1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

" மகிழ வைத்து மகிழுங்கள்..

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Jan 19, 2017.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,365
    Likes Received:
    10,561
    Trophy Points:
    438
    Gender:
    Female
    வசதியான, ஆடம்பரமாக, பணக்காரத்தனத்தோடு வாழும் அழகிய பெண் ஒருத்தி, கவுன்சிலிங் செய்பவரை காணச்சென்றாள்.
    அவரிடம் "என் வாழ்வு ஒரே சூன்யமாக இருக்கு. எவ்வளவு இருந்தும் வெற்றிடமாகவே உணர்கிறேன். அர்த்தமே இல்லாமல் , இலக்கே இல்லாமல் வாழ்க்கை நகர்கிறது. என்னிடம் எல்லாம் இருக்கிறது. இல்லாதது நிம்மதியும் மகிழ்ச்சியும் மட்டுமே என் சந்தோஷத்திற்கு வழி சொல்லுங்கள் என்றாள்."
    கவுன்சிலிங் செய்பவர் அவரின் அலுவலக தரையை கூட்டிக்கொண்டிருந்த ஒரு பணிப் பெண்ணை அழைத்தார். அவர் அந்த பணக்கார பெண்ணிடம், " நான் இப்பொழுது பணி பெண்ணிடம் எப்படி மகிழ்ச்சியை வரவழைப்பது என்று சொல்ல சொல்கிறேன்.. நீங்கள் குறுக்கே எதுவும் பேசாமல் கேளுங்கள் " என்றார்.
    பணிப் பெண்ணும் துடைப்பத்தை கீழே போட்டு விட்டு ஒரு நாற்காலியில் அமர்ந்து சொல்ல தொடங்கினாள்..
    " என் கணவர் மலேரியாவில் இறந்த மூன்றாவது மாதம், என் மகன் விபத்தில் இறந்து போனான். எனக்கு யாரும் இல்லை எதுவும் இல்லை. என்னால் உறங்க முடிய வில்லை. சாப்பிட முடியவில்லை. யாரிடமும் சிரிக்க முடியவில்லை. என் வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாம் என நினைத்தேன்.
    இப்படி இருக்கையில், ஒரு நாள் நான் வேலை முடிந்து வரும் பொழது ஒரு பூனை என்னை பின் தொடர்ந்தது. வெளியே சில்லென்று மழை பெய்துகொண்டு இருந்தது , எனக்கு பூனையை பார்க்க பாவமாக இருந்தது. அதை நான் என் வீட்டில் உள்ளே வர செய்தேன். மிகவும் சில்லென்றிருப்பதால் நான் அதற்கு குடிக்க கொஞ்சம் சூடான பால் வைத்தேன். அது அத்தனை பாலையும் குடித்து விட்டு என் கால்களை அழகாக வருடிக்கொடுத்தது.
    கடந்து போன 3 மாதத்தில் நான் முதல் முதலாக புன்னகைத்தேன்.
    நான் அப்பொழுது என்னையே கேள்வி கேட்டேன். ஒரு சிறு பூனைக்கு நான் செய்த ஒரு விஷயம் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது எனில், ஏன் இதை பலருக்கு செய்து நான் என் மன நிலையை மாற்றிக்கொள்ளக்கூடாது என யோசித்தேன்.
    அடுத்த நாள், நோய்வாய்ப்பட்டிருந்த என் அடுத்த வீட்டு நபருக்கு உண்பதற்கு கஞ்சி கொடுத்தேன். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவரை மகிழ வைத்து நான் மகிழ்ந்தேன். இப்படி ஒவ்வொரு நாளும் நான் பலருக்கு உதவி செய்து, அவர் மகிழ நானும் பெரு மகிழ்வுற்றேன்.
    இன்று என்னை விட நிம்மதியாக உறங்கவும், உணவை ரசித்து உண்ணவும் யாரேனும் இருக்கிறார்களா? என்பதே சந்தேகம்.
    மகிழ்ச்சி என்பது , அதை மற்றவர்க்கு கொடுப்பதில் தான் இருக்கிறது என்பதைக் கண்டு கொண்டேன்."
    இதை கேட்ட அந்த பணக்கார பெண் ஓலமிட்டு கத்தி அழுதாள்.
    அவளால் பணம் என்ற காகிதம் கொண்டு வாங்கக்கூடிய எல்லாம் இருந்தது. ஆனால் பணத்தால் வாங்க முடியாத விஷயம் அவளிடம் இல்லை.
    வாழ்க்கையின் அழகு என்பது, நீ எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாய்
    என்பதில் இல்லை...
    உன்னால் அடுத்தவர்கள்
    எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்
    என்பதிலேயே இருக்கிறது...
    மகிழ்ச்சி என்பது
    போய் சேரும் இடம் அல்ல அது ஒரு பயணம்...
    மகிழ்ச்சி என்பது
    எதிர்காலம் அல்ல,
    அது நிகழ்காலம்...
    மகிழ்ச்சி என்பது
    ஏற்றுக்கொள்வது அல்ல, அது ஒரு முடிவு...
    நீ என்ன வைத்திருக்கிறாய்
    என்பதில் இல்லை
    மகிழ்ச்சி...
    நீ
    யார் என்பதில் தான் மகிழ்ச்சி !!!
    " மகிழ வைத்து மகிழுங்கள்..
    உலகமும், இறையும் உன்னை கண்டு மகிழும்"

    Jayasala42
     
    Loading...

Share This Page