1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

படித்ததும் பிடித்ததும்

Discussion in 'Regional Poetry' started by indira87, Jan 10, 2012.

  1. indira87

    indira87 New IL'ite

    Messages:
    91
    Likes Received:
    4
    Trophy Points:
    8
    Gender:
    Female
    மாற்றான் தோட்டத்து மல்லிகை,
    தாய் வீட்டின் புன்னகை பூ,
    அன்பு எனும் ஆற்றலினால்
    வந்த வாடாமல்லி -அவள் .

    நேற்று வரை யாரோ ,
    இன்று முதல் -நான்
    போட்ட மூன்று முடிச்சியின்
    அன்புக்கு கட்டுப்பட்டவள் .

    வந்து சேர்ந்த தோட்டத்து
    மலர்களை வாடாமல் பார்த்துக்
    கொள்பவள் .

    நடுநிசியானாலும் உண்ணாமலும்
    உறங்காமலும் கணவனுக்காக
    காத்துகொண்டிருப்பவள் - என்
    தாய் தந்தையை பேணி
    பாதுகாப்பதில் சேயுள்ளம்
    கொண்ட தாயவள்...

    சுற்றி திரிகிற தன் கொழுந்தன்
    தாமதமாக வந்தாலும் உண்ணாமல்
    உறங்கிவிடுவானோ என எண்ணி
    உறக்கம் கலைந்து தாழை திறந்து
    உணவை பரிமாற செல்பவள் .

    என் உடன் பிறவா சகோதரர்களுக்கு
    உற்ற தோழியான உன்னத தாய் .
    என் அன்பு தங்கைக்கு -சிறந்த
    செல்லத்தாய் -அவள்
    ரத்த பந்தமில்லா மொத்த
    பந்தத்தின் உறவானவள் .

    சில சமயம் குடித்துவிட்டு
    தெருவில் கிடக்கும் எனைப்பார்த்து
    ஏளனம் பேசுபவர்களை ஏசிவிட்டு
    நெஞ்சின் மீது தாங்கி நடப்பாள் -தாயாக .


    "தாயிற் சிறந்ததொரு
    கோயில் இல்லை "
    என் பிள்ளைக்கு தாயான
    சிறந்த கோவில் அவள்
    கண்ணில் எனை வைத்து
    கண்மணிக்குள் தன் பிள்ளையை
    வைத்து காத்திடும் கடவுளும் -அவளே.

    மனைவி ஒரு மாணிக்கமல்ல
    விலையுண்டாம் மாணிக்கத்திற்கு
    இவ்வுலகில் எதுவும் ஈடாக
    என் தாரத்திற்கு ...

    ஆதியும் அவளே அந்தமும் அவளே
    மொத்தத்தில் மனைவி என்று
    என்று அவதரித்த மற்றொருத்தாய் !!!......
     
  2. Deepu04

    Deepu04 IL Hall of Fame

    Messages:
    2,857
    Likes Received:
    1,484
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Wow :))) Superb indira :)
     
  3. indira87

    indira87 New IL'ite

    Messages:
    91
    Likes Received:
    4
    Trophy Points:
    8
    Gender:
    Female
    உறைகின்ற குளிரிலும் உணர்கிறேன்
    இதமான கதகதப்பை
    என் அன்னையின் அன்பான அரவணைப்பில் ....
     
  4. indira87

    indira87 New IL'ite

    Messages:
    91
    Likes Received:
    4
    Trophy Points:
    8
    Gender:
    Female
    தாய் பால்

    மண்ணின் மாந்தர்கள் பருகிட
    கங்கையாய், காவிரியாய்,
    நர்மதை, தபதி,நைல் நதியாய்
    அன்னை பூமியின் தாய் பால்!!!

    பூமியின் தாய் பால்
    வற்றி விடாதிருக்க,
    வரும் சந்ததியினர்
    வாழ்திருக்க...

    அமுதினை சேமிப்போம்!!!
    மழை எனும் உயிர் நீர்
    அமுதினை சேமிப்போம்
     
  5. indira87

    indira87 New IL'ite

    Messages:
    91
    Likes Received:
    4
    Trophy Points:
    8
    Gender:
    Female
    அம்மா

    ஒரு சிறிய
    உயிருக்கு
    தன்னையே- மாய்த்து
    கொள்ளும்
    பெரிய கடவுள்
    அம்மா.....
     
  6. indira87

    indira87 New IL'ite

    Messages:
    91
    Likes Received:
    4
    Trophy Points:
    8
    Gender:
    Female
    காதல் கவிதை

    காதலித்து கெட்டு போ.
    அதிகம் பேசு
    ஆதி ஆப்பிள் தேடு
    மூளை கழற்றி வை
    முட்டாளாய் பிறப்பெடு
    கடிகாரம் உடை
    காத்திருந்து காண்
    நாய்க்குட்டி கொஞ்சு
    நண்பனாலும் நகர்ந்து செல்
    கடிதமெழுத கற்றுக்கொள்
    வித,விதமாய் பொய் சொல்
    விழி ஆற்றில் விழு
    பூப்பறித்து கொடு
    மேகமென கலை
    மோகம் வளர்த்து மித
    மதி கெட்டு மாய்
    கவிதைகள் கிறுக்கு
    கால்கொலுசில் இசை உணர்
    தாடி வளர்த்து தவி
    எடை குறைந்து சிதை
    உளறல் வரும் குடி
    ஊர் எதிர்த்தால் உதய்
    ஆராய்ந்து அழிந்து போ
    மெல்ல செத்து மீண்டு வா
    திகட்ட,திகட்ட காதலி..
     

Share This Page