1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

படித்ததும் பிடித்ததும்

Discussion in 'Regional Poetry' started by indira87, Jan 10, 2012.

  1. indira87

    indira87 New IL'ite

    Messages:
    91
    Likes Received:
    4
    Trophy Points:
    8
    Gender:
    Female
    உதிரும் மலருக்கு ஒரு நாள்தான் மரணம்.

    பேசாத அன்புக்கு தினம் தினம் மரணம்.
     
    Loading...

  2. indira87

    indira87 New IL'ite

    Messages:
    91
    Likes Received:
    4
    Trophy Points:
    8
    Gender:
    Female
    உன் வருகைக்காக
    காத்திருப்பது
    நான் மட்டும்
    அல்ல
    எனக்கு துணையாய்
    நீ கொடுத்து விட்ட
    சென்ற
    கடைசி முத்தமும் தான்!!!
     
  3. indira87

    indira87 New IL'ite

    Messages:
    91
    Likes Received:
    4
    Trophy Points:
    8
    Gender:
    Female
    உடலும் உயிரும்
    கலந்தவன் தானே மனிதன்
    அன்பும் காமமும்
    கலந்தது தானே காதல்

    உடல் இல்லாத உயிரும்
    அன்பு இல்லாத காதலும்
    பேய்


    உயிர் இல்லாத உடலும்
    காமம் இல்லாத காதலும்
    பினம்
     
  4. indira87

    indira87 New IL'ite

    Messages:
    91
    Likes Received:
    4
    Trophy Points:
    8
    Gender:
    Female
    மலர்கள்​
    செடிகளில் மட்டும் பூப்பதில்லை
    மடிகளிலும் பூக்கின்றன
    மழலைகளாக
     
    1 person likes this.
  5. indira87

    indira87 New IL'ite

    Messages:
    91
    Likes Received:
    4
    Trophy Points:
    8
    Gender:
    Female
    பிணத்தையும் பணமாக்க
    நினைக்கும் மனிதன்
    வாய்க்கரிசியையும் அளந்தே போடுகிறான்
    ஏன் ?
    நாளை அவனுக்கு வேண்டும் என்பதாலா ?


    நம் வாழ்க்கையில்
    பணம் ஒரு அங்கமே !
    பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை

    நான் வாழ்வதக்கு தான் பணம் தேவை
    பணத்துக்காக ஒரு வாழ்க்கை தேவை இல்லை

    இது எல்லாருக்கும் தெரியும் - ஆனால்
    ஆசை யாரை விட்டது ?
     
  6. indira87

    indira87 New IL'ite

    Messages:
    91
    Likes Received:
    4
    Trophy Points:
    8
    Gender:
    Female
    'பால்விலை உயர்வூ
    பஸ்கட்டண உயர்வூ
    வழக்கம் போலவே பழகிக்கொண்டோம்
    காஸ்சிலிண்டர் தட்டுப்பாடு
    பழையசோறும் ஊறுகாயூம்
    தினசரி மெனுவாகி விட்டன
    மின்சாரம் போனது
    எத்தனை மணிநேரமானால் என்ன
    பழகிக்கொள்வோம்
    பழகிக்கொள்ளுங்கள் இப்போதே
    ஒருநாள் வரும்
    சுவாசிக்க காற்றுக்கு தட்டுப்பாடு
    ஒருநாளைக்கு
    மூன்று மணிநேரமே காற்று கிடைக்குமென்று
    மற்ற நேரமெல்லாம்
    மூச்சடக்கிக் கிடக்கலாம்
    யோகிகளாய்
    அதற்கும் இப்போதே
    பழகிக்கொள்வோம்'
    -இது இருட்டில் எழுதிய கவிதை
     
    1 person likes this.
  7. indira87

    indira87 New IL'ite

    Messages:
    91
    Likes Received:
    4
    Trophy Points:
    8
    Gender:
    Female
    எப்பொழுது என்னுள் வருவாய்:

    தண்ணீரில் உன் முகம் பார்க்கிறேன்.
    எப்பொழுது ....!!!!

    என்னுள்....

    நிரந்தரமாக வருவாய்
    என்று எதிர்பார்கிறேன்....!!!!
     
  8. indira87

    indira87 New IL'ite

    Messages:
    91
    Likes Received:
    4
    Trophy Points:
    8
    Gender:
    Female
    சாயம் போகாத
    மாலைநேரத்தில்
    காதல்ஜோடிகள் உலாவும்
    கடற்க்கரை
    எங்கள் கலங்கரை !

    கால் மணல்சூட்டில்
    வெந்துபோனாலும்
    அதைப்பற்றி கவலைபடாமல்
    சுண்டல் வெந்துவிட்டதா
    என்றுபார்க்கிறோம் !


    அலைகளை கண்டு
    அவர்கள் துன்பகளை
    மறக்கிறார்கள்

    கடல்அலைகளால்தான்
    நாங்கள் பிழைப்பையே
    நடத்துகிறோம்
     
  9. indira87

    indira87 New IL'ite

    Messages:
    91
    Likes Received:
    4
    Trophy Points:
    8
    Gender:
    Female
    மழைதரும் மண்வாசம்
    மனம்தரும் மாம்பூவாசம்
    அள்ளிவச்ச மல்லிவாசம்
    அளந்துவச்ச கொளுந்துவாசம்
    பொத்திவச்ச பூவாசம்
    பூத்துசிரிச்ச பிள்ளைபாசம்
    மொட்டுதெரிந்த முல்லைவாசம்
    உரசிவச்ச மஞ்சல்வாசம்
    நெத்திநனைஞ்ச திருநீறுவாசம்
    பூத்துப்போன நெல்வாசம்
    புழுத்துப்போன புளுங்கல்வாசம்

    உயிர்ஆக்கி உணர்வாகி
    எனைதழுவும்-உன்
    தாய்ப்பாசம்
     
  10. indira87

    indira87 New IL'ite

    Messages:
    91
    Likes Received:
    4
    Trophy Points:
    8
    Gender:
    Female
    கம்பரிசியை பக்குவமாய் புடைத்தெடுத்து
    கல் மண் நீக்கி,
    மனம் முழுவதும்
    உன்னை நினைத்து கொண்டு
    உரலில் போட்டு இடித்து
    சலித்து,


    புளிக்காத இளம் மோர்
    சேர்த்து அழகாய்
    செதுக்கி வைத்த சிற்பமாய்,
    நான் பார்த்து பார்த்து,
    செய்து வைத்தேன்
    கம்மங்களி உனக்காக.....
    உன் பால்ய பருவத்தில்
    நீ ஆசையாய்
    சாப்பிட்டதை
    மனதில் நினைத்து.,




    ஆனால் விடுமுறைக்கு
    வீட்டுக்கு வந்த நீ
    முதலில் கேட்ட கேள்வியே
    ஏனம்மா
    வீட்டிற்குள் இத்தனை
    துர்வாசனை?




    பாசத்திற்கு ஏதடா வாசனை
    என்று எனக்கு கேட்க
    தோன்றவில்லை....


    நெடுந்தூர பயணத்தில்
    நீ வந்த போதும்,
    உன் வியர்வையுடன்,
    பாசத்தையும் சேர்த்துதானே
    இந்த அபலைத் தாய் பார்த்தேன்.
     

Share This Page