Bronze IL'ite

    Messages:
    77
    Likes Received:
    34
    Trophy Points:
    38
    Gender:
    Female
    next suspense
     
    Rajeni likes this.
  3. meepre

    meepre Gold IL'ite

    Messages:
    549
    Likes Received:
    974
    Trophy Points:
    188
    Gender:
    Female
    Madam suspense mela suspense.... :confundio1::confundio1::confundio1: epo pa adutha episode???? Naanga ellam pavam ilaya full time :BangHead: aduthu ena paaka. Please come back soon for next episode.

    As usual amazing narration dear.:thumbup:
     
  4. Sweetynila

    Sweetynila Silver IL'ite

    Messages:
    483
    Likes Received:
    43
    Trophy Points:
    50
    Gender:
    Female
    Doctor ah attack pannitu ponnathu yaaru?? sema suspense ah pokuthunga...
     
    Rajeni and varsha03 like this.
  5. stayblessed

    stayblessed Platinum IL'ite

    Messages:
    934
    Likes Received:
    1,744
    Trophy Points:
    263
    Gender:
    Female
    sema sema episode R but i felt it was short. Cant wait for the next episode. Please post soon.
     
    Rajeni likes this.
  6. Nakshatrarevath

    Nakshatrarevath Bronze IL'ite

    Messages:
    139
    Likes Received:
    38
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Oh my god...your story making us to sit at the edge of the chair...post next episode soon
     
    Rajeni likes this.
  7. aarthi28

    aarthi28 Platinum IL'ite

    Messages:
    1,121
    Likes Received:
    1,463
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Mithra yaaru pa adhu....Again and again suspense vekkareengale...
     
    Rajeni likes this.
  8. Sachini

    Sachini Bronze IL'ite

    Messages:
    90
    Likes Received:
    37
    Trophy Points:
    38
    Gender:
    Female
    Hi I am new to this grp. Story is really intresting. I think its d doc who is behind all this. I doubt him coz
    1. Raji might not know vikram but shes shocked to see the murderer
    2. APs dose can be increased by some one who knows abt medicines
    3. In the flash back when ram n ap are busy only hes out of action.
    But cant guess why he might do it?
     
    Rajeni likes this.
  9. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Thanks Vanathi.. I am sure, you would have your own theories by now!! WIll post by weekend
     
    Sweetynila likes this.
  10. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Thanks SB! Will try to post a lengthier one next..
     

Share This Page