1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பிழைக்கும் வழி!

Discussion in 'Posts in Regional Languages' started by rajiram, May 2, 2012.

  1. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female

    பணக்காரன் போல உணவகம் சென்று வர,
    தனக்குள் எண்ணம் வளர்த்தவன் ஒருவன்;

    ஒரு முறையேனும் ஐந்து நட்சத்திர உணவு
    அருமையாய் உண்ண விழைந்த எளியவன்!

    ஆயிரங்களில் ஆகும் செலவை நினைத்தபடி,
    ஆசையை அடக்கிவந்தான், பல மாதங்களாக!

    தன் ஆசையை நிறைவேற்ற, அவனுக்கு ஒரு
    தன்னிகரில்லாத் திட்டம் மனத்திலே உதிக்க,

    இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்து,
    ஐந்து நட்சத்திர உணவு விடுதிக்குள் சென்று,

    ஆசை தீரப் பல வகைகள் கேட்டு, தட்டுக்கள்
    மேசை முழுதும் நிறைய, ஆவலோடு உண்டு,

    பணம் மூவாயிரம் ஆனதெனச் சொல்ல, ஒரு
    கணமும் தாமதியாது 'இல்லை' என்று சிரிக்க,

    கோபம் கொண்ட விடுதி முதலாளி, அவனை
    நேரம் கடத்தாது காவல் நிலையத்தில் சேர்க்க,

    அவர் சென்ற பின், இரண்டு நூறு ரூபாய்களை
    அவன் சென்று காவல் அதிகாரியிடம் கொடுக்க,

    மனம் மகிழ்ந்தவர் அவனை விடுதலை செய்ய,
    மனம் நிறைய அவனும் இல்லம் திரும்பினான்!

    :cheers காவல் துறை வாழ்க!:cheers

    :rotfl
     
    Last edited by a moderator: May 3, 2016
    Loading...

  2. Viswamitra

    Viswamitra Finest Post Winner

    Messages:
    13,411
    Likes Received:
    24,176
    Trophy Points:
    538
    Gender:
    Male
    It looks like he is someone who had studied how everything works around him.

    Viswa
     

Share This Page