1. Have an Interesting Snippet to Share : Click Here
  Dismiss Notice

போன்சாய் - (சிறு கதை )

Discussion in 'Stories in Regional Languages' started by PriyaKat, Feb 13, 2012.

 1. PriyaKat

  PriyaKat Silver IL'ite

  Messages:
  118
  Likes Received:
  76
  Trophy Points:
  68
  Gender:
  Female
  "அப்பாவுக்கு பிடிக்காது".

  சிறு வயது முதல் , பல முறை கேட்டு அலுத்த சொற்கள். ஆனால், அவை அக்னி குஞ்சாக காதில் இறங்கி, அடி வயிற்றில் குரோதம் வளர்த்த அந்த முதல் முறை, எனக்கு வயது பதினாலு, பதினைந்து இருக்கும்.

  பள்ளியில் சினேகிதிகள் பலரும் முடியை குட்டையாக "பாப்" வேட்டிகொண்டிருந்த காலம். பிடி எண்ணை வைத்து வழித்து வாரி, எலி வாலாக பின்னி ரிப்பன் வைத்து கொண்டு போகும் அருக்காணிகளில் ஒருத்தியாய் நானும் இருக்க பிடிக்காமல் , "முடி வெட்டி கொள்ளட்டுமா அம்மா ?" என்று ஆசை ஆசையாய் கேட்ட போது , குட்டிசுவற்று குறு விளக்காய் , சரி என்றும் இல்லாமல் வேண்டாம் என்றும் சொல்லாமல் அம்மா, " அப்பாவுக்கு பிடிக்காது" என்று மெலிதாய் மென்று விழுங்கியது , முளைத்து மூன்று இலை விட தொடங்கியிருந்த என் தனித்தன்மைக்கு பிரம்படி போல் பட்டது.

  " அம்மா, இது என் தலை, என் முடி,வேட்டிக்க எனக்கு பிடிச்சிருக்கு. இது நாள் வரை அதை பராமரித்து வந்த உங்களுக்கு பிடிச்சிருக்கா சொல்லுங்க . சம்பந்தமே இல்லாத அப்பாவுக்கு ஏன் பிடிசசிருக்கணும்?" சொற்களின் சூடு கொதி ரத்தத்தில் இருந்து வந்தது எனக்கே தெரிந்தது. நிழலாய் ஒரு பீதியுடன், ஒளிந்த சோகமும் திரை விலக, அம்மாவின் முகம் சிறுத்தது.

  " மத்த பிள்ளைங்கள போல நீயும் அழகா இருக்கணும்னு எனக்கு மட்டும் ஆசை இல்லையா ராசாத்தி ? ஆனா உனக்கே தெரியாதா, அப்பாவுக்கு இந்த பேஷன் எல்லாம் பிடிக்காது ......"

  தெரியும் தான்......அம்மா புருவம் கூட திருத்தி கொண்டதில்லை, க்ரீம் பௌடர் பூசிகொண்டதில்லை . "சினிமாகாரிங்க போல என்ன சிங்காரிசிகிட்டு ?" என்று அப்பா மற்றாரை விமரிசிக்க கேட்டும் இருக்கிறேன் .

  இது ஒரு நிகழ்வு மட்டும் தான் என்று இல்லை. சிறிது பெரிதாக பலப் பல இப்படி .
  அம்மா தனக்கு வேண்டும் என்று எதையுமே செய்து கொண்டதோ , கேட்டதோ நான் பார்த்ததில்லை. தன் அபிப்ராயம் இப்படி என்று அறிவித்தது கூட இல்லை. எல்லாமே அப்பா சொல்படி தான். உலகை அவள் பார்ப்பது கூட அப்பாவின் கண் வழிதான். 'இந்த அம்மா ஒரு ஜடம்' என்று நான் அலுத்துக்கொண்ட நாட்கள் பல.

  "ஏன் அம்மா ? அப்பா ஏன் இப்படி ? "
  தனக்குள் கோடி முறை இதே கேள்வியை கேட்டு பார்த்து, பதில் அறியாது சோர்ந்திருந்த அம்மா , வாஞ்சையுடன் என் தலையை கோதிவிட்டு சொல்வாள் : " அது அப்படிதான் கண்ணம்மா. சிலதுக்கு காரணம் ஏதும் கிடையாது. அப்படிதான்"

  " உங்களுக்குன்னு ஒண்ணுமே இல்லையா அம்மா ? இப்படியா மிதியடி போல கிடப்பீங்க !" என்று கூட ஒரு முறை சண்டை போட்டேன் .
  இரண்டு நிமிஷங்கள் ஒன்றுமே சொல்லாமல், வெறுமையாக என்னை பார்த்த அம்மா பெருமூச்சுடன் என் கைபிடித்து அன்று சொன்னாள்: " பெண்ணாய் பிறந்திருக்கிராய். சில விசயங்கள புரிஞ்சிக்க, கண்ணு. ஒன்று கிடைக்க, ஒன்றை தலை முழுகவேணும். நமக்குன்னு இடம் அமைசிக்க வழியோ வக்கோ இல்லன்னா, நம்ம வாழ்கை மேல ஆளுமை கொண்டாட நமக்கே உரிமை கிடையாது . "
  அப்பாவுக்கு பிடிக்காது, அப்பாவுக்கு பிடிக்கும், அப்பா சொன்னார் , அப்பா எதிர்பார்ப்பார் என்ற ரீதியிலேயே அவள் உலகம் உருண்டு கொண்டிருப்பதை பார்த்து கொண்டு தானே இருந்தேன் .

  " இது ஒரு பிழைப்பா அம்மா !" என்று வெகுண்ட நாட்களும் உண்டு. அனால், அவள் வாழ்வின் ஆதாரமாக கொண்டிருந்த தர்மமோ , என் சிந்தைக்கு முற்றிலும் எட்டாத ஒன்று.
  " சென் சோற்று கடன் " என்பாள் அம்மா, "சென் சோற்று கடன்".

  அப்பாவிடம் எனக்கு அன்பு உண்டு. சிரிப்பார், கொஞ்சுவார் தான். பொருள் வாங்கி தருவார், சுற்றுலா அழைத்து போவார் தான். ஆனால், எது செய்தாலும், அப்பாவுக்கு பிடிக்குமா என்று உரைத்து பார்த்த பிறகே தான் செய்ய வேண்டும். இல்லையெனில், நாள் முழுதும் நிம்மதி குலைய, சொல் -தாக்குதல் நிகழும். இதுவும் ஒரு வித அன்பா, தெரியவில்லை . அன்பும் எரிக்குமா, புரியவில்லை.

  தன்னுடைய ஊனிலிருந்து தோன்றிய உயிர் துகள் இது என்ற வாஞ்சை அம்மாவுக்கு இருக்கும் போது, தன் உயிரணுவிலிருந்து விளைந்த மானுடம் இது என்ற காருண்யம் இல்லாமல் , 'தன் உடமை இது' என்ற மதர்ப்பே அப்பாவுக்கு ஏற்பட காரணம் என்ன ? Y Chromosome கே விசேசமான நியாயமோ ?

  வயது ஏற ஏற, சிறு பெண்ணின் மன்னிப்பு குணம் குறைந்ததோ , கிரகிக்கும் அறிவுதான் வளர்ந்ததோ தெரியாது. அப்பாவின் போக்கு , ஆண் வர்கத்தின் வெறியாட்டமாகவே தோன்ற ஆரம்பித்தது. அம்மா அடங்க அடங்க, எனக்கு உள்ளே புகையும்.

  அன்று அப்பா பெங்களூர் லிருந்து திரும்பி வந்திருந்தார். அங்கு வேலை முடிந்ததும், பூங்காவுக்கு போயிருந்ததாக சொன்னார்.

  " வித விதமா பூக்கள் இருந்திருக்குமே ! பூ விதை எதாச்சும் வாங்கினீங்களா அப்பா ? "
  "ஆமா கண்ணு !....தா, ஸ்பெஷல் செடி கூட ஒண்ணு வாங்கியாந்தேன் உனக்காக."
  சிறு கோணி பையை கொடுத்தார். ஆர்வத்துடன் பிரித்து பார்த்தேன் . ஒரு அழகிய பீங்கான் குடுவையில் செடி இருந்தது.
  " போன்சாய் அரளி செடி , கண்ணு. ஜப்பான் சரக்கு . ரொம்ப காஸ்ட்லி !"

  உயிர் வேரும் கிளைகளும் வெட்டப்பட்டு வெட்டப்பட்டு, தன் பரந்த செழிப்பையும், கொழிக்கும் குதூகலத்தையும் , சுயத்தையும் மறந்து , குறுகி போய் , ஒடுங்கி அமர்ந்திருந்த செயற்கை வடிவம்.

  " அத டி. வீ . பக்கத்து மேசையில வை கண்ணு. அழகா இருக்கும் " என்று சொல்லியபடி குளிக்க சென்றார் அப்பா.

  பையிலிருந்து குடுவையை எடுத்து கொண்டு , நேராக பால்கனிக்கு சென்று , பக்கத்து காலி மனையை நோக்கி அதை வீசி எறிந்தேன்.
  குடுவை சிதறிய ஒலி கேட்டது. மண்ணில் பட்டால், சுதந்திரமாக வேர் ஊன்றி தன்னிலைக்கு அந்த அரளி வளர்ந்து செழிக்குமா தெரியாது.

  வளரட்டும் என்று மனதில் ஓதி கொண்டு திரும்பினேன். எதிரில் , நெஞ்சில் கை வைத்தபடி வெளுத்த முக அம்மா.

  அம்மாவை அணைத்து, " வா, ருத்ரதாண்டவ கச்சேரிக்கு ரெடி ஆவோம்!" என்ற படி உள்ளே நடக்கையிலே தான் உணர்ந்தேன், அவள் தோளுக்கு மிஞ்சியிருந்தேன் நான்.
   
  11 people like this.
  Loading...

 2. nihasvin

  nihasvin Platinum IL'ite

  Messages:
  1,240
  Likes Received:
  582
  Trophy Points:
  208
  Gender:
  Female
  Dear Priya , Story s too good :) Well,Bonsai will be reminding me ur story for sometime
   
 3. Vasupradha

  Vasupradha Gold IL'ite

  Messages:
  448
  Likes Received:
  330
  Trophy Points:
  123
  Gender:
  Female
  Hi Priya,

  Unarvugalin velippaadu arumai aaga ulladhu..... Ungal ezhuththukkal IL il thodara vaazhthukkal!!!!!!!!

  Vasupradha.S
   
 4. Priyapradeep

  Priyapradeep Gold IL'ite

  Messages:
  801
  Likes Received:
  100
  Trophy Points:
  108
  Gender:
  Female
  A good one. Very good narration..........
   
 5. PriyaKat

  PriyaKat Silver IL'ite

  Messages:
  118
  Likes Received:
  76
  Trophy Points:
  68
  Gender:
  Female
  Nihasvin, Vasupradha,Priyapradeep

  Paditthu paaraattiyatharkku mikka nanri
   
 6. sujisaran

  sujisaran Silver IL'ite

  Messages:
  259
  Likes Received:
  156
  Trophy Points:
  93
  Gender:
  Female
  ஹாய் பிரியா


  சிறிய கதையில் மிகப்பெரிய விஷயத்தை புரிய வைத்து உள்ளீர்கள்!!! தொடர்ந்து எழுதுங்கள் !!! வாழ்த்துக்கள்

  வாழ்த்துகளுடன்
  சுஜிசரண்
   
 7. Saisakthi

  Saisakthi IL Hall of Fame

  Messages:
  8,966
  Likes Received:
  12,582
  Trophy Points:
  438
  Gender:
  Female
  Dear sister,

  Very good narration, Life story depicted very smoothly... Hats off for your creation
   
 8. Viswamitra

  Viswamitra IL Hall of Fame

  Messages:
  8,757
  Likes Received:
  15,150
  Trophy Points:
  438
  Gender:
  Male
  Excellent!!! Keep up the great work. Keep writing more and more. Small is beautiful but it does not mean we need to cripple things to make it small. Expansion is the purpose of our life. Let the revolution begin to voice the opinion freely.

  Shivogam Shivagam Rudra Dhandavam :)

  Viswamitra
   
 9. nithyakarthigan

  nithyakarthigan Gold IL'ite

  Messages:
  600
  Likes Received:
  509
  Trophy Points:
  188
  Gender:
  Female
  Very good narration... I really liked it. Keep writing. All the best... :)
   
 10. prana

  prana IL Hall of Fame

  Messages:
  5,231
  Likes Received:
  2,560
  Trophy Points:
  340
  Gender:
  Female
  ரொம்பவே அழகான கதை ப்ரியா..அதை உங்கள் நடையில் மெருகேற்றி இருக்கிறீர்கள்..
  நிறைய நல்ல கதைகள் எழுத வாழ்த்துக்கள்...
   

Share This Page