1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பொங்கும் இன்பம் எங்கும் பரவி....

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Jan 1, 2011.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    வெற்றியும் தோல்வியும் வாழ்வின்
    இருபக்கங்கள்... மாறி மாறி வரும்

    மாறிடும் உலகில் மாறாது இருப்பது
    மாறும் நிலையது...

    மாற்றங்களை, ஏற்றங்களாக்கி, நீ
    உன் நிலையை உயர்த்திக் காட்டு...

    உன் வாழ்வு இருக்கட்டும் மற்றவருக்கு
    ஒரு உதாரணமாய்...

    உன் நண்பர்கள் ரணம் தீர்க்கும் மருந்தாய்
    அவர் மனதுக்கு விருந்தாய்...

    புது வருடம், வரும் வருடம் ஒரு முறை
    புதிதாய் அதில் என்ன உண்டு??

    புது மனிதனாய் நீ மாறு... அதில்தான்
    அனைத்துமே உண்டு...

    மாறிய உன்னைக் கண்டு, உன் வாழ்வும்
    மாறிடும் வீறு கொண்டு...

    முடியாது என்பதை மூலையில் வைத்து
    முடியும் என்பதை மூளையில் தைத்திடு
    விடியும் உலகம் உனக்கு... ஒளி கொண்டு

    பொங்கும் இன்பம் எங்கும் பரவி
    தங்கட்டும் எங்கெங்கும்...

    புதிய மனிதனாய், மனிதம் கொண்டு,
    புனிதன் ஆவாய்...

    *************************************************************

    பிறந்தது புத்தாண்டு
    இறந்திடும் துன்பங்கள்
    மறைந்திடும் சோகம்
    கலைந்திடும் மேகம்
    செழித்திடும் வாழ்வு.

    இனிய இதயம் நிறைந்த, புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என் வலை உலக நண்பர்கள் அனைவருக்கும்....
     
    Loading...

  2. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,597
    Likes Received:
    28,767
    Trophy Points:
    640
    Gender:
    Female
    [​IMG]
    புது வர்ஷத்துக்கு அருமையான கவிதை
    எப்படி உன்னை பாராட்டுவது என்று தெரியவில்லை
    ஒரு அன்னை யா இது தான் சொல்ல தோன்றுகிறது
    பதினாறும் பெத்து பேரு வாழ்வு வாழவும்
    உனக்கும் உன் குடும்பத்துக்கும் என் வாழ்த்துக்கள்
    இந்த இனிமையான புது வர்ஷத்துக்கு
     
    Last edited: Jan 1, 2011
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    என் அன்பான அன்னையிடம் இருந்து முதல் பதிலும், வாழ்த்துக்கும் வந்ததில் மிக்க மகிழ்ச்சி எனக்கு...:):)

    உங்களுக்கும், தந்தைக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் விஜி மா.
     
  4. sublakshmi

    sublakshmi Bronze IL'ite

    Messages:
    185
    Likes Received:
    39
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Dear Vijima and veni mohan and all Il members ,



    WISHIG YOU ALL A VERY VERY HAPPY, PROSPEROUS, HEALTHY AND WEALTHY NEW YEAR. MAY GOD GRANT ALL A VERY PEACEFUL AND MOMENTOUS NEW YEAR TO EACH AND EVERYONE.

    :party


    REGARDS,
    Sublakshmi.
     
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Veni,

    புத்துணர்ச்சியும், புதுத்தெம்பும் தரும் கவிதை!! :thumbsup:thumbsup

    New Year Resolution எடுத்தீங்களா?

    உங்களுக்கும், நம் கவிதைத்தளம் நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    மிக்க நன்றி Sublakshmi.

    உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும்....
     
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    கர்ணனின் காதலிக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.வேணி உன் தமிழ்சேவை மேலும் பெருகட்டும்.உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும்என் உளம் நிறைந்த வாழ்த்துக்கள் .

    ருக்மணிமா.
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள வேதா,

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    புதுவருஷத் தீர்மானம்???? ஒ... எடுத்தாச்சே....

    இந்த வருஷம், இன்னைக்கு தொடங்கி... என் மனசறிஞ்சு யார் மனசையும் காயப்படுத்தக் கூடாது-ன்னு....

    போன வருஷம் என்ன எடுத்தே-ன்னு நீங்க என்னைக் கேக்கக் கூடாது... நானும் உங்களை கேக்க மாட்டேன் சரியா??? :)

    நன்றி தோழி, உங்கள் வருகைக்கும், வரிகளுக்கும்
     
    Last edited: Jan 1, 2011
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள அன்னைக்கு,

    புத்தாண்டாம் இந்நாளில், அன்னையின் அன்பும், ஆசியும் கிட்டியதில், மிக்க மகிழ்ச்சி எனக்கு....

    நன்றி அன்னையே... உங்கள் அன்புக்கும், ஆசிகளுக்கும், அன்பான வரிகளுக்கும்
     
  10. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    முடியாது என்பதை மூலையில் வைத்து
    முடியும் என்பதை மூளையில் தைத்திடு
    விடியும் உலகம் உனக்கு... ஒளி கொண்டு

    நன்று சொன்னாய் தோழி.
    புது வருடம் மகிழ்ச்சி பொங்கி வளரட்டும்.
     

Share This Page