1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பாரதியின் புகழ் கொஞ்சம் பாடலாமா...?

Discussion in 'Regional Poetry' started by Induslady, Dec 11, 2017.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    சின்னஞ்சிறு கிளியே இசைவடிவில் இரசிப்பதற்கு இவ்விடம் நுழையலாம்...

    சின்னஞ்சிறு கிளியே, கண்ணம்மா! செல்வக் களஞ்சியமே!
    என்னைக் கலி தீர்த்தே, உலகில் ஏற்றம் புரிய வந்தாய்!

    பிள்ளைக் கனியமுதே! கண்ணம்மா! பேசும் பொற் சித்திரமே!
    அள்ளி அணைத்திடவே, என் முன்னே ஆடி வரும் தேனே!

    ஓடி வருகையிலே, கண்ணம்மா உள்ளம் குளிருதடி!
    ஆடித் திரிதல் கண்டால், உன்னைப் போய் ஆவி தழுவுதடி!

    உச்சிதனை முகர்ந்தால், கருவம் ஓங்கி வளருதடி!
    மெச்சி உனை ஊரார், புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி!

    கன்னத்தில் முத்தமிட்டால், உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி!
    உன்னைத் தழுவிடலோ, கண்ணம்மா உன்மத்தம் ஆகுதடி!

    சற்று உன் முகம் சிவந்தால், மனது சஞ்சலம் ஆகுதடி!
    நெற்றி சுருங்கக் கண்டால், எனக்கு நெஞ்சம் பதைக்குதடி!

    உன் கண்ணில் நீர் வடிந்தால், என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி!
    என் கண்ணிற் பாவையன்றோ? கண்ணம்மா! என்னுயிர் நின்னதன்றோ!
     
    stayblessed and periamma like this.
  2. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    காக்கைச் சிறகினிலே இசைவடிவில் இரசிப்பதற்கு இவ்விடம் நுழையலாம்...

    காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்
    கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா

    பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்
    பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா

    கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா - நின்றன்
    கீதம் இசைக்குதடா நந்தலாலா

    தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னை
    தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா
     
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    காணி நிலம் வேண்டும் இசைவடிவில் இரசிப்பதற்கு இவ்விடம் நுழையலாம்...


    காணி நிலம் வேண்டும் - பராசக்தி
    காணி நிலம் வேண்டும், - அங்கு
    தூணில் அழகியதாய் - நன்மாடங்கள்
    துய்ய நிறத்தினதாய் - அந்தக்
    காணி நிலத்தினிடையே - ஓர்மாளிகை
    கட்டித் தரவேண்டும் - அங்கு
    கேணியருகினிலே - தென்னைமரம்
    கீற்று மிளநீரும்.

    பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்
    பக்கத்திலே வேணும் - நல்ல
    முத்துச் சுடர்போலே - நிலாவொளி
    முன்பு வரவேணும், அங்கு
    கத்துங் குயிலோசை - சற்றே வந்து
    காதிற் படவேணும், - என்றன்
    சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்
    தென்றல் வரவேணும்.

    பாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு
    பத்தினிப் பெண்வேணும் - எங்கள்
    கூட்டுக் களியினிலே - கவிதைகள்
    கொண்டுதர வேணும் - அந்தக்
    காட்டு வெளியினிலே - அம்மா! நின்றன்
    காவலுற வேணும், - என்றன்
    பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப்
    பாலித்திட வேணும்.
     
    Thyagarajan, stayblessed and periamma like this.
  4. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    முருகா! முருகா! முருகா! இசைவடிவில் இரசிப்பதற்கு இவ்விடம் நுழையலாம்...

    வருவாய் மயில் மீதினிலே
    வடிவே லுடனே வருவாய்!
    தருவாய் நலமும் தகவும் புகழும்
    தவமும் திறமும் தனமும் கனமும் (முருகா)

    அடியார் பலரிங் குளரே,
    அவரை விடுவித் தருள்வாய்!
    முடியா மறையின் முடிவே! அசுரர்
    முடிவே கருதும் வடிவே லவனே! (முருகா)

    சுருதிப் பொருளே, வருக!
    துணிவே, கனலே, வருக!
    சுருதிக் கருதிக் கவலைப் படுவார்
    கவலைக் கடலைக் கடியும் வடிவேல். (முருகா)

    அமரா வதிவாழ் வுறவே
    அருள்வாய்! சரணம்! சரணம்!
    குமரா பிணியா வையுமே சிதறக்
    குமுறும் சுடர்வே லவனே சரணம்! (முருகா)

    அறிவா கியகோ யிலிலே
    அருளா கியதாய் மடிமேல்
    பொறிவே லுடனே வளர்வாய்! அடியார்
    புதுவாழ் வுறவே புவிமீ தருள்வாய்! (முருகா)

    குருவே! பரமன் மகனே!
    குகையில் வளருங் கனலே!
    தருவாய் தொழிலும் பயனும் அமரர்
    சமரா திபனே! சரணம்! சரணம்! (முருகா)
     
    Thyagarajan, stayblessed and periamma like this.
  5. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,657
    Likes Received:
    1,775
    Trophy Points:
    325
    Gender:
    Female
    It reminds me of my school days and our involved participation in bharathiyar songs and speech.
     
  6. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,657
    Likes Received:
    1,775
    Trophy Points:
    325
    Gender:
    Female
    செந்தமிழ் தேர்பாகன் அவனொரு செந்தமிழ் தேனீ
    சிந்துக்கு தந்தை! குவிக்கும் கவிக்குயில் !

    அவை பாரதியின் வரிகள் அல்ல. பாரதியை பற்றிய சிறப்பு வரிகள்.
    பாரதி பாடல்களில் சிலவற்றை மட்டும் மேற்கோள் காட்டுவது என்பது என்னால் முடியாத ஒன்று. சோர்ந்த நேரத்தில் உற்சாகமூட்டும் சக்தி பானங்கள் அவை. தளர்ந்த மனதுக்கு வீரமூட்டும் மருந்துகள்.

    எட்டயபுர கவிஞனை எண்ணத்தில் இருந்து எடுப்பது எட்டக்கனியே!
     
  7. Jey

    Jey Administrator Staff Member IL Hall of Fame

    Messages:
    2,765
    Likes Received:
    1,066
    Trophy Points:
    315
    Gender:
    Male
    இதைத்தான் தேடிக்கொண்டு இருந்தேன். இன்று கூட இதற்கு பெண்கள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். நூறு அண்டுகளுக்கு முண்பு இதை எழுதிய பாரதியை என்னவென்று சொல்வது. எண்ணுடைய மாவட்டத்தில் பிறந்தவன் என்பதில் எல்லற்ற மகிழ்ச்சி.
     
  8. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    அவன் பிறந்த மண்ணில் பிறந்து அவன் சுவாசித்த பொதிகை தென்றலை சுவாசித்து அவன் குடித்த தாமிரபரணி நீர் குடித்து வளர்ந்த போதிலும் அவன் மூட்டிய தமிழ் பற்று தீ,விடுதலை தீ ,பெண்ணுரிமை தீ , உள்ளத்தில் கனன்று கொண்டிருந்த போதிலும் தீமையை எதிர்த்து போராட முடியவில்லை.ஐயா பாரதி கனன்று கொண்டு இருக்கும் நெருப்பை ஊதி எரிய வைக்க மீண்டும் நீ வர வேண்டும்
     
  9. stayblessed

    stayblessed Platinum IL'ite

    Messages:
    934
    Likes Received:
    1,744
    Trophy Points:
    263
    Gender:
    Female
    இந்த திரியமைத்தமைக்கு நன்றிகள் பலபல. பாரதியும் பாரதி கவிதைகளும் ஒரு பொக்கிஷம். இனி வரும் தலைமுறைகளுக்கும் நாம் அவரின் படைப்புகளை கொண்டு சேர்க்க வேண்டும்.
     
  10. Shanvy

    Shanvy IL Hall of Fame

    Messages:
    23,659
    Likes Received:
    27,218
    Trophy Points:
    590
    Gender:
    Female
    so so beautiful dedications ..

    what to say about the fearless man..eccentric and more..

    his 80+ yr old grandson has only beautiful things to say about him.

    if i have to select one poem it would be injustice. he has definitely brought in all the navarasas..

    one of being fearless close to my heart

    kaala unnai naan chiru pullenna mathikkaraen..



    and the romantic one that is always playing in my playlist..
    payum oli nee enakku..



    sorry for not using the tamil font. some issue in my phone.. but bharathiyar and could not resist
     
    Last edited: Dec 12, 2017

Share This Page