1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மறை (த்ததின்) பயன்

Discussion in 'Regional Poetry' started by natpudan, Dec 22, 2011.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    மறை (த்ததின்) பயன்

    இங்கிருந்தேன் அங்கிருந்தேன்
    அனைவரிடமும் நட்பு பாராட்டினேன்
    இங்கிருந்ததை அங்கிருந்ததை மறைத்தேன்
    இன்னட்பை ஏனோ அவளிடம் காட்ட மறந்தேன்
    என்னவளிடமிருந்து மறை (த்ததின்) பயன் அடைந்தேன்
    மறை (த்த) செயல் உணர்ந்து எனை மன்னிக்க வேண்டுகிறேன்
    மறந்த காதலை/நட்பை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டுகிறேன் அவளை
    மறை (த்த) செயல் மன்னித்து இல்லற மறை பயன் தான் அடைவேனோ?

    புரியாமல் தவிக்கிறேன் அவளுக்கு
    புரிய வைப்பது எங்கனம் என்று? விளங்காமல்
    போனால் மாய்ந்து மறைந்து போவதொன்றே வழியென
    புரிந்து கொண்டேன் - கொண்டவளை நான் புரிந்து கொள்ள, கொண்டவளும்
    எனை புரிந்து கொள்ளாததை புரிந்து கொண்டேன் - புரியப் புரிய பிரிவோன்றே வழியா?
    காதல் கொண்ட நாமிருவரும் நமை புரிந்து கொண்டவுடன் பிரியாது - அறியாது
    செய்த தவறை இனி செய்வதில்லை எனும் எனை நம்பி சேர்வதைத் தான்
    என்னவளிடம் யாசிக்கிறேன் - யோசிக்காமல் யாசித்துவிடு
    மன்னித்து மறந்தால் சீராகும் நம் வாழ்வு

    இதுவரை இங்கு அவளறியாது நான் எழுதியவை அனைத்தும்
    அவளை மனதில் கொண்டுதான். இனி அவளறிய
    அவளுக்காகவே எழுதி இங்கு பதிவிடுவேன்...
     
    svjm, sriijaa and kalpavriksham like this.
    Loading...

  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    நல்ல கவிதை நட்ஸ்! உங்கள் கவிதையின் கருவுமாக பொருளுமாக உங்களின் எல்லாமாக அவர்களே இருந்தார்கள்...இருக்கிறார்கள்...இருப்பார்கள் ! சூப்பர் :thumbsup
     
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நட்ஸ் கவலை படாதீர்கள்.அனைத்தும் சீராகும்.கடவுள் துணை இருப்பார்.
     
  4. indira87

    indira87 New IL'ite

    Messages:
    91
    Likes Received:
    4
    Trophy Points:
    8
    Gender:
    Female
    சூப்பர் [​IMG]
     
  5. svjm

    svjm Guest

    Really good poem.
    Hopefully everyone are like that.
    Wish you had rectified your issues.
     

Share This Page