1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

படமும் கவிதையும் - Picture & Poetry

Discussion in 'Regional Poetry' started by jskls, Jun 15, 2016.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @PavithraS கம்பன் வீட்டு கட்டுத் தறியும் கவி பாடும் .அது போல் தமிழ் புலவரின் மகனும் கவி பாடுவான் அல்லவா .பவித்ரா தாயின் கவிதை அருமை அதை விட மகனின் கவிதை அதனினும் அருமை
     
  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    [​IMG]




    உயிர் தந்த பூமி தாய்க்கு
    புஷ்பாஞ்சலி செய்யும்
    பிள்ளையின் அன்பை பாரீர்
    பெற்ற தாய்க்கு பாத பூஜை
    செய்ய வேண்டாம்
    அவள் பாத கமலங்களை
    மனதில் இருத்தி ஒரு கணம்
    நினைத்தாலே போதும்
     
    kaniths, jskls and PavithraS like this.
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @jskls @PavithraS @anupartha @kaniths @Rajeni
    ஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழுக்கு இடம் உண்டு .தமிழ்நாட்டில் இடம் இல்லையே .
    தமிழ் பகுதிக்கு உயிர் கொடுங்கள்
     
    kaniths, jskls and PavithraS like this.
  4. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    ஹா..ஹா. பெரியம்மா என் மகன் மழலைப்பாடல் ஒன்றைத் தான் பாடிக்காட்டினான். தமிழ்ப்பள்ளியில் பயில்கிறானல்லவா ? அங்கே சொல்லித் தந்த பாட்டு. கவிதை எழுதும் அளவிற்குப் போகா விட்டாலும், நல்ல தமிழ்ப் படைப்புகளைப் படித்துப் புரிந்து கொள்ளுமளவிற்காவது தமிழ்மொழியை அவன் அறிந்து கொள்ள வேண்டுமென்று நானும், கணவரும் ஆசைப்படுகிறோம்,மெனக்கெடுகிறோம் . ஆண்டவன் அருள். தங்கள் ஆசிக்கு நன்றி !
    கண்ணுக்குக் குளிர்ச்சி தரும்படியான அழகான படம் பெரியம்மா,நன்றி ! உங்கள் கவிதையும் அழகிய சிந்தனை. தமிழ் இருக்கையை இங்கே நயம்பட சுட்டிக்காட்டியதைப் படித்து இரசித்தேன். நமதருமைத் தமிழுக்குத் தமிழ்நாட்டில் இன்றைய நிலைமை உள்ளூர்க்குளம் தெப்பக்குளம் ஆகாது என்பதைப் போல் உள்ளது மிகவும் வேதனையான விஷயம். ரோஜாவைக் கண்டு கமலம் பூக்கட்டும்! இக்கவிதைச் சோலை மீண்டும் பூத்துக் குலுங்கட்டும். நானும் என் பங்கிற்கு சிலரை இவ்விடம் அழைக்கிறேன் மற்றும் இப்பதிவிற்கு வரிகள் எழுத முயல்கிறேன்.
    @GoogleGlass @rgsrinivasan @SubashiniMahesh @Rrg மற்றும் விருப்பமிருக்கும் எவரும் - அன்புடையீர்- உங்களுக்கோர் வேண்டுகோள் ! பெரியம்மா பதிந்திருக்கும் படத்திற்குத் தங்கள் கோணத்தில் சிந்திப்பவற்றைக் கவிதையாய்ப் புனைந்து இவ்விடம் பதிந்தீர்களாயின் அனைவரும் படித்து இரசிக்கலாம் ! தங்கள் புரிதலுக்கு நன்றி !
     
    rgsrinivasan likes this.
  5. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    தேவதைக்கென்று
    பூத்தூவி வரவேற்பு !
    யார் வீட்டு வாசல் ?

    அவசரமாய்ப்
    பூத்தெளித்துக் கோலம் -
    வலித்திருக்கும் !

    வாடிய மலர் !
    செடிக்கூந்தல் களைய
    காற்றும் உதவும் !

    சூடித் தந்தது
    செடி,சுடர்க்கொடி போல்!
    பாடக் கவி யார் ?

    மேலோ கீழோ-தம்
    வாச வசீகரங்கள்
    மாற்றா மலர்கள் !

    இதழ் மிச்சத்தை
    சேமித்தாலும் கிடைக்கும்
    சுகானுபவம் !

    பிள்ளை மேனியின்
    வாசத்திற்கு ஈடோ சொல்-
    இத்தனை ரோஜா ?

    இங்கே தான் நேற்றோர்
    பிள்ளை விளையாடிற்று !
    சிரிப்புதிர்த்து !
     
    kaniths, jskls and periamma like this.
  6. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    அவள் தன்னிதழ்
    துடைத்தெறிந்த வெண்மலர்
    நிறம் மாறிற்றோ ?

    அவள் குளிக்க
    உனை அரைத்தாள் -அவன்
    ஒப்பினான்,மன்னி !

    யார் சொன்னார் ரோஜா
    காதல் பூவென- நாளும்
    நாடப்பெறுதே !

    விற்க முடியா
    வாணிபன் கற்பனையோ?
    பொய்த் தேர்ந்தவன் தான் !

    தோட்டமோ அன்றித்
    தொட்டியோ ரோஜா வாசம்
    வஞ்சனையின்றி !

    வஞ்சி விழையும்
    வண்ணப்பூ வாலிபன் தான்
    தரல் உசிதம் !

    அவள் விழைந்து
    அவன் தரல் இதம்
    பூவும்,முத்தமும் !

    அவளுக்காக
    உனைத் தேடி வருவான்
    வாடாமல் இரு !
     
  7. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    குல்கந்தின் பின்னே
    எத்தனை ரோஜாக்களின்
    அழுகையுண்டோ ?

    திருமணத்தில்
    தெளிக்கும் பன்னீர் பின்னும்
    ரோஜாக்கள் கண்ணீர் !

    மலர்த் தூவித்தான்
    மரியாதை வேண்டுமோ ?
    பூக்கொலை பாவம் !

    யாருக்காகவும்
    மலர்வதில்லை,நாமே
    எல்லை மீறுவோம் !

    அப்படியே தான்
    இருக்கட்டுமே,நாமேன்
    பறிக்க வேண்டும் ?

    உரிமை மீறல்
    பூவிடத்தும் உண்டு -மேல்
    பூவையிடத்தும் !

    ஒன்று கவனம்
    பெறும்-மற்றொன்று தானே
    அழுது விழும் !
     
    kaniths, jskls and periamma like this.
  8. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    எங்கிருந்தோ வரும்
    காற்றின் மணத்தின் பின்னே
    மண்,மலர் உண்டு !

    புதைந்திருக்கும்
    யாரின் மீதத்திற்கோ ஓர்
    மலரஞ்சலி !

    உதிர்ந்தவையும்
    நேற்றிருந்தவையே- மெய்
    நிலையாமை காண் !

    ஈன்றதும் மண்ணே !
    தன் வேர் தனைக் காணவே
    சென்றதும் மண்ணே !

    எங்கிருந்து தாம்
    வந்ததோ அவ்விடமே
    திரும்பும் எல்லாம் !

    உதிரும் வரை
    உயர்ச்சி,பின்னும் தாங்க
    அன்னையே உண்டு !
     
    kaniths, jskls and periamma like this.
  9. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    :clap2::clap2::clap2::clap2::clap2::clap2:
    Abaram. Koilil irukiren. Comments pinne Varum
     
  10. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @PavithraS பூவை முத்தமிட்ட பின் பூவையை முத்தமிட்டானா .பூக்களின் சிவப்பு பூவையின் கன்னத்தில் கலந்து விட்டதோ இது வாலிப பருவம்
     

Share This Page