1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நேசமுள்ள வான்சுடரே - 6

Discussion in 'Stories in Regional Languages' started by priia192, Jan 31, 2012.

  1. priia192

    priia192 Bronze IL'ite

    Messages:
    16
    Likes Received:
    27
    Trophy Points:
    33
    Gender:
    Female
    இரவு நேரம் கழித்து உறங்கியதாலும் பயணத்தினால் சேர்ந்த அலுப்புமாக விடிந்து இரண்டு மணி நேரம் கழித்து தான் மஞ்சரிக்கு தூக்கம் தெளிந்தது. எழுந்ததும் அவசர அவசரமாக கிளம்பி HR க்கு போன் செய்தாள். அவர் தானே ஹோட்டல் வந்து அவளை கூட்டி செல்வதாக சொன்னார். ஹோட்டல் லாபி'யில் அவருக்காக காத்து இருந்து அவருடன் முதல் நாள் அலுவலகத்திற்கு பயணமானாள். அலுவலகத்திற்கு செல்லும் வழி மற்றும் பேருந்து ஆகிய விவரங்களை அவர் மஞ்சரிக்கு விளக்கினார்.

    இங்கே அர்ஜுன் காலை எட்டு மணிக்கு மீட்டிங் என்பதால் சீக்கிரமாக அலுவலகத்திற்கு சென்று விட்டான். பத்து மணிவரை மீட்டிங் இருந்ததால் மஞ்சரி அவனுக்காக காத்து இருக்க வேண்டி இருந்தது. reception 'இல் HR உடன் பேசி கொண்டு இருந்த மஞ்சரி தான் அர்ஜுனை முதலில் பார்த்தது. இவன் எங்கே இங்கே வருகிறான்? நம்மை பார்த்து விட்டு பேசி போகலாம் என்று வருகிறானோ என்று யோசித்த மஞ்சரிக்கு அர்ஜுன் HR 'ஐ பார்த்து கொண்டு வருவதை பார்த்ததும் பெரிய சந்தேகம் எழுந்தது. அதற்கு சரியாக அவன் அருகே வந்ததும் HR மஞ்சரியை அர்ஜுனுக்கு அறிமுக படுத்தி வைத்தார்.

    மஞ்சரிக்கு இந்த நிலையை எப்படி சமாளிப்பது என்றே தெரியவில்லை. நாவடக்கம் இல்லாமல் அவனை பற்றி அவனிடமே தவறாக பேசி விட்டோமே என்று அவள் வருத்த பட்டு கொண்டு இருந்தாள். அர்ஜுனை நிமிர்ந்து பார்க்க கூச்சப்பட்ட மஞ்சரி தலையை குனிந்து கொண்டு அறிமுக படலத்தை ஏற்றாள். அவளது நிலையை முழுதாக உணர்ந்த அர்ஜுன் மேலும் அவளை சங்கட படுத்த விரும்பாமல் அவளை இப்பொழுது தான் புதிதாக பார்பதுபோல் நடந்து கொண்டான். மஞ்சரி இதனால் கொஞ்சம் இறுக்கம் தளர்ந்து இருவருடனும் இயல்பாக பேச ஆரம்பித்தாள். சிறிது நேரத்தில் HR விடை பெற்று கொண்டு சென்று விட்டார்.

    அலுவலகத்தினுள் அவன் பின் சென்ற மஞ்சரிக்கு எப்படி இவனிடம் மன்னிப்பு கேட்பது என்று யோசனையாக இருந்தது. அதை பற்றியே சிந்தித்து கொண்டு இருந்த மஞ்சரி அர்ஜுன் ஓர் அறைக்குள் சென்று திரும்புவதை உணராமல் சென்று அவன் மேலே முட்டி கொண்டாள்.

    அவளை பிடித்து நிறுத்திய அர்ஜுன் கேலியாக

    " இந்த மேனேஜர் பைத்தியத்த எப்படி சமாளிக்கிறதுன்னு யோசனையா மஞ்சரி?" என்று கேட்டான்

    ஏற்கனவே வருத்தமாக இருந்த மஞ்சரிக்கு அவன் கேள்வியை கேட்டதும் தாங்க முடியமால் சாரி சாரி என்று சொல்லி அழுது விட்டாள்.
    அவள் அழுகையில் அதிர்ந்த அர்ஜுன் அவளை எப்படி சமாதான படுத்துவதென்று தெரியாமல் தன் தோள் மேல் சாய்த்து கொண்டான்.

    "என்ன மஞ்சு ஒரு சாதாரண கேலி இதுக்கு போய் இப்படி அழுவியா?"

    "இல்ல நான் தெரியாம சொல்லிட்டேன். எதோ கோபத்துல அப்படி சொல்லிட்டேன் என்ன மன்னிச்சுடுங்க"

    "பரவால்லே மஞ்சு நான் தப்பா எல்லாம் எடுத்துகலே. நீ முதல்ல அழறத நிறுத்து. யாராவது பார்த்த என்ன நினைபாங்க?"

    அவனின் இந்த கேள்வியில் சுற்றுபுறம் உணர்ந்த மஞ்சரி வேகமாக அவனிடம் இருந்து விலகினாள். அவள் தன்னிடம் இருந்து விலகியதும் எதோ தன்னை விட்டு போனதை போல் உணர்ந்தான் அர்ஜுன். மஞ்சரிக்கோ வருத்தம் இருந்த இடத்தை இப்பொழுது வெட்கம் பிடித்து கொண்டது. இப்படியா ஒரு ஆண்மகனின் அணைப்பில் இருப்பது கூட தெரியாமல் இருந்தோம் என்று தன்னையே கடிந்து கொண்ட மஞ்சரி தான் என் இப்படி அவனிடம் நிலை மறந்து நடந்து கொண்டோம் என்பதை யோசிக்க மறந்து விட்டாள்.

    அலுவலக வேலையில் மஞ்சரி இயல்பாய் பொருந்தி கொண்டாள். அதற்கு அர்ஜுன் பல வகையில் உதவியாக இருந்தான். தினமும் எழுந்து தயாராகி அவள் ஒருத்திக்காக அளவாக சமையில் ஒன்று செய்து விட்டு பஸ்சில் ஆபீஸ் வந்து விடுவாள். தானே அழைத்து வருவதாக அர்ஜுன் கேட்டும் மஞ்சரி மறுத்து விட்டாள். தங்குவதற்கு அர்ஜுன் அவன் இருக்கும் அபார்ட்மென்ட் complex இல் ஒரு ஷேரிங் accomadation பார்த்து கொடுத்தான். அங்கு ஏற்கனவே தங்கி இருந்த பெண் அடுத்த வாரம் தான் ஊருக்கு போவாள் என்பதால் மஞ்சரி மேலும் ஒரு வாரம் ஹோடேலில் தங்கி இருக்க வேண்டி இருந்தது.

    ஒரு வாரம் அலுவகத்தில் நல்ல படியாக கழிந்தது. சனியன்று அர்ஜுனுக்கு அலுவலகத்தில் வேலை இருந்ததால் மஞ்சரியை அவன் சென்று பார்க்க வில்லை. ஞாயிறன்று மஞ்சரியை எங்காவது அழைத்து போகலாம் என்று நினைத்தால் அவன் வேலைகளை முழுவதும் சனியன்று முடித்து விட்டான்.

    ஞாயிறன்று காலை குளித்து கிளம்பிய அர்ஜுன் மஞ்சரியின் ரூமிருக்கு போன் செய்தான். போன் அடித்து கொண்டு இருந்ததே தவிர யாருமே எடுக்க வில்லை. எங்காவது வெளியில் சென்று இருப்பாளோ என்று நினைத்த அர்ஜுன் அவளுக்கு எங்கும் செல்ல தெரியாதே எங்கு சென்று இருக்க முடியும் என்று நினைத்தான்.

    எதற்கும் ஹோடேலில் போய் பார்த்து விடலாம் என்று அவசரமாக கிளம்பி போனான். அங்கு மஞ்சரி ரூம் உள்ளே தான் இருந்தாள் ஆனால் இவன் கதவை எப்படி தட்டியும் கதவை திறக்கவே இல்லை. பதறி போன அர்ஜுன் ஹோட்டல் ஆட்களின் உதவியோடு அவளுடைய அறை கதவை திறந்து கொண்டு சென்றான். அங்கே படுக்கையில் மஞ்சரி தன்னுணர்வு இழந்து கிடந்தாள்.
     
    3 people like this.
    Loading...

  2. devivbs

    devivbs Platinum IL'ite

    Messages:
    1,572
    Likes Received:
    1,073
    Trophy Points:
    283
    Gender:
    Female
    enna pa Priia..
    ippadi oru suspense la mudichchuteengale!
    wht hpnd 2 Manju?
    eagerly waiting 2 kw...
    -devi.
     
  3. Vasupradha

    Vasupradha Gold IL'ite

    Messages:
    448
    Likes Received:
    332
    Trophy Points:
    123
    Gender:
    Female
    Hi Priiaa,

    Think this is my first comment to yours......Arumai yaa irukku............Manjukku enna aachu???? Love ah purinjukkaradhukku munnadiye manju ippadi aagitta.......... rendu paerayum serthu vechchudunga ma..........No sad ending.........Seekaram next update post pannunga.............Manjukku enna acchchunu therinjukkanam........Waiting Eagerly.

    Vasupradha.S
     
  4. meenakshijanani

    meenakshijanani Silver IL'ite

    Messages:
    326
    Likes Received:
    90
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hai Priaa,
    Manju, asadu vazhivenu aavaloda vanthaal......
    Ippadi azhuthe samalichittiye.
    Enna pazhakkam ithu........
    Arjun, nee total flatnu sollu.
    Manju, un mayakkathukku karanam enna?
    we are also waiting with Arjun.
     
  5. Priyapradeep

    Priyapradeep Gold IL'ite

    Messages:
    801
    Likes Received:
    100
    Trophy Points:
    108
    Gender:
    Female
    Enna Priaa ithu ippadi oru suspense. Manjukku enna aachu appadi........Eagerly waiting to know.........
     
  6. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    what happened to manju? eager to read the next.
     
  7. deeparani2

    deeparani2 Silver IL'ite

    Messages:
    305
    Likes Received:
    144
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Very Interesting. What hapened to manju? Please post the next update soon. We are missing the touch if we read after so many days. This is a Request only. Sorry if am wrong...
     
  8. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hi ma...
    what happened to manju??? she s not feeling well ah????
    waiting to know ma...
     
  9. JananiSubbu

    JananiSubbu Silver IL'ite

    Messages:
    300
    Likes Received:
    57
    Trophy Points:
    68
    Gender:
    Female
    hi..
    enna achu manju ku..???
    sapidama mayaakam vanthurucha???
    arjun hosp kutti tu povan la...
     

Share This Page