1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பித்ரு தோஷம் தீர மஹாளய புண்ணிய காலத்தில் தர்ப்பணம் கொடுங்க - கை மேல் பலன் கிடைக்கும்!

Discussion in 'Posts in Regional Languages' started by pottiamman, Sep 14, 2019.

  1. pottiamman

    pottiamman Junior IL'ite

    Messages:
    57
    Likes Received:
    6
    Trophy Points:
    13
    Gender:
    Female
    பித்ரு தோஷம் தீர மஹாளய புண்ணிய காலத்தில் தர்ப்பணம் கொடுங்க - கை மேல் பலன் கிடைக்கும்!

    மஹாளய அமாவாசை தினத்தன்று நம் பித்ருக்கள் அனைவரும் சூரிய சந்திர உலகத்துக்கு வருவதால் அனைத்து உறவினர்களுடைய சந்திப்பும் நிகழ்கிறது. இந்த ஆண்டு மகாளய பட்சம் செப்டம்பர் 14 ஆம் தேதி தொடங்குகிறது.சுபகாரியத் தடை, மகப்பேறின்மை, தொடரும் விபத்துக்கள், தீராத நோய் இவற்றுக்கெல்லாம் பித்ரு தோஷமும் ஒரு முக்கிய காரணமாகும். பித்ரு தோஷத்தினால் அவதிப்படுபவர்கள் இந்த மஹாளய புண்ணிய காலத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வதன் மூலம் பித்ரு தோஷம் நீங்கி முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.

    வசிஷ்ட மகரிஷி, தசரதர், யயாதி, துஷ்யந்தன், நளன், அரிச்சந்திரன், கார்த்தவீர்யார்சுனன், ஸ்ரீராமர், தர்மர் முதலானோர் மஹாளயம் செய்து பெரும் பேறு பெற்றனர் என்கின்றன புராணங்கள். மும்மூர்த்தி உருவில் உலகுக்கே குருவாக வந்த ஸ்ரீதத்தாத்ரேயரும் வேதாளம் பற்றிக்கொண்ட துராசாரன் என்ற அந்தணனுக்கு சாப விமோசனமாக புரட்டாசி மாதம் கிருஷ்ண பட்சத்தில் மஹாளயம் செய்யுமாறு வழி கூறினார்.

    திருமணப் பிராப்தி அதாவது கல்யாணத்தை விரும்புகிற மனிதன் மஹாளயம் செய்ய வேண்டும். மஹாளயம் செய்யாதவனுக்கு மங்களம் உண்டாகாது" என்பது பழமொழி. பொதுவாக ஒவ்வொரு அமாவாசையன்றும் விடும் தர்ப்பணம் எமதர்மராஜனின் கைகளுக்கு சென்று அவர் நம் முன்னோர்களை அழைத்து அவர்களிடம் ஒப்படைப்பாராம். மகாளய பட்ச காலத்தில் செய்யும் தர்ப்பணத்தில் விடுகின்ற எள் மற்றும் தண்ணீரை ஸ்வேதா தேவி என்பவள் மிக எளிதாக பித்ருக்களிடம் சேர்த்துவிடுகிறார் என்பது நம்பிக்கை.

    மகாளய பட்சம் என்பது ஆவணி மாதம் பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, புரட்டாசி மாதம் அமாவாசை வரை நீடிக்கும். புரட்டாசியில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை எனப்படும். மஹாளய பட்சம் ஆரம்பிக்கும் நாளன்று நம் முன்னோர்களை அவரவர்கள் விருப்பமான இடத்திற்கு சென்று வரும்படி அனுமதிப்பாராம். நம் முன்னோர்களுக்கு விருப்பமான இடம் நம் இல்லம் தானே, எனவே அவர்கள் மஹாளய பட்சமான பதினைந்து நாட்களும் முன்னோர்கள் நம் இல்லத்தில் வந்திருப்பதாக நம்பிக்கை. இந்த பதினைந்து நாட்களும் நம் வசிப்பிடத்தை சுத்தமாக வைத்திருந்து நம் முன்னோர்களை வணங்கி வந்தால் நம் வாழ்க்கை விருத்தியடைவது உறுதி.

    இந்த மஹாளயபட்ச தினங்களாகிய பதினைந்து நாட்களிலும் பித்ரு தேவதைகள் எமதர்மனிடம் விடைபெற்றுக்கொண்டு தங்கள் குடும்பத்தினருடன் தங்கி விடுவர் என்பர். எனவேதான் இந்த நாட்களில் அவர்கள் பசியாற அன்னமாகவோ அல்லது எள்ளும் தண்ணீருமாகவோ அளிக்க வேண்டும் என்றார்கள். அவர்களும் அதன் மூலம் திருப்தியடைந்து, நமக்கு அருளாசி வழங்குகின்றனர். நோயற்ற வாழ்வினை வழங்குகிறார்கள். முறைப்படி தர்ப்பபணம் செய்ய முடியாதவர்கள் அரிசி, வாழைக்காய், தட்சிணை போன்றவற்றைக் கொடுத்தாவது பித்ருக்களை இந்த மஹாளயபட்சத்தில் திருப்தி செய்ய வேண்டும் .

    தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட திதி கொடுப்பதற்க்கு மிகவும் சிறந்தது. வருடத்தில் மற்ற மாதங்களில் வரும் அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வோம். அவர்கள் மறைந்த தமிழ் மாதத்தில் வரும் திதியில், சிராத்தம் முதலியன செய்வோம். ஆனால், மகாளய பட்ச காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும். அனைத்து முன்னோர்களையும் அப்போது நினைவு கூர வேண்டும். புனித நீர் நிலைகளுக்கு சென்று புனித நீராடி, நம் முன்னோர் ஆத்மசாந்திக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் கூடவே தானமும் செய்ய வேண்டும். அப்படி செய்வதால் முன்னோர்கள் மகிழ்ச்சியடைந்து நம்மை அசீர்வாதம் செய்வார்கள். அதன் மூலம் பித்ரு சாபம், பங்களிகளின் சாபம், முன்னோர்கள் சாபம் ஆகியவை விலகி வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும்.

    ஆவணி மாதம் பௌர்ணமி தொடங்கி புரட்டாசி மாத அமாவசை வரை வரக்கூடிய 15 நாட்கள், மஹாளயம் எனப்படும் பித்ருக்களுக்குரிய காலமாகும். இந்த ஆண்டு மஹாளயம் வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி துவங்கி 28 ஆம் தேதி வரை உள்ளது. இந்த நாட்களை பயன்படுத்திக் கொண்டு பித்ருக்களுக்குரிய தர்ப்பணம், சிரார்த்தம் முதலியவற்றை தவறாமல் செய்யவேண்டும். மஹாளய அமாவாசை தினத்தன்று நம் பித்ருக்கள் அனைவரும் சூரிய சந்திர உலகத்துக்கு வருவதால் அனைத்து உறவினர்களு டைய சந்திப்பும் நிகழ்கிறது. அன்று செய்கின்ற தர்ப்பணத்தில் விடுகின்ற எள் மற்றும் தண்ணீரை ஸ்வேதா தேவி என்பவள் மிக எளிதாக பித்ருக்களிடம் சேர்த்துவிடுகிறாள்.

    நம் முன்னோர்கள் நம்மை ஆசிர்வாதித்தப் பின்னர்தான், அம்பாளே நம் வீட்டிற்கு வருகிறாள் எனில்,பித்ரு பூஜையின் மகிமையை புரிந்து கொள்ளலாம். பூமியில் பிறந்த எந்த ஜாதி, மதம், மொழியைச் சேர்ந்தவராக இருந்தாலும்,அவரவர் கட்டாயமாக இந்த நாளில் தானிய வகைகள், கரும்பு, அன்னம்,பழம் போன்றவைகளை தங்களால் இயன்ற வரையிலும் தானம் செய்திடல் வேண்டும். ஒரு புரட்டாசி அமாவாசையன்று அன்னதானம் செய்தால், பதினான்கு ஆண்டுகள் பித்ரு தர்ப்பணம் செய்தமை க்கான புண்ணியம் நம்மை வந்து சேரும்.
     
    Loading...

Share This Page