1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பொங்கலோ பொங்கல்.....

Discussion in 'Posts in Regional Languages' started by natpudan, Jan 15, 2011.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    பொங்கலோ பொங்கல்.....

    சமயலறைக்கும் எனக்கும் காத தூரம்.
    அது அப்படியே இருப்பது தான் சமயலறைக்கு அழகு.
    இதைப் படித்து முடிக்கையில் அதை நீங்களே உணர்ந்து விடுவீர்கள்.

    நான்கு பத்து வருடங்களைக் கடந்தவன் நான். ஆனால் சமையலறைப் பக்கம் நான் கடந்ததே இல்லை.
    திடீரென ஓர் ஆசை. நீங்கள் அனைவரும் என்னிடம் படும் பாட்டை அந்த சமயலறைக்கும் கொடுத்தால் என்ன?

    இறங்கினேன் களத்தில் - முண்டாசு தரிக்காது, கைலியை மடித்துக் கட்டிக் கொண்டு. சிறிதாய் புத்தி ஒன்று இருப்பதாக ஓர் எண்ணம் - சிந்தனைக் குதிரையை தட்டி விட்டேன் - எடுத்தது பெர்ராரி வேகம். சர்கரைப் பொங்கலுக்கு வேண்டுவது என்ன? அரிசி, வெல்லம். அரிசி இருந்தது, வெல்லத்தை ஓடிச் சென்று வாங்கினேன்.
    ஏதாவது சமையல் குறிப்பை பார்த்து செய்யலாமே என என் எதிரி (மனசு) குரல் கொடுக்க, இத்துனை நாள் வக்கனையா சாப்டியே - அதை வைத்து செய்ய என்ன குறை என்ற எண்ணம் அடக்கி விட்டது.

    அரிசியை கழுவினேன் (பாஸ்மதி) - ஒரு டம்ப்ளர் அளவு. அதை ஒரு பாத்திரத்தில் வைத்து, இரண்டு டம்ப்ளர் தண்ணி ஊற்றி கேஸ் அடுப்பில் ஏற்றி வைத்தேன். பார்க்க ரொம்ப அழகா இருந்தது. நீங்கெல்லாம் வச்சாக் கூட அப்படி அழகா இருக்குமா தெரியல?

    வெல்லத்தை எடுத்து சிறிய சிறிய பகுதிகளாக சீய்த்து வைத்துக் கொண்டேன். நளனைப் போல நளினமாக செய்தேன்னு சொன்னா நம்பனும் நீங்க. அடுப்பை பற்ற வைக்க - அரிசி கொதிக்க ஆரம்பித்து விட்டது. உடனே பொங்க ஆரம்பித்து விட்டது. அய்யய்யோ என அலறாமல் அடடா அதுக்குள்ள பொங்கல் ரெடி ஆயிடுச்சா என நினைத்து வெல்லத்தை அதில் கொட்டினேன். கொஞ்சம் அமைதியானது கொதிப்பு. திடீரென ஞாபகம் வந்தது, பால் சேர்ப்பார்களே என. பாலை எடுத்து அதில் ஊற்றினேன்.

    மறுபடியும் பொங்கத் துவங்கியது. கொஞ்சம் சந்தேகம் வந்து விட்டது. பொங்கி வழிந்து விட்டால், மனையாள் வருகையில் அடுப்பு இருக்கும் நிலையைக் கண்டால் என் கையையும், காலையும் வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியாதா என்று கேட்பதோடு நிற்காமல் கையைக் காலை உடைத்து விட்டால்.

    உடனே எலெக்ட்ரிக் குக்கரை எடுத்து அதில் உலகின் நவீன மயமான ட்ரான்ஸ்பர் டெக்னாலஜிய உபயோகித்து அதில் மாற்றினேன். டெக்னாலஜி ரைட்ஸ் யாருக்காவது வேணும்னா சொல்லுங்க, அனுப்பி வைக்கிறேன். காசு எதுவும் தர வேண்டாம், எனக்கு நிறைய தந்த இந்த சமூகத்துக்கு ஏதாவது திரும்ப செய்யனும்ன்ற வெறி எனக்குள்ள இருக்கறதனால பிரீயாவே தரேன்.

    எலெக்ட்ரிக் குக்கரை ஆன் செய்து மூடி வைத்துவிட்டு அப்பாடா என வந்து தொலைக் காட்சியை பார்க்க உட்கார்ந்தேன். கொஞ்ச நேரம் கழித்து போய் பார்த்தால் - குக்கர் ஆப் ஆகிவிட்டது, ஆனால் குக்கரின் கீழே வெல்லப் பாகு நிறைய வழிந்து விட்டது. அய்யய்யோ பேசாம கடைக்குப் போய் சாப்ட்றுக்கலாமோ என எதிரி மனசு சொல்ல, இதப் பார்த்தா எப்படி என நினைத்து சமாதானம் செய்து கொண்டேன்.

    திறந்து பார்த்தேன் - அழகா சர்கரைப் பொங்கல் எனைப் பார்த்து சிரித்தது. சந்தோஷம் பொங்கியது - பொங்கல் பொங்கியது கண்டு. அதுவும் நான் பொங்கல் வைத்ததும் பொங்கி விட்டதைக் கண்டு. எனக்கே ஒரு உம்மா நானே கொடுத்துக் கொண்டேன். கெளப்பிட்டடா கண்ணா - சூப்பர்.

    குக்கர் பாத்திரத்தை எடுத்து ஓரமாக வைத்து விட்டு, சிந்திய பாகை பாங்காக துடைத்து, குக்கரையும் துடைத்து வைத்து விட்டு - பொங்கல் உள்ள பாத்திரத்தை எடுத்து அதில் ஒரு ஸ்பூனைக் கொண்டு பொங்கலை எடுத்து சுவைத்தேன், தேன் தான் போங்க - எவ்ளோ அருமையா இருக்கு தெரியுமா?

    கொஞ்சம் விதை விதையா இருக்கு, ஆனாலும் நல்லாருக்கு நான் வைத்த சர்கரைப் பொங்கல். உதிரி உதிரியா அழகழகா இருக்கு. முந்திரிப் பருப்பு போடாதது ஞாபகம் வந்தது. பரவால்ல சைட் டிஷ்ஷா வச்சு சாப்டாப் போச்சு. என்ன சொல்றீங்க?

    விதை விதையா சாப்டா வயிறு வலிக்குமாமே - அது மறு நாள் தானே தெரியும். இப்ப என்ன கவலை அதை பத்தி. அதை நாளை பாப்போம். நண்பர்களே நான் பண்ணியது நல்லா இருந்தாலும் உங்கள் பொங்கல் நல்லா இருக்கணும்ன்ற என்னத்துல நீங்க பொங்கல் வச்சு சாப்டதுக்கு அப்புறம் இதை எழுதி ரிலீஸ் பண்ணுகிறேன்.
    ஏன்னா என் பொங்கலைப் பார்த்து உணர்ச்சிவசப் பட்டு அதே மாதிரி முயற்சித்து - ஏன் வீண் ரிஸ்க் உங்களுக்கு என்ற நினைப்பே வென்றது கடைசியில்.

    வீட்டுக்கு இன்னும் போன் பண்ணி சொல்லவில்லை. விவகாரமா அவங்க என்ன சொன்னாங்கன்னு கேக்கக் கூடாது - ஓகேவா.

    வாழ்க பொங்கல். நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
     
    Loading...

  2. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,597
    Likes Received:
    28,768
    Trophy Points:
    640
    Gender:
    Female
    அன்புள்ள Nats

    எப்படியோ பொங்கல் பண்ணி சாப்பிடீர்கள் இல்லையா அதுவே பெரிசு அது எப்படி இருந்தது நீங்கள் யாரையாவது உண்ண அழைத்தால் தான் தெரியும் அது எப்படி இருந்தது என்று. நான் வரட்டுமா அதை சுவைக்க, எனக்கு flight டிக்கெட் அனுப்புங்கள் உடனே பறந்து வருகிறேன்



    உலகிற்கு ஒளி தந்து , ருசித்திட உணவை தந்து, பசுமையான பூமியை தந்து, சுர்யனே மிக்க நன்றி வாழ்கையில் இன்பம் பொங்கிட இனிய பொங்கலோ பொங்கல் வாழ்த்துக்கள்
     
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    அம்மா நீங்கள் வைப்பது போல் இல்லை என்றாலும் நல்லாவே இருந்தது.

    ரொம்ப நன்றிமா முதல் முதலில் படித்து, சுவைக்காமலே வாழ்த்தியதற்கு.

    கண்டிப்பா நீங்க துபாய்க்கு மகளைப் பார்க்க வரும்போது சொல்லுங்க,
    அப்படியே இங்க வரும்போது நான் பொங்கல் செய்து தருகிறேன்.
    அப்புறம் ஏண்டா கேட்டோம்னு சொல்லாம கொள்ளாம,
    கெளம்பிடக் கூடாதுமா... :)
     
  4. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,597
    Likes Received:
    28,768
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Sorry Nats

    I forgot to tell you that it was nice. Surprised that you know that my daughter is in Dubai. But you are not in Dubai na. If you were in Dubai I would have definitely come to see you. I will let u know when I come to Dubai you can come to see me.
     
  5. mimur9

    mimur9 IL Hall of Fame

    Messages:
    7,310
    Likes Received:
    2,478
    Trophy Points:
    370
    Gender:
    Female
    பொங்கல் நல்வாழ்த்துக்கள், Nats.

    நீங்க பண்ணின பொங்கல சாப்ட்டுத்தான் சூர்ய பகவான், இங்க வந்த்ருகாரா. இப்போதான் தெரியுது குளிர் காலத்துல ஏன் இப்படி வெயில் அடிக்குதுன்னு. எப்படியோ, பொங்கல பொங்கவச்ச உங்கள் சமர்த்துக்கு பாராட்டுக்கள். எங்கள risk -லேந்து காப்பதின உங்க பெரியமனசுக்கு நன்றி.:rotfl
     
    Last edited: Jan 15, 2011
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    துபாய்ல தான் இருந்துட்டு இங்க வந்தேன் மா.
    நீங்க அடுத்த முறை வரும்பொழுது கண்டிப்பா வந்து பாக்கறேன்.
     
  7. sublakshmi

    sublakshmi Bronze IL'ite

    Messages:
    185
    Likes Received:
    39
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Hi nats,

    Anyway we will come to know how good yr pongal was tommorrow. I pray almighty that yr well otherwise karnanin kadalikku mudhal FB pottu idam pitikka mudiyadu.

    Virtual feastil oru photo pottirukkalam.


    Wishing you a very happy pongal and have a nice day.


    Regards,
    Sublakshmi
     
  8. iswaryadevi

    iswaryadevi Platinum IL'ite

    Messages:
    3,861
    Likes Received:
    926
    Trophy Points:
    240
    Gender:
    Female
    அன்புள்ள நட்ஸ்,

    எப்படியோ பொங்கலை ஒரு வழி பண்ணிடீங்களா? ஹ்ம்ம்...நான் கூட சமைக்கலாம் போலருக்கே...அடுத்த வாட்டி சமைச்சு பார்த்துட்டு சொல்றேன்....

    பொங்கல் வாழ்த்துக்கள்!!
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    நன்றி மீரா.

    சாப்ட போறப்ப சரவன் பவன்ல இருந்து ரெகுலர் கஸ்டமர் என்பதால் சர்கரைப் பொங்கல் கொண்டு வந்து கொடுத்தாங்க. என்ன டைமிங் பாருங்க, பொங்கல்னா எப்படி இருக்கணும்னு இப்படியா எனக்கு காமிக்கிறது. அதப் பார்த்த ஒடன தான் ஞாபகம் வந்தது நெய்யே போடலியேன்னு. சரி விடுங்க கத்துக்கறேன் சீக்கிரம்.

    உங்களுக்கு குடுத்து வைக்கல என் பொங்கலை சாப்ட, வேற என்ன சொல்ல முடியும் என்னால? :)
     
  10. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    இதுவரைக்கும் ஒன்னும் ஆகல சுப்லக்ஷ்மி - அனேகமா தப்பிச்சிட்டேன்னு நினைக்கிறேன்.

    கொஞ்சம் இருக்கு பார்சல் அனுப்பவா? அய்யய்யோ இங்க இருந்தவங்கள எங்க காணோம் - ஓடிட்டீங்களா? :)

    கர்ணனின் இரண்டு பகுதிகளுக்கு இன்னும் பதில் போடல, இதோ நாளைக்கு போட்டுடறேன்.
     

Share This Page