1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மது கல்யாணத்துக்கு ஒப்புக்கொண்டாள்.....by Krishnaamma!

Discussion in 'Stories in Regional Languages' started by krishnaamma, May 10, 2016.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    மது கல்யாணத்துக்கு ஒப்புக்கொண்டாள்.....

    ஆமாம் சென்ற 7 - 8 வருடங்களாய் கல்யாணமே வேண்டாம் என்று சொல்லிக்கொண்டிருந்த மது இப்போது பண்ணிக்கொள்கிறேன் என்று சொன்னது அவளின் அம்மா மற்றும் அப்பாவிற்கு வயற்றில் பாலை வார்த்தது போல இருந்தது. ரொம்ப சந்தோஷமாய் உணர்ந்தார்கள், "இப்பவாவது பகவான் கண்ணை திறந்தானே" என்று அம்மா ரொம்ப சந்தோஷத்தில் புலம்பினாள்.

    அப்பா உடனே தரகரைக் கூப்பிடலாமா, இல்லை எந்த வெப் சைட் லாவது register செய்யலாமா? என்று யோசித்தார். இவள் மனம் மாறும் முன் கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்க்கணும் என்றால்......தரகர் தான் சரிப்பட்டு வரும் என்று நினைத்தார்.

    ஆனால் இருவரின் சந்தோஷத்திலும் மண் விழுவது போல அவள் ஒருவார்த்தை சொன்னார் பாருங்கள்........." அம்மா , அப்பா, எனக்கு எப்படிப் பட்ட பையன் வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருந்தீர்களே , இதோ இந்த சினிமாவில் வருவது போல ஒரு மணமகன் கிடைத்தால் நான் நாளையே கல்யாணத்துக்கு தயார்" என்றாள்.

    "இது என்னடி புதுசாய்?...நீ ஏதோ தோழி கல்யாணத்துக்கு போனவள், அது பிடித்துத் தான் சம்மதம் சொல்கிறார் என்று பார்த்தால் ஏதோ சினிமா பார்த்து விட்டு வந்து".....என்று அம்மா சொல்வதற்குள்.........,மதுவைப் பற்றி சில வார்த்தைகள்.

    எஞ்சினியரிங்கில் காலேஜ் முதலாவதாக வந்து நல்ல வேலை இல் அமர்ந்தாள் மது. அப்பா இத்தனை வருடமாய் உழைத்து சம்பாதித்து இப்போது வாங்குவதை விட இவளின் முதல் சம்பளமே அதிகம். பெருமை இல் அவளின் அம்மா அப்பாவும் பூரித்துப் போனார்கள். எப்பவும் புத்தகமும் கையுமாய் இருந்த மது இப்போது தன் கவனத்தை முழுவதுமாய் ஆபீஸ் வேலைகளில் செலுத்தினாள்.

    தன் பெண் இப்பவாவது ரெண்டு சமையல் கத்துக் கொள்வாள், கொஞ்சம் வீட்டு வேலைகள் பழகுவாள் என்று எதிர்பார்த்த அம்மாவுக்கு கொஞ்சம் ஏமாற்றமே. அவள் தன் கணவனிடம் புலம்பினாள், ஆனால் அவரோ , " அவ என்ன உன்னை மாதிரியா? படித்த பெண், கை நிறைய சம்பாதிக்கிறாள்" என்று சொன்னார்.

    " அது இல்லை, நாளை கல்யாணம் காட்சி என்று வந்தால், என்னதான் சம்பாதித்தாலும், கொஞ்சமாவது குடும்பம் நடத்த இந்த வேலைகள் தெரியவேண்டாமா?" என்று தழைந்த குரலில் கேட்டால் அம்மா.........

    ஆனால் அவை அப்பா காதில் விழலை, ஏதோ படிக்கத் தெரியாதவர்கள் தான் சமையல் கட்டுக்கு லாயக்கு என்பது போல பேசி, அம்மாவின் வாயை அடைத்து விட்டார்.

    அம்மாவும், சரி இப்போ தான் சம்பாதிக்க ஆரம்பித்திருக்கிறாள், ஒரு 2 வருடம் போகட்டும் என்று பேசாமல் இருந்தா. வருடங்கள் தான் போனதே ஒழிய மது மாறலை. கொஞ்சம் கொஞ்சமாய் மதுவிடமே புலம்ப ஆரம்பித்தாள் அம்மா.

    4 -5 வருடங்கள் போனது, மதுவுக்கு ஆபீஸ் இல் நல்ல பேர், பதவி உயர்வு என்று வந்தது பெருமையாக இருந்தாலும், இப்போ அப்பாவும் கொஞ்சமாய் கவலைப் பட ஆரம்பித்தார். யாரையாவது நினைத்துக் கொண்டு இருக்கிறாயா என்று கூட கேட்டு விட்டார்கள். 'அதெல்லாம் ஒன்றும் இல்லை, எனக்கு கல்யாணமே வேண்டாம், வேலை தான் எனக்கு புருஷன்' என்று திட்ட வட்டமாய் மது சொல்லிவிட்டாள்.

    இருவருக்கும் என்ன செய்வது என்று தெரியலை. உறவுகள் நட்புகள் என எல்லோரும் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள். நிறைய சம்பாதிக்கும் பெண்ணைக் கல்யாணம் செய்து கொடுக்கும் எண்ணம் இல்லாத சுயநலமான பெற்றோர் என்று இவர்கள் காது படவே பேச ஆரம்பித்தார்கள். இதைக் கேட்டு மனம் நொந்தார்கள் இவர்கள். ஆனால் மதுவின் போக்கில் மாற்றமே இல்லை. அவள் சந்தோஷமாகவே இருந்தாள்.

    இந்த நிலை இல் தான் எந்தநாளும் இல்லாத திருநாளாக, தன் உயிர்த்தோழி இன் கல்யாணத்துக்கு சென்று வந்தாள் மது. ரொம்ப சந்தோஷமாய் வந்தவள், வந்ததும் வராததுமாக தனக்கு மாப்பிள்ளை பார்க்க சொன்னாள். ஒரு 'செக்' ம் வைத்தாள்.

    அப்படி என்ன படம் தான் அவள் பார்த்தாள் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டினர் அவள் பெற்றோர்..........டவுன்லோட் செய்து வைத்திருந்த படத்தை, அவர்களுக்கு போட்டுக் காட்டினால் மது. அம்மா அப்பாவுக்கு மூச்சே நின்று விட்டது....ஏக குரலில்." என்னடி விளையாடறியா?........யாராவது இதுக்கு ஒத்துப்பன்களா?" என்று கத்தினார்கள்.

    ஆனால் இவள் அமைதியாக, " ஏன்மா மாட்டார்கள்?....அப்படி இல்லாமலா இப்படி படம் எடுத்திருக்கிறார்கள்?........இப்போவெல்லாம் தானை விட 4 - 5 வயது பெரியவளைக் கூட கல்யாணம் செய்து கொள்வது வழக்கமாகிவிட்டதே , அதுபோலத்தான் இதுவும்........மேலும், நீங்கள் தானேகேட்டிர்கள் எனக்கு எப்படிப் பட்ட மாப்பிள்ளை வேண்டும் என்று..........எனக்கு இந்த ஹீரோ போல வேண்டும்.........அதுபோல மணமகன் கிடைத்ததும் சொல்லுங்கள்" என்று சொல்லிவிட்டு ஆபீஸ் போய்விட்டாள்.

    தலை இல் வைத்த கையை எடுக்கக் கூட தோன்றாமல் அமர்ந்து விட்டார்கள் அவர்கள்.

    அப்படி என்ன படம் அது என்று யோசிக்கிறீர்களா? அந்த படத்தின் பேர் , Ki and Ka அது ஒரு ஹிந்தி படம். அதில் வரும் ஹீரோ வீட்டைப் பார்த்துப்பார், ஹிரோயின் சம்பாதிக்க போவாள் :thumbsup:

    பி.கு. காலம் மாறுகிறது, இதுபோல நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. கணவன் மனைவி இருவருக்குள் ஒத்த மனது இருந்ததால் இதுவும் சாத்தியமே ! :)

    அன்புடன்,
    கிருஷ்ணாம்மா :)
     
    Loading...

  2. Rith

    Rith IL Hall of Fame

    Messages:
    2,642
    Likes Received:
    2,660
    Trophy Points:
    308
    Gender:
    Female
    அம்மா, சூப்பரோ சூப்பர். அற்புதமான கற்பனை!!
     
    krishnaamma and sreeram like this.
  3. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    அம்மா.....சூப்பர் மா கதை.. கலக்கிடேள் மா. :worship2:
     
    krishnaamma likes this.
  4. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    மிக்க நன்றி ரித் :)
     
  5. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    மிக்க நன்றி ப்ரியா ! :grinning:
     
    sreeram likes this.
  6. HemalathaRangar

    HemalathaRangar Silver IL'ite

    Messages:
    182
    Likes Received:
    106
    Trophy Points:
    93
    Gender:
    Female
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    மதுவுக்கு அப்படி மாப்பிள்ளை கிடைக்க வாழ்த்துக்கள் .கலக்கிட்டீங்க
     
    krishnaamma likes this.
  8. Agatha83

    Agatha83 IL Hall of Fame

    Messages:
    1,231
    Likes Received:
    2,198
    Trophy Points:
    300
    Gender:
    Female
    காலத்திற்கேற்ற அருமையான கதை. பெற்றோர்கள் பலரும் இப்படிதான் திண்டாடுகிரார்கள்.
     
    krishnaamma likes this.
  9. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    மிக்க நன்றி !
     
    HemalathaRangar likes this.
  10. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    மிக்க நன்றி ருக்மணி ! ஆமாம், இது காலத்தின் கட்டாயம் என்றே நினைக்கிறேன் :) :grinning:
     

Share This Page