1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மனதில் தீ...!!! - all parts

Discussion in 'Stories in Regional Languages' started by nithyakarthigan, Dec 17, 2011.

  1. nithyakarthigan

    nithyakarthigan Gold IL'ite

    Messages:
    600
    Likes Received:
    509
    Trophy Points:
    188
    Gender:
    Female
    மனதில் தீ...!!!

    அத்தியாயம் -1

    [JUSTIFY]பச்சை பசேலென்று, பார்க்க பட்டுக்கம்பளம் போர்த்தியது போல் இருபக்கமும் வயல்வெளி... நடுவில் நீளமான கருத்து அகன்ற தார் சாலை... சாலையோரம் வரிசையாக புங்கை மரங்கள் வெயிலை சாலையை நெருங்கவிடாமல் அரணாக காத்து நின்றன. அந்த மரங்களின் வேர்களை ஒட்டி வாய்க்கால் 'சல சல' வென ஓடிக்கொண்டிருக்க தென்றல் காற்று ரம்யமாக வீசிக்கொண்டிருந்தது.


    இந்த அருமையான சூழ்நிலைக்கு கொஞ்சமும் பொருந்தாத மனநிலையோடு ஊருக்குள்ளிருந்து ராஜசேகரன் 'புடு... புடு...' வென புல்லெட்டில் வந்து கொண்டிருந்தான். மக்கள் குடியிருப்பு பகுதியை தாண்டி, வயல்வெளியை தாண்டி, அந்த கிராமத்தை ஒட்டி ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றின் பாலத்தை தாண்டி அடுத்த ஊரான "ஒரத்தநாடு உங்களை அன்புடன் வரவேற்கிறது "என்கிற ஆர்ச்சுக்குள் நுழைந்து அந்த ஊருக்குள் சென்று கொண்டிருந்தான்.


    ஒரத்தநாடு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சி. அதை சுற்றி இருபத்தி எட்டு கிராமங்கள் உள்ளன. அந்த இருபத்தி எட்டு கிராமங்களும் ஒரத்தநாட்டை மையமாக கொண்டு இயங்கிக் கொண்டிருந்தன.


    பத்து கல்யாண மண்டபம், இரண்டு சினிமா தியேட்டர், ஒரு அரசு மருத்துவமனை, இரண்டு தனியார் மருத்துவமனை, இரண்டு அரசு கல்லூரிகள், ஒரு தனியார் கல்லூரி, இரண்டு அரசு உயர்நிலை பள்ளிகள், இரண்டு தனியார் பள்ளிகள், ஒரு போலீஸ் ஸ்டேஷன், ஒரு தீயணைப்பு நிலையம், இவை அனைத்துக்கும் மேல் தஞ்சாவூர் பெரிய கோவிலை ஜெராக்ஸ் செய்தது போல் ஒரு பெரிய கோவில்... என்று சகலத்தையும் தனக்குள் அடக்கிக் கொண்டிருந்தது ஒரத்தநாடு ஊராட்சி.


    ஆனால் அந்த ஒரத்தநாட்டை முழுவதுமாக தன்னுடைய கட்டுப்பாட்டில் அடக்கி வைத்திருந்தது அதை சுற்றி இருக்கும் இருபத்தியெட்டு கிராமங்களில் ஒன்றான வேம்பங்குடி.... ஒரத்தநாட்டில் பாதிக்கு மேல் வேம்பங்குடிகாரர்களுடையதாக இருந்து.


    வேம்பங்குடி, மற்ற கிராமங்களிலிருந்து கொஞ்சம் வித்தியாசமானது. அந்த கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட இன மக்கள் அதிகமாக வாழ்ந்தார்கள். அவர்களுடைய குல தொழில் விவசாயம். அவர்களே அதன் பூர்வகுடிமக்கள். அவர்களால் மற்ற சில இன மக்களும் அந்த ஊரில் சில நூறு வருடங்களுக்கு முன்பே குடியேற்றப்பட்டார்கள். பூர்வகுடிமக்களை போலவே மற்றவர்களுக்கும் அந்த ஊரில் முழு உரிமையும் சுதந்திரமும் இருந்தது.


    மேலோட்டமாக பார்த்தால் வேம்பங்குடிக்கும் மற்ற கிராமங்களுக்கும் வித்தியாசம் தெரியாது. ஆனால் வேம்பங்குடியில் அதிகமாக மக்களிடையே ஏற்றத்தாழ்வு இருக்காது.


    அந்த ஊரில் 'நூறு குழி நிலமும், குடியிருக்க மனைக்கட்டும் இல்லாதவன் ஆண்பிள்ளையே இல்லை' என்பார்கள். அதனால் அங்கு அனைவரும் குறைந்தபட்சம் நூறு குழி நிலத்துக்கு உரிமையாளனாக இருப்பான். அதே போல் நுறு குழி நிலத்துக்கு உரிமையாளன் பத்து ஏக்கருக்கு சொந்தக்காரனை தைரியமாக கேள்விக் கேட்பான். ஏனென்றால் அவனுக்கு பின்னாடியும் பத்து பேர் இருப்பான். 'என்ன இருந்தாலும் இவனும் நம்ப ஊர் தானே...' என்ற எண்ணம் அவர்கள் அனைவரிடமும் ஊறிப் போயிருந்தது.


    தலையே போனாலும் வெளியூர்காரகளிடம் தங்கள் ஊர்காரர்களை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். தங்களுக்குள் பிரச்சனை வந்தால் ஊர் பெரியவர்களை வைத்து பேசி சுமூகமாக முடித்துக் கொள்வார்கள். படிப்புக்கு மிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். IAS, IPS, மருத்துவர், பொறியாளர் இராணுவம் என்று அந்த ஊரில் குடும்பத்துக்கொருவர்(பங்காளிகள்) நல்ல பதவியில் இருந்தார்கள்.


    தமிழகத்தின் இரு முக்கிய கட்சிகளிலும் முக்கிய பதவிகளில் இருவர் இருந்தார்கள். அவர்கள் இருவரும் நாட்டுக்கு எப்படி உண்மையாக இருக்கிறார்கள் என்பது தெரியாது. ஆனால் அந்த ஊர் மக்களுக்கு உண்மையாக இருந்தார்கள். தங்களால் முடிந்ததை ஊருக்காக செய்தார்கள். ஒருவர் செய்வதை மற்றவர் தடை செய்யாமல் இருந்தார்கள். அதனால் மற்ற ஊர்களைவிட அந்த ஊர் நல்ல முனேற்றம் அடைந்ததாக இருந்தது.


    வேம்பங்குடிகாரன் உலகில் எந்த மூலைக்கு சென்றாலும் அவனுக்கு முன் அங்கு அவனுக்கு உதவ ஒரு வேம்பங்குடிகாரன் இருப்பான்.


    அந்த ஊரில் ஒரு அம்மன் கோவில் உள்ளது. அந்த அம்மன் கோவில் திருவிழா மிக பிரசித்திப் பெற்றது. வெளி ஊர்களில்... வெளி நாடுகளில் வசிக்கும் வேம்பங்குடி மக்கள் குடிம்ப விழாக்களுக்கு வருகிறார்களோ இல்லையோ... ஊர் திருவிழாவுக்கு ஆஜராகிவிடுவார்கள். அதே போல் அவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அம்மன் கோவில் திருவிழாவுக்கு 'பூவரி மண்டகப்படி' (திருவிழா நடத்த தங்களுடைய பங்கு பணம்) வந்து சேர்ந்துவிடும்.


    ஊர் பற்று மிக அதிகமாக உள்ள அந்த மக்களுக்கு ஒரு பிரத்தேக குணமும் இருந்தது. அவர்கள் எவ்வளவு படித்தவர்களாக இருந்தாலும்... பதவியில் இருப்பவர்களாக இருந்தாலும் அந்த குணம் மட்டும் அவர்களுக்குள் மறைந்தே இருக்கும்.


    வீண் வம்புக்கு அதிகம் போக மாட்டார்கள். அதே சமயம் ஒரு பிரச்சனை என்று வந்துவிட்டால் எதிரியை ஒரு கை பார்க்காமல் விடமாட்டார்கள். இதுதான் அந்த குணம். தவறு அவர்கள் பக்கம் இருந்தாலும், ஊர்காரன் ஒருவனுக்கு பிரச்சனை என்று தெரிந்துவிட்டால் அந்த ஊரே அவன் பின் நிற்கும்.


    'என்ன இருந்தாலும் நம்ப ஊரானாச்சே...' அந்த மாதிரி நேரங்களில் இதுதான் அவர்கள் அனைவரின் வாய் மொழியாக இருக்கும். ஒருமுறை மந்திரி ஒருவனின் மகனை தங்கள் ஊர் பெண்ணை வம்பிழுத்தான் என்று சொல்லி சக்கையாக பிழிந்துவிட்டது அந்த ஊரின் இளைஞர் கூட்டம் ஒன்று. அந்த விவகாரத்தில் இடையில் போலீஸ் தான் தலையை சொறிந்துகொண்டு எதுவும் செய்ய முடியாமல் தவித்தது. யாராலும் அவர்களை எதுவும் செய்ய முடியவில்லை.


    அதிலிருந்து போலீஸ்காரகளுக்கு வேம்பங்குடிகாரன் எவனாவது மாட்டினால் பிழிந்து எடுத்துவிட வேண்டும் என்று நினைத்தாலும் அவர்களால் முடியாது. வேம்பங்குடியான் மீது கைவைத்துவிட்டு அவர்களால் ஒரத்தநாட்டை தாண்ட முடியாது. சுற்றியிருக்கும் இருபத்தேழு கிராமங்களும் பயந்து நடுங்கும் ஒரு ஊர் மீது எங்கிருந்தோ வந்து வேலை செய்யும் ஒற்றை போலீஸ்காரன் எப்படி கைவைக்க முடியும்...?


    இவ்வளவு சிறப்புகளையும் கொண்ட அந்த கிராமத்தில் பிறந்து வளர்ந்த, அந்த கிராமத்துகாரனான முப்பத்திரண்டு வயது நிரம்பிய இராஜசேகர் புல்லெட்டில் ஒரத்தநாட்டில் நுழைந்து காவல் நிலையத்திற்கு முன் வண்டியை நிறுத்துவிட்டு லேசாக மடித்து கட்டியிருந்த வேட்டியை கணுக்கால் வரை அவிழ்த்து விட்டுக்கொண்டு நிமிர்வாக உள்ளே நடந்தான்.


    அவனை அடையாளம் தெரிந்துகொண்ட 'ரைட்டர்' காசி


    "வாங்க சார்...உக்காருங்க சார்... " என்றான்.


    "பையன் எங்க..." இராஜசேகர் முறைப்பாக கேட்டான்.


    "உள்ளே இருக்கான் சார்... இதோ வர சொல்றேன்..." என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அந்த ஸ்டேஷனின் SI உள்ளே நுழைந்தார்.


    "வாங்க சார்... போன் பண்ணி பத்து நிமிஷம் தான் ஆகுது அதுக்குள்ள வதுட்டீங்க..."என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தார்.


    அமந்திருந்தபடியே அமர்த்தலாக பதில் சொன்னான் இராஜசேகர் "என்ன SI சார்... பையன் மேல கை வச்சிரிக்கீங்க போல...."


    "உங்க ஊர்ன்னு தெரியல சார்...."


    அதற்குள் அங்கு வந்துவிட்ட அந்த பதினெட்டு வயது பையன் மகேஷ் "சித்தப்பா... நான் மொதல்லேயே சொன்னேன்... எங்க ஊர் வேம்பங்குடின்னு.. அதுக்கு அப்புரம்மும் என்னை ரெண்டு அடி சேர்த்து அடிச்சானுங்க..." என்று குறை சொன்னான்.


    ராஜசேகர் இப்போது போலீஸ்காரரை அனல்பார்வை பார்த்தான். அதில் நடுங்கிப்போனவர்...


    "யார புடிச்சாலும் உங்க ஊர் பேர்தான் சொல்றானுங்க... கடைசியாதான் வேற ஊர் பயலுகன்னு தெரியுது... அது மாதிரு தான் இந்த பையனும் சொல்றான்னு நினைத்துவிட்டேன் சார்.... தப்பு நடந்துடுச்சு..." என்று இழுத்தார்.


    "என்ன போலீஸ்ஸு... இந்த பசப்பல் எல்லாம் என்னுகிட்ட வேண்டாம்... எங்க ஊர் பேர சொன்னா... நல்லா விசாரிச்சுட்டு மேல கைவை... இல்லன்னா உன் உடம்புல கை இருக்காது..."


    அவர் விழித்தார். வேம்பம்குடிக்காரனை போட்டுத்தாக்க எண்ணிதான் அவர் அந்தப் பையன் மீது கை வைத்தார். நான்கு அடி போடும் முன் அவன் ஊர் பேரை சொல்லிவிட்டான். ஆத்திரம் தாங்காமல் மேலும் ரெண்டு கொடுத்துவிட்டார். இதற்கு போய் கையை இழக்கனுமா...?


    "சாரி சார்... தப்பு நடந்து போச்சு..." என்று தன் வியர்த்த முகத்தை துடைத்துக்கொண்டு சொன்னார்.


    "என்னடா இது.... கடைத்தெருவுக்கு போனா சும்மா வரமாட்டியா....? அங்க என்ன உனக்கு வம்பு...?" போலீஸ் ஸ்டேஷனிலிருந்து வெளியே வந்ததும் இராஜசேகர் மகேஷிடம் சீறினான்.


    "இல்லை சித்தப்பா... நான் ஒன்னும் வம்புக்கு போகல... அந்த கடைக்காரன் தான் கடைக்கு முன்னாடி நிக்காதன்னு மொதல்ல சத்தம் போட்டான்."


    "நீ ஏன் அவனுடய வியாபாரத்த கெடுத்துகிட்டு அங்க போயி நின்ன ...? இனிமே இதுமாதிரி நடக்க கூடாது..." என்று அவனை எச்சரித்துவிட்டு வண்டியை கிளப்பினான். மகேஷ் அவனுக்கு சொந்த அண்ணன் மகன் இல்லை. பங்காளி வீட்டு பையன். ஆனால் உரிமையுடன் அவனால் மகேஷை கண்டிக்க முடிந்தது. இதுவும் அந்த ஊரின் சிறப்புகளில் ஒன்று...

    ----------------------------------------------------------------------------------------

    "புகழ்... ஏன் இவ்வளவு அவசரப்படறீங்க...? இப்போவே வீடு பார்க்கனுமா...?"


    "என்ன ஜெனி இப்படி கேட்டுட்ட... இந்த வீட்டை நேத்து நான் போய் பார்த்தேன். ரொம்ப அருமையா இருக்கு. இப்போ விட்டுட்டா இதை போல வீடு நமக்கு கிடைக்காது. "


    "ஆனால் நம்பளோட கல்யாணம் இன்னும் முடிவாகல... அதுக்குள்ள வீடு பார்க்கனுமா... எனக்கு பயமா இருக்கு..."


    "இப்ச்... பைத்தியம்... ஏன் இப்படி பயப்படற....? உங்க மாமா நேத்து என்னை வந்து மீட் பண்ணினது உனக்கு தெரியும் தானே... அவருக்கு என்னை பிடித்துவிட்டது. உன்னோட அம்மாவும் அப்பாவும் சொல்லிதானே அவர் என்னை வந்து பார்த்தார்....?"


    "ம்ம்ம்... ஆமாம்...."


    "அப்புறம் என்ன...? உங்க ஊர் திருவிழா முடிந்ததும் நம்ப கல்யாணத்தை வச்சுக்கலாம் என்று சொன்னார்... அதுக்கு இன்னும் எவ்வளவு நாள் இருக்கு...?"


    "சரியா முப்பது நாள்."


    " ம்ம்... அதுக்கப்புறம் நம்ப கல்யாணம் தானே... இப்போ வீடு பார்த்துவிட்டால் நாம கல்யாணம் முடிஞ்சு குடிவரும் போது சரியா இருக்கும்..."


    "....."


    "என்ன ஜெனி..."


    "என்னவோ தெரியல... கொஞ்சம் பயமாவே இருக்கு..." என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அந்த வீடு வந்துவிட புகழேந்தி காரை நிறுத்தினான். நிரஞ்சனி மறுபக்க கதவை திறந்துகொண்டு இறங்கினாள்.


    அந்த வீடு சகல வசதிகளுடன் சிறு பங்களா போல் இருந்தது. அதை பார்த்த நிரஞ்சனி "என்ன டாக்டர் சார்.... சம்பாதிக்கிற பணத்தை எல்லாம் வீட்டுக்கு வாடகை மட்டுமே கொடுக்குறதா ஐடியாவா...?" என்று கேட்டாள்.


    "அடேங்கப்பா... இப்போவே கணக்கு கேட்க ஆரம்பிச்சாச்சா...? என் பாடு
    ரொம்ப கஷ்ட்டம் போலருக்கே..." என்று அவன் போலியாக அலுத்துக்கொண்டு பின் சிரித்தான்.


    "என்னோட வருமானம் இந்த வீட்டுக்கு கட்டுபடியாகும் அம்மணி... நீங்க கவலை படாம வீடு பிடிச்சிருக்கான்னு மட்டும் சொல்லுங்க..." என்றான்.


    அவளும் புன்னகைத்துக் கொண்டே "பிடிச்சிருக்கு...." என்றாள்.


    தஞ்சாவூரில் மேல்மட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் அருமையான வீட்டை பார்த்து 'அட்வான்சும்' கொடுத்துவிட்டு அவர்கள் இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.


    டாக்டர் புகழேந்தி MBBS., MD., DM (Gastro) முடித்துவிட்டு இரைப்பை குடல் இயல் (Gastroenterology) துறையில் அந்த சிறு வயதிலேயே பிரபலமாகிக் கொண்டிருந்தான்.


    நிரஞ்சனி அவன் வேலை செய்யும் மருத்துவமனையில் (lab technician ) ஒரு ஆய்வக தொழில்நுட்பராக இருக்கிறாள்.


    இருவரும் கிட்டத்தட்ட ஒரு வருடமாக மனதார விரும்புகிறார்கள். இவர்களுடைய காதல் திருமணத்தில் முடியுமா...?


    ஒரு ஆண்டுக்கு முன் நடந்த பழைய கதை.....

    "ஏ.... கோயிந்தன்னோ....வ்.... என்னோ...வ்... " என்று தாமரை சாலையோரமாக நின்று கொண்டு, தூரத்தில் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் பெரியவரை கூவி அழைத்தார்.


    அவர் சைக்கிளை நிறுத்திவிட்டு, திரும்பிப்பார்த்து அங்கிருந்தபடியே கேட்டார்.


    "என்னா...யி ஏதுஞ்...சேதியா...?"


    "ஆமான்னா.... அப்புடியே எங்க அன்னமுட்டு பக்கம் எட்டி பாத்து சாரதி இருந்தா நா வர சொன்னேன்னு சொல்லிட்டு போங்க..."


    "சரியாயி.. நீ போ நா சொல்லிர்றே..." என்று சொல்லிவிட்டு அவர் சைக்கிளை மிதித்துக்கொண்டு அங்கிருந்து அகன்றார்.


    வேம்பங்குடி தாமரையின் வீடு...


    "என்னம்மா... இது... இவ்வளவு நாள் காலேஜ் போன எனக்கு இன்னிக்கு வேலைக்கு போக தெரியாதா... எதுக்கு சாரதியை வர சொல்ற...?" என்று நிரஞ்சனி, ரோட்டிலிருந்து திரும்பி வீட்டிற்கு வந்த தன் தாயை பார்த்து எரிச்சலாக கேட்டாள்.


    "நீ சும்மா இரு ரஞ்சி... இத்தினி நாளு(ம்) நீ காலேஜி பஸ்சுல போயிட்டு வந்த.. இப்ப வெளி பஸ்சுல போவனும்... ரெண்டாவது, சாரதி வந்து உன்ன பஸ்சு ஏத்திவிட்டுட்டு வந்தா... நீயும் பத்தரமா போயிட்டு வரலாமுள்ள... நமக்கு(ம்) ஆள் இருக்குன்னு எல்லாருக்குந் தெரியணுமே..." என்று முதன் முதலில் வேலைக்கு போகும் தன் மகளை பார்த்து பேசினார்.


    "ஏம்மா... பத்து வயசு பையன் உனக்கு ஆளா...? அவன் என்னோடு வந்தால் எனக்கு பாதுகாப்பா...? சும்மா ஜோக் அடிக்காதம்மா.."


    "என்ன ரஞ்சி இப்புடி சொல்ற...? ஜான் புல்லையானாலும் அவன் ஆண் புள்ளடி..."

    என்று நிரஞ்சனிக்கு புத்தி சொல்லிவிட்டு சுண்ட காய்ச்சிய பாலை கொண்டுவந்து மகளிடம் கொடுத்தாள்.


    அந்த நேரம் பார்த்து பக்கத்து வீட்டு ராணி "என்ன தாமரக்கா... நீ வயலுக்கு வரலையா...?" என்று கேட்டுக் கொண்டே வந்தாள்.


    "நீ போ ராணி... நா புள்ளைய அனுப்பிட்டு வர்றேன்..."


    "என்னக்கா நீ... ரஞ்சி என்ன சின்ன புள்ளையா...? கெளப்பி விட்டுகிட்டு இருக்க...? எம்மவள கெளம்பி போவ சொல்லிட்டு கலக்கட்ட(புல் செதுக்கும் ஆயுதம்) கையில எடுத்துகிட்டு நா வரல... நீ என்னான்னா... இப்பதா பச்ச புள்ளக்கி பால் ஊட்டிவிட்டுகிட்டு இருக்க..." என்று போகிற போக்கில் சொல்லிக் கொண்டே போக தாமரை உஷ்ணமாகி... ராணி சென்ற பிறகு அவளுடைய காலடி மண்ணை எடுத்து மகளுக்கு சுத்திப் போட்டார்.


    தூரத்தில் தன் அண்ணன் மகன் சாரதி வருவது தெரிந்தது. அவன் வாசலில் சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நுழையும் போது...
    "என்னப்பா தம்பி கொஞ்சம் வெள்ளனமே வதிருக்கலாமுல்ல... அத்தாச்சி கெளம்பிட்டா பாரு..." என்றார்.


    "அம்மா கண்ணுகுட்டிக்கு தண்ணி காட்டிட்டு போவ சொன்னுச்சுத்த... அதாங் கொஞ்ச லேட்டு..." என்று விளக்கம் சொன்னவன்


    "சரி வாத்தாச்சி..." என்று நிரஞ்சனியை பார்த்து அழைத்தான்.


    "பெரிய கோயிலுக்கு போயி சாமிக்கு ஒரு அருச்சன பண்ணிட்டு போங்க..." என்று தாமரை அதற்க்கு தேவையான பூஜை சாமான்களை வைத்து ஒரு பையை கொடுத்தார்.


    "சரித்த..." என்று சொல்லி அந்த பையை வாங்கிக்கொண்டு சைக்கிளை எடுத்தான்.


    "இருடா தம்பி... நான் இன்னிக்கு சைக்கிள் மிதிக்கிறேன்" என்றாள் நிரஞ்சனி.


    "அத்தாச்சி... பொம்பள புள்ளைய மிதிக்க சொல்லி நா பின்னாடி உக்காந்து வரணுமா... அதெல்லா முடியாது... நா மிதிக்கிறேன் நீ பின்னாடி உக்காரு..." இந்த வயதிலேயே அவன் தான் ஆண் பிள்ளை என்கிற வீராப்பை காட்டினான்.


    நிரஞ்சனிக்கு வேலை கிடைத்திருப்பது தஞ்சாவூரில். தஞ்சாவூர் செல்ல ஒரத்தநாட்டிற்கு வந்துதான் பஸ் பிடிக்க வேண்டும்.


    அவர்கள் வேம்பங்குடியை தாண்டி ஓரத்தநாட்டிர்க்குள் நுழைந்து சிறிது தூரம் சென்றார்கள். அங்கு ஒரு விளையாட்டு மைதானத்தில் ஆண் பிள்ளைகள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிர்ந்தார்கள். ஒரு அழகிய பெண் ஒரு சிறுவனுடன் சைக்கிளில் செல்வதை பார்த்துவிட்டு, அங்கு விளையாடிக் கொண்டிருந்தவர்களில் நான்கு பேர் அந்த சைக்கிளை பின் தொடர்ந்து இரண்டு சிக்கிளில் வந்தார்கள்.


    அவர்கள் விசில் அடித்தும்... பாட்டு பாடியும் நிரஞ்சனியின் கவனத்தை ஈர்க்க முயன்றார்கள்.


    அதை கவனித்துவிட்ட சாரதி பற்களை கடித்துக் கொண்டான். "நா வரும்போதே வாலாட்றானுவளே... நீ தனியா வந்தா என்ன செயவானுவளோ... இதுக்கு இன்னைக்கே ஒரு வழி பண்றேன்..."


    என்று நிரஞ்சனியிடம் முனுமுனுத்த அந்த சிறுவன் கோவில் வந்ததும் சொன்னது போலவே நான்கு வாலிபர்களை விரட்டியடித்தான்.
    [/JUSTIFY]

    - தொடரும்
     
    3 people like this.
    Loading...

  2. nithyakarthigan

    nithyakarthigan Gold IL'ite

    Messages:
    600
    Likes Received:
    509
    Trophy Points:
    188
    Gender:
    Female
    Hai Friends...

    இந்த thread-லையே முழு கதையையும் தொடர்ச்சியா போஸ்ட் பண்ணினா மொத்தமா படிக்கிறவங்களுக்கு சுலபமா இருக்கும். அதனால் உங்களுடைய comments-சை கீழே கொடுக்கப்பட்டுள்ள link-ல் போஸ்ட் பண்ணுங்கள் ப்ளீஸ்...

    இந்த மாதிரி வேறு ஒரு website-ல் follow பண்றாங்க. அது நல்ல ஐடியாவா இருந்ததனால் நானும் அதை இங்க use பண்ணலாம் என்று நினைக்கிறேன். நீங்களும் cooperate பண்ணுங்க friends...

    Please post your comments here : http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/154004-comments.html#post2049138

    Thank you so much
     
    1 person likes this.
  3. nithyakarthigan

    nithyakarthigan Gold IL'ite

    Messages:
    600
    Likes Received:
    509
    Trophy Points:
    188
    Gender:
    Female
    [JUSTIFY]அத்தியாயம் -2

    பழைய கதை

    கோவிலுக்குள் நுழைந்த நிரஞ்சனியையும் சாரதியையும் அந்த இளைஞர் கூட்டம் தொடர்ந்தது. அவர்களுக்கு எப்படியாவது நிரஞ்சனியை பற்றி தெரிந்து கொண்டு அவளை பிராக்கெட் போட வேண்டும். அவளுடைய அழகு அவர்களுக்கு ஒரு தூண்டுதலாக இருந்தது.


    "பேர் நட்ச்சத்திரம் சொல்லுங்கோ..." ஐயர் அர்ச்சனை தட்டை வாங்கிக்கொண்டே நிரஞ்சனியிடம் கேள்விக் கேட்டார்.


    அவள் ஒரு நிமிடம் விழித்தாள். அவளுக்கு எதிர் வரிசையில் அந்த இளைஞர் கூட்டம் நின்று கொண்டிருக்கும் போது சொல்லலாமா வேண்டாமா....?


    ஐயர் மறுபடியும் கேட்கவும் வேறுவழியின்றி "பேர் நிரஞ்சனி... நட்ச்சத்திரம் அவிட்டம்..." என்று சொன்னாள்.


    'ஆஹா... சுப்பர் பேர்... நிரஞ்சனி...' பெயர் தெரிந்துகொண்ட மகிழ்ச்சியில் அந்த பையன்கள் பெருமிதமாக நிற்கும் போது அவர்களை பார்த்துக்கொண்டே சாரதி சொன்னான்...."ஊர்... வேம்பங்குடி..."


    "அர்ச்சனைக்கு ஊர் பேரெல்லாம் தேவை இல்லடா அம்பி..." என்று சொல்லிக்கொண்டே ஐயர் அர்ச்சனையை ஆரம்பிக்க, அதுவரை சாருமதியை தொடர்ந்து வந்த கூட்டம் இருந்த இடம் தெரியாமல் பறந்துவிட்டது.


    சாரதி இப்போது தனக்கு இல்லாத மீசையை தடவிக்கொண்டான். தன் அத்தாச்சியை பெருமையாக பார்த்துக் கொண்டான். அவளுக்கு சிரிப்பு வந்தாலும் தன் மாமன் மகனனுடைய புத்திசாலி தனத்தை பார்த்து பெருமைப்பட்டுக் கொண்டாள்.

    ----------------------------------------------------------------------


    சாரதி அவளை பத்திரமாக கூட்டம் இல்லாத தஞ்சாவூர் பஸ்ஸாக பார்த்து ஏற்றிவிட்டான்.


    "அத்தாச்சி... இந்த சீட்ல உக்காந்துக்கோ..." என்று ஜன்னல் ஓர சீட்டை காட்டினான்.


    "நான் பத்தரமா போயிக்கிறேன் சாரதி... நீ வீட்டுக்கு போ... ஸ்கூல்க்கு லேட் ஆயிடும்... பத்திரமா போ..." என்று அவனை அனுப்பிவைத்தாள்.
    அவன் அவள் பேச்சை அலச்சியம் செய்து காத்திருந்து பஸ் கிளம்பியபின் தான் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.


    ஜன்னல் ஓரம் அழகு தேவதையாக அமர்ந்திருந்தவள் ஒரே நாளில் ஒரே பார்வையில் இரண்டு பேரின் மனதை சுண்டி இழுத்தாள். அதன் விளைவு பயங்கரமாக அவளுடைய வாழ்க்கையை தாக்கியது.


    இரண்டு ஊர் தாண்டி மூன்றாவது ஊரில் ஒரு நிறுத்தத்தில் பஸ் நின்றது. வெளியே ஒரு பெட்டிக்கடையில் நின்று சிகரட் பிடித்துக் கொண்டிருந்த இளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரசன்னா, பஸ்ஸில் ஜன்னலோரம் தெரிந்த அழகிய முகத்தை பார்த்துவிட்டு ஒரு நிமிடம் பிரம்மித்து நின்றுவிட்டான்.


    புகைந்து கொண்டிருந்த சிகரெட்டை காலில் போட்டு மிதித்துவிட்டு அவசரமாக அந்த பஸ்ஸில் ஏறினான். அவன் தினமும் செல்லும் பஸ் அதுதான். சீட்டில் அமர்ந்திருந்த பெரியவர் ஒருவர் அவனுடைய காக்கி உடையை பார்த்துவிட்டு மரியாதைக்கு எழுந்து இடம் கொடுத்தார். அதை மறுத்துவிட்டு நிரஞ்சனியை நன்றாக பார்க்க முடிகிற இடத்தில் நின்று கொண்டு அந்த பயணம் முழுக்க அவளை கண்களால் விழுங்கினான்.


    ஒரு மணி நேர பயணம் முடிந்து பஸ் தஞ்சாவூரை அடைந்தது. பஸ் கார்த்திகா மருத்துவமனையை தாண்டி பஸ் நிறுத்தத்திற்கு செல்லும் போது எதிரில் வந்த காரிலிருந்து புகழேந்தி பஸ்சின் ஜன்னல் ஓரம் தனியாக தெரிந்த அந்த தங்க முகத்தை முதல் முதலில் பார்த்தான். அந்த முகம் முதல் பார்வையிலேயே அவனுடைய அனுமதியின்றி அவனுடைய இதயத்திற்குள் நுழைந்து கொண்டு அவனை இம்சை செய்ய ஆரம்பித்தது...


    இன்றைய கதை


    காவல் நிலையத்திலிருந்து வண்டியில் வேகமாக வந்து கொண்டிருந்த இராஜசேகரை கடைத்தெருவில் ஒருவன் வழிமறித்தான்.


    "என்ன இராஜா... சவுரியமா...?"


    "சவுரியந்தா சின்னப்பா... நீ எப்புடி இருக்க?"


    "நல்லாருக்கே(ன்) இராஜா... நா கேள்விப் பட்டதெல்லாம் உண்மையாடா... நீ இருக்கும் போது இது எப்படிடா நடக்கலாம்...."


    "எதப்பத்தி கேக்குற...?"


    "எல்லா(ம்) உங்க ரஞ்சிய பத்தி தான்... ஊரே சிரிக்குது... நீ ஒன்னுந் தெரியாதவ மாதிரி பேசுற..." என்று அவனுடைய பொறுமையை சோதித்தான்.


    "எல்லாந் தெரியு(ம்)... நீ வேலைய பாரு..." என்று முறைப்பாக பதில் சொல்லிவிட்டு வண்டியை வேகமாக உதைத்து கிளப்பிக் கொண்டு சென்றான் இராஜசேகர்.


    இதோடு அவனிடம் நான்கு பேர் இதை பற்றி பேசிவிட்டார்கள். அவனுக்கு அவமானம் பிடிங்கித் தின்றது... ஊருக்குள் யாரிடமும் நிமிர்ந்து பேச முடியவில்லை... அந்த கோவத்தை யாரிடம் காட்டலாம் என்று துடித்துக் கொண்டிருந்தான்.


    ----------------------------------------------------------------------------------------------------------


    கோபாலன் தாமரை அல்லி மூவரும் உடன் பிறந்தவர்கள்.

    கோபாலனுக்கு ஒரே மகன். அவர் தன் தங்கைகளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு லேட்டாக திருமணம் செய்து கொண்டார்.
    திருமணம் முடிந்து பல வருடங்களுக்கு பிறகு தான் அவருக்கு சாரதி பிறந்தான்.


    தாமரைக்கு இரண்டு பெண்கள். நீரஜா... நிரஞ்சனி. நீரஜாவிர்க்கு திருமணம் முடிந்துவிட்டது. அவளை கல்லூரிக்கு செல்லும் போது பார்த்துவிட்டு அவளுடைய கணவன் காதல் செய்து திருமணம் செய்து கொண்டார். காதல் திருமணத்திற்கு அந்த ஊரில் எதிர்ப்பு இருக்கும் என்றாலும் நீரஜாவின் கணவர் வேம்பங்குடிகாரர் என்பதாலும் அவர்கள் ஒரே இனத்தவர்கள் என்பதாலும் அதிகம் பிரச்சனை இல்லாமல் அவர்களுடைய திருமணம் முடிந்துவிட்டது.


    அந்த திருமணத்திற்கும் சில பிரச்சனைகள் கிளம்பின. பையன் பள்ளி படிப்பிற்கு மேல் படிக்கவில்லை என்று பெண் வீட்டிலும்... பெண் வீட்டில் வசதி குறைவு என்று பையன் வீட்டிலும் பிரச்னையை கிளப்பினார்கள்.


    ஆனால் பையனும் பெண்ணும் பிடிவாதமாக இருந்து பெற்றோரை சம்மதிக்க வைத்து திருமணம் செய்து கொண்டார்கள்.


    அல்லிக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன். மகளுக்கு லண்டன் மாப்பிள்ளையை பார்த்து திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். மாப்பிள்ளை வீடும் வேம்பங்குடிதான். அதனால் அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. மகன் பெங்களூரில் மென்பொருள் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருக்கிறான்.


    தாமரையின் அண்ணனும் தங்கையும் வசதியாக வாழ்ந்தார்கள். தாமரையின் கணவர் குடிப்பவராக அமைந்து விட்டதால், அவருடைய வாழ்க்கைதரம் படிப்படியாக குறைந்து இன்று இருக்க வீடும் சாப்பாட்டுக்கு விவசாயம் செய்ய நிலமும் தவிர வேறு எதுவும் இல்லை என்கிற நிலைக்கு வந்துவிட்டது.


    தாமரை தன்னுடைய வாழ்க்கை தரம் தாழ்ந்தாலும் தன்னுடைய மகள்களுக்கு எந்த குறைவும் இல்லாமல் பார்த்துக்கொள்வார். ஆப்பிள் சாப்பிட்டால் பெண்களுக்கு தோல் 'பல பல'வென இருக்கும் என்று யாரோ சொன்னதை கேட்டுவிட்டு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வேம்பங்குடியிளிருந்து நடந்து ஒரத்தநாடு வந்து, நாள் முழுக்க தான் வெய்யிலில் நின்று வயல் வேலை செய்து சம்பாதித்த பணத்தை கொடுத்து மகள்களுக்கு ஆப்பிள் வாங்கிச் செல்வார்.


    ஒரு மாடு வைத்திருந்தார். அதில் மகள்களுக்கு சுண்ட காய்ச்சி கொடுத்த பால் போக மீதியிருந்தால் மட்டும் தான் விலைக்கு கொடுப்பார். இரவில் ஒரு கற்பூரவள்ளி வாழைப்பழமும் பாலும் சாப்பிட்டால் நல்லது என்று கேள்விப்பட்டு அதற்காகவே கற்பூரவள்ளி மரம் பதியம் போட்டு வளர்த்து மகள்களுக்கு தினமும் இரவில் பாலும் பழமும் கொடுப்பார்.


    கோபாலன் தாமரை அல்லி ஆகியோரின் அன்னை பாக்கியத்தம்மாள் அந்தகாலத்து ஐஸ்வர்யா ராய்... அவருடைய திருமணத்தின் போது சுயம்வரம் நடந்ததாம். பெண் கேட்டு வந்த முறை பையன்களில் யார் முதலில் ஐம்பது பவுன் நகை போடுகிறார்களோ அவர்களுக்குத்தான் பெண் என்று அறிவிக்கப்பட்டதாம். உடனே தாமரையின் தந்தை வரதன் ஐம்பது பவுன் நகையை கொண்டுவந்து போட்டுவிட்டு, அடுத்த பத்தாவது நாளே திருமணம் செய்து கொண்டாராம்.


    ஆனால் திருமணத்திற்கு பிறகுதான் தெரிந்ததாம், அவர் போட்டது போலி நகைகள் என்று. மருமனாகிவிட்டவரை எதுவும் பேசமுடியாமல் தாமரையின் தாத்தா அமைதியாக இருந்து விட்டாலும், வரதன் ஓராண்டு காலம் கடுமையாக உழைத்து அந்த ஐம்பது பவுன் நகையை பாக்கியத்தம்மாளுக்கு வாங்கிக் கொடுத்தாராம்.


    அவர் தப்பே செய்திருந்தாலும் இன்றுவரை அவருடைய புத்திசாலித் தனத்தையும் பாக்கியத்தம்மாளின் அழகையும் பாராட்டாதவர்கள் கிடையாது.


    அந்த அழகு தேவதையின் வாரிசுகளும் அவருக்கு சளைத்தவர்கள் அல்லர். அவருடைய முதல் வாரிசான கோபாலன் முதல் கடைசி வாரிசான சாரதிவரை யாரும் பாக்கியத்தம்மாளின் அழகுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்லர்.


    தாமரையின் இரண்டு மகள்களும், அல்லியில் ஒரு மகளும் அச்சில் வார்த்தது போல் இருப்பார்கள். அதிலும் நிசஞ்சனியும் சிவரஞ்சனியும் வெவ்வேறு தாய்களின் மகள்கள் என்று சொல்லவே முடியாது. இருவருக்கும் ஒரே வயது. பள்ளி படிப்புவரை ஒன்றாக படித்தார்கள். பின் சிவரஞ்சனி பொறியியல் சேர்ந்துவிட நிரஞ்சனி அறிவியல் கல்லூரியில் சேர்ந்துவிட்டாள்.



    ஒரத்தநாடு அல்லியின் வீடு...


    இன்று நீரஜாவின்(நிரஞ்சனியின் அக்கா) கணவர், தாமரையையும் அவர் கணவரையும் தொலைபேசியில் அழைத்து அல்லியின் வீட்டிற்கு வர சொல்லிவிட்டு, தன் மனைவி நீரஜாவையும் ஒரு வயது குழந்தை ஆகாஷையும் கொண்டுவந்து அல்லியின் வீட்டில் விட்டுவிட்டு இப்போதுதான் வெளியே சென்றார்.


    "என்னடி நீரு... ஒம்புருஷன் எதுக்கு எங்கள வர சொன்னாரு... ஏதாவது சேதியா...? அதுக்கு நம்ப வீட்டுக்கு வந்துருக்க வேண்டியதுதானே... இங்க எதுக்கு வர சொன்னாரு...?" என்று வினவினார் தாமரை.


    "என்னன்னு தெரியலம்மா... ஒரத்தநாட்டிலேருந்து வீட்டுக்கு வந்தவருக்கு முகமே சரியில்ல... என்ன கெளம்ப சொன்னாரு. புடவைய கட்டிக்கிட்டு ஒடனே கெளம்பிட்டேன்..." என்றாள் நீரஜா.


    "அவரு வந்து இப்போ சொன்னா தெரிஞ்சுட்டு போவுது... நீ ஏ இப்புடி அடுச்சுக்குற? பேசாம உக்காருக்கா... நீரு இந்தா... இத புள்ளைக்கு குடு... நா ரஞ்சி என்ன பண்றான்னு பாத்துட்டு வர்றேன்.. " என்று சிவரஞ்சனியை தேடிச்சென்றாள் அல்லி.


    அவர்கள் சிவரஞ்சனி நிரஞ்சனி இருவரையுமே ரஞ்சி என்று தான் அழைத்தார்கள்.


    ----------------------------------------------------------------------------------------------------------


    வீடு பார்த்து அட்வான்ஸ் கொடுத்துவிட்டு நிரஞ்சனியை, புகழ் பஸ் நிறுத்தத்திற்கு அழைத்துக்கொண்டு காரில் வரும் பொழுது நிரஞ்சனியின் கைபேசி அழைத்தது. எடுத்து பார்த்தாள்.


    "யார் போன்ல...?" புகழ் காரை ஓட்டியப்படி கேட்டான்.


    "ரஞ்சி..." என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு நிரஞ்சனி கைபேசியை எடுத்தாள்.


    தாய் வீட்டிற்கு வருடத்திற்கு ஒருமுறை வரும் சிவரஞ்சனி அப்போது தன் தாய் வீட்டில் இருந்து நிரஞ்சனிக்கு அழைத்தாள்.


    "சொல்லு ரஞ்சி..."


    "ரஞ்சி... இப்போ எங்க இருக்க...?"


    "பஸ் ஸ்டாண்டுக்கு போயிகிட்டு இருக்கேன் ரஞ்சி... பாப்பா எப்படி இருக்கு...?"


    "நல்லா இருக்குடி... ரஞ்சி... நீ வேம்பங்குடிக்கு போகாத... பெரியம்மா, பெரியப்பா, நீரு எல்லாரும் இங்கதான் இருக்காங்க. நீயும் இங்க வா..."


    "இல்ல ரஞ்சி... அங்க வந்தா நாளைக்கு வேலைக்கு போறப்ப டிரஸ் இல்லாம கஷ்ட்டமா இருக்கும்.. நா வீட்டுக்கே போறேன் அம்மா வர்றப்ப வரட்டும்..." என்றாள்


    "ஐயோ ரஞ்சி... அப்படி ஏதும் செஞ்சுடாத... நீ இங்கேயே வந்துடு... மாமா உனக்கு போன் பண்ணி இங்க வர சொன்னாங்க..."


    "எந்த மாமா...?"


    "இராஜசேகர் மாமா..."


    நிரஞ்சனிக்கு திக்கென்றது. அவளுக்கு இராஜசேகர் மீது அதிக பயம் இருந்தது. என்னவென்று தெரியவில்லை. இவளால் அவனுடைய முகத்தை பார்க்கவே முடியவில்லை. இப்போதெல்லாம் அவன் முகம் அவ்வளவு கடுமையாக இருக்கிறது. முன்புபோல் அவளிடம் சிரித்து பேச மாட்டேன் என்கிறான். ஒரு வேளை என்னுடைய காதல் விவகாரம் அவனுக்கு பிடிக்கவில்லையோ... என்று பயந்தாள்


    அவள் முகத்தை பார்த்துவிட்டு "என்ன ஜெனி...?" என்று வினவினான் புகழ்.


    "ராஜா மாமா என்னை எங்க சித்தி வீட்டுக்கு வர சொல்லியிருக்கார். என்னன்னு தெரியல... நம்பள பத்தி கேப்பாருன்னு நினைக்கிறேன்..."


    "அதுக்கு ஏன் இப்படி பயப்படற... தைரியமா பேசு... உங்க அப்பா அம்மா நமக்கு ஓகே சொல்லிட்டாங்க... அப்புறம் என்ன...? அதோட அவரும் லவ் மேரேஜ் பண்ணினவர் தானே... அப்படியெல்லாம் நமக்கு எதிரா எதுவும் சொல்ல மாட்டார்..." என்று அவளுக்கு தைரியம் சொன்னான்.


    "அதுக்கு இல்ல..." அவள் இழுத்தாள்.


    "என்ன ஜெனி... இன்னிக்கு வீடு பார்க்க போனதிலிருந்தே நீ இப்படிதான் எல்லாத்தையும் போட்டு குழப்பி என்னையும் குழப்புற..." என்று சற்றே கோபமாக பேசவும் நிரஞ்சனி முயன்று புன்னகையை வரவழைத்துக்கொண்டு பஸ்ஸில் ஏறிக்கொண்டு அவனுக்கு விடை கொடுத்தாள்.


    - தொடரும்​


    Please post your comments here : http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/154004-comments.html
    [/JUSTIFY]
     
    1 person likes this.
  4. nithyakarthigan

    nithyakarthigan Gold IL'ite

    Messages:
    600
    Likes Received:
    509
    Trophy Points:
    188
    Gender:
    Female
    [JUSTIFY]அத்தியாயம் -3

    பழைய கதை


    நிரஞ்சனி வேளையில் சேர்ந்து ஒரு வாரம் முடிந்துவிட்டது. இந்த ஒருவாரம் முழுவதும் இன்ஸ்பெக்டர் பிரசன்னா நிரஞ்சனியை தொடர்ந்து அவளை பற்றிய விபரங்களை தெரிந்து கொண்டான். அவள் கார்த்திகா மருத்துவமனையில் வேலை செய்கிறாள் என்பது வரை.

    அன்று அவள் பேருந்து நிறுத்தத்தில் இறங்கியதும் அவள் முன் வந்தவன்...
    "என்ன ரஞ்சி... இன்னிக்கு பஸ்ஸ விட்டுட்டியா...? வழக்கமா வர்ற பஸ்ல நீ வரல..." என்றான்.

    அவன் அவளை திடீரென்று 'ரஞ்சி' என்று அழைத்தது ஆச்சர்யத்தை அளிக்க 'ஒருவேளை நமக்கு சொந்தக்காரரா இருப்பாரோ...' என்று நினைத்தவள் லேசாக புன்னகைத்து
    "ஆமா..." என்றாள்

    அவ்வளவுதான்... அவள் என்னவோ அவனிடம் காதலை சொல்லிவிட்டது போல் அவன் மகிழ்ந்து போய் கனவில் மிதந்து கொண்டே ஸ்டேஷனுக்கு போனான்.

    அதே நாள் புகழ் மீண்டும் நிரஞ்சனியை பார்த்தான். மருத்துவமனை 'காண்டீனுக்கு' சென்றவன் அங்கு நிரஞ்சனியை பார்த்த்தான். அவனுடைய இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்துவிட்டது. அவனுக்கே அது ஆச்சிரியமாக இருந்தது.

    அவன் எவ்வளவு முயன்றும் அவள் மேல் வைத்த கண்ணை எடுக்க முடியாமல் தவித்துப் போனான். அவள் அங்கு வேலை செய்யும் சீருடை அணிந்திருந்ததால் 'அவள் அங்கு வேலை செய்கிறாள் ' என்பதை புரிந்து கொண்டவனுக்கு மனம் துள்ளியது. அவளுடைய சீருடை கலர் அவள் என்ன பிரிவில் வேலை செய்கிறாள் என்பதையும் காட்டிக் கொடுத்தது.

    மத்திய உணவு நேரத்தில் அவளை காண்டீனில் பார்ப்பதை அவன் வழக்கமாக்கிக் கொண்டான். அவன் மனதில் அவள் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டாள். அவள் இல்லாமல் அவனுக்கு வாழ்வே இல்லை என்கிற நிலைக்கு அவன் கொஞ்சம் கொஞ்சமாக வந்து கொண்டிருந்தான்.

    நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. இன்ஸ்பெக்டர் பிரசன்னா கொஞ்சம் கொஞ்சமாக நிரஞ்சனியை நெருங்கிக் கொண்டிருந்தான். பஸ்ஸில் பார்த்து புன்னகைப்பது. பஸ்ஸை அவள் விட்டுவிட்டு அடுத்த பேருந்தில் வந்தால் அதை பற்றி விசாரிப்பது என்று அவளிடம் சிநேகமாக நெருங்கிக் கொண்டிருந்தான்.

    இந்த நிலையில் காதலர் தினம் வந்து அவனை அவளுக்கு காட்டிக் கொடுத்தது. காதலர் தினத்தன்று அவன் அவளுக்கு ஒரு பரிசு கொடுத்தான். அதை பார்த்த நிரஞ்சனி அரண்டு விட்டாள்.

    "என்ன இது...." அவள் மலங்க விழித்துக் கொண்டு கேட்டாள்.

    'பேருந்து நிறுத்தத்தில் போலீஸ் இவ்னீஃபாம் போட்டுக்கிட்டு என்ன வேலை செய்றான்...' என்று அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

    "உனக்கு தான் ரஞ்சி... இன்னிக்கு காதலர் தினம்... உனக்கு என்னோட காதல சொல்ல இதுதான் சரியான நாள். அதுதான் கிஃபிட்... " என்று சொல்லிவிட்டு அந்த பட்டுப்புடவை பெட்டியை அவளிடம் நீட்டி "ஐ லவ் யு..." என்றான்.

    "சாரி.... நீங்க இது மாதிரி சொல்லுவீங்கன்னு நான் நினைக்கவே இல்ல.... என்னை தொந்தரவு செய்யாதீங்க..." என்று சொல்லிவிட்டு அவனை திரும்பிப் பார்க்காமல் சென்றுவிட்டாள்.

    'எதற்கு வம்பு' என்று நினைத்து அன்றிலிருந்து அவள் அவன் கண்ணில் படுவதே இல்லை. அவள் எப்போதும் வரும் பஸ்ஸை மாற்றி மிக விரைவாக வந்து கொண்டிருந்தாள். அதே போல் மாலை பயந்து பயந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரத்தில் சென்று கொண்டிருந்தாள். இப்படியே இரண்டு வாரம் சென்றது. மூன்றாவது வாரம் அவன் கண்டுபிடித்து விட்டான்.

    முன்பு காலை பத்துமணிக்கு மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்தவள் இப்போது ஏழு மணிக்கெல்லாம் வந்துவிடுகிறாள். அதை கண்டுபிடித்தவன் மருத்துவமனைக்கே வந்துவிட்டான்.

    காலை நேரம் மருத்துவமனையில் கூட்டம் இல்லை. வரவேற்ப்பில் ஒரு பெண் இருந்தாள். அந்த பெண் இரவு பணி செய்த பெண். பகல் வேலைக்கு வரும் பெண் ஒன்பது மணிக்கு தான் வருவாள். நிரஞ்சனியின் வேலை நேரம் பத்துமணிக்கு தான் ஆரம்பம். அதனால் அவள் வரவேற்ப்பில் இருந்த பெண்ணுக்கு உதவியாக வரவேற்ப்பில் நின்றாள். அவளுடைய கெட்ட நேரம் பிரசன்னாவின் கண்களில் அவன் உள்ளே நுழைந்ததும் பட்டுவிட்டாள்.

    வேகமாக வரவேற்ப்பை நெருங்கியவன் "என்ன ஆச்சு... ஏன் டைம் மாத்திட்ட...? இப்போதெல்லாம் நாம ரெகுலரா வர்ற பஸ்ல நீ வர்றதில்லையே..." என்று உரிமையாக கேட்டான்.

    அவனுடைய கேள்வியில் திகைத்த நிரஞ்சனி, கொஞ்சம் தடுமாறிவிட்டாள்.

    "எ.. என்ன... ?" என்று திக்கி தினறினாள். அருகில் நின்று கொண்டிருந்த பெண்ணிற்கு நிரஞ்சனிதான் தவறு செய்துவிட்டவள் போல் தோன்றினாள்.

    "என்ன ரஞ்சி... என் மேல கோவம் என்றால் சொல்ல வேண்டியதுதானே... எதுக்கு இந்த கண்ணாமூச்சி.... என்னால உன்னை பார்க்காமல் இருக்க முடியல... " என்று உருகினான்.

    "இதோ பாருங்க... நீங்க இது மாதிரி என்னுகிட்ட வம்பு பண்றது சரியில்ல... நான் எப்போ வேணுன்னாலும் வருவேன்... போவேன்... உங்களுக்கு என்ன...? என்னை இனி இங்க பார்க்க வராதிங்க ப்ளீஸ்..." என்றாள்.

    "சரி நா இங்க வரல... நீ இனிமே நம்ப வர்ற பஸ்ல வா... எனக்கு அதுதான் டுயுட்டி டைம் " என்றான்.

    நிரஞ்சனிக்கு நன்றாக புரிந்தது. அவள் ஒரு மாய வலைக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறாள். அந்த வலை நாளுக்கு நாள் உருதியாகிக் கொண்டே இருக்கிறது. அதை அறுத்தெறிய திரியாமல் திகைத்தாள்.

    இன்றைய கதை

    நிரஞ்சனி தன்னுடைய சித்தி வீட்டிற்குள் நுழைந்த போது நீரஜாவின் கணவன் இராஜசேகர் வீட்டில் இல்லை. பெண்கள் பின்பக்கம் சமையலுக்கு போடப்பட்டிருந்த கொட்டகையிலும் சகலைகள் (அக்கா தங்கையின் கணவமார்கள்) இருவரும் வெளிப்புற தின்னையிலும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

    "வா ரஞ்சி... உங்க சித்தி அம்மா எல்ல(ம்) பின் பக்கம் கொட்டாயில இருக்காங்க போ..." என்றார் சித்தப்பா வேணு.

    சிறிது நேரத்தில் எல்லாருடைய நல விசாரிப்புகளும் முடியும் நேரம் சித்தப்பா வேணு நிரஞ்சனியை தனியாக அழைத்தார். அப்போது சித்தி குறுக்கிட்டு

    "இருங்க அவ எதுவுமே இன்னும் சாப்பிடல... ஏதாவது சாப்பிடட்டும் அப்புறம் நீங்க கேக்குறத கேட்கலாம்..." என்றார்.

    "அதுக்கில்ல அல்லி... நா பேசுறத அவரு (இராஜசேகர்) வர்றதுக்கு முன்னாடி கேட்டுக்குறேன்...." என்றார்.

    அதற்குள் நிரஞ்சனி... "இதோ நான் வர்றேன் சித்தப்பா... நீங்க போங்க.." என்று சொன்னாள்.


    அவர் கூடத்திற்கு சென்று ஊஞ்சலில் அமர்ந்துவிட... நிரஞ்சனியின் தந்தை அரசு வெளியே சென்றுவிட்டார். நீரஜாவும் சிவரஞ்சனியும் ஒரு அறையில் அமர்ந்து தங்களுடைய ஒரு வயது குழந்தைகள் விளையாடுவதை பார்த்துக்கொண்டு அடுத்து தங்கள் குடும்பத்தில் என்ன நடக்கும் என்பதை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அதே போல் தாய்மார்களும் இரவுக்கு தேவையான சமையல் வேலையை பார்த்துக் கொண்டே தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

    நிரஞ்சனி சித்தப்பாவை தேடிவந்தாள்.

    "என்னம்மா... அப்பா என்னென்னமோ சொல்றாரே..." என்றார்.

    "..........."

    நிரஞ்சனி எதுவும் பேசாமல் விழித்துக் கொண்டிருந்தாள். தாயிடம் தன்னுடைய காதல் விவகாரங்களை பேசவே கூச்சப்பட்டவள், வேறு வழியில்லாமல் சொல்லி ஓரளவு சம்மதமும் வாங்கிவிட்ட நிலையில் இந்த சித்தப்பாவுக்கு என்ன வந்தது....

    'இப்படி வெளிப்படையா கேட்டுவிட்டாரே... எப்படி பதில் சொல்வது....?' என்று யேசித்துக் கொண்டிருக்கும் போதே புயல் வேகத்தில் உள்ளே நுழைந்த இராஜசேகர் நிரஞ்சனியின் முடியை கொத்தாக பிடித்துவிட்டான்.

    அவ்வளவுதான் அங்கு நடந்ததை விவரிக்க முடியும். அதற்க்கு மேல் "ஐயோ... அம்மா.... அம்மா...." "விடுங்க... விடுங்க மாப்ள... விடுங்க... " "ஆ.... ஆ...." என்ற சத்தமும் 'தட-புட'வென நாற்காலிகளும் மற்ற சாமான்களும் உருளும் சத்தமும் தான் கேட்டது.

    அலறல் சத்தம் கேட்டு சிவரஞ்சனியும், நீரஜாவும் தங்களுடைய குழந்தைகளை தூக்கிக் கொண்டு அறையிலிருந்து வெளியே ஓடிவந்தார்கள். அங்கு நடந்து கொண்டிருந்த ரகளையை பார்த்து குழந்தைகள் அலறினார்கள்.

    சித்தப்பா வேணு, நிரஞ்சனி, இராஜசேகர் மூவரும் ஒருவரை ஒருவர் பிடித்துக் கொண்டு பின்னிக் கொண்டிருந்தார்கள். நீரஜாவும் சிவரஞ்சனியும் ஒருகையில் குழந்தையை வைத்துக் கொண்டு நிரஞ்சனியை இராஜசேகரின் பிடியிலிருந்து காப்பாற்ற முடியாமல் கத்தினார்கள்.

    "ஐயோ.... ரஞ்சி... ரஞ்சி.... ஏய்... விடு... விடு... விட்டுதொலை..." என்று பெண்கள் இருவரும் ஒரு கையால் அந்த ஆஜானுபாகுவான மனிதனை அடக்க முயன்று முடியாமல் கத்தினார்கள். மாமா... கணவன் என்ற மரியாதையெல்லாம் அப்போது அவர்களிடம் பறந்துவிட்டது. தங்களுடைய தங்கையை எப்படியாவது அந்த வெறி பிடித்த புலியிடமிருந்து காப்பாற்றிவிட வேண்டுமே என்று தவித்துக் கொடிருந்தார்கள்.

    சத்தம் கேட்டு சமையலறையிலிருந்து ஓடிவந்த தாய்மார்கள் இருவரும் நடந்து கொண்டிருந்த கலவரத்தை பார்த்து திகைத்துவிட்டார்கள். உடனே நிலைமையின் தீவிரம் உணர்ந்து அல்லி நிரஞ்சனியை காப்பாற்ற முனைய தாமரை மருமகனிடம் நெருங்க தயங்கி அருமையாக வளர்த்த மகளின் நிலையை பார்த்து உயிரை உருக்கி கண்ணீராக வெளிவிட்டு துடித்துக் கொண்டிருந்தார்.

    குழந்தைகளை தாமரையிடம் கொடுத்துவிட்டு பத்து நிமிட போராட்டத்திற்கு பின் நீரஜா, சிவரஞ்சனி, அல்லி, வேணு ஆகிய நால்வரும் நிரஞ்சனியை ராஜசேகரின் பிடியிலிருந்து விடிவித்து வேறு ஒரு அறையில் அடைத்துவிட்டு 'அந்த அறைக்குள்ளும் இராஜசேகர் நுழைந்துவிட கூடாதே' என்ற பதைப்புடன் ஒரு பூட்டை எடுத்து வெளிப்புறமாக பூட்டிவிட்டார்கள்.

    ராஜசேகரின் கோவம் அடங்கவில்லை... "மானத்த வாங்கிட்டா.... பாக்குறவனெல்லா(ம்) கேள்வி கேக்குறா(ன்)... இவள வெட்டி பொதச்சாதான் என்னோட ஆத்திரம் அடங்கும்....' என்று ஒரு மணி நேரம் கத்தி தீர்த்துவிட்டு மனைவியை அழைத்துக் கொண்டு போய் விட்டான்.

    அவன் சென்றதுக்கு பின் நிரஞ்சனி அடைப்பட்டிருந்த அறையின் கதவை திறந்து பார்த்த சிவரஞ்சனிக்கு அதிர்ச்சி....

    'நிரஞ்சனி அழுதுகொண்டு சோர்ந்து கிடப்பாள்' என்று எதிர்பார்த்த சிவரஞ்சனிக்கு, நிரஞ்சனி அங்கு தலைவிரிகோலமாக நெற்றியிலும் கன்னத்திலும் நகக்கீறலோடு விறைப்பாக காலி கோலத்தில் அமர்ந்திருந்தது வித்தியாசமாக இருந்தது.

    "ஏய் ரஞ்சி... ஏண்டி இப்படி உக்காந்திருக்க... " என்று கேட்டுக்கொண்டு உள்ளே நுழைந்து அவளுக்கு தேவையானதை செய்தாள். முடியை கொண்டையிட்டு காயம் பட்டிருந்த இடங்களுக்கு மருந்திட்டாள். கை முகம் கழுத்து... என்று சரமாரியாக நகக் கீறல்கள்.

    மருந்திட்ட சிவரஞ்சனி நிரஞ்சனியுடைய காயங்களை பார்த்து கண்ணீர்விட்டாள். ஆனால் காயம் பட்ட நிரஞ்சனி பெண் புலியாக நிமிர்வாக அமர்ந்திருந்தாள்.

    'ஏன்... ஏன்... நான் என்ன தப்பு செய்தேன்... எதற்கு என்னை இப்படி அடித்தான்? என்னை அடிக்க இவனுக்கு என்ன உரிமை இருக்கிறது....? இந்த அநியாயத்தை ஏன் ஒருவர் கூட தட்டிக் கேட்கவில்லை....? அம்மா... அப்பா... சித்தப்பா... சித்தி.... அக்கா... யாருமே அவனை ஒரு வார்த்தை கேட்கவில்லையே... எல்லோரும் அவனை சமாதானம் செய்தார்களே.... ஏன்....? ஏன்...?' என்று அவளுக்குள் ஆயிரம் கேள்விகள்.

    அவளுடைய அனைத்து கேள்விகளுக்கும் விரைவிலேயே விடை கிடைத்தது.......

    - தொடரும்​


    Please post your comments here : http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/154004-comments.html
    [/JUSTIFY]
     
    1 person likes this.
  5. nithyakarthigan

    nithyakarthigan Gold IL'ite

    Messages:
    600
    Likes Received:
    509
    Trophy Points:
    188
    Gender:
    Female
    [JUSTIFY]அத்தியாயம் - 4

    பழைய கதை


    தினமும் நிரஞ்சனி ஏழு மணிக்கே மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்தாள். அவள் இன்ஸ்பெக்டர் பிரசன்னாவின் பேச்சை அலட்ச்சியம் செய்துவிட்டாள். அதில் எரிச்சலடைந்த பிரசன்னா மீண்டும் மருத்துவமனைக்கு வந்துவிட்டான். அவளோடு வேலை செய்யும் பெண்களுக்கு முன் வைத்து நிரஞ்சனியை கேவலமாக பேசினான்.


    "என்னடி... சொல்ல சொல்ல நீ பாட்டுக்கு காலையிலேயே கெளம்பி வந்துடற... ஏன்...? வேற எவனாவது இளிச்சவாயன் மாட்டிட்டானா...? அதுதான் என்னை தூக்கி எரிஞ்சிட்டியா...? ஒன்னோட தகிடுதத்தம் வேலையெல்லாம் என்னுகிட்ட வச்சுக்காத... தொலைச்சுடுவேன் தொலைச்சு..." என்று அவளை மிரட்டினான்.


    அவன் பேசியது எதற்கும் நிரஞ்சனி பதில் பேச முடியாமல் விக்கித்து நின்றாள். அவன் பேசியவிதம் என்னவோ நிரஞ்சனி அவனோடு பழகிவிட்டு ஏமாற்றியது மாதிரி இருந்தது. அப்படித்தான் அவளோடு வேலை செய்த பெண்கள் நினைத்துக் கொண்டார்கள். அவனும் அதை எதிர்பார்த்துதான் அப்படி பேசினான்.


    நிரஞ்சனி அவனுக்கு பயந்ததற்கு காரணம் அவன் ஒரு போலீஸ் காரன். இரண்டாவது, பிரச்சனையை அவன் கொண்டு செல்லும் விதம். எல்லோரிடமும், அவனுக்கு நிரஞ்சனியோடு நீண்ட நாள் பழக்கம் என்பது போல் ஒரு மாயையை அவன் உண்டாக்குவதை நிரஞ்சனி புரிந்து கொண்டாள். இந்த நிலையில் அவனை எப்படி கையாள்வது என்று புரியாமல் திகைத்தாள்.


    அவன் நிரஞ்சனியிடம் பேசிய இடம் கார்த்திகா மருத்துவமனையில் Dr.புகழேந்தியின் அறைக்கு எதிரில். புகழேந்தியை பற்றி நிரஞ்சனிக்கு சிறிதும் தெரிந்திருக்கவில்லை. எனவே அவளுக்கு அது பெரிய விஷயமாக தெரியவில்லை. அவன் பேசியது மட்டும் தான் அவளுக்கு பொருட்டாக இருந்தது.


    ஆனால் மருத்துவமனைக்கு வந்துவிட்டு தன்னுடைய நோயாளிகளை அவர்கள் தங்கியிருக்கும் அறைக்கு சென்று பார்த்துவிட்டு (ரௌண்ட்ஸ்) தன்னுடைய அறைக்கு வந்த புகழ், பிரசன்னா பேசியதையும் அதற்க்கு நிரஞ்சனி பதில் சொல்லாமல் திகைத்து நிற்ப்பதையும் தெளிவாக பார்த்தான்.


    அவனுக்கு அந்த போலீஸ்காரன் நிரஞ்சனியிடம் பேசுவது பிடிக்கவில்லை. அவர்களை நெருங்கியவன் "என்ன இங்க பிரச்சனை..."என்று அதட்டலாக கேட்டான்.


    திடீரென்று ஒரு டாக்டரை அங்கு பார்த்ததும் நிரஞ்சனி பயந்துவிட்டாள். ஏதாவது திட்டிவிடுவாரோ என்று அவள் பயந்து கொண்டிருக்கும் போதே...


    "சொந்த விஷயம்..." என்று பிரசன்னா பதில் சொன்னான்.


    புகழேந்திக்கு அதை கேட்டதும் யாரோ நெருப்பை போட்டு அவனை பற்றவைத்தது போல் எரிந்தது. அந்த எரிச்சலை மறைக்காமல் "சொந்த விஷயமெல்லாம் ஹாஸ்ப்பிட்டளுக்கு வெளிய பேசிக்கோங்க... இங்க அனாவசியமா நிக்கக் கூடாது... " என்று அவனிடம் எரிந்து விழுந்துவிட்டு...


    அவளிடம் திரும்பி "பேர் என்ன...?" என்றான் எரிச்சலாக.


    "நிரஞ்சனி சார்..." என்று மெதுவாக சொன்னாள்.


    அந்த குரலில் இருந்த நடுக்கமும் மென்மையும் அவனை என்னவோ செய்தது.... ஆனாலும் ஏதோ ஒரு கோவம் உந்த "டியூட்டி டைம்-ல இங்க என்ன வெட்டி அரட்டை... ம்ம்... உங்க ப்லேஸ்க்கு போங்க..." என்று குரலை உயர்த்தாமல் அழுத்தமாக சொல்ல அவள் 'விட்டால் போதும்' என்று ஓடியேவிட்டாள்.


    பிரசன்னாவும் புகழேந்தியை முறைத்துக்கொண்டே வெளியேறிவிட்டான்.


    புகழேந்திக்கு தான் அந்த சம்பவத்திற்கு பின் எதுவுமே ஓடவில்லை. 'முதல் முதலில் அவளிடம் இந்த மாதிரி ஒரு மனநிலையில் தானா பேசவேண்டும்...' என்று அந்த சூழ்நிலையை மனதில் நினைத்து அலுத்துக் கொண்டான்.


    அவனுக்கு ஒரு தெளிவு தேவைப்பட்டது. அந்த போலீஸ்காரன் பேசியதை பார்த்தால் நிரஞ்சனியும் அவனும் ஒருவரை ஒருவர் விரும்பியதாகவும்... இப்போது அவர்களுக்குள் ஏதோ ஊடல் மாதிரியும் தோன்றுகிறது. ஆனால் நிரஞ்சனியின் முகம் அவனுக்கு பயந்து நடுங்குவது போல் இருக்கிறது. இதில் எது உண்மையாக இருக்கும்...?


    அதை தெரிந்துக்கொள்ள புகழ் நிரஞ்சனியை கவனமாக கண்காணிக்க ஆரம்பித்தான்.


    இன்றைய கதை


    அதிகாலை பொழுது. கீழ் வானம் வெளுக்க ஆரம்பித்திருந்தது. பொழுது முழுதாக விடிதிருக்கவில்லை. பறவைகள் இறை தேடி கூட்டை விட்டு பலவித ஒலிகளை எழுப்பிக் கொண்டே சிறகடித்தன. பால்காரன் சாலையில் "கிளிங் கிளின்" என சைக்கிள் மணியை அடித்துக் கொண்டே சென்றான். அல்லி வாசலில் சாணம் தெளித்து... கூட்டி... மாக்கோலம் போட்டுக் கொண்டிருந்தார். இராஜசேகரின் புல்லெட் வாசலில் வந்து நின்றது. நிமிர்ந்து பார்த்த அல்லி


    "வாங்க... மாப்ள. என்ன இந்நேரத்துக்கு...?" என்று இழுத்தார்.


    "ஒன்னும் இல்ல அத்த... அவ என்ன பண்றா? நல்ல இருக்காளா...?"


    "யாரு ரஞ்சியயா கேக்குறீங்க...?"


    "ஆமா... நேத்து ஏதோ ஒரு வெறியில அவ மேல கை வச்சுட்டேன்... நல்லா அடி பட்டிருக்கு(ம்)... ஒடம்பு ஏதும் முடியாம போய்ட்டோன்னு பாத்துட்டு போகலாமுன்னு வந்தேன்..."


    "ஆமா... ராத்திரி கொஞ்ச(ம்) காச்சலடிச்சுது... இப்ப தேவலா (ம்)... உள்ள வங்க... காப்பி போடறேன்... குடிக்கலா(ம்)..."


    "இல்ல இல்ல... அவ எப்புடி இருக்கான்னு கேக்கதா வந்தே(ன்). வயலுக்கு ஆளு வர சொல்லியிருந்தே(ன்). போயி பாக்கணும்.... நேரமாச்சு.... நா பத்து மணி போல திரும்ப வர்றேன்... பேசிக்கலா(ம்)..." என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றான்.


    காலை பத்து மணிக்கு அல்லியின் வீட்டு கூடத்தில் நிரஞ்சனி, தாமரை, அரசு, அல்லி, வேணு, சிவரஞ்சனி, நீரஜா, இராஜசேகர் அனைவரும் ஆஜராகிவிட்டார்கள்.


    "என்ன மாமா... ரஞ்சிக்கு கல்யாண ஏற்ப்பாடு பண்ணிவிட்டீங்க போல..." என்று இராஜசேகர் நிரஞ்சனியின் தந்தை அரசுவை பார்த்து கேட்டான்.


    "அதெல்லா(ம்) இல்ல மாப்ள..."


    "என்ன இல்ல... கோபாலன் சித்தப்பா அந்த பயல தஞ்சாவூருக்கு போயி பாத்துருக்காரு... நீங்க சொல்லாமலா அவரு போயிருப்பாரு?"


    "ஆமா மாப்ள... பையன பாத்துட்டு வர சொன்னோம்... ஆனா நீங்க இல்லாம எப்புடி கல்யாணத்த முடிவு பண்ணுவோ(ம்)..." என்று அவனை சமாதானம் செய்ய முயன்றார்.


    "எதுக்கு அவர போயி பாக்க சொன்னீங்க...? பெரிய டாக்டர்ன்னா கண்ண மூடிகிட்டு பொண்ண குடுத்துருவியலோ...! "


    அரசு 'இவனுகிட்ட பேசுறதுக்கு எங்கையாவது போயி முட்டிக்கலா(ம்)...' என்று மனதிற்குள் நினைத்தாலும் 'பெண் கொடுத்துவிட்டோம்... கொஞ்சம் பொறுத்துத்தான் போக வேண்டும்' என்று மனதை தேற்றிக்கொண்டு


    "அதெல்லாம் இல்ல மாப்ள..." என்று சமாளித்தார்.


    வேணு தொடர்ந்தார்... "மாப்ள... நீங்க ஏ இவ்வளவு ரோசப்பட்டுக்குறீங்க....? நல்லா படிச்ச மாப்பள வசதியானவரு... அவருக்கு பொண்ணு கொடுக்குரதுல என்ன தப்பு...?" தெளிவாக கேட்டார்.


    "சின்ன மாமா.... அவன் நம்ப சாதி இல்ல..." ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னான் இராஜசேகர். அவ்வளவுதான்... அங்கு இருந்த அனைவரும் அந்தர் பல்ட்டி அடித்துவிட்டார்கள்.


    "அடக்கடவுளே... நம்ப சாதி இல்லையா... என்னக்கா நீ... அவ(ன்) எவ்வளவு பெரியா நாடால்ற ராசாவா இருந்தாலு(ம்) நமெக்கென்ன கரும(ம்)... வேத்து சாதிக்கார பயலுக்கு பொண்ணு குடுக்கவா நீ இவள பெத்து வளத்து வச்சிருக்க...?" அல்லி பொரிந்தாள்.


    "அட கருமமே... இத கேக்காம வந்திருக்கார கோபாலண்ண(ன்).... ஐயேய்ய... ஐயேய்ய... சாதி விட்டு சாதி சம்மந்தம் பன்னிருப்போமே...! எல்லா இந்த குட்டியோட வேல தா(ன்) அல்லி " என்று தாமரை அங்காலைத்துக் கொண்டார்.


    "எல்லாத்தையும் சொன்னவ சாதிய மட்டும் சொல்லல பாத்தியா....? இவள... " என்று கையை ஓங்கிக்கொண்டு அரசு நிரஞ்சனியின் மீது பாய்ந்தார். அதற்குள் பெண்கள் அவளை வேறு ஒரு அறைக்குள் தள்ளி கதவை மூடிவிட்டார்கள்.


    இராஜசேகர் தெளிவாக சொன்னான்..."மாமா... நீங்க உங்க பொண்ண யாருக்கு வேணுன்னாலும் குடுங்க... அது உங்க விஷயம்... ஆனா சாதி விட்டு சாதி பொண்ணு குடுத்திங்கன்னா அதுக்கப்பற(ம்) உங்க மூத்த பொண்ணு என்னோட பொண்டாட்டியா இருக்க மாட்டா...." என்ற சொன்னதும் அங்கிருந்த அனைவரும் அதிர்ச்ச்யில் உறைந்து விட்டார்கள்.


    பொதுவாக கிராமங்களில் ஒரு பெண் கணவனோடு வாழாமல் பிறந்த வீட்டிற்கு வந்துவிட்டால், அவள் மீது தவறு இல்லை என்றாலும் அவளுக்கும் அவளுடைய பெற்றோருக்கும் அது மிகப்பெரிய அவமானம்....


    அவன் பேசிமுடித்த அடுத்த கணமே நிரஞ்சனியின் தாய் தாமரை.... "இந்த கல்யாண(ம்) நடக்காது மாப்ள..." என்றார். இதை அடுத்த அறையிலிருந்து கேட்ட நிரஞ்சனிக்கு நெஞ்சில் நெருப்பை அள்ளி கொட்டியது போல் இருந்தது.


    "அப்ப சரி... நீங்க எனக்கு வாக்கு கொடுத்துருக்கீங்க... இனிமே அவ வேலைக்கு போக வேண்டாம்... அவகிட்ட இருக்க செல் போன் எனக்கு வேணும்... சாயந்தரமா வர்றேன் வாங்கி வைங்க... அவளுக்கு நா மாப்ள பாக்குறேன். அவ கல்யாணத்துக்கு நா பொறுப்பு...." என்று பொதுவாக சொல்லிவிட்டு...


    "சின்ன மாமா... அவளுக்கு கல்யாணம் முடிவாவுற வரைக்கும் அவ இங்கயே இருக்கட்டும் " என்று நிரஞ்சனியின் சித்தப்பாவிடம் சொல்லிவிட்டு போய்விட்டான்.


    அவன் வெளியே சென்றதும் ஆண்கள் இருவரும் அவரவர் வேலைக்கு சென்றுவிட, நிரஞ்சனி அவள் இருந்த அறையிலிருந்து வெளியே வந்து சிவரஞ்சனிக்கு அருகில் அமர்ந்தாள். அவள் முகத்தை பார்த்ததும் தாமரை தன் ஆத்திரத்தை அவளிடம் கொட்ட ஆரம்பித்துவிட்டார்.


    "அடி பாவி... சண்டாளி... குடிய கெடுக்க வந்த கூனி.... வேத்து சாதிக்கார பயலையாடி புடுச்ச...? அன்னைக்கு அவ்வளவு சொல்லி என்ன எமாத்துனியேடி...! இவ(ன்) வேத்து சாதிக்காரன்னு சொன்னியாடி நீ...? " என்று தாமரை மகளை கொத்தி பிடுங்கினார்.


    அவள் அசையாமல் அமர்ந்திருந்தாள்.


    "உக்காந்துருக்கா பாரு...! எங்கண்ணு முன்னால உக்காராதடி... உன்ன பாத்தாலே பச்சனாவியா(விஷம்) இருக்கு... போயி தொல... "


    அவள் அப்போதும் அசையாமல் அமர்ந்திருந்தாள்... யாரும் எதுவும் பேசாமல் இருந்தார்கள். அனைவருக்குமே நிரஞ்சனியின் மீது கோவம் இருந்தது. அதனால் தாமரையை யாரும் தடுக்கவில்லை.


    "எட்டி... என்னடி மொறச்சுகிட்டு உக்காந்துருக்க...? ஒனக்கு போனு (போன்) ஒரு கேடா...? எங்கடி வச்சிருக்க அத...? அத வச்சுகிட்டு தானே அவனோட கொஞ்சிகிட்டு இருப்ப...!? நா ஒரு ஏமாந்த சிறுக்கி.. நீ பேசுறத பாத்தாலு(ம்) நம்ப மவளும் போனெல்லாம் வச்சு பேசுராலேன்னு பெருமையா நெனச்சுக்குவே(ன்)... ஒ(ன்) வண்டவாலத்த வேம்பங்குடியா (ன் ) கரயேத்திபுட்டா(ன்)...."


    "எங்கடி வச்சுருக்க அந்த போன...? கொண்டாடி அத... கொண்டாடிங்கிரன்ல..." என்று நிரஞ்சனியிடம் பாய்ந்து வர அப்போதும் அவள் அழுத்தமாக இருக்க, தாமரைக்கு வெறி வந்து அருகில் கிடந்த துடைப்பத்தை எடுத்து 'சக்கு சக்கென்று' நிரஞ்சனியை விளாசி தள்ளிவிட்டார்.


    நிரஞ்சனி கண்ணிலிருந்து சொட்டு கண்ணீர் வரவில்லை. அவ்வளவு அடியையும் வாங்கிக்கொண்டு அசையாமல் அமர்ந்திருந்தாள். அவள் அப்படி இறுகி அமர்ந்திருப்பது தாமரைக்கு இன்னும் வெறியானது. தென்னங்கீற்று துடைப்பம் சுக்கல் சுக்கலாக சிதறியது. நிரஞ்சனியின் கையில் தோல் கிழிந்து இரத்தம் வழிந்தது.


    தாமரை வாயால் பேசும் போதும் அடிக்கும் போதும் மற்றவர்கள் (அல்லி, சிவரஞ்சனி, நீரஜா) தடுக்கவில்லை. பிள்ளையை கண்டிக்க வேண்டும். அது சரிதான் என்று அனைவரும் அமைதியாக இருந்தார்கள். நிரஞ்சனியின் கையில் இரத்தத்தை பார்த்ததும் அனைவரும் பதறினார்கள். தாமரையை பிடித்து இழுத்தார்கள். நிரஞ்சனியை சிவரஞ்சனி இழுத்துக்கொண்டு அவளுடைய அறைக்கு போனாள்.


    ஆனால் நிரஞ்சனி சிவரஞ்சனியின் கையை உதறிவிட்டு உள்ளே சென்று அவளுடைய கைபேசியை எடுத்துக் கொண்டு கூடத்திற்கு வந்தாள். அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே புகழேந்தியின் அண்ணிக்கு தொலைபேசியில் அழைத்தாள்.


    புகழேந்தி இப்போது அவனுடைய அண்ணன் வீட்டில் தான் இருக்கிறான். அவனுடைய சொந்த ஊர் சேலம். பெற்றோர்கள் அங்கு தான் இருக்கிறார்கள். இவன் அண்ணனுடன் வசிக்கிறான். அண்ணனும் ஒரு மருத்துவர். அவர் தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ்-ல் வேலை செய்கிறார்.


    "அக்கா நா நிரஞ்சனி பேசுறேன்கா..."


    "சொல்லு ஜெனி... இன்னிக்கு Hospital போகலையா...?"


    "அக்கா..." என்று ஆரம்பிக்கும் போதே தாமரை பாய்ந்து வந்து அவளுடைய முடியை கொத்தாக பிடித்துக்கொண்டு முதுகிலும் கையிலும் அடித்தார். கைபேசியை பிடுங்க முயற்சி செய்தார். ஆனால் நிரஞ்சனி எதற்கும் மசியவில்லை.


    மற்றவர்கள் தாமரையை தான் பிடித்து நிரஞ்சனியிடமிருந்து பிரித்தார்கள்.


    நிரஞ்சனி தன்னை திடப்படுத்திக் கொண்டு அனைவருக்கும் முன்பே பேசினாள்.


    "அக்கா.. இங்க பிரச்சனை நடக்குது... என்னை எல்லாரும் அடிச்சு நொறுக்குறாங்க... எனக்கு வேற மாப்பிள்ளை பார்க்க போறாங்களாம். "


    "ஐயோ.. என்ன ஜெனி சொல்ற... தம்பிக்கு என்ன கொறச்சல்... இது அநியாயம்... நேத்து வந்து உங்க மாமா சம்மந்தம் பேசிட்டு இன்னிக்கு இப்படி சொல்றது உங்களுக்கே நல்லா இருக்கா...?" என்று பொரியவும் நிரஞ்சனிக்கு கண்களில் குளம் கட்டியது. சிரமப்பட்டு அழுகையை விழுங்கிக் கொண்டாள். 'என்ன நடந்தாலும் சரி... அழுகவே கூடாது' என்று பிடிவாதமாக நினைத்துக் கொண்டு தொடர்ந்தாள்.


    "அக்கா... நா உயிரோட இருக்குற வரைக்கும் என்னை வேற எவனுக்கும் கட்டி வைக்க முடியாது... நா இப்ப உங்களுக்கு கூப்பிட்டது உங்களுக்கு விபரம் சொல்லதான். நா இனிமே வேலைக்கு வர முடியாது. இப்ப உங்களுகிட்ட பேசி முடிச்சதுமே என்னோட போனையும் பிடுங்கிவிடுவாங்க... இனி நா உங்களை தொடர்புகொள்ளவே முடியாது... ஆனா பயப்படாதிங்க புகழ்க்கும் எனக்கும் கல்யாணம் நடக்கும்... புகழ்கிட்ட நா சொன்னேன்னு சொல்லுங்க..." என்று சொல்லிவிட்டு போனை அனைத்து தாமரையிடம் தூக்கி எறிந்தாள்.


    நிரஞ்சனியின் செயலில் வெறியான தாமரை, அவளை கை ஓயும் வரை அடித்துவிட்டு...


    "எப்புடி...டி அவன கட்டிக்குவ... எப்புடி கட்டிக்குவ...?" என்று ஆங்காரமாக கேட்டாள்.


    "ஏன் முடியாது...?" நிரஞ்சனியும் சளைக்காமல் பதில் கேள்வி கேட்டாள்.


    "வேம்பங்குடியான அவ்வளவு லேசா நெனச்சுட்டியா...? ஒன்ன தல கீழ கட்டி தொங்கவுட்டு தோல உரிச்சுப்புடுவான்டி..."


    தாமரை இராஜசேகரைத் தான் குறிப்பிட்டார். அதை புரிந்து கொண்ட நிரஞ்சனி..


    "அவன் யாரு என் மேல கை வைக்க...? பொம்பள புள்ள மேல கைவைக்கிறா(ன்)... வெக்கங் கெட்டவன்..." என்றாள்.


    அடுத்த நொடி நிரஞ்சனியின் கன்னத்தில் 'பட்' என்று அறை விழுந்தது. தாமரையின் கை விரல்கள் நிரஞ்சனியின் கன்னத்தில் பதிந்திருக்க, உதட்டில் பல் பட்டு ரெத்தம் வடிந்தது.


    அதை நிரஞ்சனி தாமரை இருவருமே அலட்ச்சியம் செய்து தங்களுடைய வாதத்திலேயே குறியாக இருந்தார்கள்.


    "அவரு எம் மருமவன்டி... எனக்கு ஆம்புள புள்ள இல்லாதத்துக்கு அவரு தான் எம் மவன்.... உன்ன அடிக்கவும் கொள்ளவும் அவருக்கு உரிமை இருக்கு தெருஞ்சுக்க..."


    "உனக்கு ஆண் பிள்ளை இல்லன்னா, அவன் என்னை அடிப்பானா...? உனக்கு ஆண் பிள்ளையா நான் பிறந்திருந்தேன்னா, அவன தல கீழ கட்டி... நான் தொங்க விட்டிருப்பேன்... அத நீ தெரிஞ்சுக்க..." நிமிர்வாக சொன்னாள்.


    அதை சொல்லிவிட்டு தாமரையிடம் பலமாக வாங்கிக் கொண்டாலும் அவள் அழவும் இல்லை அவளுடைய உறுதியிலிருந்து தளரவும் இல்லை.


    - தொடரும்


    Please post your comments here : http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/154004-comments-3.html[/JUSTIFY]
     
    1 person likes this.
  6. nithyakarthigan

    nithyakarthigan Gold IL'ite

    Messages:
    600
    Likes Received:
    509
    Trophy Points:
    188
    Gender:
    Female
    [JUSTIFY]அத்தியாயம் - 5

    பழைய கதை


    மாலை ஏழு மணிக்கு அந்த பஸ் நிறுத்தத்தில் நிரஞ்சனி வெளிறிய முகத்தோடு நின்று கொண்டிருதாள். அவளுக்கு முன் பிரசன்னா நின்று அவளோடு ஏதோ பேசிக் கொண்டிருந்தான். இதை தன்னுடைய காரில் அமர்ந்தபடி புகழேந்தி தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான்.


    இந்த ஒரு வாரமாக அவன் நிரஞ்சனியை கண்காணித்துப் பார்த்ததில் நிரஞ்சனியின் கண்கள் துளியளவு கூட பிரசன்னாவை பார்க்கும் போது காதலை பிரதிபலிக்கவில்லை. மாறாக ஒரு பயத்தை தான் காட்டியது. இன்று அது கொஞ்சம் அதிகமாகவே தெரிகிறது.


    பிரசன்னா நிரஞ்சனியின் கையை பிடிக்க முயன்றான். புகழ் தன் காரை ஸ்டார்ட் செய்துவிட்டான். நொடியில் அவர்களை நெருங்கியவன், சடன் பிரேக் அடித்து காரை நிறுத்திவிட்டு, நிரஞ்சனியை பார்த்து


    "ஜெனி... பஸ்சுக்கு வெயிட் பண்றியா...? வாயேன்... உன்ன நான் பஸ் ஸ்டாண்ட்ல டிராப் பண்றேன்... கூட்டம் இல்லாமல் இருக்கும்..." என்றான் எதேர்ச்சையாக பார்த்து கேட்பதுபோல். சந்து கேப்பில் அவன் மனதிற்குள் உருபோட்டுக் கொண்டிருக்கும் பெயரையே சொல்லி அவளை அழைத்தான்.


    அதையெல்லாம் அவள் கவனிக்கவில்லை. தெரிந்த டாக்டர் லிப்ட் கொடுக்கிறார். அருகில் நின்று கொண்டிருக்கும் பிசாசிடமிருந்து தப்பிக்க நினைத்து சட்டென காரில் நுழைந்து கதவை பட்டென மூடினாள்.


    அது பிரசன்னாவிற்கு பெரிய தலையிறக்கமாக போய்விட்டது. நிரஞ்சனியை எப்படியும் அடைந்தே தீர வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டான்.


    ---------------------------------------------------------------------------------------------------------


    "உனக்கு ஏன் இவ்வளவு வேர்க்குது ஜெனி... AC-yai அதிகமாக்கவா...?" என்று நிரஞ்சனியை பார்த்துக் கேட்டான் புகழ்.


    அப்போதுதான் அவள் அதை கவனித்தாள். அவன் அவளை 'ஜெனி' என்று அழைத்தான்.


    "இல்ல சார்... வேண்டாம்... என் பேர் நிரஞ்சனி சார்..." என்று பவ்யமாக சொன்னாள்.


    "ஹோ... அன்னிக்கு நிரஞ்சனின்னு சொன்னல்ல...! எனக்கு 'ஜெனி'யே மனசுல நின்னிடுச்சு.... உன்ன நான் அப்படியே கூப்பிடலாமா... அதுதான் எனக்கு ஈஸி..." என்றான்.


    'நிரஞ்சனி' என்ற அவளுடைய பெயரை அவன் மறந்திருப்பானா....?! நிரஞ்சனியின் செல்ல சுருக்கம் 'ஜெனி' என்பதை அவளிடம் சொல்லாமல் எவ்வளவு சாமர்த்தியமாக சமாளிக்கிறான்...!


    நிரஞ்சனி எதுவும் சொல்லாமல் 'சரி' என்பதுபோல் தலையாட்டினாள்.


    "யார் அந்த பையன்... அன்னிக்கு கூட Hospital-ல்ல ஏதோ உன்கிட்ட பிரச்சனை பண்ணிக்கிட்டு இருந்தார்... இன்னிக்கும்..." என்று மேலே சொல்லாமல் இழுத்தான்.


    "எனக்கே தெரியல சார்... முதல்ல பஸ்ல வரும்போது பார்த்திருக்கேன். அப்புறம் அவரா என்ன தெரிஞ்ச மாதிரி பேசினார். இப்போ ஏதேதோ உளறிகிட்டு தொல்லை பண்ணிக்கிட்டு இருக்கார். "


    "என்ன பத்தின விபரம் எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கார். எங்க படிச்சேன், அப்பா அம்மா பேர், என்னை வீட்டில் கூப்பிடும் பேர், எல்லாமே தெரிஞ்சு வச்சிருக்கார். அதெல்லாம் இவருக்கு எப்படி தெரிஞ்சதுன்னு தெரியல... " என்று இதுவரை யாரிடமும் சொல்லாமல் தனக்குள் வைத்திருந்த விபரகளை அவனிடம் கோடிட்டு காட்டினாள்.


    "உங்க வீட்டுக்கு இவனை பற்றி தெரியுமா...?"


    "தெரியாது சார்..."


    "ஏன் சொல்லல...?"


    "ஆரம்பத்துல 'சின்ன விஷயம்... இத எதுக்கு வீட்டுக்கு சொல்லி நாமே பெருசாக்கணும்' என்று நினைத்து சொல்லாமல் விட்டுட்டேன். இப்போ சொன்னா பெரிய பிரச்சனையாகிவிடும். எங்க சொந்தக்காரங்க எல்லாம் அடி தடின்னு இறங்கிவிடுவாங்க... பயமா இருக்கு..." என்றாள்.


    "காலையில Hospital வரும் போதும் இப்படிதான் தொல்லை செய்றானா...?"


    "இல்ல சாய்ந்திரம் தான்... வீட்டுக்கு போகும் போது பஸ் நிறுத்தத்துக்கு வந்து ஏதாவது பேசிகிட்டே இருக்கான்..."


    "சரி... என்னோட டைம் கூட இதுதான்... இனி நீ என்னோட கார்ல சாய்ந்தரம் வந்துடு... உன்னை நான் பஸ் ஸ்டாண்ட்ல டிராப் பண்ணிவிடுறேன்."


    அவன் அதை சொன்னதும் நிரஞ்சனிக்கு ஆச்சர்யம்.


    'ஏதோ வழியில பார்த்த Hospital ஸ்டாப்க்கு ஒரு டாக்டர் லிப்ட் கொடுத்தது ஓகே... ஆனால் தினமும் அதை செய்றேன்னு சொன்னா அதை எப்படி எடுத்துக்கிறது...?'


    நிரஞ்சனியின் முகம் சட்டென மாறியது. அவள் கண்களுக்கு இபோது புகழேந்தியும் தவறாக தெரிந்தான்.


    "இல்ல சார்... நானே பார்த்துக்குறேன்... உங்களுக்கு எதுக்கு சிரமம்..." என்று மறுத்துவிட்டாள்.


    புகழேந்திக்கும் கொஞ்சம் அவசரப் பட்டுவிட்டோம் என்று புரிந்தது. அதனால் அவளை கட்டாயப்படுத்தாமல் பஸ் ஸ்டாண்டில் இறக்கிவிட்டுவிட்டு தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தான். அவள் பஸ்ஸில் ஏறி பஸ் கிளம்பியதும் அவனும் காரை கிளப்பிக் கொண்டு புறப்பட்டான்.


    இன்றைய கதை


    நிரஞ்சனி அவளுடைய சித்தியின் வீட்டில் தங்கியிருந்தாள். அவளிடமிருந்து கைபேசி பறிக்கப்பட்டு விட்டதால் அவளால் புகழேந்திக்கு தொடர்புகொள்ள முடியவில்லை. ஆனால் அவள் மனம் முழுவதும் அவனிடமே இருந்தது. அவள் ஒவ்வொரு முறை மூச்சு கற்றை சுவாசிக்கும் போதும் 'புகழ்... புகழ்...' என்று சொல்லிக் கொண்டே தான் சுவாசித்தாள். அவன் அவளுடைய உயிரோடு கலந்துவிட்டான் என்பதை அவளே அப்போதுதான் உணர்ந்தாள்.


    அவள் இருப்பது கிராமத்தில். என்னதான் சித்தியின் வீடாக இருந்தாலும் அது அவளுடைய வீடு இல்லை. அதுவும் அவர்களை பொறுத்தவரை ஏதோ செய்யக் கூடாத ஒரு தவறை செய்துவிட்ட ஒரு குற்றவாளி அவள். அந்த நிலையில் சித்தியும் சிவரஞ்சனியும் வீட்டு வேலைகளை செய்யும் போது, அவள் மட்டும் சோம்பியிருந்தால் வித்தியாசமாக தெரியும் என்பதால் முடிந்த அளவு தன்னை தேற்றிக்கொண்டு சித்திக்கு உதவிகளை செய்துகொண்டு நடமாடிக் கொண்டிருந்தாள். அதுவே அவளுக்கு பழகிவிட்டது. ஆரம்பத்தில் சித்திக்கு உதவிகளை செய்து கொண்டிருந்தவள் பின் அனைத்து வேலைகளையும் தானே செய்ய ஆரம்பித்துவிட்டாள்.


    மற்றவர்கள் தடுத்தாலும் இழுத்துப் போட்டுக்கொண்டு வேலைகளை செய்வாள். அந்த வேளைகளில் அவளால் அவளுடைய கவலைகளை மறக்க முடிந்தது தான் அதற்கு முக்கிய காரணம். பார்பவர்களுக்கு அவள் பழயபடி தெளிந்து விட்டாள் என்று தோன்றியது. ஆனால் அவள் உள்ளுக்குள் மறுகிக் கொண்டிருந்தது யாருக்கும் தெரியவில்லை.


    அந்த நிலையில் இராஜசேகர் ஒருநாள் வந்தான்.


    "மாமா... இனி ரஞ்சிக்கு மாப்பிள்ளை பார்க்கலாம்... ஓரளவுக்கு அவ இப்போ 'நார்மலா' ஆயிட்டான்னு நினைக்கிறேன்..." என்றான் வேணுவிடம்.


    "ஆமா மாப்ள... அதுக்கும் வீட்டுக்குள்ளயே இருக்குறது கஷ்ட்டமா இருக்கும்... சூட்டோட சூடா இந்த விஷயத்த முடிச்சிறனும்... அந்த பையன் ஏதாவது பிரச்னைக்கு வந்தாலும் வந்துடுவான்...." என்று வேணு தெரியாத்தனமாக சொல்லிவிட்டார். அவ்வளவுதான் இராஜசேகர் குதிக்க ஆரம்பித்துவிட்டான்.


    "அவன் மட்டும் இங்க வறட்டு(ம்)... வெட்டி பொதச்சர்றே(ன்)... அவனுக்கு என் கையாலதான் சாவுன்னு எழுதி வச்சிருந்தா அதை அந்த ஆண்டவனால கூட தடுக்க முடியாது... " என்று 'குய்யோ முயோ' என்று கத்த ஆரம்பித்துவிட்டான். சின்ன மாமனார் அவனை கெஞ்சாத குறையாக கேட்டு மலையிரக்கினார்.


    அதற்க்கு பிறகு தான் அவன் விஷயத்துக்கு வந்தான்.


    "மாமா... அவ(ன்) டாக்டர் வேல பாக்குறான். நம்ப ரஞ்சியும் ஒன்னுங் கொரஞ்சவ இல்ல... நீங்க அவளுக்கு ஒரு டாக்டர் மாப்பிள்ளையே பாருங்க... அப்படி அமையலைன்னா இஞ்சினியர் மாப்பிள்ளையா பாருங்க... செலவு எத்தன லட்சம் ஆனாலும் நான் செய்யிறேன்... அவ எனக்கு கட்டுப்பட்டு இந்த வீட்டோட இருக்கா... அவளுக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் கொடுக்க வேண்டியது என்னோட கடம..." என்று நெகிழ்ச்சியாக அவன் பேசிய விதத்தில் அங்கிருந்த பெண்கள் அனைவருக்கும் கண்ணில் கண்ணீரே வந்துவிட்டது.... நிரஞ்சனியை தவிர.


    அவன் அந்த பக்கம் சென்றதும் நிரஞ்சனி சொல்லிவிட்டாள்.
    "சித்தி... எனக்கு கல்யாணம் பண்ணனும் என்று நினைக்காதீங்க... அது உங்களுக்கு தான் கடைசில அவமானமா முடியும்..." என்றாள் அழுத்தமாக.


    அவளுடைய குரலில் இருந்த அழுத்தம் அவளை இந்த கல்யாண முயற்ச்சிக்கு வளைக்கவே முடியாது என்று தெளிவாக சொன்னது.


    ----------------------------------------------------------------------------------------------------------


    "அண்ணி அண்ணன் கிளம்பிட்டாரா...?"


    "அவர் காலையிலேயே கிளம்பிட்டார் புகழ்... நீ வா..... சாப்பாடு எடுத்து வக்கிறேன்..."


    "இல்லைண்ணி... எனக்கு வேண்டாம்... லேட் ஆச்சு... நா கிளம்பறேன்..."


    "என்ன புகழ் நீ... சின்ன புள்ள மாதிரி... எத்தன நாள் இப்படி அறையும் குறையுமா சாப்பிடுவ? அவ தான் அவளோட நிலமைய நமக்கு தெரியப்படித்தி விட்டாளே. கொஞ்சம் பொறுமையா இருப்பா..."


    "என்ன தெரியப்படுத்தினா...? அவளுக்கு மாப்பிள்ளை பார்க்குறத உங்களுக்கு சொன்னா..." என்றான் எரிச்சலோடு.


    "புகழ்... அந்த பொண்ண நீ எந்த காரணத்துக்காகவும் தப்பா பேசாத. அவ என்னுகிட்ட பேசும் போதே யாரோ அவள அடிச்சாங்க. எனக்கு நல்லா கேட்டுச்சு. அந்த அடியை வாங்கிக்கொண்டே எனக்கு தகவல் சொன்னா. எந்த காரணத்துக்காகவும் அவ உன்னை விட்டுக் கொடுக்கமாட்டா..." என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அந்த பெண்ணுக்கு கண் கலங்கியது.


    புகழேந்திக்கு அவனுடைய அண்ணியின் 'என்னுகிட்ட பேசும் போதே யாரோ அவள அடிச்சாங்க... அடியை வாங்கிக்கொண்டே எனக்கு தகவல் சொன்னா... ' என்ற வார்த்தைகள் உயிர்வரை சென்று வலித்தது. அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.


    'அவள் எங்கேயோ அவளுடைய சித்தியின் வீட்டில் இருக்கிறாளாம்... அந்த வீடு எங்கே இருக்கிறது. தெரிந்தாலும் போய் பேசிப் பார்க்கலாம்...' என்று ஏதேதோ சிந்தனைகள் ஓட... சிந்தனைகளுடே மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான்.


    நாளுக்கு நாள் புகழ் பைத்தியம் பிடித்தவனாக மாறிக்கொண்டிருந்தான். அவனால் அவனுடைய தொழிலில் கவனம் செலுத்த முடியவில்லை. ஒரே சிந்தனை... 'ஒரு முறை நிரஞ்சனியை பார்க்க வேண்டும்' என்ற சிந்தனை மட்டும் தான் அவனுடைய மனதில் முழுவதுமாக ஓடிக் கொண்டிருந்தது.


    அந்த நேரத்தில் நிரஞ்சனியே அவனுக்கு கைபேசியில் அழைத்தாள்.


    ----------------------------------------------------------------------------------------------------------


    "ரஞ்சி உன்னோட போன் கொஞ்சம் தர முடியுமா...?" நிரஞ்சனி சிவரஞ்சனியிடம் கேட்டாள்.


    "ஐயோ... ரஞ்சி.. எதுக்குடி...? அந்த பையனுக்கு பேசப் போறியா...? மாமாவுக்கு தெரிஞ்சா என்ன ஆகும் யோசிச்சியா...? உனக்கு மட்டும் இல்லடி... நீ ஏதாவது புது பிரச்சனைய கிளப்பினா அது அந்த பையனுக்கும் தான் ஆபத்து. பேசாம டிவி பாரு. இல்லன்னா வேற ஏதாவது பண்ணு. மனச போட்டு குழப்பிக்காத."


    "இல்ல ரஞ்சி... நா அவருக்கு போன் பண்ணனும். இல்லன்னா... புகழ் இங்க வந்துடுவார். அது அவரோட உயிருக்கே ஆபத்துன்னு உனக்கே தெரியும். அவரை இங்க வரவிடாம தடுக்கணும்."


    "அவர் இங்க வருவார்ன்னு உனக்கு எப்படி தெரியும்...?"


    "அவரை பத்தி என்னைவிட யாருக்கும் அதிகமா தெரியாதுடி. நா இல்லாம இப்போ பைத்தியம் பிடிச்ச மாதிரி இருப்பார்டி ரஞ்சி... என்ன காதலிச்ச பாவத்துக்காக அவர் என்னவெல்லாம் கஷ்ட்டப்படுறார்...' நிரஞ்சனிக்கு அழுகை வந்துவிடும் போல ஆனது. உடனே பேச்சை நிறுத்திக் கொண்டாள்.


    சிவரஞ்சனிக்கு பாவமாக ஆகிவிட்டது... 'ஒரு காதலை செய்துவிட்டு இவ என்னவெல்லாம் அனுபவிக்கிறா...? இந்த மாமா மட்டும் சம்மதிச்சா எல்லாரும் சரின்னு சொல்லிடுவாங்க... அவர் மட்டும் ஏன்தான் இப்படி இருக்காரோ... ச்ச... என்ன ஜாதி... ஜாதி...' என்று அவள் மனம் தங்கைக்காக (ஒரு மாதம் வயது வித்தியாசம் ) வருத்தப்பட்டாலும் நிரஞ்சனியிடம் காட்டிக் கொள்ளவில்லை.


    "சரி ரஞ்சி... அவர நீ வர வேண்டாம் என்று சொல்றதுக்காகன்னு சொல்ற... பேசு... ஆனா இதுவே கடிசியா இருக்கட்டும்..." என்று சொல்லி
    நிரஞ்சனியிடம் தன்னுடைய கைபேசியை கொடுத்துவிட்டு அவள் பேசி முடிக்கும் வரை யாரும் வராமல் பார்த்துக் கொண்டாள்.


    அவள் பேசிய நேரம் புகழ் ஓய்வெடுக்கும் நேரம். அந்த நேரத்தை கணக்கிட்டுத்தான் அழைத்தாள்.


    ----------------------------------------------------------------------------------------------------------


    அந்த பக்கம் கைபேசியை எடுத்து காதில் வைத்தவன் நிரஞ்சனியின் குரலை கேட்டு தடுமாறிவிட்டான்.


    "ஜெனி... ஜெனி... ஜெ... ஜெனிமா... எப்படி இருக்க ஜெனி... ஜெனி... உன்ன... உன்ன பார்க்கணும்... ஜெனி..." என்று பத்து நாட்களுக்கு பின் அவளுடைய குரலை கேட்டவன் என்ன பேசுவது என்று புரியாமல் தவித்துவிட்டான்.


    அவன் தவிப்பை பார்த்து நிரஞ்சனி நெகிழ்ந்து விட்டாள். 'இவனிடமிருந்து என்னை பிரித்தால் இவன் என்ன ஆவான்...' என்று அவனுக்காக உருகினாள். ஆனாலும்,


    "புகழ்... நா சொல்றத கவனமா கேளுங்க... " என்றாள் நிரஞ்சனி குரலில் அழுத்தத்தை கொண்டு வந்து.


    அவளுடைய குரல் மாற்றத்தை புரிந்து கொண்டு "சொல்லு...." என்றான்.


    "என்னையும்... உங்களையும் யாராலையும் பிரிக்க முடியாது. நான் அதுக்கு விட மாட்டேன். ஆனா நீங்க கொஞ்சம் பொறுமையா இருக்கணும். எந்த காரணத்தை கொண்டும் என்னை தேடி இங்க வரக் கூடாது. என்னோட பேச்சை மீறி நீங்க இங்க வந்தால் என்னோட பிணத்தை தான் பார்க்க முடியும்..." என்று அவனை மிரட்டினாள். அது மிரட்டல் மட்டும் அல்ல...


    அவளுக்கு தெரியும்... அவன் வேம்பங்குடிக்கோ அல்லது ஓரத்தநாட்டுக்கோ நிரஞ்சனியை தேடி வந்தால் அவன் உயிரோடு திரும்பமுடியாது. இராஜசேகரின் மூர்க்க குணம் அப்படி... அவனுக்கு ஆபத்து வந்து அதை அவள் பார்ப்பதைவிட அதற்க்கு முன்பே அவள் போய் விடுவது மேல்... என்று எண்ணித்தான் அப்படி அவனிடம் சொன்னாள்.


    நிரஞ்சனியின் வார்த்தைகளை கேட்ட புகழேந்திக்கு உடல் நடுங்கியது.
    "ஏய்... வாய மூடுடி... எங்கடி நீ இப்போ இருக்க...? சொல்லு..."


    "நா என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன்... நீங்க என்ன கேட்குறீங்க...?"


    "பேசாதடி... ஒரு வார்த்த பேசாத... இத்தன நாள் உன்னோட குரலை கேட்காம... உன்ன பார்க்காம கொஞ்சம் கொஞ்சமா செத்துகிட்டு இருக்கேன்.... இப்போ ஒரேடியா சாகடிக்க தான் நீ எனக்கு போன் பண்ணினியா...?"


    "ஏன் இப்படி பேசுறீங்க புகழ்...? என்ன கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க..."


    "என்னத்தடி புருஞ்சுக்குறது... நீ தஞ்சாவூருக்கு வந்து பத்து நாள் ஆகுது... நீ பாட்டுக்கு அங்க உக்காந்துருக்க... எனக்கு அங்க என்ன நடக்குதுன்னே தெரியல... உங்க வீட்டுக்கு வந்து சமாதானம் பேசலான்னு பார்த்தா இப்படி உயிர பிடுங்குற மாதிரி 'பிணத்தை தான் பார்க்க முடியும்ன்னு' சொல்ற... " என்று எரிந்து விழுந்தான்.


    "இங்க நடக்க வேண்டியதை நான் பார்த்துக்குறேன்... இது எனக்கும் என்னோட சம்மந்தப்பட்டவங்களுக்கும் நடக்குற போராட்டம்... இதுல எனக்கு உங்களோட உதவி தேவைப்படும் போது கண்டிப்பா உங்களுகிட்ட கேட்ப்பேன்... அதுவரை நீங்க பொறுமையா இருங்க..." என்று அவனை சமாதானம் செய்தாள்.


    அவன் முழுதாக சமாதானம் ஆகவில்லை.
    "சரி... இது யாரோட நம்பர்... இதுக்கு நான் கூப்பிடலாமா...? " என்று வேறு பேச்சிற்கு தாவினான்.


    "இல்ல... இது ரஞ்சியோட நம்பர்... நீங்க இதுக்கு கூப்பிட வேண்டாம். ஏதாவது செய்தின்னா நானே உங்களுக்கு கூப்பிட்றேன்..." என்று சொல்லி போனை அணைத்தாள்.



    - தொடரும்​


    Please post your comments here : http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/154004-comments-3.html
    [/JUSTIFY]
     
    2 people like this.
  7. iniyamalar

    iniyamalar Gold IL'ite

    Messages:
    1,432
    Likes Received:
    130
    Trophy Points:
    135
    Gender:
    Female
    அய்யய்யோ..

    காலங்கார்த்தால வேலையைப்பார்க்காம உங்க கதைக்குள்ள நுழைஞ்சா....அப்படியே கூட்டிக்கிட்டு போயிட்டீங்க வேம்பங்குடிக்கே..
    நா பாட்டுக்க ஸ்க்ரோல் டவுன் பண்ணிப் படிச்சுக்கிட்டே வந்தா சடார்னு முடிஞ்சு போச்சு..

    எப்பங்க அடுத்த பதிவ போடுவீங்க???

    கதை அமர்க்களமா இருக்கு நித்யா.

    கதையின் போக்கு, மக்களின் மொழி, அவர்களின் மிக இயல்பான வாழ்க்கை முறை,ஒவ்வொரு சூழ் நிலைக்கும் சராசரி மனிதனின் மிக இயல்பான எதிர்செயல்பாடு என்று எல்லாமே மிக நேர்த்தியாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.

    வெகு ரசனையான கதை.
    உண்மையிலேயே சூப்பர். சீக்கிரம் அடுத்த பதிவோடு வாங்க.
    காத்திருக்கோம் நாங்க.
     
  8. nithyakarthigan

    nithyakarthigan Gold IL'ite

    Messages:
    600
    Likes Received:
    509
    Trophy Points:
    188
    Gender:
    Female
    [JUSTIFY]அத்தியாயம் - 6

    பழைய கதை


    ஒரு வாரம் கழித்து மருத்துவமனை ஊழியர்களுக்கு ஒரு சர்க்குலர் வந்தது. அதில் ஆறு மணிக்கு மேல் மருத்துவமனையை விட்டு வெளியேறும் ஊழியர்களை மருத்துவமனை வாகனம் புதிய பேருந்து நிலையம் வரை அழைத்து சென்றுவிடும் என்று அறிவிப்பு வந்தது.

    இந்த அறிவிப்பு நிரஞ்சனிக்கு ஒரு பெரிய வரமாக இருந்தது. புதிய பேருந்து நிலையம் வரை பாதுகாப்பாக போய் விட்டால், பிரசன்னாவின் தொல்லை இருக்காது. மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் பஸ் நிறுத்தத்திற்கு அருகில் தான் அவனுடைய ஸ்டேஷன். இப்போது அந்த பஸ் நிறுத்தத்திற்கு போகாமல் நேராக புதிய பேருந்து நிலையத்திற்கு போய் விட்டால் அவனுக்கு அங்கு வந்து அவளை பார்ப்பது சிரமம். அதனால் அவனுடைய தொல்லையிலிருந்து தப்பிக்கலாம் என்று நினைத்தாள்.

    இந்த ஏற்ப்பாட்டை புகழேந்திதான் செய்திருக்கிறான் என்பதில் அவளுக்கு சந்தேகமில்லை. ஆனால் இது எல்லோருக்கும் பொதுவான ஒரு சலுகை. அதனால் நிரஞ்சனிக்கு சங்கடம் இல்லாமல் இருந்தது.

    அவள் கணித்தது போல் அந்த ஏற்ப்பாட்டை புகழேந்தி தான் செய்திருந்தான். கடந்த இரண்டு வாரமாக நிர்வாகத்துடன் பேசி அவர்களை கரைத்து அங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு அந்த சலுகையை பெற்றுத் தந்திருந்தான்.

    பிரசன்னாவல் நிரஞ்சனியை பிடிக்க முடியவில்லை. அதனால் அவனுடைய ஆத்திரம் அதிகமானது. அதே ஆத்திரத்தில் அவன் விவகாரமான ஒரு செயலை செய்துவிட்டான்.

    பிரசன்னா தன்னுடன் வேலை செய்யும் ஒரு போலீஸ்காரனிடம் இப்போது மிக நெருக்கம் காட்டினான். அந்த போலீஸ்காரன் வேம்பங்குடிக்காரன். அவனை வேலை நேரம் முடிந்ததும் தினமும் தண்ணியில்(அந்த தண்ணி) குளிப்பாட்டினான். இருவரும் நெருக்கமாக பழகினார்கள். ஒருவர் ரகசியத்தை மற்றவர் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு.

    அந்த நேரத்தில் பிரசன்னா சொன்னான்.

    "ரவி... இதுவரைக்கும் யாருக்கும் சொல்லாத ஒரு ரகசியத்த உனக்கு நான் சொல்லப்போறேன். "

    "என்ன சார்... சொல்லுங்க..."

    "ரவி... எனக்கு கல்யாணம் ஆகிவிட்டது..."

    "சார்... ஜோக் அடிக்காதிங்க சார்..."

    "நிஜமாதாண்டா... வீட்டுக்கு தெரியாது... ரிஜிஸ்டர் மேரேஜ்..."

    "எப்ப சார்... உங்க wife யாரு... என்ன சார்... ஒரு வார்த்தை சொல்லவே இல்லையே..."

    "அது தான் இப்போ சொல்லிவிட்டேனே... "

    "சார் ட்ரீட் குடுங்க சார்... சும்மா சொன்னா மட்டும் போதுமா...?"

    "கண்டிப்பா தர்றேன் ரவி... இப்போதைக்கு நானும் என்னோட மனைவியும் தனி தனியாதான் இருக்கோம். யாருக்கும் தெரியாமல் எங்கள் திருமணத்தை ரகசியமா வச்சிருக்கோம். எல்லாருக்கும் தெரியப்படுத்தும் போது உனக்கு கண்டிப்பா ட்ரீட் உண்டு... ஓகேவா...."

    "சரி சார்... உங்க மனைவி யார் சார்..."

    "கொஞ்சம் இரு..." என்று சொல்லிவிட்டு பிரசன்னா அவனுடைய கைபேசியை எடுத்து நிரஞ்சனியின் புகைப்படத்தை போட்டுக் காட்டினான். அந்த படம் அவளுக்கே தெரியாமல் எடுத்தது.

    அந்த படத்தை பார்த்த ரவி திடுக்கிட்டான்.

    "சார்... இந்த.. இந்த பொண்ணு எந்த ஊரு...?"

    "வேம்பங்குடி..." பிரசன்னா ரவியின் முகத்தை பார்த்துக் கொண்டே தெளிவாக சொன்னான்.

    ரவிக்கு தெரிந்த விஷயம் அடுத்த இரண்டே நாட்களில் ஊர் முழுக்க காட்டுத் தீயாகப் பரவியது...

    'என்னைத் தவிர நீ யாரையும் கட்ட முடியாதுடி... அதுக்கு நா விட மாட்டேன்.' என்று பிரசன்னா தனக்குள் சொல்லிக் கொண்டான்.


    இன்றைய கதை

    பரந்து விரிந்திருந்த அந்த ஆலமரத்தடியில் பங்குனி மாத வெயில் சிறிதும் தெரியாமல் 'சிலு சிலு'-வென தென்றல் காற்று வீசிக் கொண்டிருந்தது. அங்கே பத்து பேர் சிவப்பு நிற 'பிளாஸ்டிக்' நாற்காலிகளில் அமர்ந்திருந்தார்கள். அருகில் இருக்கும் அம்மன் கோவிலில் மணியடித்தது.

    "இந்த வருஷம் கோயில் கொலத்த ஏலம் விட ஆரம்ப ரூவா இருவத்தஞ்சாயிர(ம்)... ஏலம் கேக்குறவங்க கேக்கலாம்ப்பா..." அங்கே நடுநாயமாக அமர்ந்திருந்த பெரியவர் தன் மீசையை தடவிக் கொண்டே பெரிய குரலில் சொன்னார். அவர் தான் அந்த ஊரில் கோவில் சம்மந்தப்பட்ட பொறுப்புகளை கவனிப்பவர்.

    அவரை தொடர்ந்து அங்கே அமர்ந்திருந்தவர்கள் ஏலம் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். ஒவ்வொருவராக கேட்டு கொண்டிருந்தார்கள். விலை ஏறிக்கொண்டே போகவும் மற்றவர்கள் அடங்கிவிட இராஜசேகர் அந்த ஏலத்தை எடுத்தான்.

    அவன் ஏலம் எடுத்த தொகையில் முப்பது சதவிகிதம் பணத்தை அந்த பெரியவரிடம் செலுத்திவிட்டு அவர் வைத்திருந்த கணக்கு புத்தகத்தில் கையெழுத்திட்டு இரசீது வாங்கிக்கொண்டு, தன்னுடைய இடம் நோக்கி வரும் பொழுது ஒருவன் சொன்னான்...

    "பணம் இருந்தா பெரிய மனுசனாயிடலாமுன்னு பாக்குறானுவ.... வெக்கங் கெட்டவணுவ..." என்றான் ஏளனமாக.

    இராஜசேகரின் கால்கள் ஒரு நொடி தானாக நின்றன. ஆனால் பேசியவனை அவன் திரும்பிப் பார்க்கவில்லை. பின் என்ன நினைத்தானோ தன்னுடைய நடையை தொடர்ந்தான்.

    முன்பு பேசியவனுக்கு அருகில் அமர்ந்திருப்பவன் சொன்னான்...

    "நீயும் அவன வம்புழுக்க பாக்குற... அவன் சிக்க மாட்டேங்கிறானே...!"

    "மானம் இருக்கவனா இருந்தா 'யாரடா பேசினன்னு' கேப்பான்.... இவன்தா(ன்) வீட்டு பொண்ணுங்கள 'வேத்து சாதிக்கற பயலா இருந்தாலும் பரவால்ல பணமிருந்தா சரி... வந்து இழுத்துக்கிட்டு போன்னு' சொல்ற பயலாச்சே..." என்றான் மீண்டும் ஏளனமாக.

    அவன் பேசியது கடைசி வரிசையில் அமர்ந்திருந்த இராஜசேகருக்கு தெளிவாக கேட்டுவிட்டது.

    வேகமாக அந்த இடத்திலிருந்து எழுந்தவன் ஒரே நொடியில் பேசியவனின் சட்டையை பிடித்து "யாரடா பேசின...?" என்று கேட்டான்.

    அவனும் வேம்பங்குடியில் பிறந்தவனாயிற்றே... 'உனக்கு நான் சளைத்தவனில்ல' என்று சொல்லும் படி

    "உன்னத்தான்டா சொன்னே... உம் மச்சினியா என்ன ஒழுங்கா... முந்தி ஒரு போலீஸ்கார பயல ரிஜிஸ்டர் கல்யாணம் பண்ணிகிட்டா... இப்ப ஒரு டாக்டர் பய..."

    "அனா ஒன்னுடா... அவ புடிக்கிறதெல்லா(ம்) புளியங்கொம்பு தான்... நீ அதிஸ்டக்காரன்டா... அந்த டாக்டர் பணத்துல தான இந்த ஏலம் எடுத்த...?" என்று கேட்டுவிட்டான்.

    இராஜசேகர் வெறியாகி அவனை புரட்டி எடுத்துவிட்டான். அவர் தரையில் கிடக்க இராஜசேகர் அவன் மேல் ஏறி அமர்ந்துகொண்டு அவனை கொலைவெறியுடன் தாக்கிக் கொண்டிருந்தான்.

    அங்கு கூடியிருந்தவர்கள் இராஜசேகரின் பிடியிலிருந்து அவனை மிகுந்த சிரமத்துடன் பிரித்து எடுத்தாரகள்.

    "என்னப்பா நீ... பேசிகிட்டு இருக்கும் போதே கை நீட்ற...?" அங்கு இருந்த பெரியவர் இராஜசேகரை பார்த்து கேட்டார்.

    "அவன் என்ன பேசினான்னு கேட்டுமா என்ன இந்த கேள்வி கேக்குறீங்க...? பெரியப்பா, இது சரியில்ல.." என்றான் இராஜசேகர் கோபம் சிறிதும் குறையாதவனாக.

    "அவன் பேசினது பெரிய தப்பு தான்... அனா நா இங்க ஒரு பெரியமனுச எதுக்கு இருக்கே(ன்)... நா கேக்க மாட்டனா...?"

    இராஜசேகர் எதுவும் சொல்லவில்லை.

    "என்னடா இது பேச்சு...? நம்ப ஊரு பொண்ண நீயே தப்பா பேசுற? நாக்க அறுத்து நாயிக்கு போட்றுவேன் படுவா பயலே..." என்றார் கடுமையாக மற்றவனிடம்.

    "அது இல்ல சித்தப்பா..." என்றான் அவன்.

    "என்னடா சித்தப்பா... நொத்தப்பா.... பொம்பள புள்ளைய பத்தி ஏதாவது பேசுனா அப்பறம் பட்ற கூட்டத்துக்கு ஏற்ப்பாடு பண்ணி உன்ன மண்ணு கூட சொமக்க வக்க வேண்டியதுதான்..."

    பட்டறை கூட்டம் என்பது ஊர் மக்கள் அனைவரின் முன் நடக்கும் பஞ்சாயத்து. அதில் தண்டனை மண் கூடையை தலையில் சுமந்து ஊரை சுற்றிவருவது தான். அந்த தண்டனை அந்த ஊர் மக்களை பொறுத்தவரை மிகப்பெரிய அவமானம். பட்டறை கூட்டம் என்றாலே அந்த ஊர் மக்கள் பயப்படுவார்கள். இதுவரை யாரும் அந்த கூட்டத்தில் குற்றவாளியாக நிற்கும் படி வைத்துக் கொண்டதில்லை. முதல் முறையாக தான் அதற்க்கு விதிவிளக்காகி விடுவோமோ என்ற பயத்தில்

    "நா பேசினது தாப்பு தான் சித்தப்பா..." என்று ஒத்துக் கொண்டான் மற்றவன்.

    அவன் ஏலம் எடுக்க முடியாத பொறாமையில் பேசினான் என்பதை இராஜசேகரால் புரிந்துகொள்ள முடிந்தாலும், நிரஞ்சனிக்கு திருமணம் ஆகாமல் வீட்டில் இருக்கும் வரை இந்த மாதிரியான பேச்சுகளை நிறுத்தமுடியாது என்று நினைத்தான்.

    ஏலம் எடுக்க சென்றவன் கிழிந்த சட்டையுடனும் அங்காங்கே இரத்தக் காயங்களுடனும் வீட்டிற்கு வந்ததை பார்த்து நீரஜாவும் அவர்கள் வீட்டில் உள்ள மற்றவர்களும் பதறினார்கள். அவர்களிடம் இராஜசேகர் எதுவும் சொல்லவில்லை.

    தனியாக நீரஜா கேட்டதற்கும் அவளிடம் "ஏலம் எடுப்பதில் கொஞ்சம் பிரச்சனை" என்று தான் சொன்னானே தவிர 'உன் தங்கையால் தான் பிரச்சனை' என்று சொல்லி அவளை நோகடிக்கவில்லை.

    ஆனால் அடுத்த இரண்டு நாட்கள் கழித்து அவனுடைய சொந்த வேலைகளை கொஞ்சம் கவனித்துவிட்டு நிரஞ்சனியின் பக்கம் கவனத்தை திருப்பினான்.

    ---------------------------------------------------------------------------------------------------------------------------

    "ரஞ்சி என்ன சொல்றா...? " என்று கேட்டுக் கொண்டு இரண்டு நாள் கழித்து இராஜசேகர் அல்லியின் வீட்டிற்கு நீரஜாவை அழைத்துக் கொண்டு வந்தான்.

    "மாப்பள... கொஞ்ச நாள் போகட்டும்... அப்புறமா கல்யாணத்த பத்தி யோசிக்கலா(ம்)..." என்றார் அல்லியின் கணவர் வேணு.

    "என்ன மாமா.... நீங்க தான அன்னைக்கு சூட்டோட சூடா காரியத்த முடிக்கனுமுன்னு சொன்னீங்க... இப்ப என்ன ஆச்சு...?"

    வேணு என்ன சொல்லி சமாளிப்பது என்று யோசிக்கும் போதே அல்லி சொன்னார். "மாப்ள அவளுக்கு இப்ப கல்யாணத்துல விருப்பமில்ல... கொஞ்ச நாளு கழிச்சி இத பேசிக்கலா(ம்) " என்றார் தெளிவாக.

    அந்த பதிலை கேட்ட இராஜசேகர் ரௌத்திரமானான்.

    என்ன சொன்னா அவ... யாரு அவளுகிட்ட சம்மதமெல்லா(ம்) கேட்டா... அதுக்கெல்லா(ம்) அவளுக்கு தகுதியே கெடையாது... எங்க அவ... " என்று சீறினான்.

    "மாப்ள நீங்க செய்றது நல்லா இல்ல... அவ அடங்கி வீட்டோட இருக்கா... இப்ப எதுக்கு அவல கட்டாயப் படுத்தனும்... விட்டு புடிப்போம்.." என்றாள் அல்லி.

    இராஜசேகர் எதுவும் சொல்லாமல் எழுந்து சென்றுவிட்டான். அரைமணி நேரத்தில் திரும்பவும் வந்தான்.

    அவர்கள் வருவதற்கு கொஞ்ச ஏறத்துக்கு முன் தான் நிரஞ்சனியுடைய பெற்றோரும் வந்திருந்தார்கள். அவர்களை இராஜசேகரின் ஆணைப்படி நீரஜா தான் தொலைபேசியில் அழைத்து வர சொல்லியிருந்தாள்.

    அனைவரும் இறுக்கமான முகத்துடன் அல்லியின் வீட்டு கூடத்தில் அமர்ந்திருந்தார்கள்.

    "மாமா... உங்க மூத்த பொண்ண நா எடுத்துருக்கேன்... உங்க ரெண்டாவது பொண்ணு சரியில்ல... அவல இனி வீட்ல வச்சிருக்க முடியாது... நீங்க என்ன சொல்றீங்க?" அவன் அவனுடைய மாமனார் அரசுவை பார்த்துக் கேட்டான்.

    "நீங்க சொன்னா சரி மாப்ள..."

    "நா மாப்ள பாக்கட்டுமா...? இப்ப சரின்னு சொல்லிட்டு பின்னாடி பிரச்சன பண்ணக் கூடாது..." அவன் கறாராகக் கேட்டான்.

    "என்ன மாப்ள... எடுத்தோம் கவுத்தோமுன்னு செய்யுற காரியமா இது... கொஞ்சம் பொறுமையா செய்வோமே..." அல்லி இடையில் புகுந்து சொன்னாள்.

    "ஆமாங்க... சித்தி சொல்றதும் சரிதான்... கொஞ்சம் பொறுமையா பாக்கலாமே..." நீரஜா அல்லிக்கு ஆதரவாக பேசினாள். அவள் பேசி முடிப்பதற்குள் இராஜசேகரின் கை அவள் கன்னத்தில் பலமாக இறங்கியது.

    "யம்மாடி..." அவள் கன்னத்தை பிடித்துக்கொண்டு சுருண்டுவிட்டாள்.

    அங்கிருந்த அனைவரும் தங்களுக்கே அந்த அறை விழுந்ததைப் போல் உணர்ந்து திகைத்தார்கள். அல்லியை எடுத்தெறிந்து பேச முடியாத கோபத்தை நீரஜாவிடம் கடுமையாக காட்டினான். அது அனைவருக்குமே புரிந்தது.

    "என்னடி...? ஆம்பளைங்க பேசும்போது குறுக்க என்ன பேச்சு...? நீயா வெளிய போற...? கடத்தெருவுக்கு ஒருவாட்டி போயிப்பாரு... தல நிமுந்து போக முடியலடி... எம் முன்னாடி நின்னு பேசாத பயலெல்லாம் என்ன நக்கலா கேள்வி கேக்குரான்டி..." காரமாக பேசினான். அந்த பேச்சு நீரஜாவிர்க்கு மட்டும் அல்ல. அனைவருக்குமே மனதில் 'சுருக்'கென்று பட்டது. அல்லி அதற்க்கு பின் வாயையே திறக்கவில்லை.

    அவனுடைய நிலையில் பார்த்தால் அவன் பேசுவது ஞாயமாக தோன்றினாலும், அவன் அவனுடைய கோபத்தை வெளிப்படுத்திய விதம் அனைவருக்கும் அச்சத்தை ஏர்ப்படுத்துயது.

    "இங்க பார்... அவளுக்கு இன்னைக்கு ஒருநாள் அவகாசம் தர்றேன்... நாளைக்கு எனக்கு பதில சொல்ல சொல்லு. அவ கல்யாணத்துக்கு சம்மதிச்சா நீ என்னோட வீட்டுக்கு வரலாம். இல்லன்னா நாளையோட உனக்கும் எனக்குமான உறவு அருந்துருச்சுன்னு வச்சுக்க... நா நாளைக்கு வர்றேன்..." என்று சொல்லிவிட்டு நீரஜாவையும் அங்கேயே விட்டுவிட்டு போய்விட்டான்.

    அனைவருக்குமே பீதியில் வயிற்ருக்குள் பட்டாம் பூச்சி பறந்தது....

    வீட்டு கூடத்தில் நடந்த பேச்சு வார்த்தைகளை உள் அறையிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த நிரஞ்சனி அடுத்தகட்ட போராட்டத்திற்காக மனதளவில் தன்னை தயார் செய்து கொண்டாள்.

    "ரஞ்சி இங்க வா..." சித்தி அல்லி நிரஞ்சனியை அழைத்தாள். இராஜசேகர் வெளியே சென்ற பிறகு ஆண்கள் இருவரும் பெண்களிடம் நிரஞ்சனியிடம் பேசும் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு சென்றுவிட்டார்கள்.

    தாமரைக்கு தன் இரண்டு பெண்களின் வாழ்க்கையுமே சிக்கலாகிவிட்டதை நினைத்து தாளவில்லை. நீரஜாவும் சிவரஞ்சனியும் இராஜசேகரின் அதிரடி பேச்சில் அரண்டு போய் அமர்ந்திருந்தார்கள். அந்த நிலையில் அல்லி தான் முதலில் சுதாரித்துக் கொண்டு நிரஞ்சனியை வெளியே அழைத்தாள்.

    நிரஞ்சனி அமைதியாக வந்து கூடத்தில் ஒரு மூலையில் அமர்ந்தாள்.

    "என்ன ரஞ்சி... மாப்ள சொன்னத கேட்டியா... நீ என்ன சொல்ற...?" அல்லி நிரஞ்சனியின் கருத்தை கேட்டாள்.

    "சித்தி... என்னால இப்போ கல்யாணம் செஞ்சுக்க முடியாது. நீங்க சொன்னபடி வீட்டை விட்டு வெளியே போகாம நான் இருக்கேன். என்னால எந்த பிரச்சனையும் உங்களுக்கு வராது.. என்னை கல்யாணம் செஞ்சுக்க சொல்லி கட்டாயப் படுத்தாதிங்க... என்ன விட்டுடுங்க சித்தி..." நிரஞ்சனி கெஞ்சினாள்.

    "அது எப்புடிடீ... வயசு பொண்ண வீட்டுல வச்சுகிட்டு உக்காந்துருக்க முடியுமா...? அவரு சொல்றதுல என்ன தப்பு இருக்கு... உன்னால எங்க யாருக்குமே வெளிய தல காட்ட முடியல..." தாமரை தன் ஆத்திரத்தை நிரஞ்சனியிடம் கொட்டினாள்.

    நிரஞ்சனி அமைதியாக இருந்தாள்.

    "உன்னால நீரு வாழ்க்கையும் சிக்கலா இருக்கே இப்ப..? அதுக்கு என்ன செய்றது சொல்லு..." அல்லி அமைதியாக கேட்டாள்.

    "சித்தி... நீரு வாழ்க்க எதுக்கு சிக்கலாகனும்.. அவளும் காதலிச்சுதானே கல்யாணம் செஞ்சுகிட்டா.. அவளோட கல்யாணத்துக்கு சம்மதிச்சவங்க இப்போ எதுக்கு என்னோட கல்யாணத்துல பிரச்சனை பண்றாங்க..."

    "அடி வெளக்கமாத்தால... யாரடி சாட(ஜாடை) பேசுற....? அவ சா(ஜா)திமான காதலிச்சாடி... நீ எவனோ நாளாந்தர பயல கொண்டு வந்தியன்னா... உனக்கு மாலை போட்டு மருவாத பண்ணி கூத்தடிக்க சொல்றியா... " தாமரை மகளிடம் பாய்ந்தாள்.

    'இவள் தான் என் தாயா...? எப்படி என்னை தலை மேல் வைத்து கொண்டாடியவள் இன்று இப்படி மாறிவிட்டாளே... எது இவளை மாற்றியது...?' நிரஞ்சனி ஆவேசமாக பேசும் தன் தாயை ஆச்சர்யமாக பார்த்தாள்.

    "உன்னால எம்மகளோட வாழ்க்க போவ போவுதுடி... நீ எப்புடியோ கெட்டு ஒழுஞ்சுட்ட... அவளையாவது வாழவிடு..." தாமரை அழுது கொண்டே பேசினாள்.

    "அப்ப நா உன்னோட மக இல்லையாம்மா...? நா நல்லா வாழனுன்னு நீ நினைக்க மாட்டியா...? "

    "ச்சீ.. வாய கழுவு... என்னோட ரெத்தத்துல உதிச்சிருந்தா இப்புடி கேடுகெட்டு போயிருப்பியா...? என்ன அம்மான்னு கூப்புடாத..." தாமரை வெறுப்பாக பேசினாள்.

    நிரஞ்சனிக்கு முகத்தில் அறை வாங்கியது போல் இருந்தது. தாயின் வார்த்தைகள் நெருப்பாக சுட்டன. பெற்ற தாயே அந்நியமாகிவிட்ட பிறகு அவளுடைய தங்கையும் தங்கை மகளும் தங்கை கணவரும் எப்படி உறவாக முடியும்.

    நிரஞ்சனிக்கு இப்போது எங்கேயோ ஒரு புதிய இடத்தில் அகதியாக ஒட்டிக் கொண்டிருப்பது போல் இருந்தது. தனிமை உணர்வு நெஞ்சில் இரத்தம் வடிய வைத்தது. எதுவும் சொல்லாமல் அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டாள்.

    "நீ எதுக்குக்கா அவள இப்புடி புடுங்குற... ஏதோ தப்பு பண்ணிட்டா... இப்ப திருந்தி இருக்கா... அவளும் பொண்ணுதானே... என்னதான் ஜாதிகெட்டவனா இருந்தாலும் ஒருத்தன நெனச்சுட்டா... அவளோட மனச மாத்திக்க அவகாசம் கொடுக்க வேண்டாமா...? அந்த ஆளுதான் புரியாம பேசுராருன்னா நீயும் இப்படி அவள கொத்தி குடிக்கிறியே....! நல்லாருக்காக்கா இது...?" என்று தமக்கையை கடிந்து கொண்டாள் அல்லி.

    "எனக்கு என்னா ஆசையா அல்லி... வயக்காட்டுக்கு போவ முடியலடி... நீ வீட்டுக்குள்ள இருக்க... என்னால வய வரப்புக்கு போவாம இருக்க முடியுமா...? ஒருஒருத்தி பாக்குற பார்வையும் பேசுற பேச்சும்... என்னால சயிக்க(சகிக்க) முடியலையே... நா என்ன செய்வே(ன்)......" என்று ஓ-வென மகளை திட்டிவிட்ட துக்கத்தில் ஒப்பாரிவைத்தாள்.



    - தொடரும்​

    Please post your comments here : http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/154004-comments-5.html
    [/JUSTIFY]
     
    1 person likes this.
  9. nithyakarthigan

    nithyakarthigan Gold IL'ite

    Messages:
    600
    Likes Received:
    509
    Trophy Points:
    188
    Gender:
    Female
    [JUSTIFY]அத்தியாயம் - 7

    பழைய கதை


    அன்று வேலை முடிந்து சோர்வாக அம்மா கொடுக்கும் சூடான சுண்ட கைய்ச்சிய பாலுக்கு ஆசையாக வந்த நிரஞ்சனிக்கு மிக பெரிய குண்டு காத்திருந்தது.

    வீட்டிற்குள் நுழைந்ததும் அவள் பார்த்தது அவளுடைய பெரியப்பா மகன் சுந்தரை தான். அவளுடைய வீட்டில்(தந்தை வழியில்) ஆண் வாரிசு சுந்தர் தான். அவன் தான் அந்த குடும்பத்திற்கு நல்லது கெட்டது செய்பவன் என்று தாமரையும் அரசுவும் அவனை தலையில் வைத்து கொண்டாடுவார்கள். அவனும் பாசமாக இருப்பான்.

    அவனுடைய பெற்றோருக்கு அவன் ஒரே மகன். திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. அவனுடைய மனைவி நிர்மலா பார்க்க கொஞ்சம் சுமாராகத்தான் இருப்பாள். அவளுக்கு நீரஜாவின் மீதும் நிரஞ்சனியின் மீதும் பயங்கர பொறாமை. ' என்னத்த தான் திங்கிதுகளோ... இப்படி வெள்ளக்காரிச்சி மாதிரி இருக்காளுவோ...' என்று கருவுவாள்.


    உள்ளே நுழைந்த நிரஞ்சனி அவளுடைய அண்ணனை பார்த்ததும்..

    "ஹேய்... சுந்தரண்ணே...! எப்ப வந்த...?" என்று சிரித்த முகமாக கேட்டுக் கொண்டே வந்தாள்.

    அவன் பதில் சொல்லாமல் முகத்தை திருப்பிக் கொண்டான்.

    அவளுக்கு வித்தியாசமாக இருந்தது. அம்மா அழுது வீங்கிய முகத்துடன் ஒரு மூலையில் அமர்ந்திருந்தாள். அண்ணி சமயலறையில் ஏதோ செய்துக் கொண்டிருந்தாள். அப்பா எப்பவும் போல திண்ணையில் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்திருந்தார்.

    'ஏதோ சண்டை போல... அப்பா குடிச்சுட்டு அம்மாவ அடிச்சிருப்பாரோ...! அதுதான் அண்ணன் வந்திருக்கோ...?' என்று யோசித்துக் கொண்டே அந்த வீட்டில் இருந்த மற்றொரு அறையில் தன்னுடைய பையை வைத்துவிட்டு நைட்டியை மாற்றிக்கொண்டு வெளியே வந்தாள்.

    'யாரிடம் பால் கேட்பது...? அம்மா அழுது கொண்டிருக்கிறாள். பசிக்கிறது.. நாமே போய் எடுத்துக்கலாம்' என்று சமையலறைக்குள் நுழைந்தாள். அண்ணி நிர்மலாவை பார்த்து புன்னகைத்தாள். அவளும் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

    "அண்ணி கொஞ்சம் பால்..." என்று அவள் ஆரம்பிக்கும் முன்

    "ஆமா... இப்படி பாலும் தேனும் ஊட்டி ஊட்டி வலத்து தான்... அக்காவும் தங்கச்சியும் எங்க முகத்துல கரிய பூசுறீங்க.... பாலாம்... பாலு..." என்று முகத்திலடித்த மாதிரி பேசிவிட்டு ஒரு டம்ளர் டீயை எடுத்துச் சென்று தாமரையிடம் கொடுத்து,

    "குடிங்கத்த... இவளுகள நீங்க வக்கிர எடத்துல வச்சிருதா இப்படி நம்பள மோசம் பண்ணியிருப்பாளுவளா...?" என்று சொன்னாள்.

    நிரஞ்சனிக்கு எதுவும் புரியவில்லை. அவள் நீரஜாவையும் சேர்த்து பேசியதால், 'நீரஜா தான் ஏதோ தவறு செய்துவிட்டால் போல...' என்று நினைத்து, அவளுடைய அம்மாவிற்கு அருகில் போய் அமர்ந்து "என்னாம்மா...?" என்று தனுடைய பசியை மறந்துவிட்டு ஆறுதலாக கேட்டாள்.

    தாமரை என்ன நினைத்தாரோ, மகளின் கணத்தில் பட்டென அறைந்துவிட்டாள்.

    "என்னடி என்னம்மா... நொன்னம்மா.... யாருடி அவ(ன்)...?" என்று வார்த்தைகளை விஷமாக கக்கினார்.

    கன்னத்தை பிடித்துக் கொண்டு அமர்ந்த நிரஞ்சனிக்கு உலகமே சுற்றுவது போல் இருந்தது. காலையிளிருது மருத்துவமனையில் உக்கார நேரமில்லாமல் உழைத்துவிட்டு வீட்டிற்கு வந்தவளுக்கு வீட்டிலும் ஓய்வெடுக்க முடியாமல் ஒரு பாறையை தலை மேல் தூக்கி போட்டால் அவள் என்ன செய்வாள்.

    "என்னடி முட்ட கண்ண வச்சுகிட்டு பாக்குற...? ஊர் உலகத்துலயும் பொண்ணுங்க படிச்சிட்டு வேலைக்கு தான் போறாங்க... ஆனா நீங்க என்னோட மானத்த வாங்குறதுக்குன்னே எனக்கு வந்து பொறந்து தொலச்சிங்கலாடி...?"

    "எவண்டி அவன்...? பெத்தவங்க இல்லாம கல்யாணம் செஞ்சுக்குற அளவுக்கு துணிஞ்சவ இன்னும் எதுக்குடி இங்க வர்ற...? அவனோடவே ஓடிட வேண்டியது தானே...?" என்று கத்தினாள்.

    'என்னது கல்யாணமா...? யாரோட ஓடனும்...? என்ன ஆச்சு அம்மாவுக்கு...?' என்று எதுவும் புரியாமல் நிரஞ்சனி விழித்தாள்.

    "ஐயோ... அருமை அருமையா வளத்ததுக்கு எந்தலையில கல்ல போட்டுட்டாளே... பாவி சிறுக்கி... நாசமா போறவளே... நீ வாழவேமாட்டடி... என்னோட வயித்தெரிச்சல் உன்ன வாழவிடாதுடி..." என்று தலையிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுதாள்.

    நிரஞ்சனி நிலைகுலைந்து போனால்... 'இது என்ன அபாண்டம்... இங்க என்ன நடக்குது...' எதுவும் புரியாமல் தவித்தாள். யாரிடம் கேட்ப்பது... யாரை பார்த்தாலும் பயமாக இருக்கிறது. எல்லோரும் இவள் வாயை திறந்தாள் கொன்றுவிடுபரகள் போல் உஷ்ணமாக இருந்தார்கள்.

    நிரஞ்சனி கண்களில் கண்ணீர் கொட்டியது...

    "ஏய்... இப்போ எதுக்குடி அழுவுற... ரோட்டல போனா ஒருத்தன் பாக்கியிலாம கேக்குராண்டி... யார்டி அந்த போலீஸ் காரன்... போலீஸ்காரன்னா விட்டுடுவோமா... அவனுக்கு இன்னும் பத்தே நாலா கருமாதிடி... அப்புறம் உனக்கு மொட்டையடிச்சி வெள்ளே சீல கொடுத்து மூலையில உக்கார வைக்க வேண்டியதுதான் பாக்கி.." என்று உறுமினான் சுந்தர்.

    நிரஞ்சனிக்கு போலீஸ் என்றதும் பாதி விபரம் புரிந்துவிட்டது.

    "அண்ணா... எனக்கு எதுவும் தெரியாதுண்ணா... அவன் ரொம்பநாளா எனக்கு தொல்லை கொடுத்துக்கிட்டு இருந்தான். இப்போ என்னவோ எம்மேல பழியை தூக்கி போட்டிருக்கான்." என்று அழுதாள்.

    "சீ... ஒன்னோட நடிப்பெல்லாம் வேற யார்கிட்டையாவது வச்சுக்க... என்னுகிட்ட வேண்டாம்..." என்றான் சுந்தர் அருவருப்பாக முகத்தை சுழித்துக் கொண்டு.

    நிரஞ்சனிக்கு இந்த அவமானத்தில் உயிரே போய் விடும் போல இருந்தது. ஆனால் 'இந்த நேரத்தில் இறந்துவிட்டால் கெட்ட பெயரோடு தான் சாக வேண்டும். அது கூடாது..' என்று முடிவு செய்து நடந்ததை சுந்தருக்கு விளக்கினாள்.

    ஆனால் அவன் இவளை ஒரு துளி கூட நம்பவில்லை. ஒரு விஷ ஜந்துவை பார்ப்பது போல் பார்த்துவிட்டு

    "சின்னம்மா... நாளையிலிருந்து இவ வேலைக்கு போக வேண்டாம்..." என்று சொல்லிவிட்டு மனைவியை அழைத்துக்கொண்டு சென்றான்.

    இன்றைய கதை

    அன்று இரவு நிரஞ்சனி மொட்டை மாடிக்கு சென்று தனிமையில் நிலவை வெறித்துக் கொண்டிருந்தாள்.

    'கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னால் தான் நீரஜவுக்கு அவனோடு சேர்ந்து வாழ்க்கை' என்று இராஜசேகர் சொல்லிவிட்டு சென்றுவிட்டான். அது நிரஞ்சனியை கலங்கடித்துவிட்டது.

    யாரும் இல்லாத கைவிடப்பட்ட குழந்தை போல் அவள் நின்ற தோற்றம் அவளை தேடி அங்கு வந்த சிவரஞ்சனியை என்னவோ செய்தது.

    "ரஞ்சி... ஏண்டி இப்படி தனியா நிக்குற...? " சிவரஞ்சனி கரிசனமாக கேட்டாள்.

    சிவரஞ்சனியின் குரல் கேட்டு திரும்பிப்பார்த்த நிரஞ்சனியின் கண்கள் கலங்கியிருந்தன.

    "நான் தனிதானே ரஞ்சி... அதுதான் தனியா நிக்குறேன்..."

    "என்ன ரஞ்சி... எல்லாம் சரியாயிடும் டீ... கவலைப்படாத... சாப்பிட வா..."

    "எல்லாரும் சாப்பிட்டாங்களா...?"

    "ஆச்சு... நீயும் நானும் தான் பாக்கி... வா... அம்மா உன்ன தேடுறாங்க..."

    நிரஞ்சனி எதற்குமே பிடிவாதம் பிடிப்பதில்லை. சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டாள். அவளுடைய குறி ஒன்றில் மட்டும் தான் இருந்தது. 'எப்படியாவது புகழை கல்யாணம் செய்துகொள்ள வேண்டும்' என்பதில் மட்டும் கவனமாக இருந்தாள். சிவரஞ்சனி சாப்பிட அழைத்ததும் அவளுடன் சாப்பிட சென்றாள். ஆனால் அவள் சாப்பிட்டாள அல்லது சாப்பிடுவது போல் கொறித்துவிட்டு வந்தாளா என்பது யாருக்கும் தெரியாது.

    சிறிது நேரத்தில் மீண்டும் மாடிக்கு சென்றுவிட்டாள். அவளுக்கு யாரையும் பார்க்க முடியவில்லை. அது வெறுப்பா... பயமா... என்னவென்று அவளுக்கே புரியவில்லை.

    "என்ன ரஞ்சி மாடிக்கே வந்துடற... கீழ டிவி பார்த்தா கொஞ்சம் மனசு மாற்றமா இருக்குமே..." சிவரஞ்சனி நிரஞ்சனியிடம் கேட்டாள்.

    "என்னால முடியல ரஞ்சி... மூச்சு முட்டி செத்து போய்டுவேனோன்னு தோணுது... நா என்ன ரஞ்சி தப்பு செஞ்சேன். எதுக்கு எனக்கு மட்டும் இப்படி நடக்குது....?"

    "நீ எதுக்கு ரஞ்சி இந்த காதல் கன்றாவியெல்லாம் பண்ணி தொலைச்ச... அதெல்லாம் நம்ப குடும்பத்துக்கு ஒத்துவருமான்னு யோசிச்சியா...?"

    "நீருவும் காதல் கல்யாணம் தானே பண்ணிகிட்டா...?" நிரஞ்சனி கேட்டாள்.

    "ஆனா அவர் நம்ப ஜாதியாச்சே..." சிவரஞ்சனி குரல் எழும்பாமல் சொன்னாள்

    "ப்ச்... நீயும் ஜாதிய பெருசா பாக்குறியா ரஞ்சி..."

    "அதெல்லாம் இல்லடி... உனக்கு ஒன்னு சொல்லவா... நீ உன்னோட காதல்ல ஜெயிக்கணும் என்று தான் நானும் நினைக்கிறேன்... ஆனா அது முடியாது. நம்ப வீட்ல அதை நடக்க விட மாட்டாங்க..."

    "யாரு ரஞ்சி...? இதுல பிடிவாதமா இருக்கது யாருன்னு சொல்லு..."

    "இராஜசேகர் மாமா..."

    "கரெக்ட்... அவர் ஏண்டி இப்படி இருக்காரு... அவரும் காதலிச்சவர் தானே... அவருக்கு என்னோட உணர்வுகள ஏண்டி புரிஞ்சுக்க முடியல...? ஒருவேள அவர் காதலிச்ச பொண்ணு வேற ஜாதியா இருந்திருந்தால் அவரோட காதல் வேண்டாம் என்று சொல்லியிருப்பார்ன்னு நினைக்கிறியா...?"

    "தெரியலடி... ஆனா நீ அவரோட நிலையிலேருந்து கொஞ்சம் யோசிச்சு பார்... நம்ப ஊர் ஆளுங்க சாதாரணமானவங்க இல்ல... அவர எல்லாரும் கிண்டலா பாக்குறதா சொல்றாரு... அது உண்மைதானே.. அதனால தானே உங்க சுந்தர் அண்ணன் கூட பெரியப்பா பெரியம்மாவோட பேசுறது இல்ல...."

    "அவனுக்கு அவனோட மனைவி சொல்றதுதான் வேதம்டி... அவன் பிரச்சனையே வேண்டாம் என்று ஒதுங்கினதும் நல்லதுதான். இங்க ஒரு ஆளோட சாமியாட்டத்தையே சமாளிக்க முடியல... இதுல அவனும் சேர்ந்தா என் கதி என்ன ஆகியிருக்குமோ..."

    "நாளைக்கு இராஜசேகர் மாமா வந்து கேட்கும் போது என்ன சொல்ல போற ரஞ்சி... "

    "என்னால புகழை தவிர வேறு யாரையுமே நினைக்கக் கூட முடியாது ரஞ்சி..." நிரஞ்சனி தெளிவாக சொன்னாள்.


    - தொடரும்​

    Please post your comments here : http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/154004-comments-5.html - comments
    [/JUSTIFY]
     
    1 person likes this.
  10. nithyakarthigan

    nithyakarthigan Gold IL'ite

    Messages:
    600
    Likes Received:
    509
    Trophy Points:
    188
    Gender:
    Female
    [JUSTIFY]அத்தியாயம் - 8

    பழைய கதை


    அன்றோடு நிரஞ்சனியை வீட்டிற்குள் அடைந்து ஒருவாரம் ஆகிவிட்டது. பெற்றவர்களே பிள்ளையை நம்பாத போது மற்றவர்களுக்கு என்ன வந்தது. எல்லோரும் துக்கம் விசாரிப்பது போல் வீட்டிற்குவந்து ஆறுதல் சொல்லிவிட்டு அடுத்து என்ன செய்யலாம் என்று இலவசமாக ஆலோசனையையும் வழங்கிவிட்டு போனார்கள்.

    நிரஞ்சனியோடு யாரும் பேசுவதில்லை. அவள் 'உண்டாளா...?, உறங்கினாளா...?' என்று யாரும் அக்கறை எடுத்துக்கவில்லை. அவள் தனிமைப் படுத்தப்பட்டாள்.

    இவ்வளவு நாளும் தங்கத் தாம்புலத்தில் வைத்து தாங்கிய தாய் ஒரே நாளில் போட்டு உடைத்துவிட்டாள். அவள் என்ன செய்வாள் பாவம்... அவளால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் பார்க்கிற பார்வையும், பேசுகிற ஜாடையையும் சகிக்க முடியவில்லை.

    தாமரைக்கு அறிவுப்பூர்வமாக யோசித்து என்ன நடந்திருக்கும் என்று ஊகித்து ஒரு முடிவெடுக்கத் தெரியாமல், உணர்வுகள் அடித்துச் செல்லும் வழியில் சென்று மகளையும் துன்புருத்தி தன்னையும் துன்புருத்திக் கொண்டிருந்தாள்.

    அரசு எப்போதும் போல இப்போதும் தன்னுடைய கவலையை மறக்க போதையை தஞ்சம் அடைந்து மற்ற விஷயங்களை யோசிக்க மறந்துவிட்டார்.

    அந்த நேரத்தில் எல்லோரையும் போல இராஜசேகரும் தன்னுடைய மனைவியை அழைத்துக் கொண்டு, நிரஞ்சனியின் பதிவு திருமண விஷயம் உண்மையா அல்லது வதந்தியா என்பதை பற்றி விசாரிக்க மாமனார் வீட்டிற்கு வந்தான். அவன் வெளியில் மரத்தடியில் கயிற்ருக் கட்டிலில் படுத்திருந்த மாமனார் அரசுவை பார்த்துவிட்டு அவரிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டு நின்றுவிட்டான்.

    நீரஜா நிரஞ்சனியை தேடி வீட்டிற்குள் வந்தாள். நிரஞ்சனி நீரஜாவை பார்த்துவிட்டு கட்டிப்பிடுத்துக் கொண்டு அழுதாள். தனக்கென்று... தன்னை புரிந்து கொள்ள இவளால் முடியும் என்று நினைத்து அனைத்தையும் மறைக்காமல் சொன்னாள்.

    நீரஜா நிரஞ்சனியை முழுவதுமாக நம்பிவிடவில்லை. ஆனால் அவள் சொல்வதிலும் உண்மை இருக்கலாம் என்று நம்பினாள். அவளுடைய கணவனிடம் விஷயத்தை சொன்னாள். பிரசன்னாவை பற்றி முழுவதுமாக சொல்லவில்லை.

    'இவன் ஒரு முரடன்... இவனிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டால்... நிரஞ்சனி மீது தவறு இல்லை என்று தெரியும் போது பிரசன்னாவின் உயிர் இராஜசேகரின் கையால் போய்விடும். அப்புரம் இவன் கம்பிக்கு பின்னாடி போய்விடுவான்...' என்று நினைத்து அவனிடம் எதையெதை சொல்லலாமோ அதை மட்டும் சொன்னாள். இராஜசேகரும் நிரஞ்சனியின் பேச்சில் உண்மை இருக்கலாம் என்று நினைத்தான்.

    அதனால் நிரஞ்சனி மீது தவறு இருக்காது என்று நம்பிக்கை வைத்து, 'அவர்களுக்கு ரிஜிஸ்டர் கல்யாணம் எங்கு நடந்தது' என்று அனைவரும் பேசிக் கொள்கிறார்களோ அந்த ரிஜிஸ்டர் ஆபீஸ் சென்று விசாரித்தான். அப்படி எந்த திருமணமும் நடக்கவில்லை என்று சொல்லிவிட்டார்கள்.

    அவன் விஷயத்தை அனைவருக்கும் சொன்னான். ஆனால் நிரஞ்சனி எதிர் பார்த்த அளவு யாரும் 'தாங்கள் அவசரப்பட்டு நிரஞ்சனியை தவறாக நினைத்து பேசிவிட்டோம்' என்று வருத்தப்படவில்லை. மாறாக அனைவரும் "இவ மேல கொஞ்சம் கூட தப்பே இல்லாமல் எப்படி இப்படி ஒரு புரளி கிளம்பும்... எல்லா பொண்ணுங்க மேலையும் இப்படியா பழி சொல்லிக்கிட்டு திரியிறாங்க... இவகிட்டேயும் ஏதோ தப்பு இருக்கு..." என்று தான் பேசினார்கள்.

    இந்த பழி சொற்களை நிரஞ்சனியால் தாங்க முடியவில்லை. அவளால் இந்த நிலையில் வீட்டில் அடைந்து இருக்க முடியவில்லை. அவளுக்கு மூச்சு முட்டியது. எல்லோரும் அவளை குறுகுறுப்பாக பார்ப்பது போலவே இருந்தது. அதனால் இராஜசேகரிடம் கேட்டாள்...

    "மாமா... நா வேலைக்கு போறேன் மாமா.. இப்போதான் உங்களுக்கு என் மேல தப்பு இல்லைன்னு தெரிஞ்சிடுச்சுல்ல... நீங்க என்னை அனுப்பி வைங்க மாமா..." என்று கேட்டுக் கொண்டாள்.

    "ஒம்மேல தப்பு இல்ல ரஞ்சி... ஆனா ஒரு முறை ஒன்னோட பேரு கெட்டுப் போச்சு. திரும்ப ஏதாவது தப்பு நடந்தா அசிங்கமா போயிடும்...." என்று தயங்கினான்.

    "அப்படியெல்லாம் ஆகாது மாமா... நான் எச்சரிக்கையா இருப்பேன். மாமா... ப்ளீஸ் மாமா..." என்று கெஞ்சினாள்.

    "சரி நான் உன்னை வேலைக்கு அனுப்ப ஏற்ப்பாடு செய்யிறேன். ஆனா நீ என்னோட பேர காப்பாத்துற மாதிரி நடந்துக்கணும். சரின்னா சொல்லு... செய்றேன்..." என்றான்.

    "சரி மாமா... என்னால உங்களுக்கு எந்த கெட்ட பேரும் வராது மாமா..." என்று உறுதி கொடுத்தாள்.

    அவனுக்கும் சரி என்று தோன்றியது. நிரஞ்சனிக்கு ஆதரவாக அனைவரிடமும் பேசினான். தாமரை, அரசு, சுந்தர் அனைவரிடமும் தனித்தனியாக பேசினான்.

    அனைவரும் கேட்ட ஒரே கேள்வி. "பின்னாடி ஏதாவது தப்பு நடந்தா நீங்கதான் பொறுப்பு... இதுக்கு சம்மதமா...?" என்பதுதான்.

    அனைவருக்கும் அவன் பத்திரத்தில் எழுதிக் கொடுக்காத குறையாக உத்தரவாதம் கொடுத்து நிரஞ்சனியை மறுபடி வேலைக்கு அனுப்பினான்.

    இன்றைய கதை

    நிரஞ்சனியும் சிவரஞ்சனியும் பேசிக் கொண்டிருக்கும் போது அங்கே மெல்ல நீரஜாவும் வந்தாள். காலடி சத்தம் கேட்டு இருவரும் திரும்பிப் பார்த்தார்கள்.

    "என்ன ரஞ்சி சொல்றா...?" என்று சிவரஞ்சனியை பார்த்து நீரஜா கேட்டாள்.

    "ஏன்... நீ கேட்க மாட்டியா...? நிரஞ்சனி நேரடியாக நீரஜாவிடம் பேசினாள்.

    "நானே கேட்குறேன்... சொல்லு... கல்யாணத்துக்கு சம்மதிக்கிரியா இல்லையா..?"

    "இரண்டு வருஷத்துக்கு முன்னாடி உனக்கு அம்மா மாப்பிள்ளை பார்த்தப்ப நீ என்ன சொன்ன நீரு... அப்ப நீ ஒத்துகிட்டியா?"

    நீரஜாவிர்க்கு பதில் சொல்ல முடியவில்லை. ஒரு நிமிடம் யோசித்து பிறகு பேசினாள்.

    "அப்போ என்னால யாருக்கும் பிரச்சனை இல்ல ரஞ்சி... இப்போ உன்னோட விஷயம் அப்படியா...? நீ கல்யாணத்துக்கு சம்மதிக்காட்டி மாமா என்னை வெட்டிவிட்டுவாறு..."

    "இப்படி பாதியிலேயே விட்டுட்டு போயிடுவேன்னு மிரட்டுரவருக்காக தான் அன்னைக்கு நீ 'செத்து போய்டுவேன்னு' அம்மா அப்பாவ மிரட்டி கல்யாணம் செஞ்சுகிட்ட நீரு... உங்களோட காதல் உண்மையா இருந்தா அவர் உன்ன எந்த காலத்திலேயும் கைவிட மாட்டார்... அப்படி இல்லைன்னா... இன்னைக்கு இல்லைன்னாலும் என்னைக்காவது ஒரு நாள் அவர் உன்னை விட்டுடுவார். அதனால இந்த பூச்சாண்டிக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்...." நிரஞ்சனி தெளிவாக சொன்னாள்.

    "கொஞ்சம் கூட மனசாட்ச்சியே இல்லாம பேசுரியேடி... அவரோட காதல் உண்மையானது தான். ஆனா அவரோட வீம்பு பத்தி உனக்கு தெரியும் தானே... அப்புறம் ஏண்டி பிடிவாதம் பிடிக்குற....?"

    "அவரோட குணத்த பத்தி எனக்கு கவலை இல்ல... வேணுன்னா நா உனக்கு தங்கச்சியே இல்லைன்னு சொல்லி தலைமுழுகிட்டு போய் அவரோட சந்தோஷமா குடும்பம் நடத்து..."

    "ச்சே... எங்களையெல்லாம் விட உனக்கு அந்த புகழேந்தி தான் முக்கியமா போயிட்டான்ல.... அப்படி என்னடி உன்ன காதல் பேய் புடிச்சு ஆட்டுது....?"

    "ஏன்... உன்ன அந்த போய் புடிச்சு ஆட்டும் போது உனக்கு தெரியலையா...?"

    "இன்னிக்கு இவ்வளவு பேசுறியே... அன்னைக்கு நீ வேலைக்கு போக முடியாம வீட்டுக்குள்ள அடைஞ்சு கெடந்தப்ப, அவரு இல்லன்னா நீ வேலைக்கு போயிருக்க முடியுமா...? அப்படி அவரு ஒன்ன அனுப்புனதால தானே இன்னைக்கு இவரு வெளிய தல காட்ட முடியாம தவிக்கிராறு. ஒவ்வொருத்தனும் என்னென்ன பேசுறான்னு ஒனக்கு தெரியுமா...? "

    "................" நிரஞ்சனிக்கு எதுவும் பேச முடியவில்லை.

    "அன்னிக்கு நீ இவருகிட்ட வந்து நிக்கலைன்னா இன்னிக்கு என்னோட வாழ்க்க இப்படி ஊஞ்சலாடாது... எல்லாம் என் தலையெழுத்து." என்று தலையில் அடித்துக் கொண்டாள்.

    "நீரு... நான் சொல்றத கேளு நீரு... நா மாமாவுக்கு கொடுத்த வாக்க காப்பாதாதது தப்பு தான். இல்லன்னு சொல்லல. ஆனா என்னை அறியாமலே காதல் எனக்குள்ள வந்துடுச்சு... நான் என்ன செய்வேன். இப்பவும் உங்களையெல்லாம் மீறி நான் புகழை கல்யாணம் செஞ்சுக்க நினைக்கல. அவர அங்க விட்டுட்டு நான் இங்க உங்களோட தானே இருக்கேன். என்ன இப்படியே விட்டுட தானே சொல்றேன்...."

    "நீரு... நீயும் காதலிச்சவதானே... என்னோட தவிப்பு உனக்கு புரியலையா... என்னால வேற யாரையும் நினைக்க கூட முடியாது நீரு... ப்ளீஸ்...டி புருஞ்சுக்க..." என்று கெஞ்சினாள்.

    "நீ இப்படியே பேசி பேசி ஒவ்வொரு காரியத்தையும் சாதிச்சுக்குவடி... உன்ன பத்தி எனக்கு தெரியாதா...? பாவி... என்னோட வாழ்க்கையை அழிச்சுட்டு நீ மட்டும் சந்தோசமா இருடீ..." என்று தங்கையிடம் வெறுப்பாக பேசிவிட்டு அழுது கொண்டே கீழே சென்றுவிட்டாள் நீரஜா...

    நீரஜாவின் சுயநலமான பேச்சு நிரஞ்சனியை சோர்வடைய செய்தது. அவளுக்கு ஊக்கம் கிடைக்க புகழேந்தியை பற்றி சிவரஞ்சனியிடம் பேசினாள். அவனுடைய காதல்... பாசம்... பயம்... ஆர்வம்... எல்லாவற்றையும் சொன்னாள். அவள் மனதில் பழைய நினைவுகள் மேலோங்கி தற்போதுள்ள இக்கட்டான நிலைமையை கொஞ்சம் மறக்கச் செய்தது.

    கீழே சென்ற நீராஜாவை தாமரையும் அல்லியும் விசாரித்தார்கள்.

    "என்ன சொன்னா... ஒத்துகிட்டாளா...?"

    "இல்லாம்மா... பிடிவாதமா இருக்கா... நாளைக்கு அவருக்கு என்ன பதில் சொல்றது...?" நீரஜா கலங்கினாள்.

    "இங்க பாரு நீரு... உம்புருஷன் ரொம்ப அவசரப் படறாரு... நீ தான் அவருக்கு எடுத்து சொல்லணும். ரஞ்சியும் பாவம் தானே... அவள ரொம்ப படுத்தக் கூடாது..."

    அல்லி நிரஞ்சனியின் காதலுக்கு ஆதரவாக இல்லை என்றாலும் அவளை உடனே கல்யாணத்துக்கு கட்டாயப் படுத்துவதை தடுக்க முயற்ச்சித்தார்.

    "நா சொல்லிட்டேன் சித்தி அவர் கேட்க மாட்டேங்கிறார். என்ன செய்றது...? "

    அல்லிக்கு கோவம் வந்துவிட்டது. "ஏண்டி... இது நீயா தேடிக்கிட்ட வாழ்க்கைதானே... அப்புறம் எதுக்கு எங்களுகிட்ட கேக்குற... நீ பாட்டுக்கு உம் புருஷனோட உன்னோட வாழ்க்கைய பார்க்குற வேலைய பாரு... அவரு எதுக்கு ரஞ்சி விஷயத்துல மூக்க நுழைக்கிராறு..."

    "என்ன சித்தி இப்படி சொல்றீங்க... அன்னைக்கு ராஞ்சிக்கு பிரச்சனை வந்தப்ப இவரு போகலையா... இப்ப மட்டும் பிரிச்சு பேசுறீங்க...?"

    "பாத்தாருதான். இல்லன்னு சொல்லல... அனா அதுக்காக ஒரு பொண்ண கொல்ல முடியுமா...? அவ நொந்து போயி கெடக்குறா... இப்ப போயி கல்யாணத்துக்கு சம்மதி சம்மதின்னா அவ தப்பா ஏதாவது முடிவெடுத்துட்டான்னா என்னடி பண்ணுவீங்க... அப்புறம் 'அப்பான்னா தான் வருமா.... இல்ல ஆயான்னா தான் வருமா...?'" என்று ஒரு போடு போட்டார்.

    அதில் நீரஜா அரண்டுவிட்டாள். ஆனால் தாமரை அசரவில்லை.

    "தப்பான முடிவு எடுப்பாளா...? எடுத்தா எடுக்கட்டுமே...என்னா முடிவு எடுப்பா....? சாவுற முடிவுதானே... சாவட்டுமே... எம்மவளோட வாழ்க்கையும் அழிச்சு... அவளும் சீரழியிரதுக்கு அவ மட்டும் போனா போவட்டுமே... ஒரே நாள்ல அழுது-புழுது அள்ளி போட்டுட்டு போயிரலாமே... இதுமாரி அல்லோலப்பட வேண்டியதுல்லையே..." என்று இரக்கமின்றி சொன்னாள் தாமரை. அவளது தாய் பாசம் அப்போது எங்கு போனதோ தெரியவில்லை. அல்லது எந்த மாயை அவளது தாய் பாசத்திற்கு திரையிட்டதோ தெரியவில்லை.

    அவர்களின் பேச்சை மாடியிலிருந்து கீழே இறங்கி வீட்டிற்குள் நுழைந்த இரண்டு ரஞ்சிகளும் தெளிவாக கேட்டார்கள். நிரஞ்சனி அந்த பேச்சில் அடிபட்ட மானாக துடித்தாள்.

    'அம்மாவா...! என்னோட அம்மாவா...! என்னோட அம்மாவா என்ன சாக சொல்றா....? என்னோட அம்மா இப்படி மாறிவிட்டாளே... திரும்ப அந்த பழைய அம்மா எனக்கு கிடைக்கவே மாட்டாளோ...!' நிரஞ்சனிக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. அழக் கூடாது என்ற பிடிவாதத்துடன் தன்னுடைய சிந்தனையை வேறு திசைக்கு திருப்பி அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு படுக்கைக்கு சென்றாள்.

    மறுநாள் இராஜசேகரன் வந்து கேட்கும் போது என்ன சொல்வது என்று யோசித்துக் கொண்டே மற்றவர்களும் படுக்கைக்கு சென்றார்கள்.


    - தொடரும்
    Please post your comments here : http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/154004-comments-7.html
    [/JUSTIFY]
     
    1 person likes this.

Share This Page