1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மகாகவி !!!

Discussion in 'Posts in Regional Languages' started by pgraman, Dec 11, 2011.

  1. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    நாற்திசை சென்றிவர் நன்குகலை யிற்தேர்ந்து
    மாற்றங்கள் தந்திவர் மக்களைக் காத்தாரே
    தோற்றத்தில் தீரம் தொடுக்கும் கவியினில்
    காற்றைபோல் சீறும் கவி

    தன்னுள்ளே கோடி தடங்கள்கள் கொண்டாலும்
    பொன்னான உள்ளால் பொசுக்கிட்டு நீர்அவற்றை
    தன்னாடே முக்கியம் தன்மக்கள் நல்வாழ்வே
    தன்கொள்கை என்றக் கவி

    முட்புதராய் மண்டி முளித்திருந்த மக்களை
    தட்டிக் கொடுத்தீரே தங்களின் நற்கவியால்
    வெட்டிட வெட்டிட வேர்பிடித்த தீயோரை
    வெட்டி எறிந்த கவி

    உங்களைப் பெற்றதால் உள்ளத்தில் தீரமும்
    எங்களைஏய் போரை எதிர்திடும் வீரமும்
    தங்களின் நற்கவி தந்த அனைத்தையும்
    மங்காது செய்யும் கவி


    எத்தனை நற்கவி எம்பொழுதில் வந்தாலும்
    அத்தனை பேர்க்கும் அருள்தரும் நின்கவி
    வெத்தான வோரும் வெகுண்டெழ செய்திட்ட
    முத்தே கவியேநீ வாழ்


    தன் மந்திரக் கவியால், மக்களை மாற்றிய மகத்தான கவியை, போற்றி நம் புகழைக் கூட்டுவோம்........[​IMG][​IMG]
     
    Loading...

  2. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    தெரியாமல் நான்பதித்தேன் தொன்தமிழன் உன்னை
    வரியமைத்தேன் மக்கள் வணங்குவர் என்றெண்ணி
    என்னெண்ணம் பொய்த்தது என்னால் உமக்கிழுக்கு
    வந்ததால் வருந்துகிறேன் நான்

    இடமும் பொருளும் இனியென்றும் பார்ப்பேன்
    தொடரேன் இதனையினி நான்


     
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Please do not get discouraged Raman. There may be many reasons for people not responding to you. I read this only now, from Tamil Poetry section and was a bit surprised and to see it here too. To be frank, I don't know about the structure of a veNbaa and hence thought that I was not one right enough to appreciate. Sorry, had it hurt you. -rgs
     
  4. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    வணக்கம் ஸ்ரீ

    நான் இதனால் சோர்ந்து போகவில்லை, ஆனால் கொஞ்சம் வருந்தினேன். எப்பேர் பெற்ற மனிதர் அவர் அவரை போற்ற ஒருவரும் முன் வரவில்லையே என்ற வருத்தமே தவிர, எனக்கு பின்னூட்டம் வரவில்லை, நான் எழுதியதை யாரும் பாராட்டவில்லை என்று எனக்கு வருத்தம் இல்லை.

    நன்றிகள் ஸ்ரீ :)

    இறைக்கு நிகரொன்று இங்குண்டு அஃது
    இறையைக்காட் டும்நம் தமிழ் :thumbsup
     
  5. Viswamitra

    Viswamitra Finest Post Winner

    Messages:
    13,410
    Likes Received:
    24,174
    Trophy Points:
    538
    Gender:
    Male
    My dear Raman,

    I am very new to this forum and was pleasantly surpised to read your wonderful words of praise for Maha Kavi. The words are not enough to praise that gifted poet who revolutionized through his powerful words of wisdom. Your words of praise of that gifted poet were as sharp as a sword and so was your second post. I love your poem and I certainly wish you continue to write.
     
  6. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    வணக்கம் விஸ்வமித்ரா,

    உங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். உங்கள் பாராட்டு கண்டு நெகிழ்ந்தேன். நான் தொடர முயற்சிக்கின்றேன்.....:thumbsup

    மிக்க நன்றிகள் நண்பா.......:)
     

Share This Page