1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பெண்மையைப் போற்றுவோம் !

Discussion in 'Regional Poetry' started by PavithraS, Jan 10, 2017.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    அவமானச் சின்னமாய்க் கருதியது போதும்,
    வண்புணர்ச்சிக்கு ஆளான பெண்ணை !
    அவள் மானமிழந்தது அவமானம் இல்லை,
    ஆண்மகன் மீறினானவனது எல்லை !

    சமுதாய நோக்கினை மாற்றிட வேண்டும் !
    சமத்துவக் கொள்கைகள் வேண்டும் !
    பெண்ணை போகப் பொருளெனக் கருதும்
    கீழ்த்தரம் மறைந்தழிதல் வேண்டும் !

    பிள்ளையைப் பெற்றவர் தெளிவுற வேண்டும் !
    பெண்மையைப் போற்றிடல் வேண்டும் !
    வளரிளம் பருவத்துக் குழந்தைகள் தமக்கு
    வாழ்க்கையைக் கற்பிக்க வேண்டும் !

    பாலினக் கல்வியை போதிக்க வேண்டும் !
    இயற்கையை உணர்விக்க வேண்டும் !
    மரியாதைக் குரியவள் பெண்ணென்ற எண்ணம்
    சிறுவயதிலே விதைத்திடல் வேண்டும் !

    உணர்ச்சிக்கு அடிமையாய் ஆவதைத் தடுத்து
    உண்மையைப் புகட்டிட வேண்டும் !
    ஆணும் பெண்ணும் இயற்கையின் பிரதிநிதி
    என்கின்றத் தெளிவுறல் வேண்டும் !

    இன்றைய சிறுவரே நாளையின் சமுதாயம்,
    என்பதை நன்றாக உணர்வோம் !
    மனிதர்கள் உலகத்தின் மேலான உயிர்நிலை
    என்பதை அழுத்தமாய்ப் பதிப்போம் !

    Regards,

    Pavithra
     
    Loading...

  2. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,888
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Pavithra nice timely one! பெண்ணை முதலில் வீட்டில் மதிக்க கற்க வேண்டும் அப்பொழுது தான் நாடு அவளை போற்றும்.
     
    kaniths and periamma like this.
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Thank you, Lakshmi ! உங்கள் கூற்று முற்றிலும் உண்மை .
     
    jskls likes this.
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பெண்களை சக உயிரினம் என்று உணர்ந்தாலே கருணை பிறந்து விடுமே.
    பவித்ரா அழுத்தமான வரிகள் .
     
    kaniths and PavithraS like this.
  5. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    சரியாகச் சொன்னீர்கள் பெரியம்மா ! பின்னூட்டத்திற்கு நன்றி !
     

Share This Page