1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மித்ர மாளிகை..!

Discussion in 'Stories in Regional Languages' started by Rajeni, Oct 8, 2014.

  1. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Thanks a lot dear Sangeetha for this nice FB :)
     
    sangeethakripa likes this.
  2. Sweetynila

    Sweetynila Silver IL'ite

    Messages:
    483
    Likes Received:
    43
    Trophy Points:
    50
    Gender:
    Female
    Hi Rajeni,

    Nice Update. Suspense mela suspense vachuringa.. Vijay mela thappu iruka?? illa ethaiyaavathu maraikurathuku ippadi pannurara??
    Next update epponga??
    sorry ungaluku work irukkunu puriyuthu.. but storya padikkanumu romba arvama iruku..
     
  3. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Thanks a lot dear Vanathi! Dont be sorry.. ungaloda arvam dhan makes me want to write.. I must only thank you!!

    Btw, your name reminds me of PS's kodumbaalur Ilavarasi!!
     
    Sweetynila likes this.
  4. Sweetynila

    Sweetynila Silver IL'ite

    Messages:
    483
    Likes Received:
    43
    Trophy Points:
    50
    Gender:
    Female
    Hi Mam,
    PS la ennaku pidicha character kodumbaalur Ilavarasi thaan. Athaan avanga pera websitels en Pen name ah vachurukken Mam. My name Sree Priya.
     
    Rajeni likes this.
  5. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    That's nice Vanathi (I will continue to address you as Vanathi since you love that name!) In PS, my favourite is Kundavi (hence the profile pic) but I also love the Kodumbalur Ilavarasi!
    Btw, please address me as Rajeni or simply R, no Madams pls :)
     
    Sweetynila likes this.
  6. sangeethakripa

    sangeethakripa Gold IL'ite

    Messages:
    843
    Likes Received:
    533
    Trophy Points:
    188
    Gender:
    Female
    Dear Rejeni

    When is your next suspense for us.. Waiting and checking everyday ..:icon_pc:
     
    Rajeni likes this.
  7. Sweetynila

    Sweetynila Silver IL'ite

    Messages:
    483
    Likes Received:
    43
    Trophy Points:
    50
    Gender:
    Female
    Thanks Rajeni... Kundavai is an inspiring character. Ennaku avangalaiyum romba pidikum..
     
    Rajeni likes this.
  8. ramyarajan

    ramyarajan Bronze IL'ite

    Messages:
    77
    Likes Received:
    34
    Trophy Points:
    38
    Gender:
    Female
    Rajeni update soon what will happen eagerly waiting
     
    Rajeni likes this.
  9. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    27. மித்ர மாளிகை – எதிர்பாரா திருப்பம்!

    தொடர்ந்து பேசிய அசதியாலோ அல்லது பழைய நினைவுகளின் தாக்கத்தாலோ இராமசந்திரன் மெலிதாக வியர்த்துவிட்டிருந்தார். தொடர்ந்து பேச விடாமல் அவர் மூச்சு சற்று சீரற்று சிரமப்பட அவர் கண்களை மூடிக்கொண்டார். சட்டென மேகா அவர் அருகில் சென்று அவரது கைகளைப்பற்றி “அப்பா..” என்றாள் பதற்றத்துடன்.

    பின், அவரை படுக்க வைத்து, ஆசுவாச படுத்தி, தண்ணீர் கொடுத்து சற்று நேரம் அந்த இடம் பரபரத்தது. பெண்கள் இருவரும் கவலையோடு நின்றிருக்க இரத்த அழுத்தக்குறைவு சற்று நேரத்தில் சரியாகிவிடும் என்றான் கௌதம்.

    இரண்டு நிமிடங்கள் கழித்து மெதுவாக எழுந்து அமர்ந்தார் இராமசந்திரன். “இன்னும் கொஞ்ச நேரம் படுங்கப்பா” என்றாள் மேகா.

    “இல்லம்மா.. இப்போ பரவால்ல”, என்றார் அவர்.

    ஒரு நிமிடம் இடைவெளிவிட்டு, “விஜய்நந்தனுக்கு என்னாச்சு மாமா?” என்றான் கௌதம் விட்ட இடத்திலிருந்து.

    அவனை முறைத்துவிட்டு, “நீங்க ரெஸ்ட் எடுங்கப்பா.. மீதிய நாங்க அப்புறம் கேட்டுக்கறோம்” என்றாள் மேகா.

    “இல்லம்மா.. லெட்ஸ் ஃபினிஷ் திஸ்” என்று விட்டு தொடர்ந்தார்.

    “அன்னைக்கு ஏ.பி. ஃபோன் பண்ணி விஜய் வீடியோ டேப்ஸ எடுத்துட்டு பொயிட்டான்னு சொன்னப்போ எனக்கும் அவன் மேல ஆத்திரம். அவங்கிட்ட ஏன் அவன் அப்டியெல்லாம் நடந்துக்கறான்னு நேர கேட்றனும்னு ஞாயித்துக்கிழமை இராத்திரி அவன் வீட்டுக்கு ஃபோன் பண்ணிகிட்டே இருந்தேன். அவன் எடுக்கல. அவன் வீட்ல இல்லனு புரிஞ்சுது. கண்டிப்பா அந்த மாதவி வீட்டுக்கு தான் போயிருப்பான்னு எரிச்சலா வந்துச்சு. அவன் அவ கிட்ட போனது சபலம்னாலும் அத சால்வ் பண்ணாம ஏன் கோப படறான்.. ஏ.பி. மேல பழிப்போடறான்னு புரியாம கொழம்பினேன்.. அதுவும் பாரதிய அவ்வளோ நேசிச்ச அவன்.. எல்லாமே புரியாத புதிரா இருந்துது.”

    “ஒருவேள விஜய்நந்தன் சொன்ன மாதிரி.. இதுல ஏ.பி. சம்பந்தப்பட்டிருப்பாரா?” என்றான் கௌதம்.

    “சேசே அதுக்கு வாய்ப்பேயில்ல.. இதெல்லாம் நடக்கும் போது நான் ஏ.பி. கூட தான் இருந்தேன்.. ஹீ வாஸ் டெரிபிலி ஷாக்ட்.. அண்ட்.. விஜய பிஸினஸ் விட்டு தூக்கனும்னு ஏ.பி. நினைகச்சிருக்க மாட்டான்.. விஜய்க்கு பாத்து பாத்து எல்லாம் செஞ்சவன் அவன்.. விஜய்யும் அந்த இன்சிடென்ட்க்கு முன்னாடி வரைக்கும் ஏ.பி.ய எதிர்த்ததே இல்ல.. தேவையில்லாத செலவுகளும் பண்ணதில்ல.. ஆல்ஸோ, ஒருவேளை பிஸினஸ பிரிக்கனும்னு ஏ.பி. நினச்சிருந்தா அத நேராவே விஜய்ட்ட சொல்லிருப்பான் அதான் ஏ.பி. அதனால, விஜய்யோட இந்த நடவடிக்கை கடைசிவரைக்கும் புதிராவே போச்சு” என்றார்.

    “கடைசிவரைக்கும்னா?” என்றான் கௌதம் சந்தேகமாக.

    “ஆமா.. எந்த புதிரும் விளங்காமலே அவன் போய்சேந்துட்டான்..” என்றார் குரலில் வலி தெரிந்தது.

    கேட்ட மூவரும் அதிர்ந்து போய் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

    இராமசந்திரனே தொடர்ந்தார், “அந்த திங்கட்கிழமை காலைல எனக்கு போலீஸ் ஸ்டேஷன்லருந்து ஃபோன் வந்துச்சு.. அந்த பொண்ணு மாதவி கொலை செய்யபட்டதாகவும் அதுக்காக விஜய்ய அரெஸ்ட் பண்ணிருக்கறதாகவும் சொன்னாங்க.. விஜய் அவனோட லாயர்னு என்னோட நம்பர் குடுத்திருக்கான். நான் ஏ.பி.க்கு கூட ஃபோன் பண்ணாம அடிச்சு புடிச்சு ஓடுனேன் ஸ்டேஷன்-க்கு. விஜய் மிரண்டு போய் உக்காந்திருந்தான். என்ன பாத்தவுடனே “டேய் நான் எதுவும் பண்ணலடா.. அவன் தான்டா ட்ராமா பண்றான்.. அவன நம்பாத டானு’ பொலம்ப ஆரம்பிச்சுட்டான்.

    அவன் பண்ணானா இல்லையானு அப்புறம் பாக்கலாம். நீ மொதல பதட்டபடாம நடந்தத சொல்லுன்னேன். அவ ஏன் அவன வரசொல்லி எங்க கிட்ட மாட்டிவிட்டானு கேக்கறதுக்காக அவ வீட்டுக்குப்போனதாகவும் அப்போ அவ ஏற்கனவே கத்தியால குத்தப்பட்டு கிடந்ததாகவும், தான் பயந்து வீட்டுக்கு வந்துட்டதாகவும் சொன்னான்.

    தன் மேல பழி விழுந்துடுமோனு அவன் போலீஸ்க்கு ஃபோன் பண்ணல. பட் அவனோட பேட் லக் அவன் அந்த வீட்லயிருந்து வெளிய வந்ததையும் கார் நம்பரையும் கொஞ்சம் தள்ளியிருந்த இஸ்திரி போடறவன் பாத்திருக்கான். இவன் பதட்டமா போனத பாத்து சந்தேகப்பட்டு வீட்டுக்குள்ள போயி பாத்தவன் போலீஸ்க்கு ஃபோன் பண்ணிருக்கான். கார் நம்பர வச்சு போலீஸ் ட்ரேஸ் பண்ணிட்டாங்க.

    இன்ஸ்பெக்டர் கிட்டயும் அவங்கிட்டயும் பேசிட்டு நான் வெளிய வந்து ஏ.பி.க்கு ஃபோன் பண்ணேன். அவனும் உடனே ஸ்டேஷன்-க்கு வந்துட்டான். ஆனா விஜய் அவன பாத்ததும் ஆக்ரோஷமா கத்த ஆரம்பிச்சுட்டான். அவன் தான் கொலை பண்ணிட்டு தன் மேல பழிப்போடறான்னு ஒரே உளரல். கிட்டதட்ட அவனுக்கு பைத்தியம் புடிச்சுடுச்சுன்னே நினச்சோம். போலீஸ் வந்து மிரட்டி அவன செல்லுல போட்டாங்க. ஏ.பி. மனசொடஞ்சு போயி கெளம்பினான்.

    ஆனா, நாங்க ரெண்டு பேருமே அவன் அந்த கொலைய பண்ணிருக்க மாட்டான்னு தான் நினச்சோம். அவன ஜாமின்ல எடுக்கறதுக்கான வேலைய நான் பண்ணிட்டிருக்கும் போது, தகவல் விஜய் மனைவி பாரதிக்கு தெரிஞ்சு, விஜய் தனக்கு துரோகம் செஞ்சுட்டான்னு அவ அவங்க அம்மா வீட்லயே தற்கொலை பண்ணிகிட்டா.”

    “வாட்?!” என்றான் கௌதம் அதிர்ந்து.

    “ஆமா.. அவசரபட்டு அவ விக்ரம பத்தி கூட யோசிக்காம அப்படி ஒரு முடிவெடுத்துட்டா.. நான் தான் விஜய்ய அவளோட இறுதி சடங்குக்கு கூடிட்டுப்போனேன். அந்த செய்திய கேட்டதுல இருந்து விஜய் ஒரு நடபிணமா ஆய்ட்டான். கோபன் ஆக்ரோஷம் எதுவும் இல்ல.. பேச்சே இல்ல.. ஒரு ஜடம் மாதிரி எல்லாம் செஞ்சான்.

    திரும்பி வந்து அடுத்த அதிர்ச்சி.. கொலைய தான் தான் செஞ்சதா விஜய் ஒத்துகிட்டான்னு போலீஸ்ல இருந்து தகவல். அதுக்கப்புறம் என்னையோ ஏ.பி.யையோ அவன் சந்திக்கவேயில்ல. கோர்ட்ல அவனுக்கு ஏழு வருஷம்னு தீர்ப்பாச்சு. ஹியரிங் முடிஞ்சு வெளிய வரப்போ “என் பையன பாத்துக்கோ’ங்கறத தவிர வேறே எதுவுமே அவன் பேசல. அதுக்கப்புறமும் பிடிவாதமா அவன் எங்கள சந்திக்கவேயில்ல. ஆறு மாசம் கழிச்சு அவன பொணமாதான் நாங்க பாத்தோம். பட்டினி கிடந்து கொஞ்ச கொஞ்சமா தன்னையே அழிச்சுகிட்டான்.”

    இராமசந்திரன் கண்களிலிருந்து மட்டுமில்லாமல் பெண்கள் இருவரின் கண்களிலும் கண்ணீர் கசிந்தது.

    “ஒரு குடும்பமே அழிஞ்சிருக்கு. ஆனா நமக்கு இன்னும் அதுக்கான காரணம் தெரியாது.” என்றான் கௌதம் உள்ளடக்கிய ஆக்ரோஷத்துடன்.

    ஆமோதிப்பாய் தலையசைத்தார் இராமசந்திரன். “என்ன நடந்துதுனு விஜய் எங்க கிட்ட சொல்லாமையே பொயிட்டான். அது தெரியாம என்னால மேல இன்வெஸ்டிகேட் பண்ணமுடியல. அதுமட்டுமில்லாம அவனோட இழப்பு கேஸ்ங்கறத தாண்டி எங்க எல்லாரையும் பாதிச்சுது. அதுக்கபுறம் எங்க நட்புல இருந்த சந்தோஷமும் அன்னியேன்யமும் பொயிடுச்சு. தொழில் ரீதியான நட்பா மாறிப்போச்சு. ஆனா, அப்போவே தன்னோட பிஸினஸோட பாதிக்கு மதிப்புள்ள பணத்த ஏ.பி. விக்ரம் பேர்ல போட்டு என்ன கார்டியனா போட்டுட்டான். அதுக்கபுறம் விக்ரம் அவன் பாட்டி வீட்ல வளந்தாலும் அவனோட செலவுகள நான் தான் பாத்துகிட்டேன்.” என்றார்.

    “அப்போ விஜய் அங்கிளோட பையன்னு தான் அப்பா எங்க கல்யாணதுக்கு ஒத்துக்கலயா அங்கிள்?” என்றாள் மித்ரா.

    “அது எனக்குமே புரியாத புதிர் தான்மா.. விஜய் மேல எங்களுக்கு இருந்த கோபமெல்லாம் பாரதி இறந்தப்போவே போயிடுச்சு. இன்னமும் அவன் தான் கொலை செஞ்சானா இல்ல பாரதி இறந்ததுனால கொலை பழிய ஏத்துகிட்டு ஜெய்லுக்கு போனானானு எங்களுக்கு குழப்பம்தான்.. அப்பப்போ விக்ரம் பத்தி எங்கிட்ட ஏ.பி. விசாரிச்சுகிட்டு தான் இருந்தான். ஸோ, ஏன் அவ்ளோ பிடிவாதமா உங்க கல்யாணதுக்கு மறுத்தான்னு எனக்குமே புரியல” என்றார்.

    சற்று நேரம் அங்கு அமைதி நிலவியது. பின், இராமசந்திரன் கேட்டார், “இப்போ வாட் நெக்ஸ்ட்?”

    “தெரியல அங்கிள்.. பட் இந்த கேஸ்கான விடை உங்க கடந்தகாலத்துல இருக்குமோனு சந்தேகமா இருக்கு.. இப்போ நடக்கிறதெல்லாம் ஒன்னுக்கு ஒன்னு தொடர்பில்லாம நடக்குற மாதிரி இருக்கு.. இதுக்கான லிங்க் விஜய் நந்தன் மரணத்தோட சம்மந்தப்பட்டதா இருக்கலாம். பிக்காஸ், ஏ.பி. சொத்துக்காக கொல்லப்படல.. மனோவோ, ராஜியோ இதப்பண்ணலனு தெளிவாய்டுச்சு..

    ஸோ.. இப்போ நடக்கிறது விஜய் நந்தன் மரணத்துக்கான பழிவாங்கலா?” என்று அவன் முடிப்பதற்குள் விழுக்கென நிமிர்ந்தாள் மித்ரா.

    “சாரி மித்ரா.. அப்படிதான்னு சொல்ல முடியாது.. பட் அதையும் ரூல் ஔட் பண்ணமுடியாது..” என்றவன், “சரி.. நடந்ததெல்லாம் சீக்வென்ஷியலா அரேஞ்ச் பண்ணா..” என்றவாறு எழுந்து சென்று ஒரு நோட்பாடையும் பேனாவையும் எடுத்து வந்து, சொல்லிகொண்டே எழுத துவங்கினான்,

    “1. மனோ ஏ.பி.ய கொல்ல முயற்சிக்கிறான். ஆனா, செய்யல

    2. அவன மிரட்ட ஏ.பி. உயில மாத்துறாரு.

    3. விக்ரம் ஏ.பி.ய சந்திக்கிறார்

    4.அதுக்கபுறம் பதினைந்து நாள்ல ஏ.பி. இறந்துபோராரு

    5. மித்ரா வராங்க. ஏ.பி.யோட வில்லையும் அவர் மரணத்தையும் சந்தேகப்படறாங்க

    6. நம்ப கேஸ விசாரிக்க ஆரம்பிக்கிறோம்.

    7. முதல் சந்தேகம் இராஜி இல்லேனா மனோ மேல. காரணம் சொத்து

    8. மித்ரா ரூமுக்கு அந்த கொலைகாரன் வரான்

    9. அடுத்து, மீனா கொலைசெய்யபடறா

    10. பழி மனோ மேல விழுது.

    11. மறுபடியும் கொலைகாரன் மித்ரா அறைக்கு வரான். அப்போ ராஜி தாக்கப்படறா. ராஜி அவன பாத்திருக்கலாம்.

    இதுல, ஃபர்ஸ்ட் இரெண்டு பாய்ன்ட்ஸ் இந்த கேஸ்க்கு சம்பந்தமில்லாதது. மனோவோ ராஜியோ இத செய்யல. நம்ப உயில்ல இருந்து இந்த கேஸ ஆரம்பிச்சாலும் இந்த கொலையோட மோட்டிவ் சொத்தோ உயிலோ இல்ல. ஸோ, தி ரியல் ப்ராப்ளம் ஸ்டார்ட்ஸ் வென் விக்ரம் மீட்ஸ் ஏ.பி.” என்று முடித்தான்.

    அவன் முடிக்க காத்திருந்தது போல மித்ராவின் கைப்பேசி அலறியது. எடுத்துப்பேசியவள் சொன்னாள், “விக்ரம் ரீச்ட் இண்டியா!”

    (தொடரும்)
     
    Deepu04, Sweetynila and stayblessed like this.
  10. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    super .aduththa episode seekiram potruma.Naalukku naal suspense koodikitte poguthu .
     
    Rajeni likes this.

Share This Page