1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மனதில் தீ...!!! - all parts

Discussion in 'Stories in Regional Languages' started by nithyakarthigan, Dec 17, 2011.

  1. nithyakarthigan

    nithyakarthigan Gold IL'ite

    Messages:
    600
    Likes Received:
    509
    Trophy Points:
    188
    Gender:
    Female
    [JUSTIFY]அத்தியாயம் - 9

    பழைய கதை

    "ஹாய் ஜெனி... என்ன உன்னை ஆளையே பார்க்க முடியவில்லை..." என்று புகழ் நிரஞ்சனிக்கு முன் வந்து அமர்ந்தான்.

    மத்திய உணவை ஒரு வாய் எடுத்து வைத்த நிரஞ்சனிக்கு உணவு தொண்டையிலேயே சிக்கிக் கொண்டது. 'இப்போது தான் வீட்டில் ஒரு பூகம்பம் வெடித்து அடங்கியிருக்கிறது... இப்போது இவன் ஏன் என் பக்கத்தில் வந்து அமர்கிறான்...?'

    "கொஞ்சம் உடம்பு சரியில்ல சார்..."

    "அது தான் உன்னை பார்த்தாலே தெரியுதே... ஏன் இப்படி பஞ்சத்துல அடிபட்ட மாதிரி வதிருக்க... உடம்புக்கு என்ன...?" அவன் சாவதானமாக கேள்விகளை கேட்டுக் கொண்டே அவனுடைய சாப்பாட்டை சுவைத்துக் கொண்டிருந்தான்.

    "காச்சல் சார்..." என்று சொல்லிவிட்டு பாதி உணவிலேயே எழுந்து சென்றுவிட்டாள் நிரஞ்சனி.

    பொதுவாக அந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்ற அலுவலர்களுடன் சகஜமாக பழக மாட்டார்கள். ஆனால் புகழ் கேண்டீனில் அத்தனை பேர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே சாதரணமாக நிரஞ்சனியோடு அமர்ந்து பேசிக் கொண்டே சாப்பிட்டான்.

    அது நிரஞ்சனிக்கு நடுக்கமாக இருந்தது. 'எதுவுமே செய்யாமலே ஒரு முறை கெட்ட பேர் வாங்கியாகிவிட்டது. இனி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்' என்று நினைத்துக் கொண்டாள்.

    புகழேந்தியின் நடவடிக்கை சாதரணமாக இல்லை என்று நிரஞ்சனிக்கு நன்றாக தெரிந்தது. அவன் நிரஞ்சனியிடம் அதிகம் ஆர்வம் எடுத்துக் கொள்வதை அவள் உணர்ந்தாள். அதனால் அவனிடமிருந்து கொஞ்சம் விலகியே இருந்தாள். மத்திய உணவிற்கு கேண்டீன் போவதை சுத்தமாக தவிர்த்துவிட்டாள். அதாவது மத்திய உணவையே தவிர்த்துவிட்டாள்.

    புகழேந்திக்கு அவளை எந்தவிதத்திலும் நெருங்க முடியவில்லை. அவளுடன் நடப்பாக பழக நினைத்து இவன் ஒரு அடி எடுத்து வைத்தால் அவள் பத்து அடி விலகி ஓடினாள்.

    இந்த நிலையில் மருத்துவமனையில் ஒரு விழா வந்தது.
    ஆண்டுக்கு ஒரு நாள் மருத்துவமனை ஊழியர்களுக்கு நிர்வாகம் விருந்து கொடுக்கும். அந்த விருந்து தஞ்சாவூரில் ஒரு பெரிய ஹோட்டலில் நடந்தது.

    ஊழியர்கள் அனைவரும் மருத்துவமனை வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டார்கள். ஆனால் ஒவ்வொரு பிரிவிலும் ஒருவர் அல்லது இரண்டு பேர் மருத்துவமனையிலேயே இருந்தார்கள். ஹோட்டலுக்கு சென்றவர்களில் கொஞ்சம் பேர் திரும்பி வந்ததும் எஞ்சியிருப்பவர்களை அனுப்பி வைப்பார்கள்.

    அப்படி மருத்துவமனையிலேயே தங்கிவிட்டவர்களில் நிரஞ்சனியும் ஒருத்தி. மருத்துவர்களில் புகழேந்தியும் இன்னும் இரண்டு மருத்துவர்களும் இருந்தார்கள்.

    ஒரு செட் திரும்பி வந்ததும், மருத்துவமனையில் இருந்த அடுத்த செட் ஹோட்டலுக்கு செல்ல தயாராகி மருத்துவமனை வண்டியில் ஏறி அமர்ந்தார்கள். மருத்துவமனை வாசலை தாண்டுவதற்கு முன் மருத்துவமனை வாகனம் ஏதோ பிரச்சனையாகி நின்றுவிட்டது.

    "என்ன சாமி..." டாக்டர் சுரேந்திரன் டிரைவர் சாமியிடம் கேட்டார்.

    "வண்டி நின்னுடுச்சு டாக்டர்..."

    "அடுத்தவண்டி எப்போ வரும்..." அடுத்த செட்ட ஹோட்டல்லிருந்து ஏத்திகிட்டு தான் வரணும்... டாக்டர்..."

    "எத்தனை பேர் இந்த செட்ல இருக்காங்க...?"

    "அஞ்சு பேர் டாக்டர்..."

    "சரி நா என்னோட கார்ல அழைச்சுகிட்டு வர்றேன்... நீ போ... வண்டிக்கு என்னான்னு பார்.."

    "அந்த நேரம் மருத்துவமனை கட்டிடத்திலிருந்து பார்க்கிங் ஏரியாவுக்கு வந்த புகழேந்திக்கு அவர்களின் பேச்சின் சாராம்சம் புரிந்துவிட.. அவன் எப்படியும் நிரஞ்சனியை அவனுடைய காரில் அழைத்து செல்ல வேண்டும் என்று முடிவுசெய்து, அவளிடம் பேச்சுக் கொடுத்தான்.

    "என்ன ஜெனி... நீ இன்னும் ஹோட்டலுக்கு போகலையா...?"

    "இல்ல சார்... இனி தான்..."அவள் பதில் சொன்னாள்.

    அதற்குள் சுரேந்திரனின் காரில் முன்று பேர் ஏரிவிட நான்காவது பெண் ஏற முயற்ச்சித்தாள்.

    "சிஸ்டர்... ஏன் எல்லோரும் அந்த கார்லயே கஷ்ட்டப்பட்டு உக்காரணும்... நானும் ஹோட்டலுக்கு தான் போறேன்... ரெண்டு பேர் என்னோட கார்ல உக்காருங்க..."என்று சொன்னான்.

    அந்த நர்ஸ்..."தேங்க யு சார்..." என்று சொல்லிவிட்டு அவனுடைய காரில் ஏறி அமர்ந்தாள். நிரஞ்சனியும் வேறு வழியின்றி அந்த பெண்ணை தொடர்ந்து அவனுடைய காரில் ஏறினாள்.

    இன்றைய கதை

    மறு நாள் சொன்னது போலவே இராஜசேகர் வந்துவிட்டான்.

    "என்ன மாமா முடிவு பண்ணியிருக்கீங்க...? உங்க இரண்டாவது பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கலாமா...? இல்லை உங்க முதல் பொண்ணு விவாகரத்துக்கு நல்ல வக்கீல் பாக்கலாமா...?" அவன் அரசுவிடம் கேட்டான்.

    அரசு தன் மனைவி தன்னிடம் சொல்லி அவனிடம் சொல்ல சொன்ன பதிலை சரியாக சொன்னார்.

    "அவ கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பாருங்க மாப்ள..."

    "பின்னாடி பேச்சு மாற மாட்டீங்களே...?"

    "அதெல்லாம் இல்ல மாப்ள... நீங்க பாருங்க..." என்று தெளிவாக சொன்னார்.

    அவன் திருப்த்தியடைந்தவனாக மனைவியையும் மகனையும் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்றான். அவன் வெளியே சென்றதும் நிரஞ்சனி பொங்கினாள்.

    "அப்பா... நா எப்ப கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்... எதுக்கு அவர்கிட்ட அப்படி சொன்னீங்க...?"

    "ஏய்... பொட்ட புள்ளையா அடங்கி இருடி..." அப்பா அரசு சீறினார்.

    "நீ என்னடி சொல்றது... நாந்தா அப்புடி சொல்ல சொன்னேன். அதுக்கு என்னா இப்ப...? "

    "நீ யார மாப்ள பார்த்தாலும் நா கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்..." அழுத்தமாக சொன்னாள்.

    "கல்யாணம் பண்ணிக்க மாட்டியா...? நாங்க சொல்றத கேட்டு அடங்கி இருக்காதா இருந்தா இரு... இல்லையா இப்பவே போயி ஒரு பால்டாயல் பாட்டுலு வாங்கிகிட்டு வர சொல்றேன்... குடிச்சுட்டு சாவு... ரெண்டுல ஒண்ணுதான்..." திருத்தமாக தாமரை சொன்னாள்.

    "நா சாகனுமா....? நானா சாகனும்? எதுக்கு... நா என்ன தப்பு செஞ்சேன்...?" நேற்று இரவே இதே மாதிரியான தாமரையின் பேச்சை கேட்டுவிட்டதால் நிரஞ்சனிக்கு அதன் பாதிப்பு கொஞ்சம் கம்மியாக இருந்தது.

    "என்னடி செய்யல... எங்க மானத்த வாங்கிட்டு உக்காதுருக்கியே... அது பத்தாது...? ஜாதிகெட்ட பயல காதலிக்கிறாளாம் காதலு... "

    "சும்மா அதையே சொல்லாத... உம் பொண்ணு பொண்ணுன்னு தலையில தூக்கி வச்சுக்குறியே... அவ லவ் பண்ணலையா...? படிக்காத பட்டிக்காடு உனக்கு உயர்வு... மருத்துவம் படிச்சுட்டு உயிரை காப்பாத்துற டாக்டிர் உனக்கு கேவலமா...? கேட்டா 'ஜாதி'ன்னு சொல்லுவ... என்ன பெரிய ஜாதி... ஜாதி... சொல்லப்போனா உன்னைவிட அவங்க உயர் ஜாதிதான்... தெரிஞ்சுக்கோ..." பொறுத்து பொறுத்து போன நிரஞ்சனி பொங்கி விட்டாள்.

    "ஒசந்த குலமா... எந்த ஒசந்த குலமா இருந்தாலும் இந்த மண்ணுல அதுக்கு மதிப்பு இல்ல... நா பொறந்த '-----' குலந்தான் இங்க ஒசந்த குளம்."

    "இந்த ஊர் காரனுங்க எல்லாம் அவங்க சொந்தக்காரவங்க முன்னால நிக்க முடியுமா...? நீயெல்லாம் அவங்க பக்கத்துல நின்னா பஞ்சத்துல அடிபட்ட மாதிரி தெரியிவ... நீ அடுத்தவங்கள பத்தி பேசாத..." ஆண்கள் வெளியேறிவிட்டதால் நிரஞ்சனி தயக்கமே இல்லாமல் பேசினாள்.

    "ஏய்... என்னடி அம்மாவை மரியாத இல்லாம பேசுற..." அல்லி நிரஞ்சனியை கண்டித்தாள்.

    "எனக்கு அம்மாவெல்லாம் இல்ல சித்தி... நா இப்ப யாருமே இல்லாத அனாதை... அதனால தானே என்ன எல்லாரும் பந்தாட்றாங்க...?"

    "அனாத சிறுக்கி இங்க எதுக்குடி உக்காந்துருக்க... ஒடுடீ எந்திரிச்சு... போடி போ..." என்று தாமரை நிரஞ்சனியை கையில் கிடைத்ததை எடுத்து அடிக்க... சிவரஞ்சனியும் அல்லியும் நிரஞ்சனியை தாமரையிடமிருந்து விடுவிக்க போராடினார்கள்.

    தாமரையின் பிடியிலிருந்து விடுபட்ட நிரஞ்சனி தனிமையை தேடி வீட்டின் கொள்ளை பக்கம் வந்து மரத்தடியில் அமர்ந்தாள். வாழ்க்கையே பயங்கர போர்க்களமாக தோன்றியது. தன்னுடைய சம்மதம் இல்லாமலே மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். இனி எப்படி தன்னை காத்துக் கொள்வது என்று சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

    அந்த நேரம் கொள்ளை பக்கம் வந்த தாமரை மீண்டும் ஆரம்பித்தாள்.

    "என்னடி இங்க உக்காந்து கனவு கானுற... அந்த பயல நெனச்சுகிட்டு இருக்கியா...? வெக்கங் கெட்டவளே... உக்காந்து சாப்புட இது என்ன உங்க அப்பன் வீடுன்னு நெனச்சியா... அங்க என் தங்கச்சி வேல செஞ்சுகிட்டு இருக்காடி... போ... போயி வீட்டு வேலைய பாரு... அப்பயிலேருந்து உன்ன அடுப்பங்கரையிலேயே போட்டுருந்தா இன்னைக்கு எனக்கு இந்த கேவலம் வந்துருக்காது...." என்று ஆரம்பிக்க... நிரஞ்சனி சமயலறைக்கு ஓடினாள்.

    அவளால் ஒரு இடத்தில் நிற்க முடியவில்லை. நின்றால் குற்றம் நடந்தால் குற்றம்... என்று அவள் எது செய்தாலும் அவளுடைய தாய்க்கு குற்றமாகவே பட்டது. பெற்று அருமையாக வளர்த்த தாயே எதிரியை பார்ப்பது போல பார்க்கிறாள். நிரஞ்சனி மெளனமாக உள்ளுக்குள் அழுதாள்.

    - தொடரும்​
    Please post your comments here : http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/154004-comments-7.html
    [/JUSTIFY]
     
    1 person likes this.
  2. nithyakarthigan

    nithyakarthigan Gold IL'ite

    Messages:
    600
    Likes Received:
    509
    Trophy Points:
    188
    Gender:
    Female
    [JUSTIFY]அத்தியாயம் - 10

    பழைய கதை


    புகழேந்தி மிக மிக மெதுவாக காரை ஓட்டிக் கொண்டிருந்தான். நிரஞ்சனியோடு காரில் செல்வது அவனுக்கு அவ்வளவு பிடித்திருந்ததோ என்னவோ...! Dr.சுரேந்திரன் ஹோட்டலை அடைந்து பத்து நிமிடத்திற்கு பிறகு தான் புகழேந்தியின் கார் ஹோட்டலை அடைந்தது.

    இவன் காரை விட்டு இறங்கியதும் அதற்காகவே காத்திருந்தவன் போல்
    பிரசன்னா அவன் முன் வந்து நின்றான். நிரஞ்சனி காரிலிருந்து இறங்கியதும் அவளை நெருகியவன்..

    "ஏய்... உனக்கு எவ்வளவு தைரியமிருந்தால் இவனுடைய கார்ல வருவ...?" என்று அவளிடம் சீறினான்.

    "நீங்க உள்ளே போங்க சிஸ்டர்..." என்று அவன் அழைத்து வந்த மற்றொரு பெண்ணான நர்ஸ்சை பார்த்து புகழேந்தி சொன்னான்.

    அவள் மறுப் பேச்சின்றி உள்ளே சென்றாள். அவளோடு உள்ளே செல்ல எத்தனித்த நிரஞ்சனியை தடுத்து தன்னோடு நிறுத்திக் கொண்டான்.

    "சொல்லு... எதுக்கு எங்கள ஃபாலோ பண்ணி வந்த...?" புகழேந்தி நிதானமாக பிரசன்னாவை பார்த்துக் கேட்டான்.

    "ஏய்... இவள ஏண்டா.. நீ ஒன்னோட கார்ல அழைச்சிகிட்டு வந்த...?"

    "அதை நீ ஏன் கேக்குற...?"

    "ஏன்னா அவ என்னோட பொண்டாட்டி..."

    "ச்சீ... பொய் சொல்லாத..." என்று நிரஞ்சனி சீறினாள்.

    "யார்டி பொய் சொல்றது...? இத்தினி நாளும் என்னோட சுத்திட்டு... எல்லா தப்பையும் செஞ்சுட்டு இப்போ இன்னொருத்தனோட சுத்த ஆரம்பிச்சுட்டியா...?" அவன் அசிங்கமாக பேசினான்.

    நிரஞ்சனிக்கு அவமானமாக இருந்தது.

    "ஏய்... வாய மூடு... எப்படா உங்களுக்கு கல்யயணம் ஆச்சு...? எங்க கல்யாணம் பண்ணிகிட்டீங்க...?" என்று பற்களை கடித்துக்கொண்டு அடி குரலால் உறுமினான் புகழேந்தி.

    "கல்யாணம் பண்ணினாதானா..." என்று நிரஞ்சனியை ஒரு மாதிரியாக பார்த்தான்.

    அவளுக்கு கூசியது. தலை குனிந்து கண்ணீரை அடக்கிக் கொண்டாள்.

    "ஏய்.. மரியாதையா பேசு... "

    "ஏய்... என்னடா மரியாதை.... நீ என்னடி இவன பேசவிட்டுட்டு பார்த்துகிட்டு இருக்க... நீ யாரையும் கல்யாணம் செய்ய முடியாது. உனக்கு நான் எப்பவும் கொடச்சல் குடுத்துகிட்டே தான் இருப்பேன்... மரியாதையா நான் சொல்ற படி கேட்டு நடந்துக்கோ..." என்று நிரஞ்சனியை எச்சரித்தான்.

    "நல்ல ஆண்பிள்ளையா இருந்தா என்கிட்ட பேசுடா.. நீ சொல்றபடி அவ கேட்க மாட்டா... அவ கல்யாணம் செஞ்சா... என்னத்தடா கிழிப்ப நீ...?"

    "நீ எதுக்குடா எங்க விஷயத்துல தலையிடுற... இது எங்க வாழ்க்கை பிரச்சனை..."

    "இது என்னோட வாழ்க்கை பிரச்சனைடா... நா தான் இவள கல்யாணம் செஞ்சுக்க போறேன்... நீ எதையோ கிழிப்பென்னு சொன்னியே... அதை என்கிட்ட கிழி..." என்றான் புகழேந்தி.

    "ஏய்... நீ அவளுக்கு ரூட் போடுறது எனக்கு தெரியும்டா... ஏன்டா அடுத்தவன் சாப்பிட்ட எச்சி இலைக்கு ஆசை பட்ர...? இவ என்னோட பொண்டாட்டியா வாழ்ந்துட்டாடா.." என்று கூச்சளிட்டான்.

    நிரஞ்சனி காதை மூடிக்கொள்ள, புகழேந்தி அவன் சட்டையை கொத்தாக பிடித்துவிட்டான்.

    "போலீஸ்காரன் மேலையே கை வைக்கிறியா... உன்ன என்ன செய்றேன் பார்... டீசன்ட்டான டாக்டரா இருக்கியே... சொன்னா புருஞ்சுக்குவன்னு நினைத்தேன். உனக்கு சொல்ற படி சொன்னாதான் புரியும் போல..." அவன் புகழேந்தியின் கையை அவன் சட்டையிலிருந்து விடுவிக்க முயன்றுகொண்டே சொன்னான்.

    "ஏய்... நான் முதல்ல ஒரு கிராமத்தான்டா... அப்புறம் தான் டாக்டர்... இனிமே என்னோட விஷயத்துல தலையிட்ட அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்..." என்று அவனை பின்னுக்கு தள்ளிவிட்டுவிட்டு நிரஞ்சனியின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு உள்ளே சென்றான்.

    நிரஞ்சனிக்கு அவனுடைய செய்கை ஆறுதலாக இருந்தது. பெற்றவர்களும் வளர்த்தவர்களும், மற்ற உறவினர்களும் அவளை நம்பவில்லை. மூன்றே மாதங்களுக்கு முன்பு அறிமுகமானவன் நம்புகிறான். அவனுடைய துடிப்பும் பேச்சும் நிச்சயமாக நடிப்பில்லை. பிரசன்னாவிற்கும் இவனுக்கும் உள்ள வேறுபாடுகளை அவளால் நன்றாகவே அறிய முடிகிறது. அவனுடைய தோழமையையும் அருகாமையையும் அவளுடைய மனம் விரும்புகிறது. ஆனால் அவனுடன் சகஜமாக பழக்க அவளால் எப்படி முடியும்...?

    இன்றைய கதை

    காலை ஆறு மணி... பாக்கியத்தம்மாள் கையில் தடியை ஊன்றிக் கொண்டு ஆற்றங்கரை ஓரமாக மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தார். ஆற்றங்கரையோர சிலு சிலு தென்றல் காற்று அவருக்கு அந்த வயதிலும் உற்ச்சாகமாக நடக்கும் சக்த்தியை கொடுத்தது.

    ஆற்றங்கரையோரம் அரசு இடத்தில் ஏழை மக்கள் வரிசையாக வீடுகட்டிக்கொண்டு வாழ்ந்தார்கள். அவர்களிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே வந்தாள் அந்த மூதாட்டி...

    "எலேய் வீரா.... அந்த மரத்துலேருந்து ரெண்டு முருங்கக்கா பரி..." வீரன் வீட்டு மரத்தில் கொத்து கொத்தாக காய்த்திருக்கும் முருங்கைக்காயை பார்த்துவிட்டு ஆசைப்பட்டு கேட்டார்.

    "எத்தா... அதி இப்பதாந்த்தா பிஞ்சுவுட்ருக்கு... அத என்னத்தத்தா பறிக்கிறது...?" அவன் தன் மரத்து முருங்கைக்காயை காப்பாற்றிவிட எண்ணி எதையோ சொன்னான்.

    "சரி போவுது போ... அடுத்த மாச(ம்) சீட்டெடுத்து உனக்கு தான் குடுக்கலாமுன்னு நெனச்சே... அந்த சீட்டுகாரி அலயவுடுரா..." என்று சொல்லிக் கொண்டே பாட்டி நகர எத்தனிக்க, வீரன் "யாத்தா.. யாத்தா... நின்னுத்தா.. மேல ரெண்டு கா நல்ல காயா இருக்கு... இரு பறிச்சு தாரே..." என்று சொல்லிக் கொண்டே இரண்டு காயை பறித்து பாட்டியிடம் கொடுத்தான்.

    "அடுத்த மாசம் சீட்டு பணம் எனக்குதான்... மறந்துறாத..."

    'அப்படி வா வழிக்கு....' என்று நினைத்துக் கொண்டே "வட்டியெல்லா(ம்) கரகெட்டா வந்துரனு(ம்) சொல்லிபுட்டே(ன்)..." என்று அவனை ஒரு மிரட்டு மிரட்டிவிட்டு இரண்டு முருங்கைக்காயையும் வாங்கிக் கொண்டு நடையை தொடர்ந்தார்.

    "வவ்.... வ்...வவ்... வவ்வவ்..."

    "ச்சீ... எடிச்சீ..." என்று தன்னை பார்த்து குரைத்த நாயை தன்னிடம் இருந்த தடியை கொண்டு விரட்ட முயன்றார்.

    "எத்தோவ்... என்னத்தா... எதுக்கு இந்த வாயில்லா சீவன அடிக்க வர்ற...?" என்று நாயின் உரிமையாளன் ஓடிவர...

    "வாடா.... இது வாயில்லா சீவனாடா... இன்னமுட்டு(ம்) என்னா கொல கொலச்சுது... இதுக்கா வாயில்ல.... சரி அதவிடு.... அந்த சங்கெலயில நாளுது பறிச்சு இந்த ஜவ்வு பையில போட்டு குடு..."

    "எத்தா.... இப்ப முடியாதுத்தா... வேலைக்கு நேரமாயிட்டு... சாயங்காலமா பறிச்சு வக்கிறே(ன்) வா..."

    "எனக்கு நெனச்ச நேரத்துக்கு நடக்குற வயசாடா... இப்பவே மூச்சு வாங்குது..." என்று இல்லாத களைப்பை முகத்தில் காட்டி மூச்சு வாங்கினார்.

    'கெழவி என்னா நடிப்பு நடிக்குது...' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு "ஒடம்ப பாத்துக்கத்தா..." என்றான் முருகன் என்ற அந்த ஆள்.

    "அதுக்குதாண்டா... இந்த சங்கெல... ஒடம்புக்கு நல்லது... பரி..." என்றார்.

    'கெழவி கிட்ட வாய குடுத்து மீளமுடியாதே...' "எத்தா அதுல முள்ளு இருக்குத்தா... பொறுமையா பரிக்கனம்..." என்று அழுதுவிடுபவன் போல் இழுத்தான்.

    "சரி விடு... இந்த சங்கத்துல பணங் கேட்டியேடா.... " என்று பாட்டி ஆரம்பிக்கவும் முருகன் பாட்டியின் கையில் இருந்த பையை வாங்கிக் கொண்டு இல்லை பறிக்க முனைந்துவிட்டான்.

    'அது...' என்று நினைத்துக் கொண்டார் பாட்டி.

    "இந்தாத்தா..." அவன் சங்கெலையை கொண்டு வந்து பாட்டியிடம் கொடுத்தான்.

    அதை வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டு "இந்த நாய இனி கட்டி போட்டு வையிடா... யாரு என்னான்னு தெரியாம கொலக்கிது..."

    "எத்தா... எத்தா... ராசான்னு சொல்லுத்தா... என்னா நாயிங்குற...? "

    "இது ராசான்னா அப்பரம்... அந்த வீரம்மொவன் பேரு என்ன நாயாடா...? அவன நாயின்னு அழைக்கவா..." பாட்டி நக்கலாக கேட்க

    "அது எனக்கு தெரியாது... என்னோட ராசாவ ராசான்னு கூப்பிடு... "

    "எலேய் வீரா... ஒம்மோவ(ன்) நாயி இருக்கானாடா... " என்று குரலை உயர்த்தி அடுத்த வீட்டு வீரனிடம் கேட்க

    "என்னது நாயா...?"

    "ஆமா... அவம்பேரு நாயி தானே... என்ன முருகா... நாயின்னு தானே சொன்ன...?" என்று வீரனிடம் ஆரம்பித்து முருகனிடம் சந்தேகம் கேட்டு முடிக்க...

    "எத்தா... இங்க ஏதும் வெட்டுகுத்து ஆரம்பிச்சு வைக்காம கெளம்புத்தா... எனக்கு வேலைக்கு நேரமாச்சு..." என்று பாக்கியத்தம்மாளை கையெடுத்து கும்பிட்டு அனுப்பி வைத்தான்.

    அவரும் தொடர்ந்து ஒவ்வொருவராக பேசி வம்பிழுத்து இலை தழைகளை பறித்துக் கொண்டு தன் மகள் அல்லியின் வீட்டை எட்டு மணிக்கு அடைந்தார்.

    "ஆயி... என்னா சேதி...?" என்று கேட்டுக் கொண்டே மகள் வீட்டு திண்ணையில் அமர்ந்தார்.

    "என்னம்மா... பத்து நாளா உன்ன ஆளையே காணும்... "

    "ஆமா... வாக்கிங்க வயக்காட்டு பக்கம் கொஞ்ச நாளைக்கு வச்சுகிட்டேன். அது சேரி... என்னடி நீங்க செஞ்சுகிட்டு இருக்கீங்க... உங்க அண்ணே அங்க ஒரே டெஞ்சனா இருக்கானே..."

    "ஆத்தா அது 'டெஞ்சன்' இல்ல டென்ஷன்..." சிவரஞ்சனி இடையில் புகுந்து சொல்ல..

    "தெரியுந் தெரியு(ம்)... 'டெஞ்சன்' தானே... போயி அந்த ஜேர... கொண்டுவா... திண்ணையில உக்காந்து இடுப்ப புடிக்கிது..." என்றார் பாட்டி.

    "அது சேரி... என்ன ஆயி இது... நம்ப குடும்பத்துல இதெல்லாமா நடக்கணு... யாரு அந்த பய... அண்ணன வேற... அந்த பயல போயி பாக்க சொல்லியிருந்தா அக்கா. இப்ப அவனுகிட்ட ஒண்ணுமே சொல்லைன்னு கோவமா இருக்கானே... இப்ப தாமர எங்க...?"

    "அக்கா இப்பதான் வயலுக்கு போயிட்டு வர்றேனுட்டு போனா.... ரஞ்சி கல்யாணத்த பேசி முடிக்க மாப்ள பறக்குறாரு... இவ ஒத்துக்க மாட்டேன்னு ஒத்த கால நிக்கிறா... தெனமும் கொலபாதமா இருக்கு வீடு..."

    "அய்யோ கடவளே... எம்பேத்திக்கு எப்புடி ஆயி இப்புடி புத்தி போனுச்சு...?"

    "அவள பாத்தா பாவமாதா(ன்) இருக்கு... ஒடம்புல ஒன்னு இல்ல அவளுக்கு... எளச்சு ஓடா போயிட்டா... என்ன ஆவப்போவுதோ... நீ இங்கயே இரும்மா... ரஞ்சிய அக்கா பேசுற பேச்சு தாங்க முடியல... பேசிபுட்டு கொள்ள பக்கம் போயி ஒப்பாரி வக்கிரா..."

    என்று தனக்கு துணையாக தாமரையை சமாதானம் செய்ய தன் தாயையும் இருக்க சொன்னாள் அல்லி...


    - தொடரும்​
    Please post your comments here : http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/154004-comments-7.html
    [/JUSTIFY]
     
  3. nithyakarthigan

    nithyakarthigan Gold IL'ite

    Messages:
    600
    Likes Received:
    509
    Trophy Points:
    188
    Gender:
    Female
    அத்தியாயம் - 11

    பழைய கதை

    அன்றைய விருந்து முடிந்து வீட்டிற்கு திரும்பும் போதும் புகழேந்தி நிரஞ்சனியை கட்டாயப்படுத்தி தன்னுடைய காரில் புதிய பேருந்துநிலையம் வரை அழைத்துக்கொண்டு வந்து பஸ் ஏற்றிவிட்டான்.

    அந்த பயணத்தின் போது நிரஞ்சனியிடம் பேச்சுக்கொடுத்து பிரசன்னா பற்றிய எல்லா விபரங்களையும் தெரிந்து கொண்டான். நிரஞ்சனிக்கு 'அவளுடைய சொந்த விஷயங்களை அவனிடம் சொல்ல வேண்டாம்' என்று தோன்றினாலும் அவளுடைய வாய் அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொல்லி முடித்துவிட்டது.

    ஒரு விஷயம் புகழேந்திக்கு நன்றாக புரிந்தது. நிரஞ்சனியை பிரசன்னா தொல்லை செய்து கொண்டே தான் இருக்கப் போகிறான். இதற்க்கு முடிவுகட்ட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

    ஒரு வாரம் பிரச்சனை இன்றி கழிந்தது. அந்த ஒரு வாரமும் புகழேந்தி நிரஞ்சனியை அவளுக்கு தெரியாமலே தொடர்ந்து கொண்டிருந்தான். அவள் வேலை முடிந்து வெளியே கிளம்பியவுடனே இவனும் எத்தனை பேஷன்ட் காத்திருந்தாலும் கிளம்பிவிடுவான். அவனுக்கு அது கொஞ்சம் சங்கடமாக இருந்தாலும் வேறு வழி இல்லை.

    அப்படி அவன் நிரஞ்சனியை தூரத்திலிருந்து கவனித்துக் கொண்டிருக்கும் போதுதான் அது நடந்தது.

    பிரசன்னா நிரஞ்சனியை நெருங்கி, "என்னடி பாக்குற... இன்னிக்கு அந்த டாக்டர் பய வரலையா...? நீ இன்னிக்கு ஒழுங்கா எப்படி வீட்டுக்கு போறன்னு பாக்குறேண்டி..." என்று சொல்லிக் கொண்டே அவளுடைய கையைப் பிடித்தான்.

    பஸ் ஸ்டாண்டில் அவ்வளவு பேர் முன்னிலையிலும் அவளை இழுத்து அருகில் இருந்த காருக்குள் தள்ள முயன்றான். ஆனால் நிரஞ்சனி கூச்சளிட்டாள்.

    "ஏய்... விடுடா... பொருக்கி ராஸ்கல்... விடு..."

    அருகில் இருந்த பெரியவர் "ஹலோ சார்... யார் நீங்க...? எதுக்கு இந்த பொண்ண இழுக்குறீங்க...?" என்று கேட்கவும்

    "இது எங்க சொந்த விஷயம்... இவ என்னோட பொண்டாட்டி..." என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வேகமாக அங்கே வந்த புகழ் பிரசன்னாவின் முகத்தில் ஒரு குத்து விட்டான்.

    அவன் ஆரம்பித்து வைத்ததை பொதுமக்கள் சிறப்பாக முடித்து வைத்தார்கள். பொதுமக்களின் பிடியிலிருந்து தப்பித்து அங்கு நிறுத்திவைக்கப் பட்டிருந்த காரில் ஏறி ஒரே ஓட்டமாக ஓடிவிட்டான் பிரசன்னா.

    அதிர்ச்சியில் நடுங்கிக் கொடிருந்த நிரஞ்சனியை புகழ் அவனுடைய தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டான். தன்னிலையில் இல்லாத நிரஞ்சனியும் கோழிக்குஞ்சை போல் அவனுடன் ஒட்டிக் கொண்டாள். கைத்தாங்கலாக அழைத்துக் சென்று காரில் அமரவைத்து அவனுடைய வீட்டிற்கு அழைத்துக் சென்றான்.

    எங்கு செல்கிறோம் என்ற தெளிவே இல்லாமல் நிரஞ்சனி புழேந்தியின் வீட்டிற்கு சென்றாள்.

    "என்ன ஆச்சு புகழ்... ஏன் இந்த பொண்ணு இப்படி நடுங்கிக்கிட்டு இருக்கு...?" என்று சோபாவில் ஒரு மூலையில் அமர்ந்து, தன்னுடைய கைபையை இறுக்கமாக கட்டிக்கொண்டு நடுங்கி கொண்டிருந்த நிரஞ்சனியை பார்த்து புகழேந்தியின் அண்ணி நயந்தி கேட்டாள்.

    அவன் நடந்ததை சொன்னான். அவன் அவனுடைய அண்ணியிடம் நல்ல நட்புடன் பழகுவான். அதனால் புகழ் நிரஞ்சனியை நேசிக்கும் விஷயம் நயந்திக்கு தெரியும். அவள் நிரஞ்சனிக்கு அருகில் போய் அமர்ந்து அவளை அணைத்துக் கொண்டு அவளுடைய நடுக்கத்தை குறைக்க முயற்ச்சித்தாள்.

    "என்ன ஜெனி... இனி ஒன்னும் இல்ல.. அவன் இனி இங்க வரமாட்டான்" என்று ஆறுதல் சொல்ல முயன்றாள்.

    "நம்ப தஞ்சாவூர்ல கூட இந்த மாதிரியெல்லாம் நடக்குதா...? நாடு ரொம்ப மோசமாயிடுச்சுடா..." என்று அவனுடைய அண்ணன் அங்காளாய்த்தான்.

    "ஜெனி உன்னோட பைய குடு..." என்று வாங்கி அவளுடைய கைபேசியை எடுத்து அவளுடைய வீட்டிற்கு விபரம் சொன்னான் புகழ்.

    அடுத்த அரை மணி நேரத்தில் மூன்று புல்லெட் புகழேந்தியின் அண்ணன் வீட்டிற்கு முன் நின்றது.

    சுந்தர், இராஜசேகர், கோபாலன், அரசு மற்றும் இரண்டு வேம்பங்குடி ஆட்கள் வந்து 'திமு திமு' வென இறங்கிவிட்டார்கள். விபரம் அறிந்து கொண்டவர்களுக்கு இரத்தம் கொதித்தது.

    "நம்ப பொண்ணு மேல ஒருத்தன் கைய வச்சிருக்கான்... அவன சும்மா விடுறதா... அவங்கைய எடுக்கனு மாப்ள..." என்று சுந்தர் இராஜசேகரிடம் சொல்ல

    "அவ(ன்) உசுரையே எடுக்கனு மச்சா(ன்)... நீ என்ன கையின்னு சொல்லிக்கிட்டு இருக்க..." என்று இராஜசேகர் கொதித்தான்.

    "ரொம்ப நன்றிங்க டாக்டர் சார்... நீங்க மட்டும் உதவி பண்ணலன்னா எங்க பொண்ணு மானத்துக்கு பங்கம் வந்திருக்கும்... " என்று அரசு புகழேந்தியிடம் நன்றி தெரிவித்தார்.

    "பரவாள்ளிங்க... இந்த பொண்ணு கொஞ்சம் பயந்துடுச்சு... கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறமா வேலைக்கு வந்தால் போதும்... நான் Hospital-ல சொல்லிக்கிறேன்..." என்றான் புகழ்.

    "அட என்ன டாக்டர் சார் நீங்க.... யாருக்கு யாரு பயப்படறது... அதெல்லாம் முடியாது... ரஞ்சி... நாளையிலேருந்து நீ எப்பவும் வந்த நேரத்துக்கே வேலைக்கு வா... உன்னை யாரு என்ன பண்றான்னு நா பார்க்குறேன்' என்று இராஜசேகர் சொல்ல வேம்பங்குடி ஆட்கள் அனைவரும் அதை வழிமொழிந்தார்கள்.

    அன்றிலிருந்து பத்தாவது நாள் நிரஞ்சனியின் மீது ஆசைப்பட்ட இருவரும் மருத்துவமனையில் கட்டோடு படுத்துகிடந்தார்கள்.

    இன்றைய கதை

    நிரஞ்சனிக்கு ஒரு டாக்டர் மாப்பிள்ளையை பார்த்துவிட்டார்கள். ஜாதகம் பார்த்து மாப்பிள்ளை வீட்டோடு பேசிவிட்டார்கள். மாப்பிள்ளைக்கும் பெண்ணின் புகைப்படம் பார்த்து பிடித்துவிட்டது.

    "மாமா... நாளைக்கு பொண்ணு பாக்க வர சொல்லியிருக்கேன்... அவள ரெடியா இருக்க சொல்லுங்க..." அல்லியின் கணவர் வேணுவிடம் இராஜசேகர் சொன்னான்.

    "சரி மாப்ள நா சொல்லிடறேன்... அல்லி... மாப்ளைக்கு காப்பி கொண்டா..." சமயலறையில் இருந்த மனைவியிடம் சத்தமாக சொன்னார்.

    அல்லி காபியை கொண்டு வந்து இராஜசேகரிடம் கொடுத்துவிட்டு ஓரமாக நின்றாள்.

    "மாப்ள வீட்டுக்கு நம்ப ரஞ்சி விஷயமெல்லாம் தெரியுமா?" பாட்டி பாக்கியத்தம்மாள் விபரமாக கேட்டார்.

    "எந்த மூஞ்சிய வச்சுகிட்டு நா அதெல்லாம் சொல்றது... அந்த தரகர்கிட்ட சொல்ல சொன்னேன்... அவன் சொல்லியிருப்பான்..." ராஜசேகர் அலுத்துக் கொண்டு பதில் சொன்னான்.

    "அத்த.... அவளுக்கு நல்ல துணியெல்லாம் இங்க இருக்கா... இல்ல வேம்பங்குடியில வச்சிருக்காளா.... வேணுன்னா... நா போயி எடுத்துகிட்டு வந்து குடுத்துட்டு போறேன்..."

    "அதெல்லாம் அக்கா நேத்தே கொண்டு வந்துட்டு மாப்ள..."

    "சரி நாளைக்கு வரும்போது நீருவோட நகைய கொண்டு வர்றேன்... கல்யாணம் கூடிட்டுன்னா அந்த நகை எல்லாமே ரஞ்சிக்கே குடுத்துடுறேன்... மேல தேவைன்னா புதுசு வாங்கி குடுக்குறேன்..." என்றான்.

    "சரி மாப்ள..."

    "அப்போ நா கெளம்புறேன் மாமா... வர்றேன் பாட்டி.. வரேன் அத்த..." என்று சொல்லிவிட்டு அவன் கிளம்பிவிட்டான்.

    அவன் சென்றதும் "சித்தி... எனக்கு கல்யாணம் வேண்டாம் சித்தி.... நீங்களாவது சொல்லுகளேன்..." என்று நிரஞ்சனி கெஞ்சினாள்.

    "என்ன ரஞ்சி இப்படி சொல்ற... நாளைக்கு நீ பிரச்சன பண்ணினா சித்தப்பா மானம் போயிடும்... அந்த மாப்பிள்ளைக்கு என்ன குறைச்சல்... உனக்கு நல்லதுதான் நாங்க செய்வோம்... எங்கள நம்பி இந்த கல்யாணத்துக்கு சம்மதிடி..."

    "சித்தி... என்னால முடியல சித்தி... எப்படியாவது இந்த கல்யாணத்த நிறுத்திடுங்க..." அவள் கையெடுத்து கும்பிட்டாள்.

    "சரி... நா நிறுத்த முயற்சி செய்றேன்... நீ நாளைக்கு பிரச்சன செய்யாம சபைல வந்து நில்லு..."

    நிரஞ்சனிக்கு வேறு வழி இல்லை. அவள் கலங்கிய கண்களுடன் மொட்டை மாடியை தஞ்சம் அடைந்தாள்.

    'கடவுளே... என்ன காப்பாத்த நீ வர மாட்டியா...? என்னால இந்த நரங்கத்துல இருக்க முடியலையே... எனக்கு ஏதாவது தீராத நோயை குடுத்து சாகடிச்சுடேன்...." என்று இருளை கடவுளாக நினைத்து மனதிற்குள் கதறினாள்.

    "ரஞ்சி... ஏண்டி இருட்ல நிக்கிற...?"

    "என்ன ரஞ்சி... நீ எதுக்கு இப்போ இங்க வந்த... பனியா இருக்கு நீ போ..."

    "நீயும் வாடி... "

    "ப்ச்... "

    "ரஞ்சி... ஏண்டி இப்படி விரக்த்தியா இருக்க.... உனக்கு நிச்சயமா நல்லது நடக்கும் டி...."

    "நல்லதா... இப்போதைக்கு சாவு ஒன்னு தான் எனக்கு நல்லது..."

    "சீ... சீ...என்னடி பேச்சு இது... சாவுதான் பிரச்னைக்கு தீர்வுன்னா, இன்னைக்கு யாருமே உயிரோட இருக்க முடியாது. பைத்தியம் மாதிரி பேசாத..."

    "அடி போடி... அனுவனுவா சாகுறதுக்கு ஒரேடியா சாகுறது மேல். உங்க பெரியம்மாவும் பெரியப்பாவும் பண்ணுறது சரின்னு உனக்கு தோணுதா...? பெத்த பொண்ணுக்கு அடுத்தவன கல்யாணம் பண்ணி வைக்க சொல்லிட்டு வேடிக்கை பார்த்துகிட்டு இருக்காங்க... எனக்குன்னு ஒரு மனசு இருக்குன்னு யாருக்குமே தோன மாட்டேங்குதே... இது ஞாயமா...? "

    "என்ன செய்றது ரஞ்சி... நம்ப குடும்ப சூழ்நிலை அப்படி..."

    "சரி நான் இவங்களுக்கு பொண்ணா பிறந்துவிட்ட பாவத்துக்கு இந்த வேதனையை அனுபவிக்கலாம். ஆனால் எந்த பாவமும் பண்ணாத என் புகழ் எதுக்கு கஷ்ட்டப்படனும்....? உனக்கு தெரியுமா ரஞ்சி... அந்த பிரசன்னா பிரச்சனை பண்ணினப்ப யாருமே என்னை நம்பள... ஒர்த்தர் கூட நம்பள... என்னோட புகழ் மட்டும் தான்... " அவளுக்கு மேல பேச முடியாமல் தொண்டை அடைத்தது.

    "ரஞ்சி... எனக்காக இல்லைன்னாலும் புகழ்க்காக நானும் அவரும் சேரனும்டி... நான் இல்லைன்னா அவர் இல்லைடி... எனக்கு தெரியும்.... நல்லா தெரியும்..."

    அவள் முகத்தை மூடிக்கொண்டு இருளில் கைப்பிடி சுவர் ஓரம் சரிந்து அமர்ந்து அழுதாள். தேம்பி தேம்பி அழுதாள். அவள் இவ்வளவு நாள் முயன்று தனக்குள் வைத்திருந்த தைரியம் அந்த கண்ணீரோடு கரைந்தது.


    - தொடரும்​
    Please post your comments here : http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/154004-comments-7.html
     
    1 person likes this.
  4. nithyakarthigan

    nithyakarthigan Gold IL'ite

    Messages:
    600
    Likes Received:
    509
    Trophy Points:
    188
    Gender:
    Female
    [JUSTIFY]அத்தியாயம் - 12

    பழைய கதை


    நிரஞ்சனியின் வீட்டில் சபை கூடியிருந்தது. அனைவரும் அன்று நடக்கவிருந்த அசம்பாவிதத்தை பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அதில் எந்த அளவு பிரசன்னாவை சிறுமைப்படுத்தி பேசினார்களோ அதை விட பத்து மடங்கு அதிகமாக புகழேந்தியை உயர்த்தி பேசினார்கள்.

    அன்றிலிருந்து நிரஞ்சனியின் உறவினர்களின் மத்தியில் புகழேந்தி ஒரு நல்ல மதிப்பில் இருந்தான். நிரஞ்சனியின் மனதில் இன்னும் ஆழமாக பதிந்தான். குடும்பத்தினர் அனைவருமே அவனிடம் நல்ல முறையில் பழகுவதால் நிரஞ்சனியும் தன்னுடைய தயக்கத்தை கொஞ்சம் விட்டுவிட்டு அவனுடன் கொஞ்சம் சகஜமாக இருந்தாள். கொஞ்சம் தான்...

    அன்று புகழேந்தி வேலை முடிந்து வீட்டிற்கு கிளம்ப இரவு ஒன்பது மணியாகிவிட்டது. வீட்டிற்கு செல்லும் வழியில் அவனுடைய காரை நான்கு தடிமாடுகள் வழிமறித்து அவனை அடித்து போட்டுவிட்டு ஓடிவிட்டார்கள். அந்த நான்கு தடிமாடுகளில் ஒன்று பிரசன்னா...

    ஆனால் பிரசன்னா எதிர்பாராதது அடுத்த ஒரு மணிநேரத்தில் நடந்தது. மற்ற மூன்று தடிமாடுகளுக்கும் பணத்தை செட்டில் பண்ணிவிட்டு அவன் அவனுடைய வீட்டிற்கு செல்ல நினைத்த போது ஒரு கும்பல் அவனை சூழ்ந்துக் கொண்டது. அது வேறு யாரும் அல்ல...

    இராஜசேகர், சுந்தர், மற்றும் இரண்டு வேம்பங்குடி ஆட்கள்.

    "ஏய்... யாருடா நீங்க...?" பிரசன்னா தன்னை திடீரென்று சூழ்ந்து கொண்ட கும்பலை பார்த்து கேட்டான்.

    அப்போது நேரம் நடு இரவாகிவிட்டது. அந்த சாலையும் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத சாலை. பிரசன்னாவுக்குள் பயம் துளிர்த்தது.

    "என்ன மாப்ள... மாமனார் வீட்டு ஆளுங்கள அடையாளம் தெரியலையா...? " என்று கையில் ஒரு உருட்டுக் கட்டையை வைத்துக் கொண்டு இராஜசேகர் கேட்டான்.

    "என்ன மாப்ள இப்படி கேக்குறீங்க... அவருக்கு பொண்ண மட்டும் தான் அடையாளம் தெரியும். மச்சான் சகலையெல்லாம் எப்படி தெரியும்?" என்று சுந்தர் இராஜசேகருக்கு எடுத்துக் கொடுத்தான்.

    அவர்களுடைய பேச்சிலிருந்து பிரசன்னாவுக்கு அவர்கள் யார் என்பது புரிந்துவிட்டது.

    "அதும் சரிதான்... மாமனார் உனக்கு சீர் கொடுத்துட்டு வர சொன்னார்... இந்தா வாங்கிக்க..." என்று இராஜசேகர் ஆரம்பிக்க மற்றவர்களும் பிரசன்னாவுக்கு கொடுக்க வேண்டியதை முறையாக கொடுத்தார்கள்.

    அவனை சக்கையாக பிழிந்துவிட்டார்கள். அவன் தேறி எழுந்து நடமாட குறைந்தது ஆறு மாதம் ஆகும். அதோடு நிற்காமல் அவனுடைய வேலைக்கும் உளை வைத்துவிட்டுதான் அமர்ந்தார்கள்.

    அவர்கள் பிரசன்னாவை அடிக்கும் போது அவர்களுக்கு தெரியாது. 'அவன் அப்போதுதான் புகழேந்தியை தாக்கிவிட்டு வந்திருக்கிறான்' என்று. தெரிந்திருந்தால் அவன் உயிர் அவனுடையதாக இருந்திருக்காது. ஏதோ அந்தமட்டில் தப்பித்தான்.

    இன்றைய கதை

    மறுநான் காலை பத்து மணிக்கு மாப்பிள்ளை வீட்டிலிருந்து வருவதாக சொல்லியிருந்தார்கள். எப்படியாவது இந்த மாப்பிள்ளையை பிடித்து விடவேண்டும் என்று நினைத்த இராஜசேகர் அவர்களுக்கு பலமான வரவேற்ப்புக்கு ஏற்ப்பாடு செய்திருந்தான்.

    நிரஞ்சனியின் மாமா வீட்டிலிருந்து அனைவரும் வந்திருந்தார்கள். அவளுடைய பெரியப்பா மகன் சுந்தர் தன் மனைவியை அழைத்துக் கொண்டு வந்திருந்தான். சித்தி அல்லி வீட்டில் பெண் பார்க்கும் படலம் ஏற்ப்பாடு செய்திருந்ததால் அனைவரும் அங்கு கூடியிருந்தார்கள்.

    பெண்ணுக்கு அலங்காரம் பலமாக நடந்தது. ஏற்கனவே அழயான நிரஞ்சனி தேவதையாக ஜொலித்தாள். மணி பத்து ஆனது... பதினொன்று ஆனது... பன்னிரண்டு ஆனது...

    மாப்பிள்ளை வீட்டிலிருந்து யாரும் வரவில்லை. காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. நிரஞ்சனிக்கு நிமதியாக இருந்தது. 'கடவுளே... உனக்கு கோடான கோடி நன்றிகள்பா... யாரும் இன்னைக்கு இந்த பக்கம் வரவே கூடாது....' என்று வேண்டிக் கொண்டாள்.

    அவளை தவிர அனைவருக்குமே அது பெருத்த அவமானமாக இருந்தது. 'எல்லா ஏற்ப்படும் செய்துவிட்டு... மாப்பிள்ளை வீட்டிலிருந்து வரவில்லை என்றால் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்...? ' அனைவரும் கையை பிசைந்து கொண்டு வாசல் பக்கம் கண்களை பதித்து காத்திருந்த போது இராஜசேகர் தரகருக்கு கைபேசியில் அழைத்தான்.

    அந்த தரகர் கைபேசியை எடுக்கவே இல்லை. மாப்பிள்ளை வீடு வெளியூர். அதனால் அவனால் நேரடியாக மாப்பிள்ளை வீட்டிற்கு தொடர்பு கொள்ள முடியவில்லை. நேராக தரகர் வீட்டிற்கு வண்டியை விட்டான்.

    அவர் கையும் காலுமாக இராஜசேகரிடம் மாட்டிக் கொண்டார். ஆனால் அந்த நேரம் மாப்பிளையின் அப்பா தரகரை ஏதோ திட்டிக் கொண்டிருந்தார்.

    "வணக்கம் சார்... என்ன இங்க நின்னுகிட்டு இருக்கீங்க... உங்களுக்காக அங்க எல்லாரும் காத்துகிட்டு இருக்காங்க..." என்று தன்மையாக பேசினான்.

    "யோவ்... நீயெல்லாம் எதுக்குய்யா வெல்ல வேட்டி கட்ற...? நீயெல்லாம் ஒரு ஆம்பளையா...? எவனோடவோ reigister கல்யாணம் பண்ணிகிட்ட பொண்ண எம்பையன் தலையில கட்ட பத்துரிக்கியே... நீயெல்லாம் மனுஷனாயா...?" மாப்பிள்ளையின் அப்பா சரமாரியாக வார்த்தையை விட்டார்.

    "யோவ்... என்னையா இது... எல்லாத்தையும் சொல்ல சொன்னேனே... நீ சொல்லலையா...?" என்று தரகரை பார்த்து கேட்டான் இராஜசேகர்.

    "இல்ல... சொல்லலாமுன்னு நெனச்சுகிட்டு இருந்தேன்..." என்று அந்த தரகர் விழித்துக் கொண்டு சொன்னார். தவறு தன் பக்கம் இருப்பதால் இராஜசேகர் அந்த புதிய மனிதர் பேசுவதை அமைதியாக கேட்டுக் கொண்டு வீடு திரும்பினான்.

    வீடு திரும்பியவனின் கண்கள் சிவந்திருந்தன. முகம் நெருப்பை போல் உஷ்ணமாக இருந்தது. யாருக்கும் அவனிடம் நெருங்கி விபரம் கேட்க முடியவில்லை.


    - தொடரும்​
    Please post your comments here : http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/154004-comments-7.html
    [/JUSTIFY]
     
    2 people like this.
  5. nithyakarthigan

    nithyakarthigan Gold IL'ite

    Messages:
    600
    Likes Received:
    509
    Trophy Points:
    188
    Gender:
    Female
    [JUSTIFY]அத்தியாயம் - 13

    பழைய கதை


    புகழேந்தியை பிரசன்னாவும் அவனுடைய கையாட்களும் தாக்கிவிட்டார்கள். அதனால் புகழேந்தி அவன் வேலைப் பார்க்கும் மருத்துவமனையிலேயே அனுமதிக்கப் பட்டிருந்தான். தலையிலும் கையிலும் கட்டுடன் கண் மூடி சோர்வாக படுத்திருக்கும் புகழேந்தியை பார்க்கும் போது நிரஞ்சனிக்கு தாங்க முடியவில்லை.

    'யார் இவன்...? எந்த ஊரில் பிறந்தவன்...? இவன் படிப்பு என்ன.... வேலை என்ன... வசதி என்ன...? இவனுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்...? எனக்காக இப்படி அடிப்பட்டு கிடக்கிறானே...!' என்று நிரஞ்சனியின் மனம் உருகியது. கண் மூடி படுத்திருப்பவனை தொல்லை செய்யாமல் அவன் காலடியில் ஒரு நாற்காலி போட்டு தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்தாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது.

    காலில் வெதுவெதுப்பாக எதுவோ படுவதை உணர்ந்து கண்விழித்து பார்த்த புகழேந்திக்கு இன்ப அதிர்ச்சி. நிரஞ்சனி.....

    "ஹேய்... ஜெனி..." அவன் உர்ச்சாகமாகவே அவளை அழைத்தான்.

    அவனுடைய குரல் கேட்டு கண்களை துடைத்து கொண்டு நிரஞ்சனி நிமிர்ந்து பார்த்தாள்.

    "எப்போ வந்த... ஏன் என்னை எழுப்பல...?"

    "இல்ல... தொல்லை செய்ய வேண்டாமே என்று தான்.... சாரி சார்... என்னால தான்... உங்களுக்கு... சாரி சார்..."

    "உனக்கு யார் சொன்னது...?"

    "அண்ணி இன்னிக்கு காலையில என்னை 'லேப்ல' வந்து பார்த்தாங்க.... எல்லாத்தையும் சொன்னாங்க..." அவள் வருத்தத்துடன் பேசிக் கொண்டிருந்தாள்

    "அவங்க எனக்கு தான் அண்ணி... உனக்கு அக்கா..." அவன் கண்களில் சிரிப்புடன் அவளிடம் சொன்னான்.

    "சாரி சார்... அக்கா தான் சொன்னாங்க..."

    அவன் எதற்காக அவளை அக்கா என்று அழைக்க சொல்கிறான் என்று யோசிக்காமலே, அவன் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டு நயந்தியை அக்கா என்று குறிப்பிட்டாள்.

    புகழேந்தி லேசாக சிரித்துக் கொண்டான்.

    "உன்னோட பிரச்சனை என்னோட பிரச்சனை ஜெனி... அதை நீ ஏன் பிரிச்சு பார்க்குற...?" என்று கேட்டான். நிரஞ்சனி விழித்தாள்.

    "சார் நீங்க என்ன சொல்றீங்க... என்னோட பிரச்சனை எப்படி உங்களோடதுன்னு ஆகும்...?" அவள் அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதை புரியாதது போல் கேட்டாள்.

    "அதுதான் அன்னிக்கே சொன்னேனே...!" என்று சொல்லி ஒரு நிமிடம் இடைவெளிவிட்டு பின் சொன்னான்.

    "உன்னை நான் கல்யாணம் செய்து கொள்ள விரும்புறேன் ஜெனி..." அவனுடைய குரல் காதலால் உருகியது.

    "சார் ப்ளீஸ்... இதெல்லாம் நடக்காது... உங்களோட தகுதி வேற... என்னோடது வேற...." அவள் குரல் படபடப்பில் நடுங்கியது.

    "என்ன தகுதி... மண்ணாங்கட்டி... ஏன் நடக்காது..." அவன் சற்று கோவமாக கேட்டான்.

    "சார்... இப்போ நீங்களும் அந்த போலீஸ்காரன் மாதிரி தான் நடந்துக்குறீங்க..."

    புகழ் அவளைப் பார்த்து முறைத்தான். பின்

    "அப்போ நானும் அவனும் உனக்கு ஒன்னு தானா...?" என்று கேட்டான்.

    "நீங்க அப்படிதானே நடந்துக்குறீங்க...?"

    புகழேந்தி அவளை ஒருமுறை ஆழமாக பார்த்துவிட்டு, எதுவும் சொல்லாமல் கண்களை மூடிக் கொண்டான். நிரஞ்சனிக்கு தவிப்பாக இருந்தது. அவனை சமாதானம் செய்ய வேண்டும் போல் இருந்தது. ஆனால் அப்படி செய்தால் அதன் பின் விளைவுகள் எப்படி இருக்கும்...?

    அதைப் பற்றி மேலே யோசிக்க முடியாமல் அந்த அறையிலிருந்து வெளியேறிவிட்டாள். அவள் வெளியேறிவிட்டது தெரிந்த பின் கண்களை திறந்து பார்த்த புகழேந்தியின் கண்களில் அடிபட்ட வலி தெரிந்தது.

    அடுத்த மூன்று நாட்கள் புகழ் மருத்துவமனையில் தான் இருந்தான். ஆனால் நிரஞ்சனி அவனை பார்க்க வரும் போதெல்லாம் அவளை கண்டுகொள்ளாமல் தவிக்கவிட்டான். அங்கிருந்த மூன்று நாட்களும் அவன் நிரஞ்சனியுடன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

    அவன் வீட்டிற்கு செல்லும் நாள் அவனுடைய உடைமைகளை எல்லாம் எடுத்துவைக்க அவனுடைய அண்ணி நயந்திக்கு நிரஞ்சனி உதவி செய்தாள். அவனுடைய அறையில் இருந்த ஒவ்வொரு நொடியும் அவன் ஏதாவது ஒரு வார்த்தை அவளிடம் பேசுவான்... ஒரு பார்வை பார்ப்பான் என்று எதிர் பார்த்த நிரஞ்சனிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வீட்டிற்கு கிளம்பும் போது கூட அவளிடம் ஒரு வார்த்தை சொல்லாமல் கிளம்பி போய்விட்டான்.

    நிரஞ்சனிக்கு தான் அவன் மருத்துவமனையிலிருந்து சென்றதும் மருத்துவமனையே காலியாகிவிட்டது போல் ஆனது. வாழ்க்கையில் எதுவுமே இல்லாதது போல் வெறுமையாக இருந்தது.

    இன்றைய கதை

    சிவரஞ்சனியின் கைபேசிக்கு புகழ் தொடர்ந்து தொடர்புகொள்ள முயற்சி செய்து கொண்டே இருக்கிறான். ஆனால் சிவரஞ்சனி அவனுடைய அழைப்பை துண்டித்துக் கொண்டே இருந்தாள். அவளுக்கு அது புகழேந்தியின் நம்பர் என்று தெரிந்துவிட்டது. நேற்று நடந்தது வீட்டில் அனைவரையுமே நன்றாக பாதித்துவிட்டது.

    பெண் பார்க்க அவர்கள் வந்துவிட்டு பெண்ணை பிடிக்கவில்லை என்று சொல்லியிருந்தாலும் அது ஒருவிதமாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கும். ஆனால் அவர்கள் வராமலே இருந்துவிட்டது அக்கம் பக்கத்தில் காட்டுத் தீயாக பரவியது. எல்லோருக்கும் நிரஞ்சனியின் விஷயம் கண் காது மூக்கு வைத்து பேசப்பட்டு நாடகமாக மேடை போட்டு காட்டப்பட்டுவிட்டது.

    இந்த நேரத்தில் புகழேந்தியின் அழைப்பை சிவரஞ்சனி எடுத்து அது யாருக்காவது தெரிந்துவிட்டால், அவ்வளவுதான். வீட்டில் பெரிய பூகம்பமே வெடிக்கும். அதில் நிரஞ்சனி தான் முதல் பலி. 'எதற்கு வம்பு' என்று அவள் கைபேசியை அணைத்து கைபையில் போட்டு பீரோவில் வைத்துவிட்டாள்.

    ஆனால் புகழேந்தி விடவில்லை. முயற்சி செய்து கொண்டே இருந்தான். அவனுடைய நண்பனுடைய நண்பன் ஒரத்தநாடாம். அவன் மூலமாக நிரஞ்சனியின் சித்தியின் வீட்டை தெரிந்து கொண்டவன் அந்த பையன் மூலமாகவே அல்லியின் வீட்டை கண்காணித்தான். அப்படி செய்ததில் நேற்று நடந்த சம்பவங்கள் அவனுக்கு எட்டிவிட்டது. அதை பற்றி அவனுக்கு நிரஞ்சனியிடம் பேச வேண்டியிருந்தது.

    நீண்ட நேரம் முயற்ச்சிசெய்து பார்த்த புகழ் நிரஞ்சனியை தொடர்புகொள்ள முடியாததால் ஒரத்தநாடு நோக்கி புறப்பட்ட முடிவுசெய்தான். அடுத்த ஒரு மணி நேரத்தில் அவன் நிரஞ்சனியின் சித்தி வீட்டின் முன் காரை நிறுத்தினான்.

    கார் சத்தம் கேட்டு வாசல் பக்கம் எட்டிப் பார்த்த நிரஞ்சனி அங்கு புகழேந்தியின் காரை பார்த்துவிட்டு அதிர்ச்சியடைந்தாள். வேகமாக வெளிப்பக்கம் ஓடிவந்தாள். சிவரஞ்சனி பின் பக்கம் அவளுடைய குழந்தையை குளிக்க வைத்துக் கொண்டிருதாள். சித்தப்பா வயலுக்கு சென்றுவிட்டார். சித்தி கோவிலுக்கு சென்றுவிட்டாள்.

    யாரும் பார்க்கும் முன் புகழேந்தியை அங்கிருந்து அனுப்பிவிட எண்ணி நிரஞ்சனி வாசல் பக்கம் வேகமாக ஓடிவந்தாள்.

    காரிலிருந்து இறங்கிய புகழ் திண்ணைக்கு வந்துவிட்டான். திணைக்கு ஓடிவந்த நிரஞ்சனி அப்போதுதான் பார்த்தாள்... அவளுடைய பாட்டி திண்ணையில் ஒரு மூலையில் கண்களை மூடி கட்டிலில் படுத்திருந்தார்.

    எதுவும் பேச முடியாத நிரஞ்சனி அவனையும் எதுவும் பேசவேண்டாம் என்று வாயில் விரல் வைத்துக் காட்டி எச்சரித்தாள். 'ஏன் இங்க வந்தீங்க... போயிடுங்க...' என்று கைகளை கூப்பி சத்தம் வராமல் கெஞ்சினாள்.

    அவளை பார்த்து பலநாட்கள் கழித்து இன்று தான் பார்க்கிறான் புகழ். அவள் உடல் மெலிந்து லேசாக கருத்து இருந்தது. அவளுடைய உருமாற்றமே அவள் எப்படி இருக்கிறாள் என்று சொன்னது.

    புகழ் பேச வாயெடுக்கும் போது, உள்ளே நுழைந்த அல்லி "யார் நீங்க...? என்ன வேணும்?" என்று கேட்டுக் கொண்டே வந்தார்.

    நிரஞ்சனிக்கு இதயம் வேகமாக துடித்தது. பயத்தில் உடல் தொப்பலாக வியர்த்துவிட்டது. 'இவன் எதுவும் சொல்லி வில்லங்கம் ஆகிவிடக் கூடாதே...' என்று அவள் மனம் வேகமாக சிந்தித்தது.

    புகழ் அவளுக்குள் நிகழும் மாற்றங்களை கவனித்தான். அவளை ஆழமாக பார்த்தான்.

    அவர்கள் இருவரின் நிலையையும் பார்த்த அல்லிக்கு அவன் யார் என்று கண்டுபிடிக்க வெகு நேரம் ஆகவில்லை. நிரஞ்சனியின் படபடப்பும்... புதியவனுடைய நிரஞ்சனி மீதான பார்வையும் அவன் தான் புகழேந்தி என சொன்னது. ஆனால் தனக்கு தெரிந்ததை காட்டிக் கொள்ளாமல் புதியவனின் பதிலுக்காக காத்திருப்பதை போல் காட்டிக் கொண்டாள் அல்லி.

    புகழ் பதில் சொல்லும் முன் முந்திக் கொண்டு "அட்ரஸ் கேட்டு வந்தாங்க சித்தி..." என்றாள் நிரஞ்சனி.

    "யார் அட்ரஸ்...?"

    அதற்க்கும் நிரஞ்சனியே பதில் சொன்னாள். "அது வந்து... இராமானுஜமாமே.... " என்று திணறினாள்.

    "எந்த ராமானுஜம்...?" சித்தி விடாமல் விசாரிக்க, புகழ் நிரஞ்சனிக்கு உதவினான்.

    "EB -ல வேலை செய்ற ராமானுஜம் வீடு எங்க இருக்குன்னு தெரியுமா...?"

    "இல்லங்க... அப்படி யாரும் இந்த பக்கம் இல்ல... நீங்க வேற யார்கிட்டையாவது கேட்டுக்கோங்க..." என்று அவனிடம் சொல்லிவிட்டு "ரஞ்சி உள்ள போ..." என்று நிரஞ்சனிக்கு உத்தரவு பிறப்பித்தாள்.

    புகழேந்தி நிரஞ்சனியின் வீட்டில் நேரடியாக பேசிவிடத்தான் வந்தான். ஆனால் நிரஞ்சனியின் கெஞ்சும் பார்வை அவளை மீறி அவனை எதுவும் செய்யவிடாமல் தடுத்தது. அவன் வந்த வழியே திரும்பிவிட்டான்.

    அவன் காரில் ஏறி அல்லியின் வீட்டை கடக்கும் போது எதிரில் இராஜசேகர் அல்லியின் வீட்டை நோக்கி வந்தான். எதிரெதிர் திசையில் பயணம் செய்து கொண்டிருந்த இருவர் மனத்திலும் தீ...! ஒருவன் மனதில் காதல் தீ... மற்றொருவன் மனதில் ஜாதி வெறி என்னும் தீ...

    இதில் யார் யாரை வெல்வார்கள் என்று பார்ப்போம்...


    - தொடரும்​
    Please post your comments here : http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/154004-comments-7.html
    [/JUSTIFY]
     
    2 people like this.
  6. nithyakarthigan

    nithyakarthigan Gold IL'ite

    Messages:
    600
    Likes Received:
    509
    Trophy Points:
    188
    Gender:
    Female
    [JUSTIFY]அத்தியாயம் - 14

    பழைய கதை


    புகழேந்திக்கு உடல்நிலை தேறி இப்போது மருத்துவமனைக்கு வர ஆரம்பித்துவிட்டான். ஆனால் நிரஞ்சனியை 'இதற்கு முன் பார்த்தது கூட இல்லை' என்பது போல் நடந்து கொண்டான். அவனுடைய இந்த செயல்பாடே நிரஞ்சனியின் உறுதியை அசைத்துப் பார்த்தது. அவள் மனம் புகழேந்திக்காக ஏங்கியது.

    அந்த நேரத்தில் தான் அந்த விபத்து நடந்தது. நிரஞ்சனி வந்த பேருந்து எதிரில் எக்கு தப்பாக வந்த ஒரு காரின் மீது மோதிவிடாமல் தவிர்ப்பதற்காக திடீரென்று பிரேக் போட்டதில் குலுங்கி நின்றது. உயிர் சேதம் இல்லை என்றாலும் பயணிகளுக்கு அடிபட்டுவிட்டது. நிரஞ்சனிக்கும் முன் இருக்கையில் முட்டிக்கால் மோதி நல்ல அடி. ஆரம்பத்தில் அதிக வலி தெரியவில்லை.

    ஆனால் அவளுடைய பஸ் நிறுத்தத்தில் இறங்கியவளுக்கு அதற்கு மேல் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. நேரம் ஆக ஆக கால் வீக்கம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. என்ன செய்வதென்று தெரியவில்லை. யாராவது ஒருவருடைய துணை இல்லாமல் அவளால் அந்த இடத்தை விட்டு நகரக் கூட முடியாது என்கிற நிலையில் இருந்தாள்

    முன்பு பிரசன்னா அவளை கடத்த முயன்ற போது காப்பாற்றிய புகழ் அவனுடைய கைபேசியின் நம்பரை அவளுடைய கைபேசியில் பதிவு செய்துவிட்டு ஏதாவது அவசரம் என்றால் அவனை அழைக்கும் படி சொல்லியிருந்தான்.

    அந்த நினைவு இப்போது வந்தது. சிறு தயக்கத்திற்கு பின் அவனுக்கு அழைத்தாள்.

    நிரஞ்சனியின் கைபேசியிலிருந்து வந்த அழைப்பை நம்பமுடியாமல் ஒரு கணம் பார்த்த புகழ் அடுத்த கணமே மொபைல் ஆன் செய்து அவளிடம் பேசினான்.

    "ஹலோ..."

    "ஹலோ... நா நிரஞ்சனி..."

    "எந்த நிரஞ்சனி...." அவன் அவள் மீது கோபமாக இருப்பதை பறைசாற்ற அவளை தெரியாதது போல் பேசினான்.

    அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. அவள் "சாரி... ராங் நம்பர்" என்று சொல்லி போனை அணைத்துவிட்டாள். 'எதுக்கு இப்போ இவனுக்கு கூப்பிட்டோம்... ' என்று நினைத்து அவமானமாக உணர்ந்தாள்.

    அடுத்து என்ன செய்வது என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போது... புகழேந்தியும் நிரஞ்சனியை பற்றிதான் யோசித்துக் கொண்டிருந்தான்.

    அப்போதுதான் அவனுக்கு தோன்றியது... "ஒருவேளை அந்த போலீஸ்காரன் ஏதாவது வம்பு பன்னுகிரானோ....?"

    புகழேந்திக்கு பிரசன்னா அடிபட்டு கிடப்பது தெரியாததால் அப்படி நினைத்தான். அந்த மாதிரி ஒரு எண்ணம் தோன்றியவுடனே நிரஞ்சனிக்கு அவசரமாக கைபேசியில் தொடர்பு கொண்டான். இரண்டு முறை முயற்ச்சித்து முன்றாவது முறை தான் அவள் போனை எடுத்தாள். 'அவளுக்கும் வீம்பு இருக்குமே...'

    அதற்குள் அவனுடைய உயிர் போய் எமலோகத்தை ஒருமுறை எட்டிப் பார்த்துவிட்டு வந்தது.

    "ஹலோ... ஜெனி... எங்க இருக்க..." படபடப்பாக கேட்டான்.

    "இங்க தான்... பஸ் ஸ்டாப்ல..." அவள் கால் வலியில் முனகலாக பதில் சொன்னாள்.

    அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவன் அங்கு இருந்தான்.

    "என்ன ஜெனி..." என்று கேட்டுக்கொண்டே பரபரப்பாக காரை ஓரமாக நிறுத்திவிட்டு வந்தான்.

    அவன் மருத்துவமனைக்கு வருவது போல் முழுக்கை சட்டை அணிந்து, இன் பண்ணி ஃபார்மளாக வராமல், டி-ஷர்ட் ஜீன்ஸ் -இல் வந்திருந்தான். அந்த உடையில் அவன் மிக வசீகரமாக இருந்தான். அந்த கால் வலியிலும் நிரஞ்சனி அவனை ரசித்தாள்.

    'ஐயோ... கடவுளே... இவன் ஏன் இப்படி அழகா இருந்து தொலைக்கிறான்... இப்படியே என்னை விழத்தட்டிவிடுவான் போலருக்கே...' என்று நொந்துக் கொண்டாள்.

    "என்ன ஜெனி... இப்படி பார்க்குற....? என்ன ஆச்சு உனக்கு?" என்று கேட்டான்.

    "ம்ம்.. ஒன்னும் இல்ல... வந்து..." என்று ஆரம்பித்து நடந்ததை விபரமாக சொன்னாள்.

    அவன் அவளை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து... அவனுடைய வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்தான். அங்கிருந்து அவனுடைய அண்ணனையும் அண்ணியையும் அவளுக்கு துணையாக அனுப்பி வேம்பங்குடியில் அவளுடைய வீட்டில் விட்டுவிட்டு வர சொன்னான். அவர்களும் அவளை பத்திரமாக அவர்களுடைய காரில் அழைத்து சென்று வீட்டில் சேர்த்தார்கள்.

    நிரஞ்சனியை புகழ் மருத்துவமனைக்கு கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு வந்ததிலிருந்து மீண்டும் வெளியே அழைத்து செல்லும் வரை அவளுடனேயே இருந்தான். அவளுக்கு தேவையானதை எல்லாம் அவனே செய்தான். அவளுக்கே அது சங்கடமாக இருந்தது. ஆனால் அவன் அதை அலட்ச்சியம் செய்து அவளை கருத்தாக பார்த்துக் கொண்டான்.

    அது மருத்துவமனையில் அனைவரின் கண்களையும் உறுத்தியது. 'எல்லோருக்கும் நிரஞ்சனிக்கும் புகழேந்திக்கும் என்ன சம்மந்தம்' என்று சந்தேகமாக இருந்தது. அவரவர் தங்களுடைய கற்பனை கதையை அள்ளி விட்டார்கள். அவர்களைப் பற்றி ஒரே நாளில் மருத்துவமனை முழுவதும் 'கிசு கிசு' பரவியது.

    அந்த செய்தி இரண்டே நாட்களில் புகழேந்திக்கு தெரிந்த போது அதற்காக அவன் மகிழ்ச்சி அடைந்தான்.

    இன்றைய கதை

    நிரஞ்சனி மாடியில் துவைத்த துணிகளை காயப்போட்டுவிட்டு கீழே இறங்க எத்தனிக்கையில் அவர்கள் வீட்டிற்கு முன் இருக்கும் சாலையில் ஒரு கல்யாண ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. அந்த ஊர்வலத்தை நிரஞ்சனி ஆர்வமாக பார்த்துக் கொண்டு நின்றுவிட்டாள்.

    'புகழுக்கும் நமக்கும் இப்படி திருமணம் நடக்குமா... ' என்று ஏக்கமாக அவள் அதை பார்த்துக் கொண்டிருக்கும் போது ஊர்வலத்திலிருந்து ஒருவன் நிரஞ்சனியை பார்த்துக் கொண்டே இருப்பதை அவளால் உணரமுடிந்தது. யார் அவன் என்று கூட்டத்திர்க்குள் பார்வையை கூர்மையாக்கியவள் திகைத்தாள்.

    அங்கு அவள் வேலை பார்த்த மருத்துவமனையில், வேலை செய்யும் பையன் ஒருவன் நின்று கொண்டிருந்தான். அவன் நிரஞ்சனியிடம் எதையோ சொல்ல விரும்புகிறான் என்று அவளுக்கு புரிந்தது. அவள் அவசரமாக படியிறங்கி அவர்களுடைய வாசலுக்கு வந்தாள். வேடிக்கை பார்ப்பது போல் நின்றாள்.

    அவனும் நிரஞ்சனியை நோக்கி வந்தான். நிரஞ்சனிக்கு அருகில் சிலர் நின்று கொண்டிருந்தார்கள். சிறிது துரத்தில் சித்தி அல்லி நிற்பதும் அவளுக்கு தெரிந்தது. அவளுக்கு பயத்தில் வியர்த்தது.

    கூட்டத்திலிருந்து விலகி நிரஞ்சனிக்கு அருகில் வந்தவன் "கொஞ்சம் குடிக்க தண்ணீ குடுங்க..." என்று கேட்டான்.

    அதுபோல் ரோட்டில் செல்பவர்கள் தாகத்திற்கு தண்ணீர் கேட்பது வழக்கம் என்பதால் யாரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

    நிரஞ்சனி அவசரமாக உள்ளே சென்று ஒரு செம்பு தண்ணீர் கொண்டு வந்து அவனிடம் கொடுத்தாள். அதை வாங்கி குடித்துவிட்டு மீண்டும் செம்பை நிரஞ்சனியிடம் கொடுத்தவன் அதோடு ஒரு சிறு காகிதத்தையும் சேர்த்து மற்றவர்கள் அறியாமல் கொடுத்தான்.

    அதை வாங்கிய நிரஞ்சனிக்கு இதயம் வேகமாக் அடித்துக் கொண்டது. செம்பை வீட்டிற்குள் வைக்க செல்வது போல் சென்று குளியலறைக்குள் புகுந்து கதவை தாளிட்டவள், காகிதத்தை பிரித்து படித்தாள்.

    'ஜெனி...

    நாளைக்கு உன்னுடைய ஃபோன்காக காத்திருப்பேன். கண்டிப்பாக நான் உன்னிடம் பேச வேண்டும். நீ போன் செய்யவில்லை என்றால் நான் அங்கு வந்து எல்லோரிடமும் பேசி ஒரு முடிவெடுப்பேன்....

    புகழ். '

    என்று எழுதியிருந்தது.

    நிரஞ்சனி சிவரஞ்சனியிடம் சென்றாள். மற்றவர்கள் அறியாமல் அவளுடைய நிலைமையை விளக்கினாள். சிவரஞ்சனிக்கு நிரஞ்சனி மேல் இறக்கம் இருந்தாதால் அவள் தன்னுடைய கைபேசியை நிரஞ்சனிக்கு கொடுத்து உதவினாள்.

    நிரஞ்சனி ஆயிரம் தடைகளை தாண்டி சிவரஞ்சனியின் கைபேசியுடன் மாடிக்கு சென்று புகழேந்திக்கு அழைத்தாள். அவனுடைய குரல் அவள் அனுபவிக்கும் துன்பங்களுக்கெல்லாம் மருந்தாக இருக்கும் என்று நினைத்து அவனை கைபேசியில் அழைத்தாள்.

    "ஹலோ..." ஆசையாக வந்தது வல்டைய குரல்.

    "ஹலோ..." கடினமாக இருந்தது அவனுடைய குரல்.

    "எப்படி இருக்கீங்க புகழ்...?"

    "அதை பற்றி உனக்கென்ன....? அது சரி... என்ன மாப்பிள்ளை எல்லாம் பலமா தேடிகிட்டு இருக்கீங்க போலருக்கு...?" புகழேந்தியின் பேச்சின் ஆரம்பமே நிரஞ்சனியை காயப்படுத்தியது.

    "புகழ்... ப்ளீஸ்... நீங்களும் என்னை காயப்படுத்தாதீங்க.... என்னால முடியல..."

    "என்னாலையும் தான் முடியல... நீ இல்லாம எனக்கு இங்க பைத்தியம் பிடிக்குது... அங்க நீ பெண் பார்க்க வர்றவனுக்கெல்லாம் போஸ் குடுத்துகிட்டு இருக்கியா...?"

    "ஐயோ... இல்ல... புகழ் என்னோட நிலமைய புருஞ்சுக்கோங்க ப்ளீஸ்..."

    "என்னதான் உன்னோட நிலைமை... இன்னைக்கு சொல்லு... நானும் தெருஞ்சுக்குறேன்" அவன் விடாபிடியாக கேட்டான்.

    "இங்க எல்லாமே இராஜசேகர் சொல்றபடி தான் நடக்குது புகழ். அவன் ஒரு முரடன். நீங்க அவன் கிட்ட பேசினா அவன் வெட்டு குத்துன்னு இறங்கிடுவான். "

    "யார் அவன்...? உங்க அக்கா கணவன் தானே..."

    "ஆமா..."

    "அவன் ஏன் உன் விஷயத்துல தலையிட்றான். உங்க அப்பா அம்மா என்ன சொல்றாங்க...?"

    "அவன் சொல்றதுதான் சரின்னு சொல்றாங்க... அவன் சம்மதிச்சாதான் நம்ப கல்யாணம் நடக்கும்..."

    "இப்ப என்னை என்ன தான்டி செய்ய சொல்ற... உன்ன கல்யாணம் செஞ்சு கொடுக்க சொல்லி அவன் கால்ல விழ சொல்றியா... சொல்லு வந்து விழுவுறேன்..." கடுமையாக பேசினான்.

    "ஏன் இப்படி பேசுறீங்க... கொஞ்ச நாள் இப்படியெல்லாம் செஞ்சு பார்ப்பாங்க... நாம பிடிவாதமா இருந்தா அப்புறம் ஒத்துகிட்டு தானே ஆகணும்...?"

    "ஒத்துக்கலன்னா... என்ன செய்றது?"

    "என்ன செய்றது...?" அவள் திரும்ப அவனையே கேட்டாள்.

    "சொல்லு... என்ன செய்யது...?

    "நான் இப்படியே தான் இருப்பேன்... யாரையும் கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன். நீங்க வேற..."

    "ஷட் அப்......" என்று சீறினான்.

    "நா என்னோட அம்மா அப்பாவோட உங்க வீட்டுக்கு வந்து பெண் கேட்குறேன்டி... என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது. எனக்கு என்னடி குறைச்சல்...? ஏண்டி இப்படி உங்க வீட்ல பிடிவாதம் பிடிக்கிறாங்க...?"

    "......................"

    "அவங்க பிடிவாதத்த விட்டுட்டு நம்ப கல்யாணத்துக்கு சம்மதிச்சா ஓகே.... இல்லன்னா நீ என்னோட உடனே வீட்டை விட்டு கிளம்பிவர தயார இருக்கணும்..." என்று உத்தரவிடுவது போல் சொன்னான்.

    அதில் பதட்டம் அடைந்த நிரஞ்சனி... "நிச்சயம் மாட்டேன்... பெத்தவங்க சம்மதம் இல்லாமல் என்னோட கல்யாணம் நடக்காது... நான் சொல்லாமல் நீங்க இங்க வரவும் கூடாது.... முதல்ல ஒரு நாள் வந்தத நினைத்து திரும்ப முயற்சி செய்யாதிங்க... அப்புறம் ரொம்ப வருத்தப்படுவீங்க..." என்று மிரட்டலாக சொன்னாள்.

    "என்னடி செய்வ...?"

    "புகழ்... இந்த தடவ நான் சொல்ல மாட்டேன்... செஞ்சுடுவேன்... எனக்கும் எல்லா கஷ்ட்டங்களிலிருந்தும் விடுதலை கிடைத்துவிடும் "

    அதில் கடுப்பான புகழ் கைபேசியை அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே அணைத்துவிட்டான்.



    - தொடரும்​
    Please post your comments here : http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/154004-comments-8.html
    [/JUSTIFY]
     
    1 person likes this.
  7. nithyakarthigan

    nithyakarthigan Gold IL'ite

    Messages:
    600
    Likes Received:
    509
    Trophy Points:
    188
    Gender:
    Female
    முதலில் மிக தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும் இனியமலர்...

    நன்றி மலர்... உங்களோட பின்னுட்டம் உண்மையில் எனக்கு மிக உற்சாக மருந்தாக இருந்தது. தொடர்ந்து படித்து நிறை குறைகளை சுட்டுக்காட்டுங்கள்... :)
     
  8. nithyakarthigan

    nithyakarthigan Gold IL'ite

    Messages:
    600
    Likes Received:
    509
    Trophy Points:
    188
    Gender:
    Female
    [JUSTIFY]அத்தியாயம் - 15

    பழைய கதை


    நிரஞ்சனியையும் புகழேந்தியையும் பற்றி மருத்துவமனையில் 'கிசு கிசு' பரவிவிட்டது. அதை தெரிந்து கொண்ட புகழேந்தியின் நண்பன் டாக்டர் ஷங்கர் அதை பற்றி அவனிடம் கேட்டான்.

    "என்னடா புகழ் இது...? யாருக்காவது மனிதாபிமானத்தோட உதவி செஞ்சா கெட்ட பேர் தான் கிடைக்கும் போல..." ஷங்கர் அலுத்துக் கொண்டான்.

    "என்னடா ஷங்கர்...? ஏன் டென்ஷனா இருக்க..." புகழேந்தி புரியாமல் கேட்டான்.

    "ஒரு டாக்டர் ஒரு நர்ஸ்சோடா ஒரு வார்த்தை அதிகமா பேசினாலே அந்த டாக்டரை பற்றி மருத்துவமனையில் வதந்தி பரவ ஆரம்பிச்சிடும்... இதுல நீ அந்த பொண்ணு நிரஞ்சனிக்கு அவ்வளவு உதவி செஞ்ச... அது கடைசீல உனக்கே பிரச்சனையா போச்சு... போ... " என்று வருத்தமாக சொன்னான்.

    "என்ன பிரச்சனை....?" புகழ் உண்மையாகவே புரியாமல் கேட்டான். அதற்கு ஷங்கர், மருத்துவமனையில் தற்போது பேசப்படும் 'கிசு கிசு' -வை பற்றி சொன்னான்.

    "ஹேய்... நிஜமாவா சொல்ற....? ஹப்பாடா... இனி பிரச்சனை இல்ல... இவ்வளவு நாளும் ஜெனியோட பேசுறதுக்கு யோசிச்சு யோசிச்சு பேச வேண்டியிருந்தது... இனி அந்த பிரச்சனை இல்ல..." என்றான்.

    ஷங்கர் வாயை 'ஆ' வென திறந்துக்கொண்டு விழித்தான். பின் சுதாரித்துக் கொண்டு சொன்னான்....

    "என்னடா சொல்ற நீ...?"

    "எஸ்... ஐ லவ் ஹர்...." புகழ் நிரஞ்சனியிடமே தன்னுடைய காதலை சொல்வது போல் உணர்வுபூர்வமாக சொன்னான்.

    "ஏய்... அந்த பொண்ணு வேம்பங்குடி தானே...? வேண்டாம் புகழ்... அந்த ஊர் பெண்ணை காதலித்து அவ்வளவு சுலபமா நீ கல்யாணம் செய்துகொள்ள முடியாது. உன்னுடைய காதல் கல்யாணத்தில் முடிவது ரொம்பக் கஷ்டம்டா... சொன்னா கேளு..." என்று ஆரம்பத்திலேயே நண்பனை தடுத்துவிடும் எண்ணத்தில் அவனுக்கு அறிவுரை சொன்னான். ஆனால் அவனுக்கு தெரியவில்லை... அவனுடைய நண்பன் திரும்ப முடியாத அளவிற்கு தன்னுடைய காதலில் ஆழமாக மூழ்கிவிட்டான் என்று...


    காலில் பட்ட அடி குணமாக நான்கு நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு இன்று தான் நிரஞ்சனி மருத்துவமனைக்கு வந்தாள். அவளுக்கு இலை மறை காய் மறையாக விஷயம் தெரிந்தது. அவளையும் புகழேந்தியையும் பற்றி மருத்துவமனையில் சக ஊழியர்கள் கவனிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்று புரிந்ததும் அவள் புகழேந்தியை விட்டு விலகிப் போனாள்.

    புகழேந்திக்கு அவளுடைய செயல் ஏமாற்றமாக இருந்தது. அவள் மறுபடி வேலைக்கு வந்ததும் அவளோடு பேசி பழக அவன் முயன்றால் அவள் முன்பைவிட பல காததூரம் தள்ளி ஓடுகிறாள்.

    அவன் கைபேசியில் அவளை அழைத்துப் பார்த்தான். அவள் எடுக்கவே இல்லை. மீண்டும் மீண்டும் முயற்சித்தான். அவள் கை பேசியை அணைத்து விட்டாள். பலமுறை முயன்று பார்த்துவிட்டு அவனுடைய உதவியாலரை அனுப்பி "நிரஞ்சனியை தன்னை வந்து பார்க்கும்" படி சொல்ல சொன்னான்.

    இதற்கு மேல் போய் பார்க்காமல் இருந்தால் அதுவே பெரிய செய்தியாக மாறி மருத்துவமனை முழுக்க பரவிவிடும் என்று நினைத்த நிரஞ்சனி உடனே அவனை சென்று பார்த்தாள்.


    "எதுக்கு வர சொன்னீங்க...?" விறைப்பாக கேட்டாள்.

    அவன் OP க்கு செல்ல இன்னும் ஒருமணி நேரம் இருந்தது. அதனால் ஓய்வாக அவனுடைய அறையில் அமர்ந்திருந்தான்.

    "உக்காரு..."

    "நீங்க சொல்லுங்க...."

    "உக்காருன்னு சொன்னேன்..."

    "அவள் அவனுக்கு முன் இருந்த இருக்கையில் அமர்ந்தாள்"

    "எதுக்கு இன்னிக்கு நீ கேண்டீன் வரல... போன் பண்ணினப்பவும் எடுக்கல... நான்கு நாட்களுக்கு பிறகு இன்னிக்கு தான் வந்திருக்க... ஏன் ஒரு வார்த்தை என்னோடு பேசாம... என் கண்ணுல படாம ஓடி ஒளியிர....?" அவன் பட்டென்று கேட்டான்.

    "ப்ச்... நம்பள பத்தி மருத்துவமனைல தப்பா பேசிக்கிறாங்கன்னு நினைக்கிறேன்... அதுதான்..." அவள் குரல் எழும்பாமல் மெதுவாக சொன்னாள்.

    "என்ன தப்பா பேசிக்கிறாங்க...?"

    "புரியாதது மாதிரி கேட்காதிங்க..."

    "புரியாமல் தான் கேட்குறேன்...? எல்லாரும் உண்மையை தானே பேசிக்கிறாங்க... இதுல என்ன தப்பு இருக்கு?"

    இப்போது நிரஞ்சனி அவனை முறைத்தாள். "என்ன சொல்றீங்க நீங்க...?"

    "இப்போ நீ புரியாதது மாதிரி கேட்காத... என்னை கல்யாணம் செஞ்சுக்க உனக்கு விருப்பமா இல்லையா...?" அவன் அழுத்தமாக கேட்டான்.

    "என்ன இப்படி கேட்குறீங்க...?" அவள் அவனை ஆச்சர்யமாக பார்த்தாள்.

    "உனக்கு என்னை கல்யாணம் செஞ்சுக்க விருப்பமா இல்லையா...? "

    "நா எப்படி உங்களுக்கு.... வேற நல்ல பெண்ணை..."

    "உனக்கு என்னை கல்யாணம் செஞ்சுக்க விருப்பமா இல்லையா...? அதை மட்டும் சொல்லு?"

    "இப்படி திடீர்ன்னு கேட்டால் எப்படி...?" அவள் தடுமாறினாள்.

    "உனக்கு என்னை கல்யாணம் செஞ்சுக்க விருப்பமா இல்லையா...? " அவன் விடாபிடியாக கேட்டான்.

    "வேற யாரையும் நான் கல்யாணம் செஞ்சுக்க போறதில்லை.... எனக்கு கல்யாணமே வேண்டாம்...." அவள் தன் உணர்வுகளை வெகுவாக கட்டுப்படுத்த முயன்று கொண்டே பதில் சொன்னாள்.

    அவன் அவளை ஆழமாகப் பார்த்தான். "ஜெனி... எனக்கு இன்னிக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகனும். மதில் மேல் பூனை மாதிரி என்னால நிக்க முடியாது... சொல்லு... உனக்கு என்னை கல்யானம் செஞ்சுக்க விருப்பமா... இல்லையா... இப்போவே சொல்லு...?" ஒவ்வொரு வார்த்தையாக தனித்தனியாக அழுத்தமாக கேட்டான்.

    "எங்க வீட்டுல இதுக்கெல்லாம் ஒத்துக்க மாட்டாங்க சார்... என்னை விட்டுடுங்க..." அவள் அழுதுவிடுபவள் போல் சொன்னாள்,

    அவளுடைய மனம் முழுக்க அவனுடைய முகம் நிறைந்திருக்கும் போது அவனை திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை என்று அவளால் எப்படி சொல்ல முடியும். அவள் அவனுக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாமல் தவித்தாள்.

    "அப்போ உனக்கு உங்க வீட்டோட சம்மதம் தான் பிரச்சனையா... மற்றபடி உனக்கு சம்மதம் தானே...": என்று கண்களில் ஆர்வம் மின்ன கேட்டான்.

    அவள் பதட்டமாகிவிட்டாள். "எ.. என்ன சார்... அதெல்லாம் இல்ல..."

    "அப்போ உனக்கு என்னை பிடிக்கவில்லை என்று நேரடியாக என் முகத்தை பார்த்து சொல்லிவிட்டு போ..." என்றான் குரலில் கொஞ்சம் கூட இளக்கமே இல்லாமல்.

    "..........." அவள் பதில் பேச முடியாமல் தலை குனிந்து அமர்ந்திருந்தாள்.

    "சொல்லு... ஏன் பேசாம இருக்க...? சொல்லு ஜெனி.... என்னை பிடிக்கலன்னு சொல்லிட்டு போ... சொல்லு..." என்று அவளை படுத்தியதில் அவள் அழுதுவிட்டாள்.

    "ஐயோ... பிடிச்சுருக்கு... உங்கள பிடிச்சிருக்கு... ரொம்பப் பிடிச்சிருக்கு... உங்களைத் தவிர வேறு யாரையும் பிடிக்காது... பிடிக்காது..." என்று சொல்லிவிட்டு முகத்தை மூடிக்கொண்டு தேம்பி அழுதாள்.

    அவன் அவனுடைய இருக்கையிலிருந்து எழுந்து வந்து அவளுடைய தலையை தடவிக்கொடுத்தான். அவன் மனதில் ஒரு அமைதி வந்திருந்தது. ஆனால் நிரஞ்சனியின் மனதில் அமைதி போய்விட்டது. இதன் முடிவு எப்படி இருக்கும் என்று அவள் சிந்தித்து சிந்தித்து அமைதியை இழந்து கொண்டிருந்தாள்.

    இன்றைய கதை

    தாமரையும் அல்லியும் சகோதரிகள் என்றாலும், தாமரை படபடப்பாக பேசி முக்கிய விஷயத்தை கோட்டைவிட்டுவிடும் ரகம். அவளை சுலபமாக ஏமாற்றலாம். ஆனால் அல்லி அழுத்தமாக காரியத்தை சாதிக்கும் ரகம். அவளை சுலபமாக ஏமாற்ற முடியாது.

    அன்று புகழ் வீட்டிற்கே வந்துவிட்ட விஷயத்தை அறிந்து கொண்ட அல்லி அதை பற்றி யாரிடமும் மூச்சு விடவில்லை. ஆனால் அன்றிலிருந்து நிரஞ்சனியை மிக கவனமாக கவனிக்க ஆரம்பித்தாள்.

    'அன்று புகழ் கொடுத்தனுப்பிய கடிதத்தை யாருக்கும் தெரியாமல் மறைத்து விட்டோம்' என்று நிரஞ்சனி நினைத்துக் கொண்டாள். ஆனால் அவள் செம்போடு சேர்த்து ஒரு காகிதத்தை வாங்கியதையும்... உடனே குளியலரைக்குல் சென்று தாள் போட்டுக் கொண்டதையும் கவனித்திருந்த அல்லி 'நிரஞ்சனிக்கும் புகழேந்திக்கும் தொடர்பு இருக்கிறது' என்பதை தெளிவாக தெரிந்து கொண்டாள்.

    அதோடு இப்போதெல்லாம் நிரஞ்சனியும் சிவரஞ்சனியும் தனியாக தங்களுக்குள் ஏதோ ரகசியம் பேசிக் கொள்கிறார்கள். இதைப் பற்றி சிவரஞ்சனியிடம் தனியாக விசாரித்தால் அவள் நிரஞ்சனிக்கு சாதகமாக எதையாவது பேசுகிறாள். இது எங்கு போய் முடியும்....?

    'ஒருவேளை அந்த புகழேந்தியை திருமணம் செய்ய எண்ணி நிரஞ்சனி வீட்டை விட்டு போய்விட்டால்....!? அய்யய்யோ.... அதைவிட அவமானம் வேறு என்ன இருக்க முடியும்...? அதன் பிறகு அக்கா உயிரோடு இருப்பாளா என்பதே சந்தேகம் தான்... ' அல்லிக்கு பயம் வந்துவிட்டது. உடனே அவள் இராஜசேகரிடம் பேச்சை ஆரம்பித்தாள்.

    "மாப்ள... ராஞ்சிக்கு மாப்ள பாக்குற விஷயம் என்ன ஆச்சு...? ஒன்னு போனா நாம இன்னொண்ண பாக்க வேண்டியது தான்... என்ன செய்றது...? அவளும் நம்ப பொண்ணு தானே... விட்டுட முடியுமா...?"

    இத்தனை நாளும் நிரஞ்சனியின் கல்யாணத்துக்கு தடை சொல்லிக் கொண்டிருந்த அல்லியே இன்று பேச்சை ஆரம்பித்தது இராஜசேகரின் நெற்றியை சுருங்கச் செய்தது.

    "என்னத்த...? அந்த பய ஏதும் இந்த பக்கம் வந்தானா...?" என்று சரியாக பாய்ண்டை பிடித்தான்.

    "அதெல்லாம் இல்ல மாப்ள... ஒரு தடவ ஆரம்பிச்சுட்டு நாம பாட்டுக்கு இருந்துட கூடாது... அதான் சொன்னேன்..." என்று சமாளித்தாள் அல்லி.

    "அதானே பாத்தே(ன்)... சரித்த... பாக்க ஆரம்பிச்சுடுவோம்... நல்ல வரனா வந்தா ஒடனே முடிச்சிரலாம்...." என்றான் இராஜசேகர்.

    அன்றிலிருந்து நிரஞ்சனிக்கு மாப்பிள்ளை தேடும் படலம் துரிதப்படுத்தப் பட்டது. இதுவரை தடை சொல்லிக் கொண்டிருந்த அல்லியும் இப்போது மாப்பிள்ளை வேட்டையில் தீவிரமாக இறங்கிவிட்டார். தினமும் இரண்டு மூன்று ஜாதகம் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தது.

    இராஜசேகர் எவ்வளவு வேண்டுமானாலும் சீர்வரிசை செய்ய தயாராக இருந்தான். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதை திருப்பித் தந்துவிடும் எண்ணம் தாமரைக்கு இருந்தாலும் இந்த நேரத்தில் அவன் பொறுப்பாக மாமனார் பிரச்னையை தன்னுடையதாக எண்ணி பாரம் தாங்குவதில் அனைவருக்கும் பெருமை.... மகிழ்ச்சி...

    -------------------------------------------------------------------------------------------------------------------------------

    நிரஞ்சனியிடம் பேசிவிட்டு கோபமாக கைபேசியை அணைத்த புகழேந்திக்கு கோபம் குறையவே இல்லை. அவன் மூளை நிரஞ்சனியின் வீட்டு ஆட்கள் செய்த... செய்து கொண்டிருக்கும்... தவறுகளை பற்றி யோசித்தது. அப்போது அவனுக்கு அவளுடைய மாமா புகழேந்தியின் வீட்டில் வந்து சம்மந்தம் பேசியது நினைவிற்கு வந்தது.

    அவன் அவருடைய கைபேசிக்கு தொடர்பு கொண்டான். அன்று அவர் புகழேந்தியின் வீட்டிற்கு வந்த போது அவருடைய நம்பரை புகழ் வாங்கிக் கொண்டான். அதில் இப்போது தொடர்பு கொண்டான்.

    அவர் போனை எடுத்து "ஹலோ..." என்றது தான் தாமதம்.

    அவ்வளவு கேவலமான வார்த்தைகளக் கூட அவனால் பயன்படுத்த முடியுமா என்று அவனுக்கே சந்தேகம் ஏற்படும் படி அவ்வளவு மோசமாக அவரை திட்டினான். பின்,

    "என்னையா பூச்சாண்டி காட்றீங்க... உங்க ஊருக்கு நான் வந்தா என் தலையை எடுத்துருவீங்களா...? நீயும் உன் ஆளுங்களும் தஞ்சாவூர் பக்கம் வந்துடாதீங்க... தொலைச்சுடுவேன்..." என்று அவரை மிரட்டவேறு செய்தான்.

    அவருக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்தது. பதிலுக்கு அவரும் பேசினார். போனிலேயே இருவரும் சண்டை போட்டு ஓய்ந்தார்கள்.

    அந்த செய்தி உடனே அல்லியின் வீட்டு கூடத்திற்கு வந்தது. அனைவரும் நிரஞ்சனியை பிடித்துக் கொண்டார்கள்.

    "உனக்கு மாப்பிள்ளை பார்ப்பது அவனுக்கு எப்படி தெரியும்...? அவன் உனக்கு எப்படி தொடர்பு கொண்டான்....? என் அண்ணனை எப்படி அவன் பேசலாம்...? எல்லாம் உன்னால் தான்..." என்று தாமரை நிரஞ்சனியை உலுக்க அனைவரும் அது சரியே என்று ஆளாளுக்கு ஒன்று சொல்லி நிரஞ்சனியை வார்த்தைகளால் குதறினார்கள். யாரும் அவளுடன் முகம் கொடுத்து பேசாமல் அவளை தனிமைப்படுத்தி கொன்றார்கள்.

    அன்று என்னவோ இராஜசேகர் கொஞ்சம் அடக்கி வாசித்தான். எல்லோரும் கொதித்துப் போய் இருந்ததால் அவன் கொஞ்சம் அடக்கமாக இருந்தான் போலும்...

    சிவரஞ்சனியால் நிரஞ்சனிக்கு எந்தவிதத்திலும் ஆறுதல் சொல்ல முடியவில்லை. நிரஞ்சனிக்கும் புகழேந்தியின் செயலில் உடன்பாடு இல்லை தான். 'ஏற்கனவே இருக்கும் நூல் கண்டு சிக்கலை இடியாப்ப சிக்கலாக மாற்றிவிட்டானே' என்று அவன் மீது அவளுக்கும் கோபம் தான். 'வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல் மாமாவை அவமதித்துவிட்டானே' என்று அவன் மீது வருத்தம் தான்.

    ஆனால் அதை அங்கு யார் ஏற்பார்கள்...? 'நீ கொடுத்த தைரியத்தில் தான் அவன் பேசினான்' என்று சொல்பவர்கள் அவளும் மாமாவிற்காக வருந்துகிறாள் என்று சொன்னாள் நம்புவார்களா...?

    -------------------------------------------------------------------------------------------------------------------------------------

    தாமரை அவளுடைய அண்ணன் கோபாலனை முதலில் புகழ் வீட்டிற்கு சென்று பேசிவிட்டு வர சொன்னதனால் தான் அவர் சென்றார். அவருக்கு புகழேந்தியின் ஜாதியை பற்றி தெரிந்திருக்கவில்லை. அதனால் சந்தோஷமாக சம்மந்தம் பேசிவிட்டு வந்தார்.

    ஆனால் இராஜசேகர் அதை விசாரித்து கல்யாணத்தை தடை செய்துவிட்டான். அதன் பிறகு அது பற்றி தாமரை கோபாலனிடம் சென்று எதுவும் பேசவில்லை. அதனால் அவர் கோபமாக இருந்தார். இருந்தாலும் தங்கையின் நிலைமை என்னவோ என்று அவர் தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டு ஒரத்தநாட்டில் என்ன நடக்கிறது என்று அவராகவே போனிலும் மற்றவர்கள் மூலமாகவும் விசாரித்து தெரிந்து கொண்டிருந்தார்.

    இன்று புகழ் தொலைபேசியில் அவரை சண்டை போட்டதும் அவருடைய கோபம் தாமரையின் மீது திரும்பியது. சம்மந்தம் பேச அனுப்பிவிட்டு அது வேண்டாம் என்று முடிவு எடுத்தவள் அதை பற்றி அவரிடம் தெரிவிக்கவில்லை. அப்படி தெரிவித்திருந்தால் முறையாக அவனுடைய வீட்டிற்கு சென்று சம்மந்தம் பேசியவர் இந்த கல்யாணம் ஒத்துவராது என்று அவரே முறைப்படி சொல்லியிருப்பார். அதுதான் மரியாதை.

    அப்படி சொல்லியிருதால் புகழ் இன்று அவரை கேள்வி கேட்டிருக்க முடியாது. அவரும் ஒரு வயதில் சிறிய பையனிடம் திட்டு வாங்கியிருக்க வேண்டியது இல்லாமல் போயிருக்கும். இதையெல்லாம் சிந்திக்காமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுத்து அதன் படி ஆடும் தங்கை தாமரை மீது அவர் கடும் கோவத்தில் இருந்தார்.

    - தொடரும்​
    Please post your comments here : http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/154004-comments-9.html
    [/JUSTIFY]
     
    1 person likes this.
  9. nithyakarthigan

    nithyakarthigan Gold IL'ite

    Messages:
    600
    Likes Received:
    509
    Trophy Points:
    188
    Gender:
    Female
    [JUSTIFY]அத்தியாயம் - 16

    பழைய கதை

    "ஹலோ... ஜெனி... என்ன பண்ணிட்டு இருக்க? நான் இங்க கேண்டீன்ல உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன். சீக்கிரம் வா...?" அவள் அவனிடம் தன்னுடைய காதலை ஒத்துக் கொண்டதற்கு மறுநாள் புகழேந்தி நிரஞ்சனியை கைபேசியில் அழைத்துப் பேசினான்.

    "எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு... நீங்க சாப்பிட்டுவிட்டு போங்க... நா அப்புறம் வர்றேன்..." அவள் அவனிடம் தன்னுடைய காதலை ஒத்துக் கொண்டாலும் அதை ரகசியமாக வைத்திருக்க விரும்பினாள்.

    "என்ன வேலை லஞ்ச் டைம்ல... என்னோட சாப்பிட பிடிக்கலான்னா நேரடியா சொல்லிட வேண்டியதுதானே..." அவன் கோபமாக பேசினான்.

    "ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க...? "

    "வேற எப்படி பேச சொல்ற...? உன்னை நேற்று பார்த்தது. நான் ஒன்னும் வெட்டி ஆஃபிசர் இல்ல... எனக்கும் வேலை இருக்கு... அதை ஒரு பக்கம் ஒதுக்கிவிட்டு தான் உனக்காக இங்க வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன். ஆனால் நீ உனக்கு மட்டும் தான் வேலை இருக்க மாதிரி பேசினால் அதற்கு என்ன அர்த்தம்?"

    "ஒரு அர்த்தமும் இல்லை.... இதோ வர்றேன்... கொஞ்சம் இருங்க..." என்று சொல்லிவிட்டு அவசரமாக கேண்டீனுக்கு சென்றாள்.

    அவன் அவளுக்கும் சேர்த்து உணவு வாங்கி வைத்துவிட்டு அவளுக்காக காத்திருந்தான். அவள் தயங்கி தயங்கி அவனுக்கு எதிரில் வந்து அமர்ந்தாள். அவர்களை பலரும் கவனித்தார்கள். அது புகழேந்தியை கொஞ்சமும் பாதிக்கவில்லை. ஆனால் நிரஞ்சனிக்கு கூச்சமாக இருந்தது. அவள் தலை குனிந்த படி யாரையும் பார்க்காமல் உணவில் கவனம் செலுத்துவது போல் அமர்ந்திருந்தாள்.

    ஒரு சிலர் அவர்கள் அருகில் நெருங்கி வந்து புகழேந்தியுடன் பேச்சு கொடுத்தார்கள். அவன் சளைக்காமல் அவர்களுடைய கண்களை சந்தித்து பேசினான். பார்ப்பவர்களிடம் எல்லாம் இருவரும் திருமணம் செய்துகொள்ள போவதாக மகிழ்ச்சியாக சொன்னான். நிரஞ்சனிக்கு மூச்சு முட்டியது. அவள் தண்ணியை 'மட மட ' குடித்து தன்னை ஆசுவாசப் படுத்திக்கொள்ள முயன்றாள்

    அந்த நேரத்தில் புகழேந்தி "ஜெனி எனக்கு மூன்று நாள் பெங்களூர்ல செமினார் இருக்கு. நாளைக்கு கிளம்பனும்" என்று கொஞ்சம் வருத்தமாக சொன்னான்.

    "ஹோ... போயிட்டுவாங்க..." என்று நிரஞ்சனி உற்சாகமாக சொன்னாள்.

    "நா இங்கிருந்து போறதுல உனக்கு அவ்வளவு உற்சாகமா.. எப்படியாவது என்னை தொலைச்சுட்டா உனக்கு சந்தோஷம். அப்படிதானே..." அவன் கடுகடுவென அவளிடம் விழுந்தான். அவனுக்கு இருக்கும் வருத்தம் அவளுக்கு துளியும் இல்லையே என்ற கோபத்தில் பேசினான்.

    "ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க... நா அப்படி நினைப்பேனா...?" அவள் அடிபட்ட குழைந்தை போல் முகத்தை வைத்துக் கொண்டு பேசினாள்.

    அவனுக்கும் எனவோ போல் ஆகிவிட்டது... சட்டென முகத்தில் லேசாக சிரிப்பை கொண்டுவந்து " சரி சரி விடு... ஆனால் இதுமாதிரி உன்னை அங்க இங்க கூப்பிட்டு தொல்லை செய்யமாட்டேன்... அந்த விதத்தில் உனக்கு சந்தோஷம் தானே..." என்று கேட்டான்.

    அவள் பதில் சொல்லாமல் புன்னகைத்தாள்.

    அந்த புன்னகை சொல்லும் பதிலை புரிந்துக் கொண்டவன் "தெரியும்...டீ உன்னை பற்றி..." என்று சிரித்துக் கொண்டே அருகில் இருந்த ஸ்பூனை எடுத்து அவள் தலையில் வலிக்காமல் தட்டினான்.

    இருவருக்குமே அந்த தருணம் மகிழ்ச்சியாக இருந்தது.

    மூன்று நாட்கள் பெங்களூர் சென்றுவிட்டு நான்காவது நாள் புகழேந்தி மருத்துவமனைக்கு வந்தான். அன்று அவனுக்கு வேலை அதிகமாக இருந்தது. உணவு இடைவேளையிலும் செமினாரில் அவனுடைய அனுபவம் மற்றும் அங்கு அவன் சேகரித்த விபரங்களை மற்ற மருத்துவர்களுடன் பகிர்ந்து கொள்ள கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், அன்று நிரஞ்சனியை உணவு இடைவேளையில் சந்திக்க முடியவில்லை.

    கலந்துரையாடல் முடிந்து மாலை வெளி நோயாளிகளை (OP) பார்க்கும் வரை அவனுக்கு ஓய்வுதான். அதனால் நிரஞ்சனிக்கு கைபேசியில் அழைத்து ஒரு பத்து நிமிடம் அவனுடைய அறைக்கு வந்து விட்டு போகும் படி அழைத்தான்.

    அவனுடைய அழைப்பை ஏற்று அங்கு வந்த நிரஞ்சனி
    "என்ன சொல்லுங்க..." என்றாள் அவசரமாக.

    "ஹ்ம்ம்... மூன்று நாள் வெளியூர் போய்விட்டு வந்திருக்கேனே... கொஞ்சமாவது ரொமாண்டிக்கா பேசுறாளா பார்... சுடுதண்ணிய கால்ல ஊத்திக்கிட்டு நிக்கிரவ மாதிரி உள்ளே வரும்போதே பறந்துகிட்டு வர்றா..." என்றான் அவளுக்கு கேட்கும்படி ஜாடையாக.

    "ஹலோ சார்... என்னை எதுக்கு வர சொன்னீங்க...?"

    "ஐயோ... அம்மா... தாயே... தயவுசெஞ்சு இந்த 'சார்... மோர்...' எல்லாம் கொஞ்சம் மூட்டை கட்டி வக்கிறியா.... உனக்கு புண்ணியமா போகும்..."

    "ம்ஹும்... நம்பவே முடியல..." என்றாள் அவள் சம்மந்தம் இல்லாமல்.

    "எதை நம்பமுடியல...?"

    "நான் இங்க வேலைக்கு சேர்ந்த புதுசுல உங்களை பார்க்கும் போது தமிழே தெரியாதோன்னு நினைப்பேன்... இப்போ பார்த்தா இந்த பேச்சு பேசுறீங்க... 'வாடி... போடி... சுடுதண்ணீ... பாவம்... புண்ணியம்ன்னு...' அப்போ நான் பார்த்தது உங்களை தானான்னு நம்ப முடியல..."

    "என்னாலையும் தான் நம்ப முடியல... ஒன்னும் தெரியாத 'அமுல் பேபி' மாதிரி இருந்துகிட்டு என்னையே கிண்டல் பண்ற..." என்று சிரித்தான்.

    "சரி சொல்லுங்க... எதுக்கு கூப்டீங்க " என்று அவளும் சிரிப்பினுடே கேட்டாள். அதற்கு பதிலாக அவன் அவளிடம் ஒரு பையை எடுத்துக் கொடுத்தான். அதில் மூன்று விலையுர்ந்த சுடிதார் செட் இருந்தது.

    "எதுக்கு இதெல்லாம்...?"

    "நல்லா இருந்தது... உனக்கு பொருத்தமா இருக்கும் என்று தோணிச்சு... வாங்கிட்டேன்... " என்றான். அவள் வேண்டாம் என்று சொல்லிவிடுவாளோ என்ற தவிப்பு அவன் கண்களில் அப்பட்டமாக தெரிந்தது

    "சரி... இதை நம்ம வீட்டுல கொண்டு போய் வைங்க... நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் இதை நான் பயன்படுத்திக்கிறேன்..." என்றாள்.

    அவள் அவனுடைய முதல் பரிசை மறுக்காமல் அழகாக தப்பித்துக் கொண்டவிதத்தை ரசித்தவன், அவள் 'நம் வீடு... நம் கல்யாணம்' என்று சொன்னதில் முழுதாக கவிழ்ந்துவிட்டான்.

    இன்றைய கதை

    நிரஞ்சனிக்கு பார்க்கும் மாப்பிள்ளையின் தரம் குறைந்து கொண்டே வந்தது. இதுவரை குறைந்தது நூறு மாப்பிள்ளையாவது பார்த்திருப்பார்கள். எதுவும் அமையவில்லை. அவளை பற்றி ஊரில் உள்ளவர்களுக்கு நல்லவிதமாக அபிப்ராயம் இல்லை. அதனால் நிரஞ்சனி பற்றிய விஷயம் மாப்பிள்ளை வீட்டிற்கு ஒன்றுக்கு இரண்டாக திரித்து சொல்லப்பட்டுவிடுகிறது. அவளுக்கு திருமணம் முடிவு செய்ய முடியாமல் அவர்கள் குடும்பத்து மூத்தவர்கள் தவித்தார்கள்.

    பேச்சு ஆரம்பிக்கும் போது சுவாரஸ்யமாக ஆரம்பிப்பவர்கள் இரண்டு மூன்று நாட்களில் 'பெண்ணை பற்றி தவறாக கேள்விப்பட்டோம்' என்று சொல்லிவிட்டு கழண்டுவிடுகிரார்கள்.

    ஒவ்வொரு முறையும் மாப்பிள்ளை வீட்டிலிருந்து 'உங்கள் பெண் எங்களுக்கு வேண்டாம்' என்ற செய்தி வரும் போதெல்லாம் நிரஞ்சனிக்கு அன்றைய நாள் நரகமாக மாறிவிடும். அந்த அளவுக்கு தாமரையும் இராஜசேகரும் அவள் மனதை காயப்படுத்தி விடுவார்கள். அவர்களும் அவளை நோகடிக்க எண்ணி செய்ய மாட்டார்கள். வெளியில் அவர்கள் படும் அவமானத்தை அவளிடம் கோபமாக காட்டுவார்கள்.

    நிரஞ்சனி தனக்கு மாப்பிள்ளை பார்ப்பதை தடுக்க முடியாமலும், அது ஒவ்வொரு முறை தட்டிப் போகும் போதும், அந்த மகிழ்ச்சியை அனுபவிக்க முடியாலும் நிம்மதியை தொலைத்துவிட்டு வாழ்ந்து கொண்டிருந்தாள். அதில் அவள் தனக்கு பார்க்கப்படும் மாப்பிள்ளைகளை பற்றி தெரிந்து கொள்ளாமலே இருந்தாள்.


    இந்த நிலையில் சிவரஞ்சனி நிரஞ்சனியிடம் தனியாக கேட்டாள். "என்னடி ரஞ்சி செய்யப்போற...?"

    "எதுக்குடி...?"

    "உனக்கு மாப்பிள்ளை பார்த்துகிட்டு இருக்காங்க... தெரியாதது மாதிரி பேசுற...?"

    "ஆமா... அதுக்கு என்ன...? எப்படியும் என்னை கல்யாணம் செஞ்சுக்க எவனும் வரப்போறதில்லை... அப்புறம் அதை எதுக்கு நினைக்கணும்?" என்று சாதரணமாக சொன்னாள்.

    "இப்ப பார்த்திருக்குற மாப்பிள்ளை முடிவாயிடும் போலருக்குடி..."

    "என்னடி சொல்ற...? எப்படி?"

    "மாப்பிள்ளை வேற யாரும் இல்ல... இராஜசேகர் மாமா தோட்டத்துல வேலை செய்ற தர்மன் தான்.... அவனுக்கு நம்ம வீட்டு கதை எல்லாம் தெரியும். நிலம், வீடு, 'ட்ராக்டர்' எல்லாம் வாங்கி தர்றேன்னு சொல்லி அவனை சம்மதிக்க வச்சிருக்காங்க.... இப்பதான் அம்மாவும் பெரியம்மாவும் பேசிக்கிறதை கேட்டேன். அவன் நம்ம ஜாதிங்கிரத தவிர... அவனுக்கு என்னடி தகுதி இருக்கு உன்ன கல்யாணம் செஞ்சுக்க... ச்ச... இந்த கொடுமைய என்னால சகிக்க முடியல..."

    சிவரஞ்சனி சொன்னதை கேட்ட நிரஞ்சனிக்கு தலையில் ஒரு கூடை நெருப்பை அள்ளி கொட்டியது போல் இருந்தது. புகழேந்தியை தவிர அவளுக்கு யாரை மாப்பிளையாக பார்த்தாலும் அவளுக்கு சம்மதம் இல்லைதான். அது குப்பனாக இருந்தாலும் சரி சுப்பனாக இருந்தாலும் சரி... அதை பற்றி அவளுக்கு எந்த அபிப்ராயமும் இல்லை தான்....

    ஆனால் அவளை பெற்றவளுடைய பாசத்தை நினைக்கும் போது அவளுக்கு புல்லரித்தது...

    எவ்வளவு பெரிய காரியத்தை செய்திருக்கிறாள் அவளுடைய அன்னை....

    படிப்பறிவு சுத்தமாக இல்லாத கைநாட்டு... பொழுது சாய்ந்தால் கலச்சாராயம் எங்கே என்று தேடி ஓடும் குடிகாரன்... ஒருஅடி நிலம் சொந்தமாக இல்லாத கூலி... பார்க்கவே பயங்கரமான உருவம்... இவன் எனக்கு மாப்பிள்ளையாம்...! அதை யார் பார்த்திருந்தாலும்... என்னை பெற்றவள் அருமையாக வளர்த்தவள் அவனை மாப்பிள்ளையாக்க சம்மதித்துவிட்டாள்...!

    தந்தையை பற்றி பேச்சில்லை... அவர் எப்பவுமே அவள் மீதும் அவளுடைய அக்கா மீதும் பாசமாக இருக்க மாட்டார். ஆனால் அம்மா...! அவளால் எப்படி முடிந்தது...? அவளுக்கு என்ன அப்படி பிடிவாதம்...? எதை சாதிக்க என்னை இந்த நரகத்தில் தள்ள சம்மதித்தாள்....?


    நிரஞ்சனி அவளுடைய அன்னையை தேடிச் சென்றாள்...

    "ஏம்மா.. ஏம்மா இப்படி பண்ணின...? உனக்கு எப்படி மனசு வந்தது...? எனக்கு அந்த தர்மன் தான் மாப்பிள்ளையா...? " பட பட வென்று உதடு துடிக்க பேசினாள்.

    அவர்கள் யாருக்குமே நிரஞ்சனியை தர்மனுக்கு கொடுக்க மனம் இல்லை. ஆனால் வேறு வழியே இல்லை... எவ்வளவு தேடியும் அவளுக்கு வேறு மாப்பிள்ளை கிடைக்கவில்லை. ஒரு முறைக்கு இரண்டு முறை பேர் கெட்டு போன பெண்ணை திருமணம் செய்து கொள்ள எல்லோரும் தயங்கினார்கள்.

    முதலில் அழக்கான படித்த வசதியான நல்ல குணம் உள்ள மாப்பிள்ளையை பார்த்தார்கள். அமையவில்லை.... அழகு இல்லை என்றால் பரவா இல்லை... வசதியான, படித்த நல்ல குணமான மாப்பிள்ளையாக இருந்தால் போதும் என்று நினைத்தார்கள்.

    அதுவும் அமையவில்லை. சரி.. வசதி வேண்டாம்... படிப்பும் குணமும் போதும் என்று நினைத்தால் அதுவும் அமையவில்லை... சரி குணம் மட்டும் போதும் என்றல் "ம்ஹும்...."

    அதன் பிறகுதான் இந்த தர்மனை பிடித்தார்கள்.

    'அவன் கொஞ்சம் குடிப்பான் அதுதானே... நம்ம தோட்டத்தில் வேலை செய்கிறான். நம்முடைய பேச்சை மீறி என்ன செய்துவிட முடியும்...? நம்ம ஜாதியா போய்விட்டான்... அவனை திருத்தி நம்ம வழிக்கு கொண்டு வந்து விடலாம்... சொத்து சுகமெல்லாம் நம்மலே உருவாக்கி கொடுத்துவிடலாம்...'

    'படிப்பென்ன படிப்பு.. நம்ம பெரிய மாப்பிள்ளை கூட படிக்கவில்லை... அவர் எவ்வளவு குணமா இருக்கார்... அது மாதிரி இவனும் இருப்பான்' என்று ஒரு வழியாக தங்களை சமாதானம் செய்து கொண்டார்கள்.

    இந்த நேரத்தில் நிரஞ்சனி இப்படி ஒரு கேள்வியை கேட்டதும் முதலில் அங்கிருந்த அல்லி, தாமரை, பாக்கியத்தம்மள் அனைவருமே திகைத்தார்கள். குற்ற உணர்வால் வாயடைத்தார்கள்.

    ஆனால் அடுத்த கணமே தன்னை சுதாரித்துக் கொண்ட தாமரை "எல்லாத்துக்கும் நீதானடி காரணம்... நீயே உந்தலையில மண்ணள்ளி போட்டுகிட்ட... எங்கள எங்க போயி உனக்கு நல்ல மாப்ள புடிக்க சொன்ன...? உம்பேரு தான் ஊரு சிரிக்குதே..." என்று நிரஞ்சனியை வார்த்தையால் குதறினாள்.

    "இப்படியெல்லாம் பேசாதம்மா... எனக்கு தாங்க முடியல... எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி நான் உன்ன கேட்டேனா? எதுக்கு இப்படி செய்ற? நான் என்ன தப்பு பண்ணிவிட்டேன்னு என்னை இப்படி அசிங்க படுத்துற? எனக்கு கல்யாணமே வேண்டாம்மா... என்ன விட்டுடு..." அவள் கண்களில் கண்ணீரோடு தன் தாயிடம் யாசித்தாள்.

    தாமரைக்கு தன் மகள் பயத்தில் முகம் வெளுத்து தன்னிடம் கெஞ்சிக் கொண்டிருக்கும் கோளம் வயிற்ரை பிசைந்தது. ஆனாலும் மனதை பாறையாக்கிக் கொண்டு

    "கல்யானம் பண்ணிக்காம... ஊரே பொண்ண கட்டிகுடுக்காம வீட்ல வச்சுருக்கேன்னு என்ன காரி துப்பவா...? நீ கல்யாணமோ... கருமாதியோ... பண்ணிக்கிட்டு என்னைவிட்டு தொலைஞ்சா தான் எனக்கு நிம்மதி..." தயவு தாச்சன்யமே இல்லாமல் பேசினாள்.

    "எதுக்கும்மா என்ன ராணி மாதிரி வளத்த...? இப்போ எதுக்கு என்னை இப்படி உயிரோட கொல்ற?"

    "........................" மகளின் கூர்மையான பார்வை தாமரையை வாயடைக்க செய்தது.

    "நீ என்ன கொலை பண்ணினா கூட பரவால்லம்மா... ஆனா என்ன உயிரோட வச்சு என்னோட உணர்வுகளை கொன்னு என்னை நடைபிணமா ஆக்கிகிட்டு இருக்கம்மா... நீ பேசுற ஒவ்வொரு வார்த்தையும் என் இதயத்த ரணமக்குதுன்னு உனக்கு புரியுதா...?"

    "..................................."

    "மனச வலிக்குதும்மா... தாங்க முடியல... நீ அன்னைக்கு சொன்னியே... ஏதோ விஷம் வாங்கி தர்றேன்னு... அதை தயவுசெஞ்சு வாங்கி குடும்மா... " என்று சொன்னவள், தாமரை ஏதோ பேச ஆரம்பிக்கவும் "எதுவும் சொல்லிடாதம்மா... சொல்லிடாத... இதுக்கு மேல உன்னோட பேச்ச தாங்குற சக்தி எனக்கு இல்ல... அதுக்கு பதிலா என்னை கொன்னுடு.... கொன்னுடு.... " என்று முகத்தை மூடிக் கொண்டு தரையில் சரிந்து குமுறி அழுதாள்.

    அங்கிருந்த அனைவருக்குமே ஆத்திரம் தொண்டையை அடைத்தது. தங்களுடைய முந்தானையை வைத்து வாயை அடைத்து அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டார்கள். அங்கு ஒரு மூலையில் கையில் குழந்தையுடன் நின்ற சிவரஞ்சனி நிரஞ்சனியின் வேதனையை பார்த்து அழுதே விட்டாள்.

    சிவரஞ்சனி நிரஞ்சனியை அழைத்துக் கொண்டு தன்னுடைய அறைக்கு சென்றாள். நிரஞ்சனி உள்ளே சென்று அறை கதவை தாள் போட்டதும் தாமரை வீட்டிற்கு பின் பக்கம் இருக்கும் தோப்பை நோக்கி ஓடினாள். அவளை தொடர்ந்து அல்லியும், தடியை உன்றிக் கொண்டே பாக்கியத்தம்மாளும் வேக வேகமாக நடந்தார்கள்.

    நிரஞ்சனியால் அவர்களுடைய பேச்சை கேட்க முடியாத தூரம் வரை சென்ற தாமரை, தரையில் புரண்டாள்.

    "ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டோர் திரும்புவதில்லை " என்று கேள்விப் பட்டிருப்போம். ஆனால் அங்கு உயிரோடு இருக்கும் மகளை பலி கொடுக்க துணிந்துவிட்ட தாய் அழுது புரண்டாள்.

    "ஐயோ அல்லி... எம்மகள நானே கொல்லப்போரேனே...டி.... என்ன இந்த நிலைமைக்கு கொண்டு வந்துட்டாளே... ராசாத்தி மாதிரி இருக்கவளுக்கு ஐயனாரு மாதிரி இருக்குற கூலிகாரப் பயலாடி மாப்ள...? நா என்ன செய்வேண்டி... எனக்கு வேற வழி தெரியலையே... " என்று அழுதாள். அவளை சமாதனம் செய்ய முடியாமல்... தோன்றாமல் அல்லியும் அவளுடைய தாய் பாக்கியத்தம்மாளும் கண்ணீர் வடித்தார்கள்.

    அவர்கள் யாருக்குமே வேறு ஜாதிகாரனை மாப்பிள்ளையாக ஏற்கும் தைரியம் இல்லை. அதனால் வேறு வழியும் தெரியவில்லை.


    - தொடரும்​
    Please post your comments here : http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/154004-comments-9.html
    [/JUSTIFY]
     
  10. nithyakarthigan

    nithyakarthigan Gold IL'ite

    Messages:
    600
    Likes Received:
    509
    Trophy Points:
    188
    Gender:
    Female
    [JUSTIFY]அத்தியாயம் - 17

    பழைய கதை


    அந்த வார ஞாயிற்றுக் கிழமை புகழேந்தியின் அண்ணி நயந்தி நிரஞ்சனியை வீட்டிற்கு மத்திய உணவிற்கு அழைத்திருந்தாள். அன்று புகழேந்திக்கு வேலை நாள் அல்ல. நிரஞ்சனிக்கு அரை நாள் வேலை. அவள் வேலை நேரம் முடிந்து மருத்துவமனையிலிருந்து வெளியே வரவும் புகழேந்தியின் கார் மருத்துவமனை நுழைவாயிலுக்குள் வரவும் சரியாக இருந்தது.

    நிரஞ்சனி புகழேந்தியின் காரை நெருங்கினாள்.
    "ம்ம்... ஏறு..." என்று அவளுக்கு முன் பக்க கதவை திறந்துவிட்டான் புகழேந்தி.

    'இவனோட பெரிய தொல்லையா போச்சு... என்னைக்கு யார் கண்ணுல மாட்டி வீட்டுல மாட்டப் போறேனோ தெரியல...' என்று மனதில் நினைத்துக் கொண்டே அவனுக்கு அருகில் அமர்ந்து பயணம் செய்து அவனுடைய அண்ணன் வீட்டை அடைந்தாள்.

    அவள் காரில் இருந்து இறங்கும் போது பக்கத்து வீட்டிலிருந்து நாற்பது வயது மதிக்கதக்க ஒரு பெண் வந்தாள்.

    "என்னம்மா... நிரஞ்சனி நல்லா இருக்கியா...? நீ தாமரை அக்கா மகள் தானே...? தாமரை அக்கா எப்படி இருக்கு? " என்று கேட்டாள்.

    நிரஞ்சனிக்கு சப்த்தநாடியும் ஒடுங்கிவிட்டது. "ஆ... ஆமா... நல்லா இருக்காங்க... நீங்க..." என்று திக்கி தினரிக்கொண்டே கேட்டாள்.

    "என்னை தெரியலையா...! நாந்தான்... உங்க அம்மாவோட பெரியப்பா மகளோட சின்ன ஒர்ப்படியார்... உனக்கு சித்தி மொற..." என்று உறவுமுறை விளக்கம் சொன்னாள்.

    'போச்சு... போச்சு... இன்னிக்கு வீட்ல நமக்கு சமாதிதான்...' என்று மனதிற்குள் நடுங்கினாள். முகத்தில் வியர்வை முத்துமுத்தாக அரும்பிவிட்டது. கைகள் லேசாக நடுங்கியது. சமாளித்து சிரித்துக் கொண்டே உள்ளே வந்தாள். யாரிடமும் சகஜமாக இருக்க முடியவில்லை. 'இப்படியே எங்கேயாவது ஓடிவிடலாமா...' என்று இருந்தது.

    நிரஞ்சனியின் மனநிலையை உணர்ந்து கொண்ட புகழேந்தி, அவள் வயிற்றில் பாலை வார்ப்பவன் போல் அந்த செய்தியை சொன்னான்.

    "பயப்படாத ஜெனி... இவங்களுக்கு நம்ப விஷயம் தெரியும்... என்னோட சார்பா உங்க வீட்ல சமாதானம் பேசுறேன்னு சொல்லியிருக்காங்க... நம்ப கல்யாணத்துக்கு இவங்க தான் ஹெல்ப் பண்ண போறாங்க..." என்று அந்த பெண்ணை அறிமுகப்படுத்தி வைத்தான்.

    நிரஞ்சனிக்கு போன உயர் திரும்பி வந்தது. 'இப்போதைக்கு விஷயம் வீட்டிற்கு போகாது... அதுவே போதும்... அதோடு இவங்க நம்ம ஊர் காரவங்க... இவங்களே நமக்கு சப்போர்ட் பண்ணி பேசுறதா சொல்லியிருக்காங்களே... நம்ம கல்யாணம் எந்த பிரச்சனையும் இல்லாமல் நடக்கவும் வாய்ப்பு இருக்கு போல...' என்று நினைத்து மகிழ்ந்தாள்.

    "ஆமாம்மா... நீ கவலைப்படாத... தாமரை அக்காகிட்ட நா பேசுறேன். அரசு மாமா எதுக்கும் தடை சொல்ல மாட்டாரு... உங்க கல்யாணம் நல்ல படியா நடக்கும் " என்று சொல்லி அந்த பெண் நிரஞ்சனியின் மனதை குளிர்வித்தாள்.

    "ரொம்ப நன்றிங்க..." நிரஞ்சனி நெகிழ்ந்து போய் நன்றி சொன்னாள்.

    "நன்றியெல்லாம் வேண்டாம்மா... சும்மா சித்தின்னு சொல்லு... நானும் உனக்கு ஒரு சித்தி தான்..." அந்த பெண் உரிமையாக பேசினாள்.

    நிரஞ்சனியின் படபடப்பு போய் அனைவருடனும் உற்ச்சாகமாக பழகினாள். நயந்தி வளர்க்கும் நாய் குட்டியுடன் கொஞ்சி விளையாடினாள். புகழேந்தியுடன் சரிக்கு சரி வாயாடினாள். புகழேந்தியின் அண்ணன் கூட நிரஞ்சனியுடன் கலகலப்பாக பேசினார். நயந்தி அன்று மத்தியம் பலமான விருந்து சமைத்திருந்தாள். நயந்திக்கு உணவு மேஜையில் உணவு பாத்திரங்களை கொண்டு வந்து வைக்க உதவிகள் செய்தாள். அவர்கள் யாருமே நிரஞ்சனியை வேற்று ஆளாக பார்க்கவில்லை. அவளுக்கும் அவர்கள் குடும்பத்தில் ஒருத்தியாக மாறிவிட்டதாக தோன்றியது.

    புகழேந்தி அவளை உணவு முடிந்ததும் வீட்டை சுற்றிக் காண்பிக்கும் பெயரில் அவனுடைய அறைக்கு அழைத்து சென்று வம்புப் பண்ணினான்.... சீண்டினான்.... கேலி பேசினான்.... சிரித்தான்... மகிழ்ந்தான்... அன்றைய தினம் அவனுக்கு சொர்கமாக தோன்றியது. அந்த வீட்டில் இருந்த அனைவருக்குமே அன்றைய நாள் சிறந்த நாளாக இருந்தது.

    அன்று மாலை விருந்து முடிந்து புகழேந்தி நிரஞ்சனியை பஸ் ஏற்றி அனுப்பிவிட்டு மேம்பாலம் வழியாக வீட்டிற்கு திரும்பும் போது ஒரு விபத்தைப் பார்த்தான். ஒரு விலையுயர்ந்த பைக்கின் மீது ஒரு லாரி மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் அங்கு ஜன நடமாட்டமே இல்லாததாலும், மேம்பாலத்தில் எப்போதுமே அதிகம் கூட்டம் இருக்காது என்பதாலும் அடி பட்டுகிடந்தவனுக்கு யாரும் உதவவில்லை.

    புகழேந்தி தனி ஒருவனாக அவனுக்கு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதற்கட்ட சிகிச்சை அளித்தான். அந்த நேரத்தில் மருத்துவமனையில் இல்லாத சில மருத்துவர்களுக்கும் தொலை பேசியில் அழைத்து அந்த புதியவனுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க ஏற்ப்பாடு செய்தான். அவனுடைய உடமைகளை ஆராய்ந்து அவனுடைய வீட்டிற்கும் தகவல் தெரிவித்துவிட்டு வீட்டிற்கு சென்றான்.

    மறுநாள் அந்த பகுதி MLA புகழேந்தியை சந்தித்தார்.

    "டாக்டர்.... நீங்க தான் என் பையன காப்பாத்தினதா சொன்னாங்க... நன்றின்னு ஒரு வார்த்தையை சொல்லி நீங்க செஞ்சிருக்க இந்த பெரிய காரியத்துக்கு ஈடுகட்டிட முடியாது. நீங்க என் குலவிளக்கு அணையாம காப்பாத்தியிருக்கீங்க.... இந்த உதவிய நா என்னோட வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன்..." என்று நெகிழ்ச்சியாக பேசினார்.

    "இதுல என்ன சார் இருக்கு... மனிதாபிமானம் இருக்க எந்த மனிதனும் செய்யக் கூடியதை தானே நான் செஞ்சிருக்கேன்...." என்று அவரை அமைதிபடுத்தினான்.

    "நீங்க இப்படி பேசுறதுக்கு காரணம் உங்க பெரிய மனசு தம்பி... இந்த காலத்துல யாரும் மனிதாபிமானம் எல்லாம் பார்க்கிறது இல்ல... அவங்க அவங்க வேலை தான் முக்கியம் என்று போயிகிட்டே இருக்காங்க... ஏன்... நானும் அப்படி தான். ஆனா நீங்க வித்தியாசமானவர் தம்பி..." அவர் மகனுடைய உயிர் எமலோகம் சென்று திரும்பியிருக்கும் நெகிழ்ச்சியில் புகழேந்தியை ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளினார்.

    "அத விடுங்க சார்... உங்க பையனை பார்த்தீங்களா..?" என்று பேச்சை மாற்றி வேறு பக்கம் அவர் கவனத்தை திருப்பினான் புகழேந்தி.

    கடைசியாக "தம்பி... சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதிங்க... உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் தாயாகாமல் என்னுகிட்ட கேளுங்க...." என்று சொல்லிவிட்டு சென்றார்.

    இன்றைய கதை

    நிரஞ்சனியின் திருமணம் முடிவு செய்யப்பட்டு, நிச்சயதார்த்த தேதியும் முடிவு செய்யப்பட்டுவிட்டது. 'இன்னும் ஒரே வாரத்தில் நிச்சயம். அது முடிந்து பத்து நாட்களில் திருமணம்' என்று முடிவு செய்திருந்தார்கள். யாருக்குமே இந்த கல்யாணத்தில் திருப்தி இல்லாததாலோ என்னவோ வீட்டில் கல்யாண கலை இல்லவே இல்லை.

    எப்போதுமே புகழ் நிரஞ்சனியின் நெஞ்சில் நிறைந்திருந்தாலும் நிச்சயதார்த்த நாள் நெருங்க நெருங்க நிரஞ்சனிக்கு அவனுடைய நினைவு ஒரு நொடி விலகாமல் அவளை இம்சித்தது.

    "அங்காடி தெரு" திரைப்படத்தின் பாடல் சிவரஞ்சனியின் மடிக்கணினியில் ஓடிக் கொண்டிருந்தது. அந்த பாடலோடு சேர்ந்து நிரஞ்சனியும் புகழேந்தியிடம் பேசினாள்.

    "உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
    உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்
    நீ பார்க்கும் போதே மழை ஆவேன்
    உன் அன்பில் கண்ணீர் துளி ஆவேன்
    நீ இல்லை என்றால் என்னாவேன்
    நெருப்போடு வெந்தே மண்ணாவேன்

    நீ காதலெனும் போர்க்களத்தில் என்னை வென்றாய்
    கண் பார்க்கும் போதே பார்வையாலே கடத்தி சென்றாய்
    நான் பெண்ணாக பிறந்ததற்கு அர்த்தம் சொன்னாய்
    முன் அறியாத வெட்கங்கள் நீயே தந்தாய்

    என் உலகம் தனிமை காடு
    நீ வந்தால் பூக்கள் நூறு
    வருவாயா நீ வருவாயா

    உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும்
    என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்
    உன் காதல் ஒன்றை தவிர
    என் கையில் ஒன்றும் இல்லை
    அதை காக்க உன்துணை வேண்டும்
    வருவாயா நீ வருவாயா "


    பாடல் முடிந்ததும் மீண்டும் அந்த பாடலை ஒலிக்க விட்டாள். அந்த பாடலை கேட்கும் போதும், அந்த பாடல் வரிகளை கண்ணீர் வழிய உச்சரிக்கும் போதும் புகழேந்தியுடன் பேசுவதாகவே உணர்ந்தாள். அதனால் மீண்டு மீண்டும் அந்த பாடலை கேட்டுக் கொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில் மடிகணினியை அனைத்துவிட்ட பிறகும் அந்த பாடல் நிரஞ்சனியின் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

    யாரோடும் எதுவும் பேசாமல் விட்டத்தை வெறித்துக் கொண்டு, ஒரே பாடலை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டு நாள் முழுக்க அமர்ந்திருக்கும் நிரஞ்சனியை பார்க்க சிவரஞ்சனிக்கு பயமாக இருந்தது.

    இன்னும் நான்கு நாட்களில் நிச்சயம் என்கிற நிலையில் நிரஞ்சனியை வேம்பங்குடிக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு அவள் தனித்து விடப்பட்டாள். பெற்றோர் இருவரும் வயல் தோப்பு என்று சென்று விட, அவளுக்கு துணையாக அங்கு வந்து இருந்த பாக்கியத்தம்மாளும் முதுமையின் காரணமாக உறக்கத்திலும், விழித்திருக்கும் நேரம் பக்கத்து வீட்டு பெரியவர்களிடம் கதை பேசுவதிலும் நேரத்தை கழிக்க, நிரஞ்சனி தனிமை தீயில் சுகமாக வெந்து கொண்டிருந்தாள்.

    அந்த நிலையிலும் பெற்றோரை மீறி புகழேந்தியை திருட்டுத்தனமாக திருமணம் செய்து கொள்ள அவள் மனம் ஒப்பவில்லை.

    'என்ன செய்வது...? என்ன செய்வது...? என்ன செய்வது...?' என்ற கேள்வி மட்டும் தான் அவளுடைய மூளையில் முழு நேரமும் ஓடிக் கொண்டிருக்கும். சில நேரங்களில் யாரோ பின்னந்தலையை இறுக்கி பிடிப்பது போல் உணர்வாள். இன்னும் கொஞ்ச நாள் இதே நிலைமையில் இருந்தால் அவளுக்கு நிச்சயம் பைத்தியம் பிடித்துவிடும் என்பதில் சந்தேகம் இல்லை.

    அன்று காலை விடியலிலேயே இராஜசேகர் தாமரையின் வீட்டிற்கு வந்தான்.
    "அத்த மாமா எங்க...?" இராஜசேகர் தாமரையிடம் கேட்டான்.

    "தோப்பு பக்க(ம்) போனாரு மாப்ள... என்னா சேதி...?"

    "நிச்சயத்த நமக்குள்ள ஒரு பத்து பேர மட்டும் வச்சு முடிச்சுக்குவோமுன்னு நெனக்கிறேன். செலவுக்கு பாக்குறேன்னு நெனச்சுடாதிங்க... என்னமோ எல்லாருகிட்டயும் போயி சொல்ல புடிக்கல..." அவன் தயக்கமாக சொன்னான்.

    தாமரைக்கும் புரிந்தது. 'தெரிந்தவர் தெரியாதவர்களுக்கெல்லாம் அம்பலமாகிவிட்டது, நிரஞ்சனி புகழேந்தி விஷயம். அதை உறுதி செய்வது போல் அவசர கல்யாணம். அதுவும் தோட்டத்தில் வேலை செய்யும் ஒரு கூலிக்கு பெண் கொடுக்க போவதாக சொல்லிக்கொள்ள யாருக்கு தான் பெருமையாக இருக்கும்...? '

    தாமரைக்கு மனம் கலங்கியது. ஆனாலும் எல்லா வழியிலும் முயன்றுவிட்டு மீதமிருக்கும் ஒரே வழி இதுதான் என்று தெரிந்த பின்பும் இதையும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு என்ன செய்வது...? பெண் பிள்ளை எவ்வளவு நாள் தனியாக வாழ முடியும்...? என்றெல்லாம் யோசித்து தன்னை திடப்படுத்திக் கொண்டு

    "சரி... மாப்ள." என்றாள்.

    "நா கெளம்புறேன்... மாமா வந்தா சொல்லுங்க..." என்று சொல்லிவிட்டு அவன் கிளம்பிவிட்டான்.

    அரசு இந்த கல்யாண விஷயத்தில் எதிலும் பட்டுக்காமல் இருந்தார். அவர் எப்பொழுதுமே அப்படித்தான். மூத்த மகள் திருமணத்திலும் தானாக பொறுப்பாக எதுவும் அவர் செய்ததில்லை. மாலை ஆனால் அவருக்கு குடிக்க வேண்டும். அது தான் அவருக்கு முக்கியம். அது தவிர வீட்டில் எது நடந்தாலும் அது பற்றி அவருக்கு அக்கறை இல்லை. இராஜசேகர் தான் முழு பொறுப்பையும் எடுத்து செய்தான்.

    புகழேந்திக்கு வாழ்க்கை நரகமாக இருந்தது. நிரஞ்சனியை எப்படி திருமணம் செய்து கொள்வது என்று புரியாமல் தினறினான். அவளுக்கு நடக்கும் திருமண ஏற்படுகளை பற்றி தெரிந்து கொண்டவன் அந்த திருமணத்திலிருந்து நிரஞ்சனியை எப்படி காப்பது என்று தெரியாமல் தவித்தான்.

    அது பற்றி சிவரஞ்சனியின் கைபேசிக்கு தொடர்பு கொண்டு நிரஞ்சனியோடு பேச முயற்சி செய்தான்.

    "ஹலோ சிவரஞ்சனி... நான் புகழ் பேசுறேன்"

    "ஒரு நிமிஷம் இருங்க... சரியா கேட்கல " என்ற சொல்லிக் கொண்டே சிவரஞ்சனி வெளிப்பக்கம் யாரும் இல்லாத இடத்திற்கு நழுவி புகழேந்தியுடன் பேசினாள்.

    "சொல்லுங்க புகழ்..."

    "ஜெனி எங்க...? நான் அவகிட்ட பேசணும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்..."

    "அவ வேம்பங்குடிக்கு போய்விட்டா... இன்னிக்கு தான் பெரியம்மா அழச்சுகிட்டு போனாங்க..."

    "ஓ... அவளோட பேச வேற நம்பர் ஏதாவது இருக்கா...?"

    "இல்லையே..."

    புகழேந்திக்கு ஏமாற்றமாக இருந்தது.

    "அவ எப்படி இருக்கா... அங்க என்ன நடக்குது? கல்யாணம் முடிவான மாதிரி கேள்விப்பட்டேனே... உண்மையா?" என்று விபரம் கேட்டான்.

    சிவரஞ்சனியும் அங்கு நடக்கும் கூத்தை எல்லாம் மறைக்காமல் சொன்னாள். நிரஞ்சனியின் நிலையையும் அவனுக்கு விளக்கமாக சொன்னாள்.

    அவனுக்கு நிரஞ்சனி மேல் எரிச்சல் தான் வந்தது. போனில் அவள் கிடைத்திருந்தால் அவளை குதரியிருப்பான். ஆனால் அந்த விதத்தில் நிரஞ்சனி தப்பித்துவிட்டாள்.

    புகழேந்தி, நிரஞ்சனியை வேம்பங்குடியிலிருந்து வெளியே கொண்டுவர நண்பர்களோடு ஆலோசனை செய்தான். அனைவரும் ஒத்த கருத்தாக "வேம்பங்குடிக்குள் போக வேண்டாம்..." என்று தான் சொன்னார்கள். முட்டாள் தனமாக அவசரப்பட்டு வேம்பங்குடிக்குள் சென்று மாட்டிக்கொள்ள புகழேந்திக்கும் விருப்பம் இல்லை. ஆனால் நிரஞ்சனியை வேம்பங்குடியிலிருந்து வெளியே கொண்டு வருவதில் உறுதியாக இருந்தான்.

    அது பற்றி அவனுடைய அண்ணனிடம் பேசினான்.

    "அண்ணா... இந்த பிரச்னைக்கு என்ன செய்றது..? கண்டிப்பா நிரஞ்சனிய நா கல்யாணம் செஞ்சே ஆகனும். அந்த ஊர் ஆளுங்க சரியான காட்டானுங்கன்னு எல்லோரும் சொல்றாங்க... என்ன செய்றது?"

    "அந்த பொண்ண ஃபோன்ல கூப்பிட்டு ஒரத்தநாடு வரைக்கும் வர சொல்லிடு. அங்க நம்ப போய் அழைச்சுகிட்டு வந்துடுவோம்."

    "அவ வர மாட்டாண்ணா... அதுவும் இல்லாம அவள காண்டாக்ட் பண்ண முடியல..."

    "ஏண்டா வராது...? அந்த பொண்ணு உன்ன லவ் பண்ணுது தானே...! அந்த பொண்ணு உறுதியா இல்லன்னா எதுவும் செய்ய முடியாதுடா புகழ்..."

    "அவ என்ன லவ் பண்றதுல எந்த சந்தேகமும் இல்லைண்ணா... அத அவ எங்க... யாகிட்ட வேணுன்னாலும் சொல்வா... ஆனா, வீட்டைவிட்டு வர மாட்டா.. பெத்தவங்களுக்கு தெரியாம கல்யாணம் செஞ்சுக்க மாட்டா..."

    "அப்படின்னா அவங்க அப்பா அம்மாகிட்ட பேச வேண்டியது தான்... "

    "அதுங்க நம்ப பேச்ச கேட்டா தான் பிரச்சனை இல்லையே... அங்க ஒர்த்தன் இருக்கான்... இராஜசேகர்.... அவன் பேச்சு தான் அங்க எல்லாமே... நம்ப பேசி எல்லாம் ஒரு பயனும் இருக்காது..." என்று சலிப்பாக சொன்னவன், திடீரென உர்ச்சாகமாகி

    "நா வேணுன்னா அவள ராத்திரியோட ராத்திரியா வீடு புகுந்து தூக்கிகிட்டு வந்துடவா.... அதுதான் இப்போதைக்கு இருக்க ஒரே வழி..." என்றான்.

    "ஹேய்... அதுமாதிரி எல்லாம் செஞ்சுடாதடா... இது என்ன சினிமாவா... ஒரு கிராமத்துக்குள்ள போயி ஒரு பொண்ண அவ்வளவு சுலபமா உன்னால தூக்கிகிட்டு வந்துட முடியுமா? மாட்னா அங்கயே சமாதிதான்.... உன்னோட சம்பள கூட எங்க கண்ணுல காட்டாம அழுச்சுடுவானுங்க... காட்டு பசங்க... " என்று சொன்னார்.

    அப்போது அவனுடைய அண்ணி நயந்தி குறுக்கிட்டு

    "ஏங்க... நம்ம பேசினா தானே கேட்க மாட்டாங்க? யாராவது பெரிய ஆளுங்கள வச்சு பேசினா என்ன? அப்போ அந்த ஊர்காரவங்க கேட்டு தானே ஆகணும்?" என்றாள்.

    "இது நல்ல யோசனை..." என்று புகழேந்தியின் அண்ணன் சொல்ல அவனும் தலையை ஆட்டி அதை ஆமோதித்தான்.



    - தொடரும்​
    Please post your comments here : http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/154004-comments-10.html
    [/JUSTIFY]
     
    1 person likes this.

Share This Page