1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பிறந்த மண்

Discussion in 'Regional Poetry' started by periamma, Jun 4, 2017.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    ஓடும் நதியை உற்று பார்த்தேன்
    துள்ளி விளையாடும் மீன்கள் கண்டேன்
    நீருக்கடியில் கற்கள் கண்டேன்
    இரு கைகளிலும் நீர் ஏந்தி
    ஆசை தீரப் பருகினேன்
    அம்மம்மா என்ன சுவை
    தேனினும் இனிய சுவை
    தீந்தமிழினும் இனிய சுவை
    எங்கள் தாமிரபரணி நீரின் சுவை

    ஆன்மீகம் பொங்கும் நெல்லை சீமை
    பொருநை கரை எங்கும் ஆலயங்கள்
    தாமிரபரணி பிறக்கும் இடம் முதல்
    கடலில் கலக்கும் இடம் வரை
    எத்தனை எத்தனை கோவில்கள்
    நாரணனுக்கு நவ திருப்பதி
    முழுமுதற் கடவுள் முக்கண்ணனுக்கு
    நவ கைலாயங்கள்

    ஆளும் தெய்வங்கள்
    அம்மை காந்திமதி
    அப்பன் நெல்லையப்பர்
    வீதிகள் தோறும்
    மக்களை காக்கும்
    மாதாக்கள் பலர்

    சங்க இலக்கியங்கள் பெயர் தாங்கும் வீதிகள்
    அறுபத்து மூன்று நாயனார்கள் பெயருடன் வீதிகள்
    பன்னிரு ஆழ்வார்களை காட்டும் வீதிகள்
    இவை அனைத்தும் கொண்டதே எங்கள் ஊர்

    ஆங்கிலேயன் அகன்று விட்டாலும்
    அவன் விட்டு சென்ற மதம் அகலாத ஊர்
    அவன் கட்டிய கல்வி கூடங்கள் நிறைந்த ஊர்

    எளிமையான மக்கள்
    எளிதில் ஏமாறாத மக்கள்
    அன்புக்கு தலை வணங்கும் மக்கள்
    அநியாயத்துக்கு அடி பணியாத மக்கள்
    அளவோடு செலவிட்டு வளமோடு வாழும் மக்கள்

    இதுவே எனது ஊர்
     
    Loading...

  2. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    தங்கள் பிறந்த மண்ணின் அருமை பெருமைபடும்படி உள்ளது. அழகான கவிதை
     
  3. Jey

    Jey Administrator Staff Member IL Hall of Fame

    Messages:
    2,765
    Likes Received:
    1,066
    Trophy Points:
    315
    Gender:
    Male
    அருமையான கவிதை. நானும் திருநெல்வேலிகாரன் தான். அப்படியே ஊரை கண்முன் கொண்டு நிறுத்திவிட்டார்கள்.

    PS - just learning to type in tamil script.
     
  4. PushpavalliSrinivasan

    PushpavalliSrinivasan IL Hall of Fame

    Messages:
    4,712
    Likes Received:
    3,758
    Trophy Points:
    340
    Gender:
    Female
    அன்புள்ள பெரியம்மா,
    அழகான கருத்துச் செறிவு மிக்க கவிதை! யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற போதிலும் அவரவர் பிறந்த மண்ணிற்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.
    புஷ்பவல்லி
     
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @Jey தங்கள் வருகைக்கு நன்றி .நீங்களும் திருநெல்வேலியை சேர்ந்தவர் என்பதில் மிக்க மகிழ்ச்சி .
     
    PushpavalliSrinivasan likes this.
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @PushpavalliSrinivasan உண்மை அவரவர் பிறந்த ஊருக்கு என்று சில பெருமைகள் உண்டு .அதை பிறருடன் பகிர்ந்து கொள்வதில் ஒரு சிறிய சந்தோஷம்.நன்றி மா
     
    Jey likes this.
  7. Harini73

    Harini73 Platinum IL'ite

    Messages:
    2,498
    Likes Received:
    2,093
    Trophy Points:
    290
    Gender:
    Female
    திருநெல்வேலியின் சிறப்புகளை அழகாக சொல்லியுள்ளீர்கள்.
    சொர்கமே என்றாலும் நம் ஊரை போல வருமா
     
  8. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    ஆம் உண்மை மா.எத்தனை ஊர் சென்றாலும் பிறந்த மண் வாசம் அகலாது அல்லவா .
     
  9. SubashiniMahesh

    SubashiniMahesh Senior IL'ite

    Messages:
    28
    Likes Received:
    21
    Trophy Points:
    23
    Gender:
    Female
  10. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @SubashiniMahesh Thanks for your response
     

Share This Page