1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மண் மகளின் மனம்

Discussion in 'Regional Poetry' started by tamilelavarasi, Nov 17, 2016.

  1. tamilelavarasi

    tamilelavarasi Bronze IL'ite

    Messages:
    28
    Likes Received:
    37
    Trophy Points:
    38
    Gender:
    Female
    [​IMG]
    மனம் உடைந்து கிடக்கிறேன்.

    உங்கள் திருக்கரம் என்னை தழுவிட மறுப்பதால்..

    வாழ முடியாதோர்க்கும் வாழ்வு கொடுத்தேன்.

    உங்கள் அரை சாண் வயிறு கழுவ-என்

    உயிர் ஆவியையும் சேர்த்து கொடுத்தேன்.

    உங்களுக்காக நான் பட்ட பாடு,

    பொட்டல் நிலத்தில் பூத்த கள்ளியாய்


    சற்று பற்றி எறிந்திடும் சுள்ளியாய் போக-என்

    வாழ்க்கை இயக்கம் அற்று இரந்து போகப் போகிறதே…!!

    உயிர் அறுந்து போகப் போகிறதே….!!

    என்னை பற்றி அணைக்க கரங்கள் ஏதேனும்

    உண்டோ இறைவா..

    உளமார உயிர் உறைய கூறுகிறேன்

    நினைவில் கொள்ளுங்கள் எல்லோரும்,

    நிலையில்லா வாழ்வில் நீந்தும் நீங்கள்

    இன்று என் வலியை பொருட்படுத்தாமல் போனால்,

    நாளை உங்கள் வாழ்க்கைக்கு

    பொருளே இல்லாமல் போய்விடும்..

    பசி என்ற பேயை எதிர்க்க வேண்டிய கட்டாயம் வரும்..

    வண்ண வண்ண உணவுகள் உண்டு-பின்பு

    நான் ஏன் பசியை பார்க்கப் போகிறேன் என்பர் சிலர்.

    உணவு என்று நினைத்து,

    உயிர் கொள்ளியை உண்டு வாழ்ந்து வருகிறீர்..

    முற்றிய நிலை வரும் போது,

    முற்றிலுமாய் உணர்வீர்

    முட்டாளாய் வாழ்ந்து விட்டோமே என்று..

    (மண் வெட்டியின் மன நிலையில் நான் உரைத்தேன் தோழிகளே. ஏதேனும் தவறாக இருப்பின் தயவு கூர்ந்து மன்னியுங்கள்)

    அன்புடன்,
    தமிழ்இளவரசி
     
    rai, periamma, Gaiya3 and 3 others like this.
    Loading...

  2. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Beautiful lines :) welcome Tamilelavarasi
     
    tamilelavarasi likes this.
  3. tamilelavarasi

    tamilelavarasi Bronze IL'ite

    Messages:
    28
    Likes Received:
    37
    Trophy Points:
    38
    Gender:
    Female
    thank you so much sissy...!!
     
    jskls likes this.
  4. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    மன்னிக்க முடியாது சகோ ! ;) மன்னிக்க என்ன இருக்கிறது ? :) சொற்பிரயோகங்களும்,கருத்தும் நடையும் எல்லாமே அருமை,அருமை,தமிழ் ! :clap2:

    உங்களுடைய மண்வெட்டி மண்வாசத்தை மட்டும் கிளப்பவில்லை.என் நினைவுகளையும் சேர்த்தேக் கிளறிவிட்டது. எங்கள் வீட்டுத் தோட்டத்தை அவ்வப்போது மண்வெட்டி கொண்டு செப்பனிடுவேன். அப்போது எழும் மண்வாசத்தை நுகர்ந்து இன்பமடைவேன். அதுபோன்றே உங்கள் மண் வாசமெழும்பும் கவிதைகளைப் படித்து மகிழ்ச்சியுறுகிறேன். மேலும் பகிர்ந்து கொள்ளுங்கள், படித்து இன்பப் பயனடைகிறோம் !
     
    rai, tamilelavarasi and jskls like this.
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    மண்வெட்டி கொண்டு மனித உள்ளங்களை ஆழ கொத்தி கிளறி இருக்கிறீர்கள் .இனி மனம் வளமாக இருக்கும் .நல்லவற்றை சிந்திக்க ஆரம்பிக்கும் .மண்வாசனை நிறைந்த கவிதை
     
    tamilelavarasi likes this.
  6. tamilelavarasi

    tamilelavarasi Bronze IL'ite

    Messages:
    28
    Likes Received:
    37
    Trophy Points:
    38
    Gender:
    Female
    நன்றி சகோ....!!!
     
  7. rai

    rai Platinum IL'ite

    Messages:
    290
    Likes Received:
    559
    Trophy Points:
    205
    Gender:
    Female
    Arumaiyana kavidhai. Sindhikka vaikkum karuthu. Thodarungal tamilelavarasi.
     
    tamilelavarasi likes this.
  8. tamilelavarasi

    tamilelavarasi Bronze IL'ite

    Messages:
    28
    Likes Received:
    37
    Trophy Points:
    38
    Gender:
    Female

    நன்றி சகோ..
     
  9. tamilelavarasi

    tamilelavarasi Bronze IL'ite

    Messages:
    28
    Likes Received:
    37
    Trophy Points:
    38
    Gender:
    Female
    மிக்க நன்றி சகோ..
     
  10. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Wonderful kavithai!
    Jayasala 42
     
    tamilelavarasi likes this.

Share This Page