1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நின் கனவு மெய்ப்படவேண்டும்!

Discussion in 'Regional Poetry' started by Rajeni, Dec 12, 2017.

  1. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    ***எம் மகாகவியின் பிறந்த தினத்தில் ஒரு கவிதை முயற்சி***

    காணி நிலம் வேண்டு மென்றாய்

    கட்டியொரு மாளிகை தரவேண்டு மென்றாய் – அதன்

    வெள்ளை நிறத்தில் வீசிய நிலவில்

    தென்னை மரத்தில் தென்றல் காற்றில்

    கவிதைச் சுவையேற்றி கொஞ்சம் – எம்

    கனவுகளை மெரு கேற்றிவிட்டாய்!

    தமிழ் கற்று தெளிந்திட பொழுதற்று

    எதைக் கண்டு ரசிக்கவும் விழியற்று

    ஓடிடும் கூட்ட மதைக் கண்டிருந்தால்

    வேடிக்கை மனித ரிவரென்று – நீ

    சாடி தீர்த்திருக்க மாட்டாயோ!


    விளையாட்டாய் ஓரு பாட்டு சொன்னாய்

    வாழும் முறைமை யதனூடே சொன்னாய் – பகை

    மோதி மிதித்து விடும் வலிமையும்

    மிக முயன்று போராடும் தின்மையும்

    சோம்பல் அகற்றிடவு மன்றே – எம்

    சின்னஞ்சிறு மனதில் விதைத்தாய்!

    கல்விச் சுமையாகி கணினி சிறையாகி

    தரங்கெட்ட பலதையும் திரையிலே கண்டழியும்

    எம்பிள்ளை கூட்ட மதைக் கண்டிருந்தால்

    ரௌத்திரங் கொண்டெ ழுந்து – நீயும்

    சாட்டை யெடுத்திருக்க மாட்டாயோ!


    பெண்மைக்காய் ஓர் கனவு கண்டாய்

    எம் உயர்வே இலட்சிய மென்றாய் – பல

    பட்டங்க ளாளவும் சட்டங்கள் செய்யவும்

    வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்

    வேண்டியொரு அணையா சோதியை – எம்

    நெஞ்சில்மூட்டி நிமிர்ந்திட செய்தாய்!

    பால்வீசும் பிள்ளைமுதல் பல்போன கிழவிவரை

    பாலியல் கொடுமை களுக்கிரை யாகும்

    பெண்மையின் துயர் நிலை கண்டிருந்தால்

    நெஞ்சு துடிதுடித்து மீண்டும் – ஐயா நீ

    மரண மெய்திருக்க மாட்டாயோ!


    எனினும் –

    தமிழ்கூறும் நல்லுலகின் கடைசி மூச்சுவரை

    தலைநிமிர்ந்து நடைபோடும் பெண்ணிய முள்ளவரை

    தவறென்று கண்டபின் ரௌத்திரங் கொண்டெழுந்து

    போராடும் கூட்டதில் கடையொருவன் வாழும்வரை

    முண்டாசுக்கவியே நீயும் வாழ்ந்திருப்பாய்!
     
    Loading...

  2. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    அன்புள்ள ரஜனி -

    பாரதிக்குப் பாவெழுதிப் பரவசப்படுத்திவிட்டீர்கள். பா புனைந்த பெண்மணியே,பாராட்டைப் பிடியுங்கள். மரணமில்லா மனிதனவன்,அதை அருமையாகச் சொன்னீர்கள் ! காலனைத் தான் காலுதைப்பேன் என்று சொன்ன சொற்களுக்காய்க் கவிஞனைத்தான் யானை கொண்டு அவன் மிதிக்க விட்டாலும், அவனெழுதிச் சென்றவற்றைக் காலமொன்றும் செய்யாதே ! உம்மைப் போன்றப் பலருண்டு,அவன் பெருமை பாடிடவே என்றறியும் போதிலெந்தன் நெஞ்சமது குளிர்கிறதே ! பாரதி கண்டப் புதுமைப்பெண்ணாய்ப் பற்பல சாதனைகள் நீங்கள் நிகழ்த்த வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.

    என்றும் அன்புடன்,

    பவித்ரா
     
  3. Jey

    Jey Administrator Staff Member IL Hall of Fame

    Messages:
    2,765
    Likes Received:
    1,066
    Trophy Points:
    315
    Gender:
    Male
    @Rajeni மிக அருமையான கவிதை. ரொம்ப பிடித்து இருந்தது.

    எனக்கு பிடித்த வரிகள் கிழே.

     
    Rajeni and stayblessed like this.
  4. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    மிக மிக அருமையான கவிதை. பல முறை படிக்க தூண்டியது. பாரதியின் கவிதை படிப்பது போல் இருந்தது. வாழ்த்துக்கள் Rajeni
     
    Rajeni, stayblessed and Jey like this.
  5. stayblessed

    stayblessed Platinum IL'ite

    Messages:
    934
    Likes Received:
    1,744
    Trophy Points:
    263
    Gender:
    Female
    ராஜெனி கவிதை மிக மிக மிக நன்று. உங்கள் படைப்புக்கள் அத்துனையும் வார்த்தைகளற்ற மௌனத்தையே தருகின்றது வியப்பின் மிகுதியால். கண்களில் நீர் படலம். உங்கள் எழுத்துப்பணி தொடர வாழ்த்துக்கள்.
     
    Rajeni likes this.
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @Rajeni பாரதி சாகவில்லை .உங்களை போன்றோரின் எழுத்துக்களில் வாழ்கிறான் .நான் நீ மீண்டும் பிறந்து வா என்று வேண்டியது தவறு .அருமையான கவிதை ரஜினி .இளைய தலைமுறையின் உள்ளத்தில் விதைத்த வித்து விருட்சமாக வளரும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை .அவன் கண்ட கனவு நனவாகி விட்டது
     
    Rajeni likes this.
  7. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    பாரதியை படித்து பா படைத்த ரதியோ
    அவன் கூறிய இழிவுகள் இன்னும் அகலாதது விதியோ
    புதுமைப் பெண்டிர் வெல்வர் சமூக இழிவுகளை தம் மதியால்
     
    Rajeni, jskls and periamma like this.
  8. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    அன்புள்ள பவித்ரா! அழகான முதல் கருத்தை பதிவிட்டு என்னையும் நீங்கள் பரவசபடுத்திவிட்டீர்கள். தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!
     
  9. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    மிக்க நன்றி @Jey தங்களுக்கு பிடித்தவரிகளை பதிவிட்டமைக்கும் நன்றி!
     
  10. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    அன்புள்ள லக்ஷ்மி! பாரதியின் வரிகளோடு என் கவிதையை ஒப்பிட்ட உங்கள் அன்புக்கு நன்றி! அவன் அந்த ஆதவனைப்போல. என் வரிகள் அந்த ஒளியில் மின்னும் மின்மினி பூச்சிகளைப் போல!
     
    jskls likes this.

Share This Page