1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மார்கழி மகாத்மியம்!

Discussion in 'Posts in Regional Languages' started by PushpavalliSrinivasan, Dec 28, 2011.

  1. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    மார்கழி மகாத்மியம்!

    மாதங்களில் நான் மார்கழி என்று கண்ணபிரான் கீதையில் கூறியிருப்பதிலிருந்தே இந்த மாதத்தின் புனிதத்தன்மையை நன்கு உணர்ந்து கொள்ளலாம். ஆண்டாளும் பாவை நோன்பு நூற்க மார்கழி மாதத்தையே தேர்ந்தெடுத்ததால் மேலும் சீர்மை கூடுகிறது. மாணிக்கவாசகரின் திருவெம்பாவைப் பாடல், மற்றும் திருப்பள்ளி எழுச்சி சிவன் கோயில்களிலும், ஆண்டாளின் திருப்பாவையும் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருப்பள்ளிஎழுச்சி வைணவத்திருக்கோயில்களிலும் பொழுது புலருமுன் மக்களைத் துயிலினின்றும் எழுப்பி இறையுணர்வைத் தோற்றுவிக்கின்றது. ஊரெங்கும் பக்திமணம் பரவச் செய்கின்றது.

    வீதியெங்கும் மகளிர் தண்ணீர் தெளித்து சுத்தப்படுத்தி வண்ணவண்ணக் கோலங்களால் அழகு படுத்துகின்றனர். பனி படர்ந்த இளங்காலைப் பொழுது உள்ளத்தையும் உடலையும் மகிழ்வுறச் செய்கின்றது.

    மாலை நேரங்களிலோ இனிமையான இசை நிகழ்ச்சிகளும் நாட்டிய நிகழ்ச்சிகளும் செவிப் புலனுக்கும் கட்புலனுக்கும் விருந்தளிக்க பல இசை அரங்குகள் பிராந்தியம் தோறும் பல்கிப் பெருகி இசை ரசிகர்களைப் பரவசப் படுத்துகின்றன.

    "செவிக்குணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்" என்ற பொய்யாமொழிப்புலவரின் கூற்றினைப் பொய்யாக்கி இசையுடன் நில்லாது பலவகைப்பட்ட சிற்றுண்டிகளையும் வழங்கி சாப்பாட்டுப் பிரியர்களையும் கவர்ந்திழுக்கும் முயற்சியில் வெற்றி காணும் இசை அரங்கங்களுக்கும் குறைவில்லை. இசைஇன்பத்தைப் பருகவென்றே நாடுவிட்டு நாடு வந்து விடுதிகளிலும் (Hotels), சேவை அடுக்குமாடிகளிலும் (service apartments)தங்குபவர்களால் நமது சென்னைமாநகருக்கு எத்தனை பெருமை! It is known as “Cultural capital of India!”

    ஆன்மீகமும் கலைகளும் கூடிக்குலவும் மகிமை மார்கழியைத் தவிர வேறு எந்த மாதத்திற்காவது உள்ளதா?
    ஹநுமத் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம் போன்ற இந்துமத நந்நாட்களுடன், கிறிஸ்துமஸ், மற்றும் ஆங்கிலப் புத்தாண்டும் மார்கழிக்கு மேலும் கூடுதல் முக்கியத்துவத்தை அளிக்கின்றது.
    எனவே மார்கழி மாதம் மனமகிழ் மாதம்!:)
     
    2 people like this.
    Loading...

  2. knbg

    knbg Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    5,815
    Likes Received:
    5,614
    Trophy Points:
    455
    Gender:
    Female
    மதிப்பிற்குரிய P.S. ma'am,
    பூத்திருக்கும் புத்தாண்டில் உங்களை வணங்குகிறேன்....
    "மாதங்களில் நான் மார்கழி" என அந்த மாதவனே கூறியிருக்கிறார்.....
    மார்கழி மாதத்தை கண் முன் கொண்டு வந்த பதிவு.....
    மன கட்டுப்பாட்டையும், மறை பொருளாம் இறைவனை தினம் தோறும் வணங்கவும் , தினம் காலை தெய்வ தரிசனம் செய்து நாளை தொடங்கவும் நம் மனதை பண் படுத்தும் மார்கழி.....
    மார்கழி பற்றி அழகான பதிவு தந்தமைக்கு நன்றிகள்....!!!
     
    Last edited: Jan 2, 2012
  3. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    அன்புள்ள பார்க்கவி,
    தங்களின் பதிவிற்கு மிக்க நன்றி!
    இனிய புத்தாண்டில் நலம் பலபெற்று வாழ்க்கை மேன்மேலும் சிறப்புற்று சீரியகுணங்கள் மேலோங்கி சீரும் சிறப்புமாய் என்றென்றும் இருக்க இறைவனின் திருவருள் கிட்டிட இறைஞ்சி வேண்டிக்கொள்ளுகிறேன்.

    அன்புடனும் நல்லாசிகளுடனும்,
    புஷ்பவல்லி
     
  4. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    புஷ்பவல்லி மா,
    நன்றாக சொன்னீர்கள்.
    தை மாதத்தில் (நான் வந்து படித்ததை சொன்னேன் :biggrin2) படித்தாலும், குறைவதில்லை
    மார்கழியின் மாஹாத்மியமும் அதனால் எழும் மலரும்
    நினைவுகளும் :)

    Sriniketan
     
    Last edited: Jan 19, 2012
  5. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    அன்புள்ள பார்க்கவி,
    மார்கழிமாதம் நங்கைநல்லூரில் கோவிலுக்குப் போய் பொஙகல் வாங்கிச் சாப்பிட்டதுண்டா? எப்படி பகவத்கீதையின் மகிமை என்றும் குன்றாதோ மார்கழி மாஹாத்மியமும் குறையாது. தை மாதம் பிறந்த பிறகும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    அன்புள்ள,
    புஷ்பவல்லி
     

Share This Page