1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நெருப்பு

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Oct 6, 2010.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    தனியாக நான் இருந்தேன்; துணையாக வந்து விட்டாய்
    அழையாத விருந்தாளி வந்தாள் என நான் சலித்தேன்.
    விதியாகச் செய்ததுவோ என் மதி தான் மாறியதோ,
    எனையறியாது உன் மேல் ஓர் நாட்டம் வரக் கண்டேன்

    எப்போதும் உன் முகத்தில் உயிர்த்திருக்கும் புன்சிரிப்பு,
    பார்ப்பவரின் விழி வழியே ஊடுருவி நிலைத்திருக்கும்.
    எப்போதோ நான் கண்ட அரிதான முகச்சுளிப்பு
    இப்போதும் நினைக்கையிலே பிசிறின்றி முன் நிற்கும்.

    என் எண்ணம் எங்கும் நீ நீக்கமற நிறைந்து விட்டாய்,
    நீயின்றி ஒரு வாழ்க்கை சூனியமாய்த் தோன்றுதடி
    திரியாய் நான் வெளுத்திருக்க, சுடராக வந்து விட்டாய்,
    உன்னால் கரியாகப் போவதிலும் ஓர் இன்பம் இருக்குதடி.

    சிறிதாய் தொடங்கிப் பின் கட்டுக்கடங்காது பெருகும்,
    காட்டுத்தீ போல உன் நினைவு வந்து ஆட்டுதடி.
    தினந்தோறும் எரிகின்றேன் புகையின்றி நானும்
    இருந்தாலும் அதுவேதான் எனக்கு மிகப் பிடிக்குதடி.
     
    Last edited: Oct 6, 2010
    Loading...

  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ஸ்ரீ... உங்கள் கவிதை இன்றும் அருமை தான்...:thumbsup

    திரியாய் நான் வெளுத்திருக்க, சுடராக வந்து விட்டாய்,
    உன்னால் கரியாகப் போவதிலும் ஓர் இன்பம் இருக்குதடி.


    இந்த இரு வரிகளும் எனக்கு மிக பிடித்தது....
     
  3. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    sri,
    very nice poem.
    பெண்ணை நெருபென்பார்,அவள் தம் குணத்திற்காக,அதை கொண்டு,நல்ல கவிதை.ஒரு இந்திய கணவனின்[கனவான்]உண்மையான மனநிலை உங்கள் ஒரு கவிதையில்.வியாபாரமாய் தொடக்கி,பாரமாய் தொடர்ந்து,துணையாய் மாறி,தூணாய் நின்று,உயிராய் மாறி,உற்ற துணையாய்,பிரிக்க இயலா உறவாய் மலர்வது நம் இந்திய திருமணங்கள்.
     
  4. abibaby

    abibaby Silver IL'ite

    Messages:
    1,500
    Likes Received:
    10
    Trophy Points:
    58
    Gender:
    Female
    RGS,

    Very nice poem!! You have described the transformation beautifully.:thumbsup
     
  5. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Rgs.. Priya quote panna adhe lines enakum romba pidichathu.. romba alaga soneenga ungal sina sunakkam pin nerukkam thanthadhai.. :thumbsup
     
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    நீக்கமற நிறைந்தவள் கரியாக்கத் துணிந்த பின்னும்,
    புகையின்றி எரிய துணிந்தவனே,
    எண்ணித் துணிக கர்மம் என்ற,
    பதத்திற்கு நல்ல,
    எடுத்துக் காட்டு.
     
  7. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    உங்கள் பாராட்டுக்கு நன்றி தேவப்ரியா.
    ஒரு தகவல் சொல்லட்டுமா?
    அந்த இரு வரிகள் மட்டும் தான் முதலில் எழுதினேன்.
    அதன் பின் தான் மற்ற வரிகள்!
    சில சமயம் அப்படி நேர்வதுண்டு. -ஸ்ரீ
     
  8. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    உங்கள் பாராட்டுக்கு நன்றி தீபா. உங்கள் பின்னூட்டமும் அருமை.
    ஒரு நிமிடம்! இதிலும் இறைவனைக் காதலியாய்க் காண முடியும்.
    அவ்வாறும் நினைத்து தான் எழுதினேன் இதை. -ஸ்ரீ
     
  9. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    உங்கள் பாராட்டுக்கு நன்றி அபிபேபி.
    ஒரு வியப்பு என்னவெனில் கிட்டத்தட்ட இதே சாயல் கொண்ட "காதலி"யை,
    பலர் பார்த்தும் ஒரு விமரிசனமும் இல்லாதது தான்.
    ஒருவேளை தவறெதுவும் இருக்கிறதோ அதில்? அல்லது புதிதாக ஒன்றும் இல்லையோ?
    -ஸ்ரீ
     
  10. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    உங்கள் பாராட்டுக்கு நன்றி ரம்யாராஜா.
    சுணக்கம் இணக்கமாய் மாறுவது குறித்து நீங்கள் குறிப்பிட்டது மகிழ்ச்சி. -ஸ்ரீ
     

Share This Page