1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மடியில் கனமிருந்தால் வழியில் பயம் - குட்டிக்கதை

Discussion in 'Stories in Regional Languages' started by Rrg, Oct 23, 2018.

  1. Rrg

    Rrg Gold IL'ite

    Messages:
    886
    Likes Received:
    405
    Trophy Points:
    138
    Gender:
    Male
    மடியில் கனமிருந்தால் வழியில் பயம்

    ‘மடியில் கனமிருந்தால் வழியில் பயம்’ எத்தனை உண்மை.
    இக்காட்டு வழியில் எத்தனை முறை பயணித்திருக்கிறான் ஒரு பயமுமின்றி.
    இந்த பிரதேசத்தின் ஒவ்வொரு வளைவும் இவனுக்கு அத்துப்படி. இருப்பினும்
    இன்றோ மடி முழுதும் கனம்; வழியை நினைத்தாலே பயம்.
    வீடோ வெகு தொலைவு. அந்தி நேரம் நெருங்கி கொண்டிருக்கிறது.
    காட்டு வழி முழுதும் கள்வர் பயமுமுண்டு என நன்கு அறிவான்.

    இவன் பயணம் பிறர் யாரும் அறியா வண்ணம் தான் திட்டமிட்டான்.
    குருட்டு தைரியத்தில் தனியாக வந்து விட்டான்.
    நண்பர்களை அழைத்து வரத்தான் நினைத்தான்.
    ஆயின்,அவர்கள் மூலமாக செய்தி வெளியே போனால்..... .
    அல்லது அவர்களே பேராசை கொண்டால் ......
    ஏதேதோ சிந்தனையில் தனியே பயணித்து வந்து விட்டான்.

    இன்று வந்திருக்க வேண்டாமோ? இப்போது நினைத்து என்ன செய்வது?
    பெட்டி நிறைய புதுப்புது வடிவமைப்பில் (டிசைன்) நகைகள்.
    ஊர் போய்ச் சேர்ந்ததும் அவன்நகைக் கடையில் எத்தனை கூட்டம் இருக்கும்
    என மனதில் ஒரு நப்பாசை.
    போய்ச் சேர்ந்தால் தானே. நடு வழியிலேயே அனைத்தையும்
    இழக்க நேரிடலாம்; இறக்கவும் நேரிடலாம்.
    இழந்தால் கவலையில்லை; மீண்டும் பொருள் ஈட்டிடலாம்.
    இறந்தாலோ ........

    இப்போது கரு மேகம் வேறு திரண்டு வருகிறது. நிச்சயம்
    அடை மழையும் ஆடிவரும். பெருங்காற்றும் கூடி வரும் போல் தோன்றுகிறது.
    மழைக்கு ஒளியக் கூட இடமில்லை; மேலும் கேட்கிறது
    சீதலும் ஊதலும் சேர்ந்திசைக்கும் சப்தம்.
    மழையும் பலக்கிறது; உடனே முடிவெடுத்தான்.
    மடியில் கனம் இருந்தால் தானே வழியில் பயம்
    கனத்தை விட்டுவிட்டால் சீதலும் ஊதலும் என்செய்யும்.

    அருகிருந்த வீட்டின் சுவர் ஏறிக் குதித்தான். வீட்டில் யாரும் தென்படவில்லை.
    அடிமேல் அடிவைத்து உட்சென்று
    கொண்டு வந்த பொருள் அனைத்தும் பத்திரமாய் ஒளித்து வைத்தான்.
    சென்ற வழியே வந்து சுதந்திரமாய் வழி நடந்தான். இப்போது
    மடியிலும் ஒன்று மில்லை மனதிலும் ஒன்று மில்லை.
    இனி இயற்கையின் சீதலோ, போலீஸ் காரன் ஊதலோ இவனை என்ன செய்யும்.
    இவன்தான் திருடியதை எல்லாம் திரும்ப வைத்து விட்டானே.

    அன்புடன்,
    RRG
    23/10/2018
     
    Loading...

  2. Monisha55

    Monisha55 Bronze IL'ite

    Messages:
    21
    Likes Received:
    29
    Trophy Points:
    33
    Gender:
    Female
    superb writing style :clap2::clap2:
     
  3. Rrg

    Rrg Gold IL'ite

    Messages:
    886
    Likes Received:
    405
    Trophy Points:
    138
    Gender:
    Male
    Thanks Monisha.:worship2:
    Cheers,
     
  4. Adharv

    Adharv Gold IL'ite

    Messages:
    810
    Likes Received:
    951
    Trophy Points:
    188
    Gender:
    Female
    wow wow fantastic narration Sir :worship2: Story line was very crisp :clap2::clap2: Message-um superb.

    Thank you! Keep rocking.

    @periamma maa & @Preetii Nanbi do read when you get some time :)
     
    Rrg likes this.
  5. Rrg

    Rrg Gold IL'ite

    Messages:
    886
    Likes Received:
    405
    Trophy Points:
    138
    Gender:
    Male
    Thanks Adharv for your comments.
    Pleased to note you liked the story line as well as narration.
    Keep visiting my future posts as well. I will try not to disappoint.
    Cheers,
     
    Adharv likes this.
  6. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,726
    Likes Received:
    12,547
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:final twist superb. A good reverie or reverse of a third introspecting his .
    Thanks and regards.
     
  7. Rrg

    Rrg Gold IL'ite

    Messages:
    886
    Likes Received:
    405
    Trophy Points:
    138
    Gender:
    Male
    Thanks for your comments sir.
    Nice to know you enjoyed reading it.
    Cheers,
    Anbudan,
     
    Thyagarajan likes this.

Share This Page