1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மனைவியின் அக்கறை

Discussion in 'Posts in Regional Languages' started by mathangikkumar, Oct 5, 2014.

  1. mathangikkumar

    mathangikkumar Platinum IL'ite

    Messages:
    1,438
    Likes Received:
    1,659
    Trophy Points:
    283
    Gender:
    Female
    [h=3]
    [/h](படித்ததில் பிடித்தது )




    நமது கதையில் வரும் இந்த தம்பதியின் பெயர் வள்ளுவன் வாசுகி.வயதான கணவன் மனைவி. இருவரும்ஒரு மன நலமருத்துவ மனையில் .நோயாளிகள். தனித்தனியாக பக்கத்து பக்கத்து அறையில் அனுமதிக்கபட்டிருந்தனர்.



    அன்று பௌர்ணமி. கணவனும் மனைவியும் மருத்துவ மனை வளாகத்தில் இருந்த நீச்சல்குளம் அருகே நடந்து கொண்டிருந்த போது கணவன் திடீரென்று பெரிதாக சிரித்து கொண்டு குளத்தில் குதித்துவிட்டான். அருகிலேயே நடந்துகொண்டிருந்த வாசுகி தானும் உடனே குளத்தில் குதித்து விட்டாள்.கணவனை மெதுவாக மேலே தூக்கி கொண்டு வந்துவிட்டாள்.


    விஷயம்காவலாளிகள்மூலம் டாக்டர்களை எட்டி உடனே இருவருக்கும் தக்க சிகிச்சை செய்து அறைக்கு அனுப்பினர். இந்த சம்பவம் டாக்டர்கள் கூட்டத்தில் அன்று இரவே வெகுவாக பரிசீலிக்கப்பட்தது.
    டாக்டர் ரகு, இந்த தம்பதியர் ஏறக்குறைய மூன்றாண்டுகளாக இங்கே அனுமதிக்கப்பட்டு வருகிறார்களே. என்ன இம்ப்ரூவ்மெண்ட்?


    பெரிய டாக்டர் தம்புசாமியின் இந்த கேள்வி டாக்டர் ரகுவையும் டாக்டர் பலராமனையும் உலுக்கியது.


    டாக்டர் சார் இந்த இருவரையும் நான் கவனித்ததில் கோவம் குறைந்திருக்கிறது. இருவரும் சண்டை போடுவதில்லை. எதற்கும் தனித்தனியே தான் அறை. சில நேரங்கள் சேர்ந்து இருப்பார்கள் வெளியே போவார்கள் அதை அனுமதித்திருக்கிறேன்.


    இந்த மாதிரி திடீரென்று வள்ளுவன் ஏதாவது செய்கிறார். வாசுகி யோசித்து செயல் புரிகிறாள்''பல வாக்குவாதங்களுக்கு பிறகு டாக்டர்கள் கூடிபேசி ஏகமனதாக ஒரு முடிவுக்கு வந்தனர் .


    "எப்போது கணவன் நீரில் மூழ்கிவிட்டான் என அறிந்து அவனைக் காப்பாற்ற முயற்சி செய்து தன உயிரை லட்சியம் செய்யாமல் சமயோசிதமாக நீரில் குதித்து அவனை மீட்டு அவன் உயிரை காப்பாற்றினாளோ அந்த பெண்மணி மனநிலைநோயாளி அல்ல. அவளை மனநிலை மருத்துவ நிலையத்தில்இனியும் வைத்திருப்பது சரியல்ல. இன்றே அவளை வீட்டுக்கு அனுப்பி வைப்பதுவே முறை" . தலைமை மருத்துவர் தம்புசாமி மறுநாள் காலையில் தம்பதிகள் இருந்த அறைகளுக்கு விசிட் செய்து கடைசியில் அந்த பெண்மணியின் அறைக்கு வந்து அவளிடம் சொன்னார்
    "அம்மா உங்களுக்கு இரண்டு செய்திகள் சொல்லப்போகிறேன். ஒன்று நல்ல செய்தி.மற்றது கெட்ட செய்தி""
    “என்ன செய்திகள் சொல்லுங்கள்" என்றாள் மனைவி.
    "நல்ல செய்தி என்னவென்றால் நீங்கள் எல்லோரையும் போல நல்ல மனநிலையில் தான் உள்ளீர்கள்.எனவே உங்களை மருத்துவ மனையிலிருந்து வீட்டுக்கு அனுப்புகிறோம்.
    "கெட்ட செய்தி என்னவென்றால் நேற்றிரவு உங்கள் கணவர்
    பாத்ரூமில் தன இடுப்பு பெல்டை எடுத்து கழுத்தில் சுற்றிக்கொண்டு தூக்கு போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டு விட்டார்"


    வாசுகி அவரை உற்று பார்த்தாள் .
    ''சாரிம்மா. நீங்கள் இதை தைர்யமாக ஏற்றுக்கொள்ளவேண்டும்.''
    “அட பாவமே நான் அவர் அறைக்கு நேற்று இரவுசென்று இருந்தபோது அவர் தண்ணீரில் விழுந்து விட்டதால் உடலில் உடையில் எல்லாம் ஈரம் கொஞ்சம் இருந்தது அவரை காற்றில் உலர வைப்பதற்கு மின் விசிறியில் பெல்ட் கட்டி தொங்க விட்டிருந்தேனே எப்படி இறந்தார் என்று கவலையுடன் கேட்டாள்"


    தலைமை அதிகாரி தடால் என்று கீழே விழுந்தார். அந்த பெண்மணி அவருக்கு வைத்தியம் செய்வதற்குள் உதவியாளர்கள் அவரைதூக்கிக்கொண்டு போயினர்


    நீதி; சிலரது உபகாரம் உபத்திரமாவதும்உண்டு இவர்களை அனுகூல சத்ரு என்றும் கூறுவது உண்டு.
     
    Loading...

  2. kalpavriksham

    kalpavriksham Gold IL'ite

    Messages:
    884
    Likes Received:
    473
    Trophy Points:
    138
    Gender:
    Female
    IDHU ROMBA pudhusa, interestinga irukke!
     
    1 person likes this.

Share This Page