1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மிகவும் உயர்ந்தவர்!

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Feb 11, 2011.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    தனக்கென்று சொந்தமாய் எதனையும் கொள்ளாது,
    தானறிந்த வரை எவ்வுயிர்க்கும் தீங்கே செய்யாது,
    தனக்கு மேலான பரம்பொருளை மட்டும் நினைத்து,
    தனித்திருந்தார் முனி ஒருவர் தவத்தில் முனைந்து.

    அழைக்காமலே அருளும் பரம்பொருள் அன்றோ?
    தன்னை அழைக்கவும் வாராது இருந்தது உண்டோ?
    வந்தார், முனிவர் முழுதும் தன்னிலை மறந்தார்.
    அழுதார், தொழுதார், வார்த்தை எல்லாம் இழந்தார்.

    என்ன வேண்டும் உமக்கு? சொல்வீர் முனியே!
    உலகிலுள்ள செல்வமா, பார் புகழும் இல்லறமா?
    சிரஞ்சீவித் தன்மையா, சொர்க்கத்தில் இடமா?
    இவையன்றி, வேறேதும் வேண்டி இந்தத் தவமா?

    என்று ஈசர் சொல்ல, முனிவர் மெல்ல வாய் திறந்து,
    தன விருப்பமதை கம்மிய குரலில் சொல்லி முடித்தார்.
    அதைக் கேட்டு மிக மகிழ்ந்த ஈசர் அவரைப் புகழ்ந்து,
    அவர் வேண்டிய வரத்தை உடன் அவருக்கு அளித்தார்.

    அவர் குணம் தான் யாருக்கு எளிதினில் வாய்க்கும்?
    தான் எங்கு சென்றாலும் நன்மை பெருகிட வேண்டும்!
    ஆனால் அது தனக்குத் தெரியாதிருக்க வேண்டும்!
    என்றவரின் அடக்கத்துக்கு எது தான் ஈடாகும்?
    -ஸ்ரீ
     
    Loading...

  2. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    கவிதை கதை அருமை.
    இந்த எண்ணம் கைவர,அவர் கடந்த தூரம் தான் எத்தனையோ?
    நன்மை என்று செய்தாலும்,அதை நாம் செய்தோம் என்ற எண்ணமே,மற்றொரு வினைக்கு காரணமாகும்,எனவே அதனின்றும் விடுத்து வரம் பெற்ற முனிவரே,முகத்தி பெற்றவர் ஆவார்.
    முனிவர் பெயரை குறிப்பிடவில்லையே நீங்கள்.
     
  3. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    கருத்து நன்றாய் இருக்கிறது ஸ்ரீ...
     
  4. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    அது எனக்கும் தெரியாது தீபா. கதையாகப் படித்து இரசித்ததை இங்கு எழுதி இருக்கிறேன். அவ்வளவு தான். பின்னூட்டத்துக்கு நன்றி. -ஸ்ரீ
     
  5. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி லதா. -ஸ்ரீ
     

Share This Page