1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நேசமுள்ள வான்சுடரே - 4

Discussion in 'Stories in Regional Languages' started by priia192, Jan 19, 2012.

  1. priia192

    priia192 Bronze IL'ite

    Messages:
    16
    Likes Received:
    27
    Trophy Points:
    33
    Gender:
    Female
    Hi All,

    Thanks for all yours comments about my story. posted my next update.. waiting for ur comments..

    வாஷிங்டன் ஏர்போர்ட்டில் வாசு பிரிந்து சென்ற பின் அர்ஜுன் மஞ்சரிக்கு எல்லா வழிகளிலும் உதவி செய்தான். அங்கே அடுத்த விமானதிற்கு காத்து இருந்த 6 மணி நேரத்தில் luggage மாற்றி வைத்து விட்டு அவளை சாப்பிட அழைத்து போனான்.

    அர்ஜுன், "என்ன சாப்டுறீங்க?"

    "இங்க என்ன கிடைக்கும்?", மஞ்சரி.

    Veg , non -Veg எல்லாமே கிடைக்கும். burger pizza என்ன வேணும் உங்களுக்கு?

    எனக்கு காபி மட்டும் போதும்.

    ஏன்?

    இந்த food எல்லாம் எனக்கு அதிகமா பிடிக்காது. அதனால காபி மட்டும் போதும்.

    சரி ஒரு நிமிஷம் இங்க வெயிட் பண்ணுங்க. நான் வரேன்.

    மஞ்சரி'யை விட்டுவிட்டு சென்ற அர்ஜுன் முதலில் subway எங்கே இருக்கிறது என்று தேடி சென்று அவள் சாப்பிட கூடியமாதிரி பிரட் மற்றும் காபி வாங்கி கொண்டு வந்தான்.

    அர்ஜுன் கொடுத்த பிரட்ஐ சாபிட்ட மஞ்சரியின் நெஞ்சு நன்றியால் நிறைந்தது. ஒரு நாள் முழுவதும் சரியாக உணவு உண்ணாமல் அவள் மிகவும் கஷ்டபட்டு விட்டாள். இப்பொழுது நன்றாக சாப்பிட்டு விட்டு அர்ஜுனுக்கு தன் நன்றியை தெரிவித்தாள்.

    "ரொம்ப நன்றிங்க. எனக்கு நல்ல பசி. சாப்ட பின்னாடி தன் கொஞ்சம் நல்லா இருக்கு. "

    "பசி தான் உன்னோட கண்ணுலேயே நல்லா தெரியுதே. அதனால தான் தேடி பிடிச்சு பிரட் வாங்கிட்டு வந்தேன். சரி வா நாம waiting lounge ல போய் உட்காந்துக்கலாம். நீ வேற எங்காவது போகனுமா?"

    "இல்லே நான் எங்கயும் போகலே. நம்ம பாஸ்டன் போய் சேர எவ்ளோ நேரம் ஆகும்?"

    "எப்படியும் நைட் 9.30 ஆயிடும். ஏர்போர்ட் விட்டு வெளிய வர 10 டு 10.30 ஆகலாம்."

    "அந்த நேரத்துக்கு மேல அங்க டாக்ஸி கிடைக்குமா?"

    "டாக்ஸி எல்லாம் எதுக்கு நான் உன்னே கொண்டு போய் விடுறேன். எந்த ஹோட்டல் புக் பண்ணி இருக்கீங்க?"

    "உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்? நானே போய்கிறேன்"

    "இதுல்ல என்ன கஷ்டம்? எப்படியும் ஆபீஸ் பக்கத்துல தானே ஹோட்டல் பாத்து இருப்பீங்க? என்னோட வீடும் ஆபீஸ் பக்கத்துல தான். என்னோட friend என்ன pickup பண்ண வருவான். அவன் கூடவே போய்டலாம்."


    இன்னும் எவ்வளவு உதவி தான் இவனிடம் வாங்க போகிறோம் என்று யோசனையாக இருந்தது மஞ்சரிக்கு. ஆனால் அவளுக்கு இதைவிட்டால் வேறு வழியும் இல்லை. எனவே அவனுடன் செல்ல சம்மதித்தாள்.

    சிறிது நேரம் அவனுடன் பேசி கொண்டு இருந்த மஞ்சரிக்கு தூக்கம் கண்ணை சுழற்றியது. எப்போது தூங்கினோம் என்பதே அறியாமல் அவள் நன்றாக உறங்கி விட்டாள். தூக்கத்தில் அவளது தலை அங்கும் இங்கும் ஆடவும் அர்ஜுன் அவளை தான் தோழோடு சாய்த்து கொண்டான். அவள் உறங்கும் அழகை பார்த்து கொண்டு இருந்த அர்ஜுனுக்கு நேரம் போனதே தெரியவில்லை. விமானம் புறப்பட அழைப்பு வந்ததும் மஞ்சரியை எழுப்பினான்.

    திடுக்கிட்டு விழித்த மஞ்சரி தான் இருந்த நிலை கண்டு வெட்கி போனாள். சாதாரண நேரமாக இருந்து இருந்தால் அவன் தன் மேல் சாய்த்து கொண்டதும் அவளுக்கு தூக்கம் கலைந்து இருக்கும். பயண அலுப்பும் உண்ட மயக்கமுமாக இப்படி அவன் மேல் சாய்ந்து உறங்கி விட்டோமே என்று தன்னையே நொந்து கொண்டு அவனிடம் சாரி சொன்னால். தான் தான் அவளை தோள் மீது சாய்த்து கொண்டோம் என்பதை அறிந்தால் இவளது போடும் சண்டையில் நாம் தான் இவளிடம் சோற்று சொல்ல நேரிடும் என்று நினைத்த அர்ஜுன் "பரவாயில்லை மஞ்சு" என்றான்.


    அவனது மஞ்சு என்ற அழைப்பை கேட்ட மஞ்சரிக்கு கோபம் சுறு சுறுவென பொங்கியது. ஆனாலும் என்னை இப்படி அழைக்காதே என்று அவனிடம் சொல்ல தயங்கி அமைதியாக இருந்தாள்.

    அடுத்த பயண நேரம் அர்ஜுன் தூங்கி விட்டதால் அமைதியாக கழிந்தது. மஞ்சரி ஏர்போர்ட்இல் நன்றாக தூங்கி விட்டதால் அவளுக்கு தான் சிந்தனைகள் பலவாறாக ஓடி கொண்டு இருந்தது. புது இடம் வேலை எல்லாம் எப்படி இருக்க போகிறதோ என்று யோசித்து கொண்டு இருந்த மஞ்சரிக்கு திடுமென அர்ஜுன் தன்னை மஞ்சு என்று அழைத்தது நினைவு வந்தது. இதுவரை தனது சொந்தங்கள் தவிர யாருமே அவளது பெயரை சுருக்கி அழைத்தது இல்லை. இதெல்லாம் சிந்தித்த மஞ்சரிக்கு அவன் தன்னை ஒருமையில் அழைத்தது மனதில் படவே இல்லை. அவளது மனமே அதை ஏற்று கொண்டு விட்டதை அவள் இன்னும் உணரவில்லை. ஆனால் சந்தித்து ஒரு நாளே ஆன அர்ஜுன் தன்னை இப்படி அழைத்தது தான் அவனது உதவியை நாடியதால் தானோ? இனிமேல் இவனிடம் அதிகமாக பழக கூடாது. ஒரே அலுவலகத்தில் இருந்து கொண்டு அது முடியாது தான். ஆனாலும் இவனை சந்திக்கும் வாய்ப்பை தவிர்க்க முடிய வேண்டும் முருகா என்று மனதினுள் பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தாள்.

    யாரை அதிகமாக சந்தித்து பழக கூடாது என்று விரும்பினாலோ அவன் கூடவே தான் தனது அலுவலக நேரம் முழுவதும் இருக்க போகிறோம் என்று தெரிந்தால் மஞ்சரி என்ன செய்வாளோ???
     
    5 people like this.
    Loading...

  2. LillySam

    LillySam Gold IL'ite

    Messages:
    1,846
    Likes Received:
    274
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Hi,
    Super ah irukku,
    Waiting for next update...
     
  3. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    priia pa,

    romba nalla poguthu pa kathai...........
    sikkaram nxt update kodunga......
     
  4. Priyapradeep

    Priyapradeep Gold IL'ite

    Messages:
    801
    Likes Received:
    100
    Trophy Points:
    108
    Gender:
    Female
    Story superah poguthu. waiting eagerly for the next update.........
     
  5. meenakshijanani

    meenakshijanani Silver IL'ite

    Messages:
    326
    Likes Received:
    90
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hai Priya,
    Manjariyin vimana payanthil kathai aarambichu irukeenga.....
    aval vazhkai payanthukkum ithu thaan thodakamo?
    Manjari , aanalum nee vayai summa vaichikittu irukaamal
    ippadi overaa ulari irukka koodathu.
    Nee eppadi asadu vazhiyare ebathai padiukka waiting .
     
  6. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hai ma...
    aacharyama rendu perum sanda podama irukranga....
    arjun manjari kaga care panradhu super...
    eppo manjari ku arjun dhan avaloda prj manager nu theriya varum, andha scene kaga waiting ma.........
    story sema super ah kondu poreenga....
     
  7. JananiSubbu

    JananiSubbu Silver IL'ite

    Messages:
    300
    Likes Received:
    57
    Trophy Points:
    68
    Gender:
    Female
    hi....

    arjun character super ah iruku...
    manju ku office ponnona periya shock iruku ah......
    waiting for next update
     

Share This Page