1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பொங்கலோ பொங்கல் (2)

Discussion in 'Regional Poetry' started by Rrg, Jan 17, 2019.

  1. Rrg

    Rrg Gold IL'ite

    Messages:
    886
    Likes Received:
    405
    Trophy Points:
    138
    Gender:
    Male
    Dear All,
    This was an extempore poem rendered by me for this Pongal.
    Hope you all like it.
    Cheers,
    RRG

    *பொங்கலோ பொங்கல்*

    பச்சரிசி பயத்தம் பருப்பையும் சேர்த்து - புதுப்
    பானையில் இட்டு பாலோடு காய்ச்சி
    பாகு வெல்லம் கூட்டி, பசு நெய்யும் சேர்த்து
    பொங்கவிட்டு கூப்பிடுவோம் ‘பொங்கலோ பொங்கல்’.

    பழசெல்லாம் எரிச்சு புத்தாடை பிரிச்சு
    விதவிதமாய் பழங்களை விருப்பமாய் படைத்து
    கரும்பொடு பொங்கலையும் கதிரவனுக் களித்து
    களிப்போடு கூப்பிடுவோம் ‘பொங்கலோ பொங்கல்’.

    சிரிசோடு பெரிசுகள் சேர்த்திங்கு மகிழ
    சிரிப்பொலி இல்லமெங்கும் சிறப்புடன் ஒலிக்க
    கோலமிட்ட வாயிலில் கூடிக் கும்மியடித்து
    குடும்பமாய்க் கூப்பிடுவோம் ‘பொங்கலோ பொங்கல்’.

    தை பிறந்ததனால் வழி பிறந்தாச்சு
    தளைகள் தெறித்து தடங்கல்கள் போச்சு
    புத்துணர்ச்சி பொங்க புதுவாழ்வு மிங்கே
    புகுந்ததை கூப்பிடுவோம் ‘பொங்கலோ பொங்கல்’.

    அன்புடன்,
    RRG
     
    periamma and rgsrinivasan like this.
    Loading...

  2. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    Good explanation about pongal
     

Share This Page