1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

"பொங்கலோ பொங்கல் "

Discussion in 'Posts in Regional Languages' started by mathangikkumar, Jan 16, 2013.

  1. mathangikkumar

    mathangikkumar Platinum IL'ite

    Messages:
    1,438
    Likes Received:
    1,659
    Trophy Points:
    283
    Gender:
    Female

    இந்தப் பொங்கல் வந்தாலே வீட்டுல "பொங்கலோ பொங்கல் "வெட்கப் படாம, யார் கத்தரதுன்னு தான்.

    பொங்கல் பண்டிகை எப்பவுமே தை மாசம் எப்போ பிறக்கிறதோ அப்பத்தான் பொங்கல் பானை வைக்கனும்னு சாஸ்திரம் .முக்கா வாசி கார்த்தாலயே பிறந்தாலும் சில சமயம் மத்யானம் கூட பொறந்திருக்கிறது அப்போ அது வரைக்கும் பட்னி தான்.

    கூட்டுக் குடும்பத்துல பத்து படி அரிசிக்கு எல்லாம் பொங்கல் செஞ்சிருக்கு,
    ஏனால் அது அடுத்த நாள் கனுப் பிடி வக்கர வரைக்கும் அந்தக் குண்டான் சாதமும், பொங்கலும் வரணும்.

    மொதல் நாளே அந்த பொங்கத் தவலைக்கு சுண்ணாம்பு தடவி மஞ்சக் கொத்து இல்ல, இஞ்சிக் கொத்து கட்டி சந்தனம் ,குங்குமம் இட்டு சுவாமி ரூமுலே ரெடியா வைக்கணும். நல்ல சமயம் பாத்து அதை அடுப்பில வைக்கணும்.

    அதுவும் அரிசியைக் கிளஞ்சு தவலையை ஒருபிடி அரிசியால ஒரு சுத்து சுத்தி அக்க்ஷயம்னு சொல்லி போடணும். இப்ப மாதிரி குக்கர் எல்லாம் எங்கே?
    கிட்டவே இருந்து கிளறிக் கொடுத்து சிப்பி தட்டாலே மூடி சமைக்கணும், பிறகு கஞ்சி வடிக்கணும்.அந்தக் கஞ்சியோ எப்ப வேணா' டுபுக்குனு 'கண்ல தண்ணீ வரப் பொம்பளை மாதிரி நம்பள பயமுறுத்தும்.

    இவ்வளவு சமச்சாலும் ஆளுக்கு ஒரு கப் சக்கரைப் பொங்கல் கிடைச்சால் அதுவே மிக்க மகிழ்ச்சி!

    பெரியப்பா வரையும் போது கிண்டல் பண்ணலாம்,அதுவே அப்பான்னா வாலை சுருட்டிண்டு இருக்க வேண்டியதுதான் . பெரியப்பா குதிரைக்கு பதிலா கழுதையா முகம் இருந்து நாங்கள் கேலி பண்ணா, "அது என்னன்னா,முன்னாடி கழுதைப் போரதாலே அதைத் துரத்தி,துரத்தி மூஞ்சி அப்டி ஆச்சுன்னு சொல்வா",,.குதிரையை ரொம்ப ஸேபா ரெண்டு வரஞ்சு பாக்கிக்கு கால் மட்டும் தெரியறாமாதிரி பண்ணிடுவா. சில சமயம் மாட்டு மூஞ்சி வந்தா அண்டக் காலத்துலேயே, இது,' மாட்டுக்கும் குதிரைக்கும் பொறந்ததுன்னு சொல்லிடுவா', நல்ல வேலை சூரிய பகவான் கண் திறந்தும் திறக்காதது மாதிரி இருந்துட்டான்.

    அப்பா நல்ல வரையுவா, அதனாலே மொட்டை மாடியிலையோ இல்ல வெயில் படும் மித்ததிலோ சாக்பீசால அழகா சூர்ய பகவானோடஏழு குதிரை இழுக்கராபோல தேர் வரையுவா. அப்பா நாக்க நீட்டிண்டு அதை ஒலவொலவாயி சொல்றா மாதிரி பண்ணிண்டே ரொம்ப அழகா வரையற காட்சி இருக்கே, அப்பெல்லாம் செல் போன் கேமராவோ ,வீடியோ கேமராவோ இல்லாமப் போச்சு!

    பூஜைக்கு ரெடி பண்றதைப் பத்தி நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி எல்லாம் ரெடியானப் பிறகும் , எப்படா பூஜை முடியும் அந்தப் பொங்கல் கிடைக்கும்னு நாக்குல தண்ணி ஊறி அது ஒழுகவே ஆரம்பிச்சுடும்.

    கரும்பில்லாம பொங்கலா? பெரிய மன்னி ஊருலேரிந்துக் கொண்டு வரக் கரும்பு கருப்பா பெரிசா இருக்காது, சின்னதா மெல்லிசா இருக்கும். அதோட ருசியே தனி. அதுவும் ரேஷன் தான். இருந்தாலும் எங்களுக்கு கிடைக்கிற ஒரு ஜானோ ,அடித் துண்டோ அதை நல்ல தோல் சீவி சின்ன சின்ன துண்டா நறுக்கி தோட்டதுல ஒவ்வொருவர் ஒரு மூலைக்குப் போயி யார் எவ்வளவு சக்கை துப்பறானு வேற போட்டி நடக்கும்.

    சிலபேர் நல்லா பொடித் துண்டா நறுக்குவா, அதுப் பாக்கவே ஒரு அழகா இருக்கும், சில சோம்பேறிகள் எப்படியும் கடிச்சுத் துப்பப் போறோம் அதுக்கு என்ன அழகு வேண்டிக்கிடக்குன்னு அப்டியே பெரிய துண்டாவே சாப்பிடுவா.

    சில சிறுசு உருப்படிகளுக்கு நறுக்கித் தரேன் பேர்வழின்னு அதுல கொஞ்சம் கையாடிடுவோம்! பாவம் பக்கத்துல நாய் மாதிரி கழுத்த சாச்சு தூக்கிண்டு நாலு கால் இல்லாட்டாலும் ரெண்டு காலு கையை வச்சிண்டு தேமேன்னு நம்ம மேல அவ்ளோ விசுவாசமா பாப்பா.

    கோலம் போடறது இருக்கே, மொக்கு மாவுல, புள்ளிக்கோலம் வாசல் முழுக்க போட்டு, பக்கத்தாத்து கோலத்தை விட பெரிசா நல்லா வரணும்னு, அந்தத் தெருக்கே போயி பார்த்துண்டு வந்து போடுவோம் ,டிசைனுன்னு இல்லாட்டா கூட ப்ரீ ஹேண்டா எக்ஸ்டெண்டு பண்ணி போடுவோம்.

    இந்த மாதிரி இந்தக் காலத்து பசங்களால எதாவது ஞாபகம் பண்ண முடியுமா?
     
    Loading...

Share This Page