1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மலர்களை விட்டுநீ முள்ளையேன் எடுத்தாய்?

Discussion in 'Regional Poetry' started by crvenkatesh, Jan 22, 2012.

  1. crvenkatesh

    crvenkatesh Gold IL'ite

    Messages:
    420
    Likes Received:
    522
    Trophy Points:
    173
    Gender:
    Male
    மலர்களை விட்டுநீ முள்ளையேன் எடுத்தாய்?
    மறந்தெனைப் பிரிந்து மரணமேன் கொடுத்தாய்?

    உனக்குநான் என்னடி துரோஹம் செய்தேன்?
    உன்பேரை சொல்லித்தானே பாடல்கள் நெய்தேன்?

    என் வாழ்கை உன் நினைவின் extension ஆச்சு
    எனக்கென்ற தனியான identity போச்சு.

    பார்பதற்கும் ஓகே நான் வசதிக்கும் குறைவில்லை
    Punishment எதற்கெனக்கு? ஏண்டி அறிவில்லை?

    காதல் எனும்பள்ளியிலே படிக்கவே செல்வார்கள்
    காதல் எனும்பள்ளியிலே பாடமாய் ஆனோம்!

    what is love என்பதற்கு பாடமாய் மூவர்
    what isn't love என்பதற்கு நாம்பாடம் ஆனோம்

    மறுபிறவி எடுத்தாலும் உனைநான் மறவேன்
    வற்றாத ஊற்றாக என்காதல் தருவேன்

    இப்பிறவி உன்பேரை சொல்லியே ஓடும்
    உன்நினைவில் என்றென்றும் என்னுள்ளம் வாடும்

    மலர்களை விட்டுநீ முள்ளையேன் எடுத்தாய்?
    மறந்தெனைப் பிரிந்து மரணமேன் கொடுத்தாய்?
     
  2. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    என் வாழ்கை உன் நினைவின் extension ஆச்சு
    எனக்கென்ற தனியான identity போச்சு.

    Made me smile CRV. Another good one, but along the loser's line :-(
    One thing to observe - you need to be unique to be noticed and you lose that after you are. :)
    -rgs
     

Share This Page