1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நிழலாய் தொடர்வேன் உயிரே!

Discussion in 'Stories in Regional Languages' started by yams, Aug 29, 2010.

  1. omsrisai

    omsrisai IL Hall of Fame

    Messages:
    3,326
    Likes Received:
    2,722
    Trophy Points:
    315
    Gender:
    Female
    kadhai nala viruvirupa pogudhu yams....epa next episode post pana pora....waiting waiting waiting...
     
  2. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    appa appa anu maela enna paasam??
    climaxum padi de!:)
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    idho poda poraen sai!
    thanks for reading!:)
     
  4. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    பாகம்-15 :

    அனுவின் கதறலை பார்த்த அசோக்கிற்கு சற்று நேரம் எதுவுமே புரியவில்லை!
    உலகத்தில் எல்லாரும் சந்தோஷத்தோடு தனிமையை எதிர்பார்க்கும் இந்த தருணத்தில் கூட இவள் இப்படி கதறுகிறாள் என்றால்?? உயிர் போகும் அளவு ஏதோ துன்பத்தை அனுபவிக்கிறாள் என்று தானே அர்த்தம்?? என்று நினைத்தவனால் அவள் கதறலை காண பொறுக்கவில்லை!

    அவளை நெருங்கியவன் அப்படியே ஒரு தாயாய் அவளை சேர்த்தணைத்து அவளோடு சேர்ந்து கதற தொடங்கினான்!
    "அனு! ப்ளீஸ் டா! அழாத! என்னால பாக்க முடியல! நான் எதாவது தப்பு பண்ணியிருந்த என்ன மன்னிச்சுரு டா! எனக்கு என்ன வேணா தண்டன குடு ஆனா தயவு செஞ்சு அழாத ப்ளீஸ்!"

    அவன் அன்பு சொற்களில் அதுவரை அடக்கி வைத்திருந்த அனைத்தும் மடை திறந்த வெள்ளமாய் கொட்டின! அவளின் ஏக்கம்! கண்ணுக்கு புலப்படாத அந்த அன்பு தந்தையின் பாசம்! அவரின் தற்போதிய பிரிவு என்று அனைத்தையும் கொட்டி தீர்த்தாள்!
    அவளது பாரம் சற்று குறையும் என்று எதிர் பார்த்தாள்! ஆனால் அதற்கு நேர்மாறாய் பயமும் நடுக்கமும் தான் அதிகரித்தது! எங்கே தன் தோழிகளை போல் அசோக்கும் தன்னை பைத்தியம் என்று முத்திரை குத்தி ஒதிக்கி விடுவானோ?? என்ற எண்ணமே அவளது பயத்தை கண்களில் அப்பட்டமாய் காட்டின!
    அவளது இந்த பயத்தை அசோகின் அன்பு வென்று விடும் என்பதை அறியாமல் தவித்தாள்!

    அனைத்தையும் பொறுமையாய் கேட்டவன் பாரம் நீங்கியவனாய் புன்னகைக்க துவங்கினான்!

    "அடி பைத்தியம்! இதுக்கு தான் இப்படி கஷ்ட பட்டியா?? இத நீ என்கிட்டே மொதல்லயே சொல்லி இருந்தா நீ அழகுகாம என்ன கல்யாணம் பண்ணி இருப்ப!"

    இவன் என்ன சொல்ல வருகிறான் என்பது புரியாமல் முழித்தவளை அள்ளி தூக்கி சென்று கட்டிலில் அமரவைத்தான்!

    "நான் இதெல்லாம் நம்புவேன்னான்னு நீயும் உன் அப்பாவும் பயப்பட்டு இருக்கலாம் அப்படி சட்டுன்னு நம்ப முடியாத விஷயமும் கூட தான் இது! ஆனா இந்த உலகத்துலயே நான் அதிகமா நேசிக்கிற அதிகமா நம்புற என் அனு சொல்லும் போது நான் எப்படி நம்பாம இருப்பேன் சொல்லு?" என்று கேட்டவனை அப்படியே விழி விரித்து பார்த்தாள்!
    அவள் அப்பா சொல்லியதை போல தனக்காக கடவுள் அனுப்பிய இரண்டாவது நல்ல உள்ளம் இவன் தானா?? சற்றும் சந்தேகம் இன்றி தன்னை இப்படி நம்பும் பட்சத்தில் இவனது அன்பு எப்படி பட்டதாய் இருக்க வேண்டும் என்று உள்ளம் பூரித்தது!

    "அனு இங்க பாரு மா! உங்க அப்பாவோட பயம் என்ன? எங்க நான் வந்தப்பறம் உங்க உறவை நான் புரிஞ்சிப்பனோ மாட்டேனோன்ற பயம் தானே?? இப்ப தான் நான் எல்லாம் புரிஞ்சிகிட்டேனே! அவருக்கும் இதெல்லாம் கண்டிப்பா தெரியும் உன்கிட்ட முன்ன மாதிரியே பேசுவாரு பாரேன்!"

    "நிஜமாவா அசோக்? எங்கப்பா பேசுவாரா?? கண்டிப்பா பேசுவாரா?? என்று அலைபாய்ந்தவளை காணும்போது ஒரு சிறுபிள்ளையாய் தான் தோன்றியது அசோக்கிற்கு!
    அவன் சொன்னதை ஆமதிப்பதை போல் தொலைபேசி அழைப்பு மணியும் ஒலிக்க அனுவின் கஷ்டங்கள் அனைத்தும் பறந்து போயின!

    ஓடி சென்று அதை எடுத்தவள் மகிழ்ச்சியில் உண்மையான குழந்தையாகவே மாறினாள்!

    "அப்பா! அப்பா நான் பேசறது கேட்குதா?? நீங்க தானே? பேசுங்க பா! அசோக்கு எல்லாமே தெரிஞ்சுடுச்சு அவர் எல்லாத்துக்கும் ஒத்துகிட்டாரு! இனிமே நாம எப்பவும் போல பேசலாம்! பேசுவீங்கள்ள??"
    என்று படபடத்தாள்!

    "ஹ்ம்ம்! நீ எப்பவும் சந்தோஷமா இருக்கணும் மா! அது தான் என் வேண்டுதலும்! சரி அசோக் கிட்ட குடு!"
    "அசோக் கிட்டையா?? நீங்க பேசினா அவருக்கு கேட்காதே??"

    "அது நான் நினைச்சா முடியும் அனு! குடு!"

    "இதோ தரேன் பா! அசோக் அப்பா உங்ககிட்ட பேசனுமாம்! " என்று சொல்லியவளின் முகத்தில் இருந்த தேஜசை பார்த்து அசோக்கே ஆச்சர்யத்து போனான்!
    இந்த மகிழ்ச்சியை ஆயுள் வரை அவளுக்கு தர வேண்டும் என்று ஆசைபட்டான்!
    உண்மையில் யாரும் பேசாவிட்டாலும் அவளுக்காக பேசுவதை போல நடிக்கவும் தயாராகவே இருந்தான்!

    தொலைபேசியை வாங்கியவனுக்கு அதில் குரல் கேட்டும் என்ற நம்பிக்கை சற்றும் இல்லை! அது கேட்கும் வரை!
    கேட்டதும் அது சாதாரண மனிதரின் குரலாகவும் தோன்றவில்லை! அப்படியே உடம்பெல்லாம் ஏதோ புல்லரித்தது!

    "வாழ்த்துக்கள் அசோக்!"

    "ந.. ந.. நன்றி சார்.. மாமா!"

    "பயபடாத அசோக்! என் பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்கைய ஏற்படுத்தி குடுத்திருகேன்ற மனநிறைவு இந்த நிமிஷம் என் மனச நெற ச்சுடுச்சு ! அவல புரிஞ்சு நடந்துகுற உன்ன மாதிரி ஒரு கணவன் கிடைக்க அவ கொடுத்து வெச்சுருக்கணும்! அந்த மன நிறைவோட நான் போறேன்!"
    "என்ன சொல்றீங்க?? ஆனா அனு...??"
    "தயவு செஞ்சு அனுக்கு தெரியற மாதிரி பேச வேண்டாம்! நான் சொல்றதுக்கு ஹ்ம்ம்! கொட்டு போதும்!"
    ஒரு முறை மனைவியை நிமிர்ந்து பார்த்தவன் "ஹ்ம்ம்! " என்றான்!

    "நீ எங்க உறவை ஏத்துகிட்டதால மட்டும் நான் இந்த உலகத்துல வாழ்ந்துட முடியாது அசோக்! அவகவங்களுக்கு நிர்ணயிக்க பட்ட நேரம் வரும் போது ஆத்மா மேல இருக்க ஜோதியோட கலக்கணும்! எனக்கான நேரம் முடிஞ்சிடுச்சு! இனி இது வரை நான் அனுவுக்கு செஞ்சிட்டு இருந்த பொறுப்ப நீ என் இடத்துல இருந்து செய்வேன்ற நம்பிக்கையோட போறேன்! வரேன் அசோக்! அனுவ பாத்துக்கோ!"
    பேசிவிட்டு வைத்தவனின் கண்களும் சேர்ந்து கலங்கின!
    இதை அனுவிற்கு எப்படி புரிய வைக்க போகிறோம் என்று அவன் தடுமாறுகயிலேயே அவனது தொலைபேசி சிணுங்கியது!
    சற்று நேரம் தப்பித்தோம் என்று நினைத்தவன் பேசியில் கேட்ட விஷயத்தில் அப்படியே உறைந்து நின்றான்!

    அவனது முக மாற்றத்தை பார்த்து "யாருங்க?" என்று கேட்டவளை அழைத்து கொண்டு அனுவின் வீட்டிற்கு சென்றான்!
    கணவன் எங்கே அழைத்து செல்கிறான் என்று தெரியாத போதும் உற்சாகத்துடனே கிளம்பினாள்! அந்த சந்தோஷம் அவள் வீட்டை அடைந்ததும் முற்றிலுமாய் பறந்து விடும் என்பதை அறியாமல்!

    வீடு கூட்டத்தில் நிறைந்திருக்க அப்போது தான் அனுவின் அம்மா உயிர் நீத்த விஷயம் அவளுக்கு தெரியவந்தது!
    தாயின் மடியில் விழுந்து கதறி அழுதவளை தேற்றவோ! இல்லை பார்க்கவோ! அங்கே யாருக்குமே துணிவில்லை!
    அசோக்கிற்கு சற்று முன் பேசிய குரலும் அதில் இருந்த துக்கமும் மூளையை குடைந்தது!
    " இனி நான் இங்க இருக்க முடியாது அசோக்! நான் போற நேரம் வந்துடுச்சு!"

    கூட்டத்தில் யாரோ "அம்மா நல்லா தான் இருந்தாங்க ஒரு மணி நேரத்திற்கு முன்னாடி தான் அவங்க உயிர் பிரிஞ்சுது! எப்படினே தெரியல பா!" என்று சொல்ல அந்த அன்பு தந்தையும் தன்னிடம் விடை பெற்று சென்று ஒரு மணி நேரம் ஆவது உரைத்தது! இது என்ன மாதிரியான ஒரு உறவு இருவருக்குள்ளும்?? காதலிக்கவில்லை! மணம் புரியவில்லை! இருந்தும் ஒருவர் இருக்கும் வரை மற்றவர் அவரை பிரியாமல் இருந்ததும்! தன் காதல் இறந்ததும் ஒரு ஆத்மா அந்த ஜீவனோடு கலந்ததும்! நினைக்க நினைக்க எல்லாமே கனவை போல தோன்றியது!

    அழுது கொண்டிருந்த அனுவையும் அவள் அன்னையையும் பார்த்தான் அசோக்!
    மானசீகமாக அவளிடம் பேசினான்!
    "அனு நீ இழந்த இரண்டு நல்ல இதயங்களை என்னால உனக்கு மீட்டு தர முடியாது! ஆனா உனக்கு அப்பாவா வாழ்ந்த ஒருத்தர் அவர் காதல் மேல எவ்வளவு அன்பு வெசிருந்தாரோ அதே அளவு அன்பும் அரவணைப்பும் உனக்கு நான் தருவேன் டா!" என்றான்!

    அதை ஆமோதிப்பதை போல் எங்கோ மணியோசை கேட்டது!

    உண்மையான காதல் தன் உயிர் நீத்தாலும் தன் துணையை பிரியாது! உயிர் வாழ்ந்தாலும் தன் துணை அன்றி வாழாது!

    -முற்றும்-
     
    Caide and Deepu04 like this.
  5. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    romba nalla irunthathu un varigal...
    aana kadeisila engalayum ala vachuta... :cry:
    good story... good narration...:)
    [appa saami oru valiya muduchita...:hide:]
     
  6. omsrisai

    omsrisai IL Hall of Fame

    Messages:
    3,326
    Likes Received:
    2,722
    Trophy Points:
    315
    Gender:
    Female
    Yams...

    Supera irunduchu kadai...anuva ava appavum ammavum nilalai thodarvargal...
     
  7. devirams

    devirams Silver IL'ite

    Messages:
    528
    Likes Received:
    90
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Hi Yams
    i am silent reader of ur story pa:coffee...
    story romba romba supera irruindhadhu:thumbsup:thumbsup:thumbsup.
    father n daughter relationshipai romba azhaga solli irrukinga...
    ending line hearta touch pannivittadhu...
    really amazing yaar..
    i really liked appa char n anu....
    keep on rock:cheers:cheers:cheers
     
  8. supriyamini

    supriyamini Senior IL'ite

    Messages:
    142
    Likes Received:
    1
    Trophy Points:
    18
    Gender:
    Female
    yamini super erunthu thu da. ni already entha story sollita analum romba interest pochu da. na ketta mathiri oru nalla friendship kathaya eluthen d:wow
     
  9. suganyabalaji

    suganyabalaji Silver IL'ite

    Messages:
    661
    Likes Received:
    36
    Trophy Points:
    63
    Gender:
    Female
    nice ending ma... warm welcome for ur next ur story ma:):rotfl
     
  10. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    விஸ்வாமித்திரர் வாயால பிரம்ம ரிஷி பட்டம்னா இது தானோ??:hide:
    மிக்க நன்றி தோழியே!
    :)
     

Share This Page