1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மித்ர மாளிகை..!

Discussion in 'Stories in Regional Languages' started by Rajeni, Oct 8, 2014.

  1. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Thanks amma! Sure.. Kandippa seekiram update panidren!
     
    periamma and Ragavisang like this.
  2. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Thanks Ragavi! Will post soon :)
     
    Ragavisang likes this.
  3. meepre

    meepre Gold IL'ite

    Messages:
    549
    Likes Received:
    974
    Trophy Points:
    188
    Gender:
    Female
    Late ah vanthalum sema super episode oda vanthutinga Rajeni. Super pa. Thanks for the long detailed episode. Plz try to post next episode faster da, waiting for the fate turning Saturday.... :confundio1::confundio1::confundio1:
     
  4. stayblessed

    stayblessed Platinum IL'ite

    Messages:
    934
    Likes Received:
    1,744
    Trophy Points:
    263
    Gender:
    Female
    Interesting... Why did AB not see the cctv footage? May be he will be in for even more shock. So what does saturday hold for the friends. Waiting waiting..
     
    Rajeni likes this.
  5. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    May be in AP's mind saving his friend's family was more important that money.. who knows :p
     
    stayblessed likes this.
  6. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Saturday is coming now!! Thanks for your encouraging FB meepre dear!
     
    meepre likes this.
  7. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    25.மித்ர மாளிகை – பிரிவு!

    ஏ.பி.யின் வீட்டு தொலைபேசி சிணுங்கியது.

    “அருள் பிரபாகர்”, என்றார் ஏ.பி. தொலைப்பேசியை காதுக்கு கொடுத்து.

    “டேய்.. நான் தான் டா.. அவன் வீட்ட விட்டு கிளம்பிட்டான்.. அனேகமா அங்கதான் போறான்னு நினைக்கிறேன்.. அவன் அந்த ஏரியாக்கு போன உடனே நான் உனக்கு திரும்ப கால் பண்றேன்.. நீ அசோக்க கூட்டிட்டு வந்துடு..”, என்றார் இராமசந்திரன் அவசரமாக.

    “சரிடா.. நான் அசோக்குக்கு கால் பண்ணி ரெடியா இருக்க சொல்லிட்றேன்..”, என்று முடித்தார் ஏ.பி.

    அடுத்த இருபது நிமிடங்களில் மீண்டும் அழைப்பு வர இராமசந்திரனிடமிருந்து தான் என்கிற அளவு ஏ.பி. யூகித்திருந்தார், “சொல்லு டா சந்துரு”

    “ஹே அங்க தான் டா போறான்.. நீங்க கிளாம்பிடுங்க.. நான் அந்த சந்து திரும்பாம அந்த மொனையிலயே உங்களுக்கு வெய்ட் பண்றேன்”

    “ஓ.கே டா”


    அழைப்புமணி கேட்டு கதவை திறந்த மாதவி வாயிலை அடைத்தவண்ணம் நின்றுக்கொண்டு, “யார் வேணும்”, என்றாள் வெளியே நின்ற மூன்று ஆண்களையும் பார்த்து. அவளது மெல்லிய புடவையும் அலங்காரமும் ஏ.பி.யை முகம் சுளிக்க வைத்தன.

    “சார் இருக்காருங்களா?”, என்றார் முன்னால் நின்ற இராமசந்திரன். ஏ.பி.யும் அசோக்கும் பேசுவது உன் பொறுப்பு என்பதுபோல அவருக்கு பின்னால் நின்றனர்.

    “எந்த சார்? சார் யாருமில்ல.. நீங்க..”, என்று அவள் விரட்டுவது போல் பேச அவளை முடிக்கவிடாமல் இடையிட்டார் இராம்.

    “அப்போ அந்த கார் உங்களுதுங்களா? கொஞ்சம் வந்து காரெடுக்கறிங்களா? லாரி வரனும்.. இடம் பத்தாது”, என்றார். லாரி ஓட்டுவது தான் தன் குலத்தொழில் போல குரல் தங்குதடையின்றி வந்தது.

    இதை எதிர்ப்பாக்காத அந்தப்பெண் சந்தேகமாய் மூவரையும் மாறி மாறி பார்த்தாள்.

    “அந்த கார்னர்ல இருக்கற புது வீட்டுக்கு குடிவர போறோம்.. ஜாமான் எடுத்துட்டு வர லாரி வந்துட்டிருக்கு. வீ கேம் இன் கார்..”, என்று புன்னகைத்தார்.

    ஒரு நிமிடம் தயங்கியவள் உள்ளே சென்று, “ஏங்க கார் எடுக்கணுமாம்”, என்று கூறுவதற்குள் இவர்கள் மூவரும் வீட்டிற்குள் சென்றிருந்தனர்.

    இவர்கள் மூவரும் கூடத்தில் நின்றிருக்க படுக்கைஅறை போலிருந்த அறையிலிருந்து வெளியே வந்த விஜய்நந்தன் இவர்களைப்பார்த்து அதிர்ந்து நின்றார். அவரோடேயே வந்த அந்தப்பெண் அவரின் அதிர்ச்சியை கவனிக்கவில்லை போலும்

    “ஹே நீங்கெல்லாம் உள்ள என்ன பண்றிங்க.. யார் நீங்க?” என்றாள் கோபத்தோடு.

    “கேக்கறாங்கல்ல சார் சொல்லுங்க நாங்க யாருனு”, என்றார் இராமசந்திரன் ஏளனமாக.

    “நீங்க எப்படிடா இங்க?”, என்றார் விஜய்

    “ஏன் டா குட்டு வெளியாடுச்சேனு முழிக்கிறியா?”, என்றார் இராம் தொடர்ந்து.

    “என்னது? என்ன குட்டு? நான் என்ன பண்ணேன்?” என்றவரை இடைமறித்து, “போதும் நிறுத்துடா.. இவ்வளவுக்கு வந்தப்புறமும் ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்காத”, என்று சீறினார் ஏ.பி.

    “சரி.. இப்போ இங்க என்ன பண்றேனு சொல்றியா?” என்றார் அசோக் கூடவே.

    “என்னடா உன் கேள்வியோட அர்த்தமே சரியில்லயே.. ஏதோ முக்கியமான விஷயம்னு கால் பண்ணாங்க வந்தேன்..”

    “முக்கியமான விஷயம் பேசற அளவு பழக்கமா?” – அசோக்

    “சே அசிங்கமா பேசாத.. எனக்கு இவங்க யாருன்னே தெரியாது”

    “ஆனா.. முக்கியமான விஷயம் பேசுவிங்க.. நீ பெட்ரூம்குள்ள உக்காந்திருப்ப..” என்றவரை இடைமறித்து, “தேவையில்லாம பேசாதடா.. இவ தான் டா எனக்கு ஃபோன் பண்ணி வர சொன்னா.. இவள பாக்கும் போதே சந்தேகப்பட்டேன்.. இவ தான் ரூமுக்குள்ள..”, என்றவர் முடிப்பதற்குள்,

    “நந்து! திஸ் இஸ் த லிமிட்.. உங்க கூட பழகினேங்கறதுக்காக என்னோட கேரக்டர தப்பா பேசாதிங்க.. ஐ ம் நாட் அ ஸ்லட்! உங்க மேல தப்பில்லனு ப்ரூவ் பண்ண ஒரே நிமிஷத்துல என்ன கேவலபடுத்திட்டிங்களே”, என்றாள் கண்ணீரும் ஆத்திரமும் சேர.

    “டேய் பொய் சொல்றாடா..” அவர் குரல் நடுங்கியது.

    “என்னது.. நான் பொய் சொல்றேனா?” என்றவள் வேகமாக சென்று உணவருந்தும் அறையில் ஓர் ஓரமாக இருந்த அழுக்குத்துணி கூடையிலிருந்து இரு சட்டைகளை உருவிக்கொண்டு வந்து விஜய்நந்தன் முன் நீட்டி கேட்டாள், “இதோ நீங்க லாஸ்ட் வீக் விட்டுப்போன சட்டைங்க.. நீங்க வராமையே இது எப்படி இங்க வந்துச்சு”

    பதில் சொல்லாமல் அவள் கையிலிருந்த சட்டைகளையே பார்த்துக்கொண்டிருந்தார் விஜய்.

    “டேய்.. தேவையில்லாம இத வளக்கவேணாம்..” என்று இவரை அதட்டிய ஏ.பி. அந்தப்பெண்ணை பார்த்து சொன்னார், “இங்க பாருங்க.. அவன் கல்யாணம் ஆனவன்.. அவனுக்கு குடும்பமிருக்கு.. இது சரியில்ல.. பிரட்சனை பண்ணாம ஒதுங்கிக்கோங்க..” என்று அவர் முடிப்பதற்குள்

    “டேய் நிறுத்துறியா.. எப்படா எம்மேல என்ன பழிப்போடலாம்னு காத்துகிட்டிருக்கியா?” என்றார் விஜய் ஏ.பி.யை பார்த்து.

    “வாட்?!! அவ்ளோ தாண்டா மரியாதை உனக்கு.. நான் பழிப்போடறேனா.. போன வாரம் நீ இங்க வந்தத என்னோட இவனும் தான் டா பாத்தான்” என்றார் வெறுப்பாக.

    “என்னது என்னப்பாதிங்களா..”

    “டேய்.. உன்னோட கார இதே எடத்துல லாஸ்ட் சாடர்டே நானும் தான் டா பாத்தேன்.. ப்ளீஸ் டா.. நடந்தது நடந்திடுச்சு.. காம்ப்ளிகேட் பண்ணாத.. லெட்ஸ் ஃபினிஷ் திஸ்..” என்றார் இராமசந்திரன் கெஞ்சலாக!

    “புரிஞ்சிடுச்சுடா.. இப்போ தான் எல்லாமே புரியுது! எல்லமே உன்னோட வேல இல்ல!” என்றார் விஜய் ஏ.பி.யை பார்த்து.

    “வாட் டூ யூ மீன்?” கடித்தப்பற்களுக்கிடையே கேட்டார் ஏ.பி.

    “செம ப்ளானிங் அருள்!”

    “விஜய் உன் தப்ப மறைக்க புதுகத கட்டப்பாக்காத”

    “சே! இப்படி இல்லாத தப்பெல்லாம் எம்மேல சுமத்தனும்னு தான உன்னோட ப்ளானே! என்னோட கார எடுத்துட்டு வந்து இங்க நீயே நிறுத்திட்டு நான் இங்க வந்தேன்னு செட்டப்.. இவ யாரு இவளும் உன்னோட ஆளு தான” என்று முடிப்பதற்குள் “என்னடா சொன்ன” என்றவாறு அவர் மீது பாய்ந்தார் ஏ.பி. அவரை இராம் தடுக்க அசோக் விஜயை பிடித்திருந்தார்.

    “அடிடா.. அடி.. இல்லாத பழியெல்லாம் போட்டு.. என்ன கேவலப்படுத்தி பிஸ்னஸ்ல இருந்து என்ன ஒதுக்கிடனும் அதானே உன்னோட திட்டம்..” என்றார் விஜய் திமிறிக்கொண்டே.

    “அடச்சீ.. இவ்வளவு கேவலமானதா உன்னோட புத்தி? உன்ன ஒதுக்க நான் இதெல்லாம் பண்ணனும்னு அவசியமேயில்ல..” என்றார் ஏ.பி. வெறுப்பாக.

    “அதே தான் நானும் சொல்றேன்.. சொல்லிருந்தா நானே தூக்கி எறிஞ்சிட்டு போயிருப்பேனே..”

    “என்னது.. என்னோட பிஸினஸ.. எனக்கு நீ தூக்கி எறியிரியா..” என்று ஏ.பி. சீறினார்

    “அதான டா உன்னோட எண்ணமே.. உன்னோட பிஸினஸ்.. நான் சும்மா.. ஒப்புக்குசப்பானி.. எனக்கு மூளையே கிடையாது.. போனாபோகுதுனு என்ன வச்சிருக்கற”

    “ஆமாடா.. என்னோட பிஸினஸ்! போனாபோகுதுனு தான் உன்ன வச்சிருக்கேன்.. இவ்வளவு கேவலமானவன்னு தெரிஞ்சிருந்தா வச்சிருந்துருக்கவே மாட்டேன்”, தன் மீது வீண் பழி சுமத்துகிறானே என்ற ஆத்திரத்தில் வார்த்தைகளைக்கொட்டினார் ஏ.பி. அதைக்கேட்டு திமிறிக்கோண்டு அவர் மேல் பாயப்போன விஜயை அசோக்கும் அந்தப்பெண்ணும் பிடித்து தடுத்தனர்.

    “யாரடா.. கேவலமானவன்னு சொன்ன.. நீதான் கேவலமனவன்.. பணவெறி புடிச்சவன்!”

    “உழச்சு சம்பாதிக்கறவன்டா நான்.. சொந்த பிஸினஸ் அக்கௌண்ட்ஸ்லயே திருட்டுறவன் இல்ல! கணக்குல தில்லுமுல்லு பண்றவன் இல்ல!” என்றார் அருவெறுப்பாக.

    “இப்ப யோசிச்சா அதுவும் உன்னோட வேலையானு தோணுது.. சொல்லு நீதானே ஆள் வச்சு எங்கிட்ட இருந்து பணத்த திருடுன?” என்று நக்கலாக கேட்டார் விஜய்.

    அவரை நோக்கி ஓர் எட்டு எடுத்து வைத்த ஏ.பி. இராம் தன்னை பிடிக்க வருவதைக்கண்டு தன் வலதுகையை உயர்த்தி அவரை நிற்கும்படி சைகைசெய்துவிட்டு, உணர்ச்சிகள் உள்ளடக்கிய குரலில் இராமசந்திரனை நோக்கி, “திஸ் இஸ் த லிமிட்.. இதுக்கு மேல இந்த எடத்துலை இருந்தேன்னா.. நான் கொலபண்ணாலும் பண்ணிடுவேன்..” என்றவர் சட்டென விஜய் நந்தனை நோக்கி, “இனி உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்ல.. விஜய் நந்தன்னு ஒருத்தன இனி எனக்கு தெரியாது! பிஸினஸ் இஸ் ஆல்வேஸ் மைன்! உன்னோட செட்டில்மென்ட் விஷயமெல்லாம் என்னோட லாயர்ட்ட பேசு.. இனி நான் உன்ன பாக்கவே விரும்பல”, என்றுவிட்டு வேகமாக திரும்பி வெளியேறினார்.

    “போடா போ.. இதுக்கு தான இத்தன நாடகமும் ஆடுன.. ப்ளான் படி செஞ்சுட்ட.. சூப்பர்”, என்று உரக்க சொல்லி வீடே அதிரும் வண்ணம் சிரித்தார் விஜய்நந்தன்.

    (தொடரும்)
     
  8. stayblessed

    stayblessed Platinum IL'ite

    Messages:
    934
    Likes Received:
    1,744
    Trophy Points:
    263
    Gender:
    Female
    adada onnum puriyala, Vijay nandan mela thappu irukka illaya the way he reacts is as though he himself is being cheated by Madhavi, or is he acting that well. Ayyo AB should see the footage. wonderful twists R, loving every episode. Pls pls post the next episode soon.
     
    Rajeni likes this.
  9. meepre

    meepre Gold IL'ite

    Messages:
    549
    Likes Received:
    974
    Trophy Points:
    188
    Gender:
    Female
    Where are you Rajeni?? Seekram next episode post panu da. Daily I check this thread to see for new updates but nothing :coldsweat: you stopped with so much suspense. Please come back soon.
     
  10. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Sorry for making you all wait meepre! Held up with a lot of work.. Will post by Wednesday without fail :)
     
    Sweetynila likes this.

Share This Page